.

Pages

Monday, April 28, 2014

[ 3 ] மகவே கேள் ! அறிவுரை தொடர்கிறது...

பெற்றோருக்கு நீ செய்யும் சேவை இறைவன் உனக்கு நற்கூலி தரும் சேவைதான். அது பற்றி இவ்வாரம் பார்ப்போம். பெற்றோர்கள் என்பதை தாய், தந்தை என தனித்தனியாய் ஆராய்வோம்.

தாய்க்கு செய்யும் சேவை : 
பத்து வயது வரை பிள்ளைக்கு சேவை செய்யும் தாய் வளர்த்த  பிள்ளையை பார்த்து தாய்க்கு நம்பிக்கை வரும் தருணம் தம் பிள்ளை தனக்கு உதவியாய் இருக்கும் என்ற நம்பிக்கை தாய்க்கு வரும் தருணம், அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக நீ நடந்து கொள்ள வேண்டும்.

பத்து முதல் பதினெட்டு வயது வரை ஈர்க்கும் தன்மை அதிகம் உள்ள வயது அதனால் நீ ஈடுபடும் எந்த செயலாக இருந்தாலும் அதிலேயே மூழ்கும் நிலை ஏற்படலாம் அதில் முக்கியமான சில விசயங்கள்...

1. நட்பு ( தோழன் அல்லது தோழி )
2. விளையாட்டு
3. கணினி ( கேம் )
4. டி.வி ( சீரியல் மற்றும் சினிமா )

இன்னும் இதர பல காரணங்களால் தாயை கண்டுகொள்ளாமல் இருத்தல்.., தாய்க்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், தாயவளுக்கு  பிள்ளை தன்னிடமிருந்து பிரிந்து செல்லும் உணர்வு ஏற்படும், அதனை தவிர்க்க தாயவள் சிறு உதவி கோருவாள். சிறு பொருள் கடையில் வாங்கி வர சொல்வாள், உனது ஈடுபாடு அதிகமுள்ள ஏதாவது ஒன்றில் ஈடுபட்டு இருந்தாலும், தாயின் கோரிக்கையை நீ நிராகரித்து விடாதே !

இதோ வருகிறேன் அம்மா என்று நீ தலைசாய்த்து சிறு உதவி செய்தால் அது உன்னிடம் இருக்கும் பாசம், நீ தாய் மீது காட்டும் மரியாதைக்கான சான்று
எனவே இது போன்ற தருணத்தை தவறவிடாதே. வாலிப பருவத்தில் உரிமையாய் தாய் மீது கொள்ளும் கோபத்தை தவிர்த்து கொள், தாய்க்கு நல்ல பிள்ளையாய் இரு அது உன் வாழ்நாள் முழுவதும் திருப்தி தரும் என்பதை அறிந்து கொள்  "தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது என்பதை நீ மனதில் கொள் " தாய்க்கு செய்யும் சேவை, தாய் மீது கொள்ளும் பாசம் அன்பும் தான் !

தந்தைக்கு செய்யும் சேவை :
உறவுகள் பற்றி மற்றொரு வலை தளத்தில் எழுதி வந்தேன். அதில் குறிப்பிட்ட ஒரு கருத்தை இதில் பதிய விரும்புகிறேன்...

விவசாயம் செய்யும் தொழிலாளி தான் வீடு திரும்பும் போது களைத்து காணப்படுவார். ஒரு மிடறு தண்ணீர் கொடுத்து உதவும் மகன். எதிர்கால நம்பிக்கையாய் தெரிவான். தந்தையின் வழி காட்டலை செவி சாய்க்கும் மகன் தந்தைக்கு சேவை செய்யும் மகனாய் தெரிவான்.

வாணிபம் செய்யும் தந்தைக்கு உதவியாய்  இருக்கும் மகன் போற்ற படும் மகன் .கருத்து பேதம் களைந்து அமைதி காக்கும் மகன் தந்தையின் உடல் நலம் காக்கும் மகனாவான். வாலிப பருவத்தில் ஈர்க்கப்படும் சில கொள்கைகள் தந்தை மனம் நோகும் செயலாய் அமையலாம். அதனை தவிர்ப்பதே நீ தந்தைக்கு செய்யும் சேவை சிறு சிறு உதவிகள் மூலம் பெற்றோருக்கு நீ செய்யும் சேவை காலத்தால் அழிக்க முடியா சேவையாய் அமையும்.

குருவிற்கு செய்யும் சேவையை அடுத்த பதிவில் காண்போம்.
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Thursday, April 24, 2014

வாக்களித்த வேளையில் நாக்களித்த நன்றி !

அகரம் பயின்ற பள்ளியிலே
*********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
சிகரம் போலத் தெரிகின்ற
************சிறுபான் மையோர் வாக்குகளே
நிகரே இல்லா வெற்றிகளை
************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
பகரம் செய்வார் வெல்பவரும்
*********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

குறையைச் சுட்டும் விரலில்தான்
************குறியாய் இட்டக் கறைதானே
கறையாய் நிற்கும் அவலங்கள்
**********களையச் செய்யும் கறைதானே
இறைவன் நாட்டம் விடுப்பினிலே
*********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
*********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!

