.

Pages

Saturday, May 12, 2012

கவனம் : “தங்கம்” வாங்கும் முன் !



பொதுவாக நாம் எந்த ஒரு எலெக்ட்ரானிக் அல்லது எலெக்ட்ரிகல் பொருட்களை வாங்க சென்றால், இது ISI முத்திரை உள்ளதா என்று பார்த்து வாங்குவோம். ISI முத்திரை இருந்தாலே அந்த பொருள் தரமானதாக கருதலாம். இதே போல் நகை வாங்க செல்லும் போது ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். ஆனால் ஹால்மார்க் முத்திரை இருந்தாலே அது தரமானது என்று ஆகிவிடாது.
இதைப்பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

தங்கத்தின் தரம்
தங்கத்தின் தரம் கேரட் (KARAT) என்ற குறியீடால் அறியப்படுகிறது. சுத்தமான தங்கம் என்பது 24 கேரட் ஆகும். அதாவது 99.9%. முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் 24 கேரட் தங்க கட்டியாக வாங்குவார்கள். இதனை கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது. நகை செய்ய வேண்டுமெனில் தங்கத்துடன் சில உலோகங்களை  சேர்த்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதன் தரம் 22 கேரட், 18 கேரட் தங்கமாக மாறுகிறது. இது தான் ஆபரணத் தங்கமாகும்.
24 கேரட் என்பது  99.9%
22 கேரட் என்பது  91.6%
18 கேரட் என்பது  75.0%
14 கேரட் என்பது  58.5%
10 கேரட் என்பது  41.7%
  9 கேரட் என்பது  37.5%
  8 கேரட் என்பது  33.3%
22 கேரட் ஆபரணத்தங்கம் என்பது, அதன் சுத்தத்தில் 91.6% ஆகும். இதைத்தான் 916 தங்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஹால்மார்க்
நாம் வாங்கும் தங்கம் 22 கேரட்டா அல்லது 18 கேரட்டா என்று எப்படி தெரிந்து கொள்வது. இதற்குதான் ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.
ஹால்மார்க் தர சான்றிதழை வழங்குவது யார்?
இந்திய அரசின் தர கட்டுப்பாடு அமைப்பான பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு ” ( Bureau of Indian Standards ) என்ற அமைப்பு தான் ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது. இதைத்தான் BIS முத்திரை பதித்த நகைகள் என்றும் கூறுவார்கள். இந்த முத்திரை கொடுப்பதற்கு நாடு முழுவதும் பல டீலர்களை லைசென்ஸ் கொடுத்து நியமித்திருக்கிறார்கள். இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். நகை கடை உரிமையாளர்கள்பொற்கொள்ளர்களிடமிருந்து வாங்கிய  நகைகளை இந்த டீலர்களிடம்  கொடுத்து தரத்தை பரிசோதிக்கின்றனர். அவ்வாறு பரிசோதிக்கும் நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 கேரட் எனில் 75% ஹால்மார்க் முத்திரையும் தருகின்றனர்.

கவனிக்கப்பட வேண்டியவை :
ஹால்மார்க் முத்திரை உள்ள நகை என்ற விவரம் மட்டும் போதாது, அதற்கு கீழே அந்த நகையின் தரம் எவ்வளவு என்பதயும் (91.6% or 75%) குறிப்பிடப்பட்டிருக்கும். அது தான் முக்கியம்.
நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.
எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.  சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள BIS  அலுவலகங்கள்:
Southern Regional office:
C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 . 

COIMBATORE BRANCH OFFICE 
5th Floor, Kovai Towers, 44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
landmark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705

ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக்கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.
இதுநாள் வரை சில நகைக் கடைகள் மட்டுமே ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்பனை செய்தன. இனி எல்லா நகைக் கடைகளும் ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை விற்க வேண்டும் என மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.


Thanks : Kumaran

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers