குழந்தை பருவத்தில் தாய் தந்தை பாசத்தால் லயித்த உள்ளம் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்கு செல்ல எத்தனிக்கும் போது சிறு குழப்பம் ஏற்படும் அந்த மனநிலை எல்லா தரப்பு பிள்ளைகளிடமும் காணப்படும். அதாவது நான் முன்பு கூறிய நான்கு வகை குடும்ப பின்னணி கொண்ட பிள்ளைகளிடமும் காணப்படும் அது இயற்கையே !
1. ஆன்மீக ரீதியான அறிவுரை, ஒழுக்க சீர்கேடு, இறை நம்பிக்கைக்கு எதிரானது என்பதையும், அது ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். பாட்டிகள் மூலம் எளிதாக நிறைவேற்றலாம்.
2. ஒழுக்க சீர் கேட்டால் சமூகத்தில் மரியாதை கிடைக்காமல் போகும் அதன் மூலம் எதிர்காலம் கேள்வி குறியாகும் என்பதை புரிய வைக்க வேண்டும் .
3. ஒழுக்க சீர் கேட்டால் உடல் நலம் பாதிக்கப்படும். அதன் மூலம் மற்றவர்களால் ஒதிக்கி வைக்க படுவாய் என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும்.ஆனால் அதிக பயஉணர்வை ஏற்படுத்த வேண்டாம்.
* வீட்டில் புரிந்துணர்வு குறைந்த தருவாயில், வாலிப பருவத்தில் மனதில் எந்த தீய ஊசலாட்டமும் வராத வண்ணம் இருக்க. படிப்பில் கவனம் குறைந்து மற்ற விசயங்களில் கவனம் திரும்பும் சூழல் இருக்குமேயானால் விளையாட்டு துறையில் ஈடுபட வைக்கலாம்.
* நல்ல நட்பு வட்டாரங்களை ஏற்படுத்தி கொள்ளலாம். தனது மன உளச்சலை குறைத்து கொள்ள நல்ல நட்பை போன்ற மருந்து வேறு எதுவுமில்லை.
பறவைகள், விலங்கினங்கள் குறிப்பிட்ட காலம் வரை குட்டிகளை அல்லது குஞ்சுகளை தன்னகத்தே வைத்து பாதுகாக்கும். தானே இறை தேட ஆரம்பிக்கும் திறன் வந்துவிட்டால் குட்டிகளை தன்னகத்தே அண்ட விடாது. ஆனால் மனித சமுதாயம் அதிலும் இந்திய குடும்பங்களில் இந்திய கலாசாரத்தில், தான் பெற்ற பிள்ளைக்கு வாழ்வில் எல்லா தகுதிகளும் வந்த பின்னர் நல்ல துணை ஏற்படுத்தி வாழ்வில் ஒரு இடம் கிடைக்கும் வரை பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் சூழலைக் காண்கிறோம்.
கால சூழல் உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வு மறு நொடியே அறிய முடிகின்ற அளவிற்கு நவீனம் வளர்ந்த இக்காலகட்டத்தில் பெற்றோர்களின் அறிவுரை கேலியாக தெரியும் இவை பற்றி ஆய்வு செய்ய எத்தனித்தால் நான் கூற வந்த கருத்தின் திசை மாறி விடும் எனவே மீண்டும் விசயத்திற்கு வருகிறேன் மூன்று விதமான கருத்துக்களை இளம் உள்ளங்களில் பதிய வைக்க வேண்டும்.
1. ஆன்மீக ரீதியான அறிவுரை, ஒழுக்க சீர்கேடு, இறை நம்பிக்கைக்கு எதிரானது என்பதையும், அது ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். பாட்டிகள் மூலம் எளிதாக நிறைவேற்றலாம்.
2. ஒழுக்க சீர் கேட்டால் சமூகத்தில் மரியாதை கிடைக்காமல் போகும் அதன் மூலம் எதிர்காலம் கேள்வி குறியாகும் என்பதை புரிய வைக்க வேண்டும் .
3. ஒழுக்க சீர் கேட்டால் உடல் நலம் பாதிக்கப்படும். அதன் மூலம் மற்றவர்களால் ஒதிக்கி வைக்க படுவாய் என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும்.ஆனால் அதிக பயஉணர்வை ஏற்படுத்த வேண்டாம்.
* வீட்டில் புரிந்துணர்வு குறைந்த தருவாயில், வாலிப பருவத்தில் மனதில் எந்த தீய ஊசலாட்டமும் வராத வண்ணம் இருக்க. படிப்பில் கவனம் குறைந்து மற்ற விசயங்களில் கவனம் திரும்பும் சூழல் இருக்குமேயானால் விளையாட்டு துறையில் ஈடுபட வைக்கலாம்.
* நல்ல நட்பு வட்டாரங்களை ஏற்படுத்தி கொள்ளலாம். தனது மன உளச்சலை குறைத்து கொள்ள நல்ல நட்பை போன்ற மருந்து வேறு எதுவுமில்லை.
* எதிர்கால கனவை ஏற்படுத்தி அதற்காக உழைத்தல் போன்றவைகளால் தனது வாலிப வீரியத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
காதல் மாயைப்பற்றி அடுத்த ஆக்கத்தில் தொடர்வோம்...
இன்னும் வளரும்...
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
பதிய வேண்டிய மூன்று கருத்துக்களும் அருமை...
