kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Sunday, December 9, 2012
[ 3 ] ஏன் சிரித்தார் கவிஞானி..? சிரிப்பது தொடர்கிறது...
குடல் நடுங்கும் கடுங்குளிர்
மழை நின்று சில நிமிடம்
சகதிகள் சல சலப்பில்
நடுங்கி நின்ற அபலை பெண்
கேட்க நாதியற்ற நிலை
சூடாய் குடிக்க தேநீர் அவள்
நா கேட்க... நாலு காசு இல்லா நிலை
நடுங்கி நின்ற நங்கைக்கு
உதவி செய்ய ஆளில்லா நிலை
வழியில் சென்ற சிலர்
அய்யோ பாவம்... என்றார் சிலர்
அவ்வழியே வந்த நம் கவிஞானி
ஏளனமாய் சிரித்தார் ஏன்...?
இதோ கவிஞானி பதில்
செல்லமாக பிறந்த மங்கை
சீரோடு வளர்ந்த மங்கை
யாருக்கும் இல்லா செல்லம்
இவளுக்கு இருந்ததப்போ
வயதுக்கு வந்ததற்கே
வைபவமே நடந்ததுவே
மணமுடிக்க நாள் பார்த்து
அரசனைப்போல் வரன் பார்த்து
நலமாக மணமுடித்து
வளமாக வாழ்ந்திட வாழ்த்தினர்
பொல்லா குணம் கொண்ட இவள்
மணாளனை மறந்து மாற்றானிடம்
சென்று விட்டால்...
மோகத்தின் நாள் முடிந்து
அவன் பறந்து போகவே
இவள் வந்தாள் நடுவீதி !?
தன்னாலே தான் கெட்ட...
அண்ணாவி என்ன செய்வர் ?
இவள் நிலைக்கு இவளே காரணம்
அதை நினைத்தே நான் சிரித்தேன்
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
நல்லதொரு விழிப்புணர்வு கவிதை !
ReplyDeleteசமூக அவலத்தை நினைத்து சிரிப்பது தொடரட்டும்...
ஒருவர் இன்னொருவரை ஏமாற்றி போலியான உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டு தங்களின் உடல் இச்சையை தனித்துக்கொள்வதே “கள்ளக்காதல்” என சமூகத்தால் குறிப்பிடப்படுகிறது.
1. மனிதாபிமானம், அன்பு, பாசம், குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் என்று எதையுமே பொருட்படுத்தாமல் சுயநலம், சபலம், காமம், துரோகம் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் கேடு கெட்ட மனிதர்கள் ஒரு வகையாகவும்...
2. கணவன் எங்கோ போய் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டிருக்கையில் இங்கே கள்ளக்காதலனோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களின் போலியான அன்பையும், பாசத்தையும் உண்மை என நம்பி தனது குடும்ப அந்தரங்க ரகசியங்களைச் சொல்லி அவர்களிடம் ஏமாந்து போனவர்கள் மற்றொரு வகையாகவும்...
3. பிள்ளைகள் கல்வி கற்க வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம். காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங் கிளாஸ், ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, கிளப், பப், சுற்றுல்லா என்று போகும் இடங்களில் அவர்கள் “காதல்” வலையில் சிக்கிக்கொண்டு இந்த இனம்புரியாத வயதில் சின்னாபின்னமாகி போனவர்கள் ஒரு வகையாகவும்...
4. பொழுதைப் போக்குகின்ற விழாவில் ஏற்பட்ட சந்திப்பு, தொலைத்தொடர்புகள் மூலம் ஏற்பட்ட தொடர்பு போன்றவற்றால் வீட்டை விட்டு ஓடிப் போனவர்கள் இன்னொரு வகையாகவும்...
5. குடும்ப உறுப்பினர்கள், அக்கம்பக்கத்தினர் சிலரால் ஏற்பட்ட முறையற்ற தொடர்பைக் கொண்டுள்ளவர்கள் மற்றொரு வகையாகவும்...
என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இவ்விசயத்தில் சிந்தித்து செயல் பட வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் மிக மிக அவசியம்.
தங்கள் பிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடைய உறுதுணையாக இருங்கள். தங்களின் பொறுப்பை மறந்து..,... தங்களது பிள்ளைகளுக்கு ”செல்லம்” ”பாசம்” “ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம் கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட காரணமாக இருக்க வேண்டாம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிவரிகள் அருமை, காலத்திற்கேற்ற வரிகள் என்றாலும் கவலை தருகின்றது. சமுகம் திருந்துமா? அல்லது திருந்த முயற்சி செய்யுமா?
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மிகவும் அற்புதமான கவிதை தொடர்ந்து இதுபோல் பதிவை கொடுக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு சகோ செம்மலை ஆகாஷ்
ReplyDeleteதங்கள் வரவு நல்வரவாகுக ...
மிகவும் அற்புதமான கவிதை தொடர்ந்து இதுபோல் பதிவை கொடுக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅற்ப சுகத்திற்க்காக தன் வாழ்வை இழந்து . அவதியுறும் பெண்ணை பார்த்து அழகாய் சிரித்துள்ளார் கவிஞானி
ReplyDeleteவாழ்த்துக்கள்.