.

Pages

Wednesday, April 18, 2012

மரணத்தின் நிரலாக.....!


1.       நான் மிகப்பெரிய பணக்காரன் எனக்கு ஏறக்குறைய ஏக்கர் கணக்கில் நிலம் புலன்கள் உள்ளது. ஆகவே எனக்கு மரணம் வரவே வராது எனச் சொல்லவோ.............!

2.       நான் சமுதாயத்திற்கு பல சேவைகள் செய்த மிகவும் அந்தஸ்துடன் கூடிய சமுதாயத் தலைவர்  ஆகவே எனக்கும் மரணம் வராது என்றோ.............!

3.       இல்லை....இல்லை......நான் “அல்ஹாஜ்” பல முறை ஹஜ் செய்துள்ளேன், தினமும் தொழுவேன், பெரிய தாடி வைத்துள்ளேன், அழகியத் தொப்பி அணிந்துள்ளேன் ஆகவே எனக்கும்தான் மரணம் வராது என்றோ.......................!

4.       அட போங்கங்க......நான் அன்றாடம் உழைத்துச் சாப்பிடக்கூடிய பரம ஏழைங்க.........நான் யாருக்கும் எந்த பாவங்களையும் செய்யாமல் அல்லாஹ்விற்கு அஞ்சி நடப்பவனுங்கோ ஆகவே என்னை “மரணம்” அண்டவே அண்டாதுங்கோ என்றோ...................!

5.       மார்க்கத்தில் பல பட்டங்கள் பெற்ற அறிவாளி நான்............தினமும் வீடும் மஸ்ஜித்மாக அல்லாஹ்வைத் தொழுதுகொண்டே இருப்பேன்.......வேண்டும் என்றால் எனது நெற்றியைப் பாருங்கள் கருமை நிறத்தழும்பு அதில் பதிந்து இருக்கும் என்றோ.................!

6.       எனது கணவனுக்கு நல்ல பணிவிடையும், எனது பிள்ளைகளைப் நன்கு பராமரிப்பதிலும் சிறந்த பெண்ணாக விளங்குகிறேன் ஆகவே எனக்கும் “மரணம்” உடனடியாக வராது என்றோ.......................!

7.       வரதட்சணையாக 100 பவுன் நகைகளோ, மனைக்கட்டு நிலத்தில் புதிய வீடோ, புதிய வாகனமோ, சீர் வரிசைகளோ என எதுவும் பெண் வீட்டிலிருந்து நான் வாங்கவே இல்லை. ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ...................!

8.       வட்டி வாங்குதல், பொய் சொல்லுதல், திருடுதல், மது அருந்துதல் போன்ற ஒழுக்கம் தவறியச் செயல்களை நான் செய்ததில்லை........ஆகவே எனக்கும் “மரணம்” வராது என்றோ...................!

என இது போன்றவற்றைச் சொல்லி மரணத்தை தள்ளிப்போட முடியாது. “மரணம்” என்பது உங்களுக்காக உறுதி செய்யப்பட்ட ஒன்று ! இம்மரணம் நிகழக்கூடிய நேரத்தையோ, நாளையோ, இடத்தையோ மாற்றி அமைக்க யாராலும் முடியாது. அது எப்போது ? எங்கே ? எப்படி ? எந்த நிமிடத்தில் ? என்பதை யாராலும் கணித்துச்சொல்லவும் முடியாது...... ஒருவனைத் தவிர அவன் “அல்லாஹ்”

மரணத்தின் நிரலாக............!

1.       இனி நீங்கள் “மையத்” என்ற பெயரில் அழைக்கப்படுவீர்கள்

2.       அனைவரும் அறிந்துகொள்ள வேண்டி அனைத்து மஸ்ஜித்களிலும் உங்களின் “மரண அறிவிப்பு” தகவல்களாக அறிவிப்புச் செய்யப்படும்.

3.       உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவரும் வருகை தந்து தங்களின் “மையத்” மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் (“சலாம்”) எனக் கூறுவார்கள்.

4.       சுத்தமான முறையில் குளிப்பாட்டப்படுவீர்கள்

5.       ஏறக்குறைய 12 மீட்டர் அளவுள்ள வெள்ளைத் துணியால் கஃபனிடப்படுவீர்கள்.

6.       வீட்டிலிருந்து “சந்தூக்” எனும் வாகனத்தில் தங்களை ( மையத்தை )அதில் வைக்கப்பட்டு நான்கு சகோதரர்களால் அவர்களின் தோற்ப்பட்டையில் “சந்தூக்”கை  சுமந்துவாறு கப்ர்ஸ்த்தான் நோக்கி கொண்டுச் செல்லப்படுவீர்கள்.

7.       கப்ர்ஸ்த்தானில் ஆறு அடி நீளம் முன்று அடி அகலம் ஐந்து அடி ஆழத்தில் வெட்டப்பட்ட “குழி யில் அடக்கம் செய்யப்படுவீர்கள்.

8.       உன் இறைவன் யார் ? உன் மார்க்கம் எது ? உன் வழிகாட்டி ( நபி ) யார் ? உன் தொழுகை எப்படி ? உன் நோன்பு ?  உன் ஜகாத் ? உன் இறுதிக் கடமை ஹஜ் ? போன்றவற்றை எவ்வாறு நிறைவேற்றினாய் ? போன்ற கேள்விகள் கேட்கப்படுவீர்கள்..............


பதில் சொல்லத் தயாராகுங்கள்

உங்களுக்காக தொழுகை வைக்கப்படும் முன் நீங்களே "தொழுது" கொள்ளுங்கள் !
இறைவன் நாடினால் ! தொடரும்......................
சேக்கனா M. நிஜாம்

Wednesday, April 11, 2012

"குடி”க்காதே ! அது தன்னையும் குடியையும் கெடுக்கும் !!


“ஆல்கஹால்” என்பது ஒரு போதைப் பொருளா ?

ஆம். சந்தேகமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமளித்துச் சோர்வை ஏற்படுத்தும் ஒரு போதை மருந்தாகும். ஒருவரால் கட்டுப்படுத்த முடியாமல் குடித்து கொண்டே இருப்பது என்பது ஒரு “நோயே” !

1.       பொழுதுபோக்காக [ ஜாலிக்காக ] எற்படும் பழக்கத்தை இன்று வரை விட முடியவில்லையே என வருத்தப்படுவோரும்...

2.      இன்று மனசு சரியில்லை [ ! ? ] எனச் சொல்லி சொல்லியே தினமும் குடிப்பவர்களும்...

3.      விஷேசத் தினங்களில் தங்களின் “மகிழ்ச்சி”யை [ ! ? ] வெளிப்படுத்த நண்பர்களோடுச் சென்றுக் குடிப்பவர்களும்...

4.      ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் அதை வாங்குவதற்காக ஒளிந்து நெளிந்து கொண்டு செல்பவர்களும்...

5.      இப்பழக்கத்தை கண்டிப்பாகக் கைவிட வேண்டும் என முயற்சி செய்து தோற்றுப் போனவர்களும்...

6.      இன்று மட்டும்தான் குடிப்பேன் ( ! ) நாளை குடிக்கவே மாட்டேன் ( ? ) என உறுதிமொழி ( ? ) எடுப்பவர்களும்...

7.      இதைத் தவிர்க்க மற்றொன்றை பயன்படுத்தி அதையும் கூடுதலாக சேர்த்துக்கொண்டு அடிமையாகிக் கொண்டவர்களும்...

8.      கடின வேலையை காரணம் காட்டி தங்கள் உடல் வலியை போக்குவதற்காக (?) போதையைப் பயன்படுத்துகிறவர்களும்...

9.      குடித்துவிட்டு வாகனத்தை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்துகளை ஏற்படுத்துபவர்களும்...

10.   மப்பு அதிகமாகி நடுவீதியில் படுத்துப் புரண்டு குடும்ப மானத்தையே குழிதோண்டிப் புதைப்பவர்களும்...

11.    குடிப்பதற்காக பொண்டாட்டியின் நகையைத் திருடும் 420களும்...

12.   போதை அதிகமாகி தன் நிலை மறந்து தான் பெற்ற மகளையே “.....“ 

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.


என்னதான் பாதிப்புகள் ?

