Tuesday, February 12, 2013
ஏன் பிறந்தாய்...?
நீ ஏன் பிறந்தாய்
பள்ளி செல்லும் உன்னை
பள்ளியறை அழைக்கும்
பாதகர் நிறைந்த பூமியில்
ஏன் பிறந்தாய் பெண்ணே...!
உன் முக அழகை
பார்த்து பார்த்து
ஒரு தலை காதலால்
ஈர்த்து ஈர்த்து
தன்வய படுத்த எண்ணி
தோற்ற கயவன்
உன் முகத்தை
தீ நீரால் சிதைக்கும்
கயவன் நிறைந்த
பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே..!
மலராய் மலர்ந்து
மனம் கமழும் உன்னை
மணமுடிக்க பணம் கேட்கும்
கயவர் பூமியில் ஏன் பிறந்தாய் பெண்ணே
மனித இனம் பெருகிடவே
மகத்துவத்தை உன்னிடமே
வல்ல இறை தந்து
தரணியிலே தாய் என்று
போற்ற படவேண்டிய நீ
தள்ளாத வயதிலுமே
தண்டிக்க படுகின்றாய்
தரணியிலே வந்து நீயும்
வேதனைதான் பட்டிடனுமா...?
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்
பேருந்தில் சென்றாலும்
போக பொருளாய்
பார்க்கும் காலத்தில்
ஏன் பிறந்தாய் பெண்ணே
ஏன் பிறந்தாய்...
[ பதில் அடுத்த ஆக்கத்தில்... ]
ஏன் பிறந்தாய் ? தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
காலச்சூழலுக்கேற்ற கவிதை !
ReplyDeleteசமூகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்
கவிதை அருமை
தொடர வாழ்த்துகள்...
சகோதரர் சித்திக் அவர்களின் கவிதை காலத்திகேற்ற அருமையான கவிதை உங்களின் இந்த கவிதையியுள்ள ஒவ்வொரு வரியும் அருமை அதில் இந்த வரி ரொம்ப அருமை தரணியிலே தாய் என்று போற்ற படவேண்டிய நீ தள்ளாத வயதிலுமே தண்டிக்க படுகின்றாய் இது சிந்திக்க வேண்டிய வரிகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteகல்வி கற்கச் செல்லும் பெண்கள் கலவி கற்கத் தூண்டும் நிலைமயில் சூழ்நிலைகள் படுமோசமாகிக் கொண்டிருக்கும் இத்ததல்ருணத்தையும், சினிமா என்னும் சாதனம் ஒருதலைக் காதலின் விரக்திக்கு அமில திராவகம் வீசுதலைத் தூண்டுவது கண்டும் வேதனையில் தமிழூற்றாய்ப் பாடியுள்ளார்கள் அதிரை சித்திக் என்னும் அன்பர். சமுதாயப் பிரச்சினைகள் என்னும் சமுத்திரப் பிரளயங்களைச் சிரட்டை அளவேனும் தடுக்கும் சிரத்தையாக இக்கவிதைப் பயன்படட்டும்!
ReplyDeleteகால சூழலுக்கேற்ப சிந்திக்க கூடிய கவி வரிகள்.
ReplyDeleteசமீபத்தில் ஒரு சகோதரிக்கு நடந்த காதல் என்ற போலிப்பெயரில் ஒரு காமுகனின் மனசாட்சியில்லா கொடுஞ்செயலை தாங்களின் கவி வரிகள் ஞாபகப்படுத்தியது
சகோ நிஜாம் ..,சகோ almasm ,கவியன்பன் கலாம் காக்கா ,
ReplyDeleteசகோ அதிரை மெய்சா காக்கா .,ஆகியோர் வருகைக்கும்
கருத்திற்கும் நன்றி ..வரு ஆக்கத்தில் பெண்ணின் பதிலை
கண்டால் பெண்ணின் பெருமை புரியும் ..ஏன் பிறந்தாள்..என்று
அடுத்த ஆக்கத்தில் சந்திப்போம் ..,
மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பதன் மூலம் குற்றங்களை ஒரு போதும் கட்டுப்படுத்த இயலாது. இவை உளவியல் சார்ந்து வாசிப்புடையவர்களுக்கு நன்கு விளங்கும். பல பாலியல் குற்றங்களுக்கு அத்திவாரமே அவரது சமூகம், குடும்பம், கல்வி மற்றும் மரபியல் சார்ந்த வாழ்க்கை முறைகள் தான் காரணமாக அமைகின்றது.
ReplyDeleteபாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.
பழிக்குப் பழிச் சட்டம்: பெண்களுக்கு பாதுக்காப்பு தந்து விடாது
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ.
பல வருடங்களுக்கு முன் வெளிவந்த பாகப்பிரிவினை என்ற ஒரு தமிழ் திரைப்டத்திற்காக கவிஞர் கண்ணதாசனால் குடும்ப கஷ்டத்தில் சிக்குண்ட தகப்பனுக்காக எழுதப்பட்ட ஒரு பாடலாகும்.
பல கவிஞர்கள் பெண்களைப்பற்றி நன்றாக போற்றியும் புகழ்ந்தும் அநேக கவிப்பாடல்களை எழுதியுள்ளார்கள் மேலும் பாடியுள்ளார்கள்.