புகைப்படம் : அதிரை நியூஸ்
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, April 23, 2014

ஒழித்திடு தேர்தல் பெரும்செலவு !

தேர்தல் திருத்தங்கள்
.....திறம்படச் செய்கின்றார்
ஆர்தல் செய்திகளே
.....அனைவரும் மகிழ்கின்றார்

வீதி என்கினுமே
.....விளம்பரம் ஒழிந்தனவே !
மீதிச் செயல்களிலும்
.....விரயமும் தவிர்க்கனுமே !

சுத்தம் நிறைந்திட்டே
.....சுவர்களும் இருக்கிறதே !
பித்தம் தலைக்கேறி
.....பிரச்சினை கிளம்பினதே !

"வேண்டாம் வராதீர்கள்"
.....மலிந்திடும் செய்திகளும்
சீண்டும் வழிமுறையும்
.....சிலச்சிலத் தோன்றியதே !

வேஷம் பலகண்டோம்
.....வேடிக்கைகள் அரங்கேற்றம்
தோஷம் தொடர்கிறது
.....தொல்லைகள் மலிந்தனவே

சட்டம் செயல்பாட்டில்
.....சலிப்புகள் தோன்றினவே
திட்டம் நடைமுறையில்
.....திணறின வியாபாரம்

பாவ மந்திரியே
.....பகுதியில் வரவேண்டாம் !
கோபம் கொப்பளித்தே
.....கொட்டினர் குடிமக்கள்

சேதம் கைசேதம்
.....சேர்த்திட தவிப்புகளாம்
தூதும் துடிக்கிறதாம்
.....தொகைகள் கைமாற !

தூண்டும் செய்கைகளும்
.....தோல்விகள் காணவில்லை !
வேண்டும் பொறுமைகளும்
.....விரக்தியில் வெடித்தனவே !

நாள்கள் நகர்ந்துவிடும்
.....நடந்தவை வடுக்களாகும்
தாள்கள் கரைந்துபோகும்
.....தவிப்புகள் மிஞ்சிவிடும்

வாக்கு தராவிட்டால்
.....மாறிடு இடத்தைவிட்டு !
தாக்கு பிடிக்காதே
.....தந்திடு எமினவீட்டை !

போக்கு இதனையுமே
.....புகைத்திட விடவேண்டாம்
தாக்கம் அறிவுடனே
.....தகுந்தவர் அகற்றனுமே

பணத்தின் நடமாட்டம்
.....பலவும் தடுத்திட்டாய் !
குணங்கள் மாறுமுன்னே
.....கொள்கைகள் வகுத்திடுவீர்

திண்மைக் கொண்டிட்டே
.....திறம்பட வகுத்திடனும்
உண்மை உரைக்கின்றேன்
.....ஒழித்திடு பெரும்செலவு

வாழ்க சீர்திருத்தம் !
.....வரணும் சிறப்புடனே !
வீழ்க விரயங்கள் !
.....வேணுமே வல்லரசு !

நபிதாஸ்

தேமா காய் விளம் காய் வாய்ப்பாடு

Monday, April 7, 2014

[ 2 ] மகவே கேள் ! அறிவுரை தொடர்கிறது...

ஒவ்வொரு படைப்பினங்களையும் ஏதாவது ஒரு பயனுக்காகத்தான்
இவ்வுலகில் இறைவன் படைத்திருக்கிறான். இது உலகறிந்த உண்மை.
அதன் அடிப்படையில் உன்னை இவ்வுலகில் படைக்கப்பட்டதும் அதன்
அடிப்படையில் தான்

நீ உனக்காகவும், உன் உறவிற்காகவும், அக்கம் பக்கத்திற்காகவும், , சமுதாயத்திற்காகவும் சேவை செய்யவே படைக்கபட்டிருக்கிறாய். எனவே சேவை செய்

இதைபற்றி இவ்வாரம்.... கேள் மகவே !

1.  சுயதேவைக்கான சேவை

2. பெற்றோருக்கான சேவை

3. குருவிற்கு ( ஆசிரியற்கு ) செய்யும் சேவை

4. உற்றார் உறவிற்கான சேவை .

5. சமுதாய சேவை.

6. வியாபார நோக்கு சேவை .

இந்த ஆறு விதமான சேவைகள் உன் வாழ்வில் நடை முறை படுத்தினால்
நீ சரியான பாதையில் உன் வாழ்வை நடத்தி செல்லாம் எப்படி !?

சுய தேவை :
நீ அரும்பாய் வளர்ந்த போது உன் தாய்க்கு கரும்பாய் இனித்தாய். உனது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வரும் தாய் உனது தேவைகளை பூர்த்தி செய்து பூரித்து போவாள் ஐந்து வரை அது  ஏழுவயதுவரை இயற்கையாய் நடந்தேறும். அதன் பின்னர் உனது உடைமைகள் .என்று உனக்காக ஒதுக்கப்படும் தருணம் வருமா வயதில் உனது படுக்கை, உனது உடை, உனது புத்தகம் என்று உனக்காக தரப்பட்ட பொருட்களை பாதுகாத்து அதனை நேர்த்தி செய்வதன் மூலம் நீ பொறுப்புள்ள பிள்ளையாய் காட்சி தருவாய் உறங்கி எழுந்த உடன் உனது படுக்கையை நேர்த்தியாய் மடித்து
வைப்பதன் மூலம் உனது நாட்களை பொறுப்புடன் துவங்குகிறாய் என்று பொருள்.