1.      ஞாபக மறதி
2.      உடல் உறுப்புகள் பாதிப்பு
3.      பொய் சொல்வது, திருடுவது, ஏமாற்றுவது போன்ற ஒழுக்கம் தவறுதல்
4.      கொலைக் குற்றங்கள் செய்யத் தூண்டுதல்
5.      கை கால் நடுக்கம், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, காரணமற்ற பயம், மனப்பிரமைகள், பயங்கர கனவுகள்
6.      தற்கொலை முயற்சி செய்தல்.
7.      குடும்ப உறவு விரிசல் அடைதல் குறிப்பாக மனைவியின் நடத்தையில்  சந்தேகித்தல்
8.      குழந்தையின்மை
9.      சமூகத்தில் தனிமைப் படுத்தப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டு வில(க்)கி இருத்தல்.
10.  இறுதியில் அகால மரணம்

“குடி” நோய் என்பது உன்னையும் உன் குடும்பத்தையும் சேர்த்து அழித்துவிடும் !!! மறந்து விடாதே !!!!
என்னதான் தீர்வு ?
1.       குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்புகள் கண்டிப்பாக தேவை.
2.       மனதிடம், விடாமுயற்சி இருக்க வேண்டும்.
3.       போதை அடிமை என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நோய், உடலுக்கு மருத்துவமும், மனதுக்கு தகுந்த ஆலோசனைகளும் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.
4.       பொது இடங்களில் விழிப்புணர்வு அறிவிப்புகளை அங்காங்கே வைக்கலாம்.
5.   சமுதாயப் பொது அமைப்புகள் குடிநோய் உள்ளவர்களை இனங்கண்டு “கவுன்சிலிங்” செய்வதன் மூலம்  குடிக்கும் எண்ணத்தை அறவே மறந்துவிடக் கேட்டுக்கொள்ளலாம்.

6.   சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமான “ஜூன் 26 அன்று சமுதாய அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கம், சமுக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர்கள் ஒருங்கிணைந்து அமைதிப் பேரணி நடத்தி விழிப்புணர்வைத் தூண்டலாம்.

7.   நமதூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் வெளிநாடுவாழ் சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதனால் நமது சமுதாய மக்களுக்கு ஏற்படுகிற இழப்பீடுகளை கருத்தில்கொண்டு சட்ட சிக்கல்களை ஆராய்ந்து மதுபானக் கடைகளை அப்புறப்படுத்த முயற்சி செய்யலாம்.

8.   நிரந்தர நடவடிக்கையாக நாடு முழுவதும் “பூரண மதுவிலக்கு சட்டத்தை” இயற்றி உடனடியாக அமுலுக்கு கொண்டுவர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பெரும் தியாகங்கள் ( ! ? ) செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

ஈமான் கொண்டோரே ! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான். எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா ? ( திருக்குர்ஆன் 5:90,91 )

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

Thursday, April 5, 2012

“தொப்பை” : “PhD” அல்லாத நகைச்சுவை ஆய்வு !


நமது அழகான உடலின் அழகை அட்டகாசமாக மெருகூட்டுவது எது தெரியுமாங்க ? நிச்சயமாக “தொப்பை” யாகத்தான் இருக்கும்............

என்ன ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், சிரிப்பாகவும், கிண்டலாகவும் இருக்குதா.............வேணும்டா............ஆட்டையே கழுதையாக்குன ( ! ? ) நம்மூர் நகைச்சுவை பாணியிலே “PhD” அல்லாத ஆய்வுக்கு இதை உட்படுத்தாலமுங்க...... சரியா ?





1. முதலில் ஆளில்லா ஓர் அறையின் சுவர் எதிரே நிண்டுகொள்ளவும்.

2. கண்டிப்பாக குனியாமல் நேராக நிண்டுகொள்ளவும்.

3. அப்படியே கண்ணை சைலண்டா மூடிக்கொள்ளவும்.

4. அப்படியே சத்தம் போடாமல் மெதுவாக நடந்து செல்லவும்.

5. சிறிது தூரம் நடந்து சென்றவுடன் சுவரில் “உம்மா” “உம்மம்மா” என்ற சப்தம் போட்டு மோதி நிற்பீர்கள்.

6. அப்படியே வலியையும், அழுகையையும் அடக்கிக்கொண்டு மெதுவாக கண்களை திறந்து பார்க்கவும்.

7. இப்ப சொல்லுங்க உங்கள் உடலின் எந்த பாகம்ங்க சுவரில் மோதி ஈக்கிது ?



கண்டிப்பாக மலை விழுங்கி “தொப்பை”யே........ எப்பூடி நம்ம ஆய்வு ( ? ! )

என்னதாங்க பயன் ?


1. கீழே குப்புற விழுந்து மண்ணைக் கவ்வும்போது முகத்தில் அடிபட்டு மூக்கும், சோடாப்புட்டி கண்ணாடியும் உடையாமல் நம்மை காப்பாத்தும்ங்க.


2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்தும்ங்க . உதாரணமாக பெரிய பெரிய தொப்பையைக் கொண்ட “மாமுலா”ன போலீசாரைக் கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துதுங்க.


