Saturday, July 13, 2013
[ 3 ] அதிரை சித்திக்கின் 'வளைகுடா வாழ்க்கை' !
ஒப்பந்தம் அடிப்படையில் வேலைக்கு சென்ற நம்மவர்களில்... கம்பெனியின் நிலவரம், நிர்வாகிகளின் மனநிலை அறிந்து நல்ல முறையில் வேலை பார்ப்பவர்களும் உண்டு. அதிகமானோர் வெள்ளாந்தியாய் காலம் செல்ல செல்ல ஊர் சென்று குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஒரே சிந்தையில் நிர்வாகத்திடம் ஊர் செல்வதை பற்றி தகவல் கூறாமல் தானே முடிவெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பொருள் சேர்த்து அத்துடன் ஊர் செல்ல வேண்டும் என்ற ஆவலையும் சேர்த்து தனது முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள்.
இந்த நிலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாக செலவினம் பற்றிய சிந்தனையில் தந்திரமான நிபந்தனைகள் வைப்பார்கள். மூன்று வருடம் ஒப்பந்தந்தம் முடிந்து விட்டது இப்போதே ஊருக்கு செல்ல வேண்டும் எ ன்றால் உனக்கு திரும்பி வரும் விசா கிடையாது. இன்னும் ஒரு வருடம் காத்திருந்தால் விசா புதுப்பித்து தருகிறோம் என்பார்கள்.
நம்மவரின் மனநிலை நன்றாக அறிந்தே இந்த நிபந்தனை. ஆசையாய் வாங்கி வைத்த பொருள் அது மனைவி மக்களிடம் கொடுத்து அவர்கள் மகிழ நாம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.
இப்படி ஊருக்கு செல்ல முற்படும் அப்பாவி ! ஒரு பயணி எவ்வளவு கிலோ கொண்டு செல்ல வேண்டும் என்பதை அறியா அவர்கள் புறப்படும் போது விமான நிலையத்தில் விலை மதிப்பற்ற பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் கட்டி சோகமாய் ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள். நேரடியாக பம்பாய் வந்து இறங்கிய அவர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளால் கொடுக்கப்படும் தொல்லை மிகவும் பரிதாபமானது.
சுங்க பரிசோதனை என்ற பெயரில் நீண்ட தூர பயணத்தில் வந்த பயணியை குற்றவாளியை நிறுத்தி விசாரிப்பது போல என்ன கொண்டு வந்துள்ளாய் என கேட்டு அவர் கொண்டு வந்த உடமைகளை தனி தனியாய் சோதனை செய்து அதில் தனக்கு பிடித்த பொருளை அடாவடியாக எடுத்து கொண்டு உனது பொருளுக்கு சுங்க தீர்வையாக பத்தாயிரம் போடுகிறேன் என்பார் ! அப்பாவி தொழிலாளி செய்வது அறியாது திகைப்பார். அவ்வளவு பணத்திற்கு எங்கு செல்வேன் என்பார் உடனே இரக்கம் காட்டுவது போல் சரி சரி என்னிடம் ஆயிரம் தந்து விட்டு அங்கு ஆயிரம் கட்டி விட்டுச்செல் என்பார்.
அப்பாடா ! தப்பித்தோம் !? என்ற மன நிலையில் அப்படியே செய்வார் நம்மவர் பிறகு பம்பாயிலிருந்து உள்நாட்டு விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து அவர் தம் வீட்டிற்குச்செல்வார்.
ஊர் வந்த அவர் ஒரு மஹாராஜாவை போல கவனிக்கப்படுவார். காலாறா நடப்போம் என்று வீதி உலா, புது உடை, கையில் பல பலக்கும் கடிகாரம், ஊட்டமாக உணவுண்டு குளிரூட்டப்பட்ட அறையில் உறங்கியதால் பார்க்க நிறமாக காட்சி அளிப்பார். அரபு நாட்டு வாழ்க்கை பற்றி கேட்க சுற்றி வாலிபக்கூட்டம்.