அம்மா ! எனது பேஸ்ட், பிரஸ் எங்கே ? காலையிலேயே  பிறரை சேவை செய்ய எத்தனிக்காமல், உரிய இடத்தில் பொருளை வைத்து எடுக்க பழகி கொள்ள வேண்டும். அது வாழ்நாள் முழுவதும் பலன் தரும் செயலாய் அமையும்.

உணவு உண்ணும் போதும், உண்ட பின் பாத்திரங்களை தாமே சுத்தம்
செய்யும் பழக்கத்தால் எளிமை உன்னிடம் குடி கொள்ளும். சிறு வயதில் உன் உடைகளை துவைக்கும் தருணம் வராது துவைத்து, உலர்ந்த உடைகளை நேர்த்தியாய் மடித்து வைக்கும் பழக்கத்தை நடை முறை படுத்திக்கொள். இவைகளெல்லாம் உன் வாழ்வில் பல தருணங்களில் பல இடர் பாடுகளை களையும் செயலாய் அமையும்.

தன்னம்பிக்கை விருட்சமாய் வளர்ந்து உன் வாழ்வில் வளம் சேர்க்கும். புரிந்ததா என் இளவலே !?

இன்னும் சொல்வேன் கேள் மகவே...!
அறிவுரை தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

Friday, April 4, 2014

முகமூடிகள் !?

இந்தியாவை ஆள்வது யார் ?
இலகுவாக அந்தயிந்த கட்சி சொல்லிடுவார்
எந்திரக் கதியில் வாழ்வுகள்
இதனால் யாவரும் சிந்திப்பதில் நோவுகள்
மந்திரம் எதுவும் இல்லை
மயக்கிடும் பணத்தின் ஆட்சி வலிமை
தந்திரமாய் உள்ளனர் சிலர்
தயவுகளால் மனசாட்ச்சி விட்டனர் பலர்

இலட்சங்கள் செலவிட சட்டம்
இதனால் இலட்ச்சியங்கள் வார்த்தையில் மட்டும்
பலக்கோடிகள் வேண்டும் வெல்ல
பாமரனை விலைக்கு வாங்க மெல்ல
சுலபமாக வெல்லவே திட்டம்
சொந்த பணத்தை இழக்க வாட்டம்
பலப்பலபச் சீமன்களிடம் கதைப்பார்
பலலட்சங்கள் கோடிகள் அவர்கள் விதைப்பார்.

பெற்றதனால் கைகட்டி நிற்பார்
பெருமை பேசும் மந்திரியும் மற்றவரும்
உற்றதேசம் வளர்ச்சி திட்டம்
உருவாக்கிடுவர் நன்றியினில் அவர்சொல் கேட்டும்
முற்றும் இவர்களின் முகமூடியில்
முழுவதும் சீமான்களே அந்தரங்க அகஆட்சியில்
குற்றம் தெரிந்தே செய்திடுவார்
கூனியும் நிமிர்ந்தே சுயலாபம் சேர்த்திடுவார்.

அந்தோ பாவம் குடிமக்கள்
அறியார் பாவம் இவர்கள் அதிகுடிமாக்கள்
இந்த இலட்ச்சங்கள் கோடிகள்
இல்லாத ஆட்சி மாற்றம் நாடிடுங்கள்
சிந்தனை செய்திட வேண்டாமா
சீர்திருத்தம் அடிப்படை அரசியலில் கொண்டிட்டே
எந்த வழியை திறந்தாலும்
ஏற்றம் எல்லோரிலும் இருப்பதே அறம்தானே

சுகமாய் பேசும் வல்லரசும்
சுலபமாய் பெருந்தொழில் அல்லும் வல்லவனும்
அகமாய் இருந்தே வகுத்திடும்
அரசியல் அதர்மம் இழிவழிகள் தகுமாமோ
உகந்த வல்லரசு ஆகிடுவோம்
உடந்தை அரசியல் அடியோடே நீக்கிடுவோம்
முகமூடிகள் ஆள வேண்டாமே
முழுவதும் மக்கள் சிந்தனை ஆள வேண்டுமே.

சுதந்திரம் இன்னும் கிடைக்கலையே
சுத்தம் எங்கும் எதிலும் காணலையே
இதமாய் பேசி வலைக்கின்றார்
இவர்களும் அடிமை வாழ்வில் வீழ்கின்றார்
முதலில் வாக்காளர் வேட்பாளர்
முழுவதும் சுயமாய் செயல்தனில் காட்டனுமே
அதர்மம் அழித்திட கூடிடுவோம்
அன்றே யாவரும் சுதந்திரம் அடைந்திடுவோம்.

நபிதாஸ்
Pro Blogger Tricks

Followers