3. அதேபோல முகத்தில் அப்பிய பாண்ட்ஸ் பவுடர், தலையில் வழியும் பாராசூட் எண்ணெய், வாயில் மெல்லும் “பா”....பாக்கு, வெள்ளையும், ஜொல்லைமா உடுத்திய காதிகிராப்ட் உடுப்பு, உதட்டில் பூசிய லிப்டிக், விரலில் மாட்டியுள்ள படிக்கல்லு மோதிரம் போன்ற பக்கா கெட்டப்புடன் மேடையில் ஏறி எட்டாத மைக்கை இழுத்து பிடித்து முழங்கும் அர”ஜி”யல்வாதியின் அழகே அந்த தொப்பை தானுங்கோ....


4. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாகவும் பயன்படுதுங்க........ . உதாரணமாக வேலையில்லாமெ ச்சும்மா தில்லா வெட்டியா அமர்ந்திருக்கும் சமயத்தில் தொப்பையை மெதுவா தட்டிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாதுங்க.


5. உறங்கும்போது குறட்டையை வரவழைத்து அருகிலுள்ள நம்ம பக்கத்து பெட்டு எதிரிகளை ( ! ? ) படுக்க விடாமல் தடுக்கலாமுங்க.


6. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் ஏறி சறுக்கு விளையாட்டு விளையாட மிகவும் பயன்படும்ங்க.


7. கூகுள் பேராண்டிகள் ஆழ்ந்து அயர்ந்து படுத்து உறங்குவதற்கு மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட யாஹு “அப்பா”வின் தொப்பையைத் தானுங்க.


இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொப்பையை வாக்கிங், சைக்கிளிங், ஜாக்கிங் போன்றவற்றை தினமும் சைலண்டா செய்வதை மறந்துவிட்டு........................

நொறுக்குத்தீனிகள், பொரிச்ச கோழிகள், குளிர் பானங்கள், சைடிஸ்கள் போன்றதை மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு..........................


கண்டிப்பாக தொப்பையை நாம் போற்றி வளர்ப்போம் ! கண்டதையும் உள்ளே போட்டு வளர்ப்போம் !!


குறிப்பு : இது ஓர் 50 % நகைச்சுவை + 50 % விழிப்புணர்வு
Thanks : Abu Isra

Sunday, April 1, 2012

அதிரை(க்) “கடல்” : தெரிந்ததும் – தெரியாததும் !


மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி !
காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லை !!
ஆறும் ஆறு பாயும் சமவெளிப் பகுதிகளும் மருதம் !!!
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் !!!!
மணலும் மணல் சார்ந்த பகுதிகளும் பாலை !!!!

என சங்ககால வாழ்க்கை வரலாறாக நம்மூரு தொடக்கப்பள்ளியில் நாம் படித்திருப்போம்.




கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் பகுதியில் மீன்பிடித்தல், உப்பு உற்பத்தி, உலர்மீன் ( அதாங்க “கருவாடு” ) உற்பத்தி, இறால் வளர்ப்பு மற்றும் எண்ணற்ற தொழில்கள் அன்றாடம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.




நடப்பு நிதியாண்டில், நமது நாட்டின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி, 15 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.




மீன்பிடித்தல் :
தந்தை மகனுக்கு தினமும் மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்க்கை பிரகாசமாகும்” என்பது புதுமொழி. கடல் ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு அன்றாடத் தொழிலாக மீன் பிடிப்பு உள்ளது.



உப்பு :
தமிழகத்திலுள்ள உப்பு அதிகளவில் உற்பத்தி செய்யக்கூடிய ஊர்களில் நமதூரும் ஓன்று என்ற சிறப்பைப் பெறுகின்றது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்றொரு பழமொழி உண்டு. அதே சமயத்தில் “அளவான உப்பே உடல்நலத்திற்கு நல்லது” என்று மருத்துவ வல்லுனர்களின் குறிப்புகளும் தெரியப்படுத்த தவறியதில்லை.




கடல் தினச்செய்தியாக :
நமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கடல் சார்ந்த தொழில்களை மேம்படுத்தி இதன்மூலம் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெருக்கிட வேண்டும். மேலும் கடலின் இயற்கை வளங்கள் அழிவு மற்றும் மாசுபடுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு தனி மனித மற்றும் சமூகக் கடமையாகும்.

இறைவன் நாடினால் ! தொடரும்......................

சேக்கனா M. நிஜாம்
Pro Blogger Tricks

Followers