ReplyDeleteதனிக் குடித்தனம் பெருகி விட்ட இன்றைய நிலையில், முதல் கருத்து சிறிது சிரமமே... அந்தப் பொறுப்புக்களையும் பெற்றோர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
நன்றி ..!சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களே .
Deleteநாம் ,,இளம் சந்ததியர்களுக்கு எத்தி வைப்போம் ...!
முத்தான மூன்று கருத்துகள். விளக்கங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ள வேண்டியவை !
ReplyDeleteஅடுத்த ஆக்கத்தை எதிர் நோக்குவதோடு தொடர வாழ்த்துகள்...
நன்றி ...!ஆம் ...சகோ நிஜாம் அவர்களே ..
Deleteநம் இளம் சந்ததியர்களிடம் போய் சேர்போம்
தாங்களின் உள்ளம் கேட்குமே.! கட்டுரை ஒவ்வொரு வாரமும் உள்ளத்தை தொடுவதாக உள்ளது.அருமை.
ReplyDeleteஇந்நவீன காலத்திற்க்கேற்ப நம்ம வாரிசுகளுக்கு நல்லதொரு விழிப்புணர்வு படிப்பினை தரும் ஆக்கம்.
வாழ்த்துக்கள்.சகோதரரே.!
நன்றி ..சகோ அதிரை மெய்சா அவர்களே
Deleteநல்ல கருத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வோம்
1. ஆன்மீக ரீதியான அறிவுரை, ஒழுக்க சீர்கேடு, இறை நம்பிக்கைக்கு எதிரானது என்பதையும், அது ஆன்மாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். பாட்டிகள் மூலம் எளிதாக நிறைவேற்றலாம்/////
ReplyDeleteகிழிந்தபாயி அமர்ந்துகொண்டு கதைசொன்ன பாட்டிகளெள்லாம் டிவி முன் அமர்ந்து சீரியல் பார்க்கும் காலமிது நன்பா
நண்பா ...முதலில் பாட்டிக்கு பாடம் எடுப்போம் ..
Deleteபிறகு பேரபிள்ளைகளை கவனிப்போம் சரி தானே
If character is lost, everything is lost என்று ஆங்கில வகுப்பிலும், ஒழுக்கத்தின் விழுப்பத்தை திருக்குறள் நடத்திய தமிழாசிரியர் வகுப்பிலும், நீதிபோதனை நடத்திய பிற ஆசிரியர்களின் வகுப்புகளிலும் நாம் கற்றுக் கொண்ட ஆன்மீகம் கலந்த வகுப்புகள் இன்று இருக்கின்றனவா? என்பது ஐயமே! ஆன்மீகம் கலக்காதவரை இந்தப் பாடத்திட்டங்களால் மனிதனாக- ஒழுக்கம் உள்ளவனாகப் பள்ளியில் பயிற்சிகள் பெற இயலாது என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மையாகும். தமிழூற்று அதிரை சித்திக் அவர்களும் ஓர் ஆசிரியர் என்ற வகையில் கட்டுரைகளில்- ஆக்கங்களில் நீதிபோதனைகள் செய்கின்றார்கள். இளைஞர்கள் இதனைப் படித்தால் பயன்பெறுவர் என்பது திண்ணம் என்பதே என் எண்ணமாக இருக்கிறது. வாழ்த்துகள் தமிழூற்று அதிரை சித்திக் அவர்களே!
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் ..
Deleteகவியன்பர் கலாம் காக்கா அவர்களே ..
ஆசிரியர் பணி சிறந்த கல பணி ...
நாம் சேர்ந்து மீண்டும் கலப்பணியாற்றுவோம்...
தங்களின் சிறந்த கருத்திற்கு நன்றி
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅன்புச் சகோ சித்திக் அவர்களும் ஆக்கம் அருமையாக இருக்குது, படிக்க படிக்க நன்றாக இருக்குது.
உள்ளூரில் அண்டு வெளியூரில் கலை கட்டும் கல்யாணங்கள், ஒரே அலைச்சல் மறுபக்கம் எங்கள் வீட்டு அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் தரும் தொல்லை, கல்யாணத்துக்கு போய்விட்டால் கரண்ட் இல்லை, மின்வாரியத்தொடு இருந்து விட்டால் கல்யாண சாப்பாடு இல்லை. எல்லாம் ஒரே மாயையாக இருக்குது.
எனிவே அடுத்த வாரம் காதல் மாயை. வயசு போன காலத்தில் காதல் மாயையை படிக்க ஆசைதான். படிக்கதான் ஆசையே தவிர காதல் புரிய ஆசை இல்லை.
வாழ்த்துக்கள் உங்களுக்கு.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
காதல் ..ஒரு கற்கால மனிதனின் உணர்வு
Deleteதனக்கு தானே துணை தேடும் தன்மை என்று வரும்போது
தாய் தந்தை என்ற உறவுகளை உதாசீனம் செய்யும் உணர்வு
நவ நாகரிக மனித உணர்வு அல்ல ...வரும் ஞாயிறு சந்திப்போம்
உங்கள் பதிலை ஏற்றுக் கொண்டேன்.
Deleteவருங்கால வாரிசுகளுக்கு ஒரு படைப்பு இதை பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு புரியகூடிய விதத்தில் புரிய வைக்கவேண்டும்.நல்ல கருத்து நல்ல பதிவு வாழ்த்துக்கள் அதிரை சித்திக் அவர்களே.
ReplyDeleteஇளம் சந்ததியினருக்கு நல்ல கருத்துகளை மனதில் பதிய
Deleteவைப்போம்