Sunday, July 7, 2013
திவ்யா VS இளவரசன்
மகளின் வாழ்க்கை
மலரவேண்டும்
என்ற நோக்கோடு
மருத்துவம்
பயில
அனுப்பி வைத்தார்
பெற்றோர்கள்
அவளிடம்
மலர்ந்தது
காதல்
காதலித்தவனை
கரம்பிடிக்க
மானம் பறிபோக
பெற்றவனோ
மாய்த்துக்கொண்டான்
தன்னுயிரை
உற்றாரும்
உறவினரும்
பற்ற வைத்தார்
சாதித்தீயை
நாடகக்காதல்
என்று
நக்கலாய்
நாலு வார்த்தை
சொல்லிவைக்க
ஊரே ரெண்டுபட்டது
காதலியின்
சாதிசனம்
நயவஞ்சகமாய்
இருவரையும்
பிரித்துவைக்க
காதலனும்
மாய்த்துக்கொண்டான்
தன்னுயிரை
தாயும்
மகளும்
தாலியறுத்து
தனிமரமாய்
நின்றதுதான்
காதல் தந்த
பாடமய்யா
மலரவேண்டும்
என்ற நோக்கோடு
மருத்துவம்
பயில
அனுப்பி வைத்தார்
பெற்றோர்கள்
அவளிடம்
மலர்ந்தது
காதல்
காதலித்தவனை
கரம்பிடிக்க
மானம் பறிபோக
பெற்றவனோ
மாய்த்துக்கொண்டான்
தன்னுயிரை
உற்றாரும்
உறவினரும்
பற்ற வைத்தார்
சாதித்தீயை
நாடகக்காதல்
என்று
நக்கலாய்
நாலு வார்த்தை
சொல்லிவைக்க
ஊரே ரெண்டுபட்டது
காதலியின்
சாதிசனம்
நயவஞ்சகமாய்
இருவரையும்
பிரித்துவைக்க
காதலனும்
மாய்த்துக்கொண்டான்
தன்னுயிரை
தாயும்
மகளும்
தாலியறுத்து
தனிமரமாய்
நின்றதுதான்
காதல் தந்த
பாடமய்யா
மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதை...காதலை ஆதரிக்கீர்களா , எதிர்க்கீர்களா?....
ReplyDelete// காதலை ஆதரிக்கீர்களா , எதிர்க்கீர்களா?....//
ReplyDeleteகாதலை நிச்சயமாக ஆதரிப்போம் திருமணத்திற்கு பிறகு
காதலிக்காதவர்கள் யாருமில்லை. மரணத்தை விட கொடுமையானது மன உளைசல், இளம் வயதில் முடிவு எடுக்க தெரியாத 2 ஆன்மாக்களை வைத்து கவிதை எழுதி இசை அமைத்து பாட்டு பாடாதீர்கள் நண்பர்களே
ReplyDeleteபாலமுருகன் - சிவகங்கை
கருத்திட்ட மூவருக்கும் என் பதில் இதோ
ReplyDeleteதிவ்யாவும் இளவரசனும் காதலர்கள் எனது தலைப்போ திவ்யாV/S இளவரசன் காரணம் திவ்யாவின் பெற்றோர்களுக்கு இளவரசன் எதிரி இளவரசனின் பெற்றோர்க்கு திவ்யா எதிரி so இருவரும் இன்றைய பொழுதில் எதிரிகள்தான்
இது உண்மை காதல் என்று நிருபிக்க காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டான் காதல் என்பது பெற்றோரை பொறுத்தவரை எதிரான செயல்தான் ஆதலால் இது உண்மை காதல் இல்லை வன்மை காதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது காதல்
இளைஞ்சர்களே உங்களது ஆம்பிசன் டாக்டரோ பெரிய வக்கீலோ அதுபோல் பெற்றோரை அனுதினமும் மனம் குளிர வைக்கவேண்டும் என்ற ஆம்பிசனோடு இருங்கள் காதலால் ஏற்படும் பிரச்சனைகளை உணருங்கள் காதலாவது கத்தரிக்காயாவது என்பீர்கள்
வருத்தப்பட வைக்கும் சம்பவம்...
ReplyDeleteஇல்லை சாதி வெறி தந்த பாடம்
ReplyDeleteசாதியை வைத்து அரசியல் செய்யும்
அரசியல் வெறி தந்த பாடம்
தற்கொலைகள் நடந்தது சாதி மூட்டிய தீயால்தானே தவிர காதலால் அல்ல
இளவரசனின் பெற்றோர் தன் மருமகளைத் தன்னிடமே தந்துவிடச் சொல்கிறார்கள். மேலும் படிக்க வைத்து மறுமணம் செய்து வைப்போம் என்கிறார்கள்
காதல் என்பது அன்பு. அன்பு இல்லாத பூமி மயாண பூமி
அன்புடன் புகாரி
நன்றி புகாரி சார். நீங்களாவது இங்கே உண்மையை சொன்னீங்க.