வளைகுடா வாழ்கை பற்றிய முதல் தகவல் அறிக்கை ! அடுத்த தலை முறையினரின் ஆவலை தூண்டும் தகவலாய் அமைந்தது. நன்றாக படித்தவரின் நிலை காணாமல் கிணற்று தவளையாய் இருந்து ஊர்வந்த அப்பாவி பளபளக்கும் நிலை பல அப்பாவிகளை உசுப்பேற்றிய தகவலாய் அமைந்ததின் விளைவு பல ஆயிரக்கனக்கான் நம்மவர்கள் பாஸ்போர்ட் எடுத்ததும் வளைகுடா !
செல்ல எத்தனித்தும் அதில் பலர் வெற்றி கண்டதை பற்றி அடுத்த வாரம் காண்போம்.
குறிப்பு :
* 1972..களில் ..சுதேசி கொள்கை காரணமாக வெளி நாட்டு பொருகள் அதிகம் கொண்டு வர கட்டுபாடு இருந்தது அது சுங்க துறை அதிகாரிகளுக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தந்தது.
* ஒரு ஒப்பந்த தொழிலாளி ஒன்வே விசா கொடுத்து ஊருக்கு அனுப்பப்பட்டால், மீண்டும் ஒரு நபர் தேவைப்படுவார் அதற்கு விசா விண்ணப்பித்து இந்தியாவில் விசாவை விற்று பணம் பார்த்து விடுவர்.
* வளைகுடாவில் வேலை பார்ப்பவர்களின் பணங்கள் பொருளாகி பணம் விரயமாகுவதும் மன உளைச்சலினை எற்படுத்துவதுமாய் அமைகிறது. பணம் சம்பாதிக்க வந்தவர்கள் பணத்தினை ஊருக்கு அனுப்புவதில் கவனமாக இருத்தல் நலம்.
* ஊருக்கு செல்வதில் நாட்டம் கொள்வதை, கொஞ்சம் தாமதப்படுத்தினால் நலம்

[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
Subscribe to:
Post Comments (Atom)
விசாயிருந்தால் மட்டுமே
ReplyDeleteவிசாரிக்கப்படுவார்!
திரும்ப்பிப் போவதாயிருந்தால்
விரும்பிப் பழகப்படுவார்!
தோசைக்குள்ள மரியாதை
அப்பத்துக்கும் இடியப்பத்துக்கும் இல்லை!
ஆசையை அடக்கி வைத்து
ஆகாயத்தில் பறப்பவனுக்கே பாசவலை!
வெள்ளைக் கைலியின்
வெளுப்பு மஞ்சளாகு முன்பு
முள்ளைக் கொடி மனையாளை விட்டும்
முந்திப் பயணமானிகினால் தான் அன்பு!
பசியாறுதலும் பலகாரங்களும்
பளபளப்பு இருக்கும் வரைக்கும் வருகை!
ருசியான உணவுகளும் குறையும்
ரொக்கத்தின் இருப்பும் அருக!
மீண்டும் மீண்டும் தொடரும்
மீளாப் பயணம் வரைக்கு
வேண்டும் வளங்கள் கிட்டினாலும்
வேகமாய்ப் பறத்தல் படரும்!
வளைகுடா வாழ்க்கை
வரமா? சாபமா? இன்னும்
விளைந்திடா விடையறியா
வினாவாகவே மின்னும்!
ஆஹா ...ஆஹா ...
ReplyDeleteகவியால் கருத்து ...
கவியால் கேள்வி ..
வளைகுடா ..வாழ்க்கை வரமா சாபமா ..
பின்னூட்டத்தில் பதில் எதிர்பார்க்கலாமா..?
உங்கட்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்; இக்கவிதையை உடன் எனது சொந்த வலைத்தளத்தில் இட்டேன்; கவிவேந்தர் சபீர் உட்பட ஐவர் பாராட்டியிருக்கின்றார்கள்; முகநூலில் இட்டேன்; முகமலர்ந்து விருப்பமிட்டுள்ளனர். ஆக, இக்கவிதைக்கு ஊற்று, இந்த அதிரைத் தமிழூற்று , சித்திக் அவர்கள் தான்!
