Wednesday, July 10, 2013
நவீன ஆத்திச்சூடி !
ஒவ்வொரு மனிதனின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை [ ஐ விரல்போல் ] இது இறைவனின் அமைப்பு. ஆனால் கொள்கையில் நேராக, யாருக்கும் பாதிப்பு இல்லாது, நேர்மையாளர், கொள்கை பற்றுள்ளவர் எனும் பெயர் எடுக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழல் உருவாக ! என் எண்ணத்தில் உதித்ததை ஆத்திச்சூடி வடிவில் கொடுத்துள்ளேன் உங்களது கருத்துக்களை கூருங்களேன் !
அளவாய் பேசு
ஆழமாய் யோசி
இனிமையாய் பழகு
ஈன்றவளை மதி
உண்மையை உரக்கச்சொல்
ஊர் போற்ற நடந்திடு
எண்ணம் சிறந்திடு
ஏகனை துதித்திடு
ஐ விரல்போல் மானுடர்
ஒற்றுமை காத்திடு
ஓரிறை கொண்டிடு
ஔவியம் பேசேல்
Subscribe to:
Post Comments (Atom)
பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டிய நல்லதொரு கருத்துகளை கொண்டுள்ளது.
ReplyDeleteதொகுப்பு அருமை !
தொடர வாழ்த்துக்கள்...
வாழ்க! வளர்க!!
ReplyDelete