பெண்களும் சமூகத்தில் ஒரு மதிக்கத்தக்கவளாய், குத்து விளக்காய், இன்னும் பல உயர்ந்த குணத்தவளாய், மரியாதைக்குரியவளாய் நன்கு போற்றி புகழோடு வாழ்ந்திருக்கின்றாள், வாழ்ந்து கொண்டும் இருக்கின்றாள்.
இன்று ஏன் பிறந்தாய் பெண்ணே? என்று கேட்க்கும் அளவுக்கு அவள் வந்துவிட்டால் என்றால் அதற்கு காரணம் ஒரு சில ஆண்களே தவிற எல்லா ஆண்களும் கிடையாது என்றால் அதுவே உண்மையாகும்.
வெகு சமீபத்தில் நடந்த காரைக்காலைச் சேர்ந்த சகோதரி வினோதினியின் மரணம், இன்னும் எத்னையோ சம்பவங்களுக்கு ஒரு சில ஆண்களே காரணம்.
ஒரு சில பெண்கள் நேர்வழியில் இருந்து தடம்மாறி போனால் அவர்களை ஆண்கள்தான் திருத்தவேண்டுமே தவிற ஆண்களும் தடம்மாறிப் போகக்கூடாது.
அதே சமயத்தில் பெண்களுக்கென்று அநேக கட்டுப்பாடுகள் இருக்கும்போது அந்த கட்டுப்பாட்டை மீறும்போதுதான் பெண் அங்கலாய்க்கப்படுகின்றாள் என்றால் அதுவும் உண்மையான விஷயம்தான்.
சட்டம் எதையும் சாதித்து விடாது. இந்த மானிட சமூகம் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதில் ஐயமில்லை.
மனித சமூகமே நீதான் சிந்திக்க வேண்டுமே தவிற வேறு யார் சிந்திப்பது?
இது யாரையும் குறித்து எழுதப்பட்டது அல்ல, என்னுள் உதித்ததை எழுதினேன்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நடை முறைக்கு சாத்தியமில்லாத சில மனநிலையில் வன்மம் கொண்டவர்களால் நடத்தபடும் கொடுமைகளுக்கு ..கடுமையான சட்டங்கள் இயற்ற பட வேண்டும் ..அந்த சட்டம்
ReplyDeleteசாமான்ய மக்களுக்கு சென்றடைய வேண்டும் ..
பத்தாம் வகுப்பு மாணவனுக்கு பாடமாக சொல்லி
கொடுக்க பட வேண்டும் ..வாழ்வில் வளம்பெற
நினைக்கும் எவரும் சட்டத்தின் பிடியில் மாட்டி கொள்ள விரும்புவார்களா? இக்பால் செல்வன் ..
கூறுங்களேன் ...!
// பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காண முற்படும் போது உணர்ச்சிக்களைத் தூண்டி அறிவியலுக்கு ஒவ்வாத பழம் நடைமுறைகளும், மதச் சட்டங்களும் யதார்த்த சமூகத்தின் சிக்கல்களைத் தீர்க்கப் போவதில்லை என்பதை மட்டும் இங்கு இப்போது பதிவு செய்கின்றேன்.//
ReplyDeleteதீர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அழிவின் பாதைக்கு அழைத்ததுச் செல்வதில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மதங்கள் நம்மை செம்மைப்படுத்தத்தான்.
ஆணுக்கும் பெண்ணிற்கும் இயற்கையான பல
ReplyDeleteமுரண்பாடுகள் உண்டு அதற்கு தகுந்தாற்போல்
நம் கலாச்சாரம் அமைக்க பட்டுள்ளது ..அதனை
காலம் காலமாய் நடை முறை படுத்தி வந்துள்ளோம்
எந்த பிரச்சனையும் இருந்த தில்லை ..மதத்திற்கு
அப்பால் நம் பழம்பெரும் கலாசாரத்தை பேணுவோம்
எந்த தொல்லையும் இல்லை ...வழியில் போகும்
பெண்ணெல்லாம் வசப்பட வேண்டும் என
நினைப்பது ...பெற்றோர் விருப்பம் என்ற எண்ணமே
இல்லாமல் போன சுய நலன்கள் தான் இது போன்ற
மிருக தனமான செயல் களுக்கு காரணம் ..
அன்பு தமிழன் தங்கள் வருகை கருத்திற்கு நன்றி
வினோதினியின் இழப்பு ஏன் பிறந்தாய் பெண்ணே என கேட்கவைத்து விட்டது நன்பருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteபெண்ணின் பதிலை எதிர் நோக்கும் உனது நன்பன்
இந்த உலகத்தில் நடக்கும் துயர சம்பவங்கள் அனைத்தும் பெண்களுக்கே அதிகம் ஆதலால் கேட்கின்றேன் பெண்ணே நீ ஏன் பிறந்தாய் காவிகளும் காமக்களும் அதிகம் இருக்கும் இந்த உலகில் நீ ஏன் பிறந்தாய். அருமையான பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.
ReplyDeleteமாதராய் பிறந்த தற்கு மா தவம் செய்திட வேண்டுமம்மா .என்ற சொல் பொய்யாகி விட்டதோ
ReplyDelete