Deleteவளைகுடா வாழ்க்கை பிறருக்கு + புதியவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமையும். குறிப்பாக ஏர்போர்ட்களில் நம்மவர்கள் படும் அவஸ்த்தை அழகாக விளக்கப்பட்டுள்ளது.
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் பட்ட கஷ்டங்கள் பற்றி
Deleteஎழுதுவது என்றால் அது பல வாரங்கள் எடுக்கும்
திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோரை வளைகுடா நாட்டின் ஒன்றிற்கு வழியனுப்பி வைப்பதற்காக கடந்த வருடம் சென்றேன். அங்கே கண்ட காட்சிகள் அனைத்தும் என் மனதை வருடின. குறிப்பாக வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது மனதை வருடிய காட்சிகளாக இருந்தன.
ReplyDeleteகுறிப்பாக...
1. குழந்தைகளோ தங்களின் அப்பாவை [ Father ] “டாட்டா” க் [ Bye Bye ] காண்பித்து வழியனுப்பியது... கண்ணீரை அடக்கிக்கொண்டு விரைவில் வந்துவிடுவேன்டா ‘செல்லம்’, ‘தங்கம்’ என கன்னத்தில் தட்டி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...
2. அன்பான மனைவியோ தங்களின் கணவன் இரண்டு மூன்று !?ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது...
3. பெற்றோர்களோ நினைவில் மூல்கியவாறு 'நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான்' என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது...
4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற எண்ணற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு 'கையசைத்து' விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது...
கவியன்பன் காக்கா ..கூறியது போல் அது வரமா ..சாபமா
Deleteவளைகுடா வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை அருமையாக விளக்கி இருந்தீர்கள். தொடரட்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteRAMADHAN KAREEM
Deleteவரவேற்கிறேன் ..ஜசாகல்லாஹ் ஹைரன் ...
Deleteரமலான் முபாரக்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇனிய ரமலான் முபாரக்.
வளைகுடா வாழ்க்கையை வளைத்து வளைத்து எழுதி இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், நாங்கள் சென்ற சமயம் மொழிப் பிரச்சனை அதிகம் இருந்தது, குறிப்பாக பங்களாதேஷ், தாய்லாந்து தேசத்தவரிடம் பேசுவது என்றால் முதலில் சிரமமாக இருந்தாலும் பிறகு அதுவே பழகி விட்டது.
அன்றைய நாட்களில் எங்கள் கம்பெனியில் இருந்த பெரும்பாலான பங்களாதேஷிகள் இப்படித்தான் ஆங்கிலம் பேசுவார்கள், (sir, I speak, this man no understand, sir you speak now)
தாய்லாந்து தேசத்தவர்கள் Sir, I go market, fish, cook, eat,
இப்படியே நாங்களும் அப்படியும் இப்படியும் கலந்து பேசுவோம்.
ஒரு சமயம் நோன்பு நேரம், இரவு நேரம் ஒன்பதை கடந்து கொண்டிருந்தது, நாளைக்கு பெருநாளா இல்லையா என்று தெரியாமல் நாங்கள் எல்லோரும் வீட்டிற்கு வெளியே கூட்டமாக அமர்ந்து இருந்தோம்.
அப்போது ஒரு பங்களாதேஷி ஓடிவந்து என்ன சொன்னான் தெரியுமா?
சதீக், Television speaking, kal eid,
இதெல்லாம் ஒரு மறக்க முடியாத அனுபவம்.
குறிப்பு:- நான் அந்நாட்டவர்களை கிண்டல் செய்ய வில்லை. எப்படியோ ஆங்கில வார்த்தைகளை உபயோகப் படுத்தி விளங்க வைத்தார்களே.
நம்மவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா, ஒன்னும் தெரியாமல் அப்படியே பேத பேத வென்று முழிப்பார்கள்.
சகோ.சித்தீக் அவர்களின் சிந்தனையில் இன்னும் என்னென்ன இருக்கு?
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
நல்ல அனுபவம் ...வரவேற்கிறேன்
Delete