அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற காலம் போய் ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் குறைவில்லை என்று ஆண்கள் செய்த அல்லது ஆண்கள் மட்டுமே செய்யும் வேலைகள் என்று இருந்த காவலர்கள் வேலை ஓட்டுனர்கள் வேலை [ விமானம் உள்பட ] இராணுவம் என்று எல்லா துறைகளிலும் பெண்களும் வந்துவிட்டார்கள் இது நல்ல முன்னேற்றமா அல்லது இவ்வளவு முன்னேற்றம் தேவை இல்லையா என்பதனை வாசகர்களாகிய நீங்கள் கருத்திடுங்கள்.
எப்படி ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலை என்று இருந்ததோ அதுபோல் பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய செய்து கொண்டு இருக்கிற ஒரு வேலை இருக்கிறது இது இன்றள்ள நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே இருக்கிறது. அதை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டியும் அதற்காக ஓர் இடம் தனியாக ஒதுக்கி தர வேண்டியும் நமது முதல்வரின் தனி பிரிவிற்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் பாலியல் தொழிலாளர்கள் இதற்கு தேசிய மக்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலாஜி என்பவர் நம் அரசு மதுக்கடைகள் நடத்தும் பொழுது பாலியல் தொழிலுக்கும் அங்கீகாரம் வழங்கி தனியாக இடம் ஒதுக்கலாம் என்கிறார்.
உங்கள் கருத்தென்ன வாசகர்களே ?
பெண்களுக்கு ஏன் இந்த நிலை அரசர் காலம் தொட்டு தேவதாசி என்ற ஒரு பழக்கமும் அதற்காக ஒரு சமுதாயமும் இருந்தது பின் நாடகம் நாட்டியம் என்று தங்களின் நிலைகளை மாற்றிக்கொண்டனர். பெரிய ஜமின்கள் தனக்கு கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி இருக்க வேண்டும் என்று கேடுகெட்ட பழக்கத்தை வைத்து இருந்தனர் ஆண்களின் குணமே மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர துடிக்கும் குணம் கன்னியரை கண்டு சபலம் கொள்ளும் தீய குணம் இதுவே கெட்ட பெண்களை ஆண்கள் பக்கம் போகச்செய்தது.
காதலித்து பின் ஆண்களால் கைவிடப்பட்டவர்கள், தன்னை பாதுகாத்து பராமரிக்க கூடிய ஆண்கள் சோடையாக இருக்கும் பொழுது வருமானம் வேண்டி பாலியல் தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர் இந்த சூழல் இல்லாது போகவேண்டுமானால் தன் மனைவிக்கோ,கணவருக்கோ துரோகம் செய்யக்கூடாது என்று அனைவரும் ஒழுக்கத்தை பேணவேண்டும்.பாலியல் செய்யும் எந்தப்பெண்ணும் தன்னிலைக்கு ஒரு காரணம் சொல்வாள் எப்படி இருந்தாலும் சுய ஒழுக்கம் என்பது அனைவர்களும் தம் வாழ்வில் கொண்டுவர வேண்டும்
அவர்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்த்தால் !?
எக்மோர் = இரயில் நிலையம்
கீழ்பாக்கம் = மனநல காப்பகம் [ பைத்தியகார மருத்துவமனை ]
புழல் = மத்திய சிறைச்சாலை
சௌகார் பேட்டை = சேட்டுகள் அதிகம் வசிக்கும் இடம்
கோடம்பாக்கம் = சினிமாத்துறை சம்மந்தப்பட்ட இடம்
??????????????? = சிவப்பு விளக்கு பகுதியாக முத்திரை குத்தப்பட்டுவிடும் குடிமகன்களை உருவாக்கி கெட்டபெயர் எடுத்துக்கொண்ட நம் அரசு இதில் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.
இப்படி ஒரு மக்கள் மனதில் நீங்காத ஒரு இடம் சென்னையில் முத்திரை குத்தப்பட வேண்டுமா ?
ஆகவே நம்மால் முடிந்தவரை நமது எதிர்ப்பை காட்டுவோமே !
மு.செ.மு.சபீர் அஹமது