Deleteநடந்தது ஜாதி வெறியால் காதலர்களுக்கு கொடுமை நடந்தது. ஆனா ஒருவர் திவ்யா VS இளவரசன் என்று கவிதை எழுதுகிறார்.மற்றவர்களோ கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி காதலை தீமையாக காட்டி பயமுறத்துகிறார்கள். இன்னொருவரோ கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி பெண்கள் மூடிகட்டிக்கிட்டு இருக்கணும் என்று பயமுறுத்துகிறார்.
இந்த காதல் பிரச்சனையில் ..
ReplyDeleteமாண்டது ..ஆண் வர்க்கமே ..
காதல் தீயை வளர்ப்பது பெண்ணினம் .
எனவே தான் பெண்கள் தனது கவர்ச்சியை
வெளியே காண்பிக்க கொடாது ..என்கிறது இஸ்லாம்
அரசியல் வென்றது
ReplyDeleteகாதல் தோற்றது!
The love between divya and ilavarasan is not true love.If so this guy should have waited for some more time until the situation calm down.How long divya mother is going to obstruct this love??? and how long this PMK is going to create communal violence???so these to ppl shold have waited for sometime and see the on going developments.Suicide is not the solution to any probelms.Ie it is suicide then this guy Ilavarasan is a coward.When these 2 ppl marry they should have the guts to face all the problems if not forget the love.
ReplyDeleteஅவர்களின் உள்ளத்தின் உண்மை நிலைமைகளை அறியாது தான் தோன்றியாய் பா புனைந்து சுயக் கருத்துக்களை விதைக்கும் கீழ்த் தர ஊடக பாணி பதிவர்களாகிய நமக்கும் வேண்டுமோ. அவர்கள் காதலித்தமை சரியா தவறா என்பதல்ல சிக்கல், அது தனி நபர் விருப்பம். பெற்றோரை எதிர்த்து மணப்பதா வேண்டாமா என்பதல்ல விவாதம், அது அவர் குடும்ப விவகாரங்கள். இங்கு தேவை சட்டத்தினை சமூகங்கள் மதிக்கின்றனவா இல்லையா என்பதே? சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது. இச் சட்டத்தை பெற்றோர், ஊரார், சாதிக் கட்சிகள், சமூக விரோதிகள் மீறியுள்ளனர். அவ் விருவரும் பாதுகாப்பாய் வாழ வழி செய்து சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய நாமும், நம் அரசும், சமூக சான்றோர்களும் தவறியதன் மூலம் தோற்றுள்ளோம். இதனால் உயிர், உடமை, உளவில் நிலைத்தன்மைகள் இழக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக !
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநடந்தது நடந்து விட்டது.
அவனின் / அவளின் விதி இப்படித்தான் இருக்கும் என்றால் அதை யாராலும் மாற்றமுடியாது.
இது மாதிரி சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதற்க்கு மாற்று வழி என்ன? யார் சிந்திப்பது?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
//காதல் என்பது அன்பு. அன்பு இல்லாத பூமி மயாண பூமி// உண்மைதைன்... இளைமைகள் மத்தியில் காதல் எதை மையமாக வைத்து காதல் உருவாகிறது?
ReplyDelete//சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது.// ஆமாம் ! ஆனாலும் சமூக கட்டமைப்புகளை உடைத்துக்கொண்டா ? சமூகம் அதனை பாதுகாக்கத்தான் சட்டங்கள்.
இங்கு நான் எழுதவருவது பொதுவான இளமை காதலைப்பற்றி. ஒருத்தரை ஒருவர் விரும்புவது எதை மையமாக வைத்து ? பெரும்பாலும் இனக்கவர்ச்சி. அறிவை, மனித தன்மையை வைத்து உண்டாகும் காதல் மரியாதை,மதிப்பைத்தான் கூட்டும். மாறாக சமூக அமைதியை கெடுக்காது. எது சமூக அமைதிக்கு குந்தகமோ அது என்றைக்கும் தவறே. வாழ்க்கையை மட்டும் இளமை தனக்கு மட்டும் அமைக்க தெரியும், தன்னை வழர்த்து அதாவது தனக்கு தேவைகள் நியாயமானதை தந்து நம் வாழ்வை சிறப்பாக்க கனவுகள் அனுதினமும் காணும் பெற்றோர்களுக்கு தெரியாது என்பது அறிவுடமையாகுமோ ? ஆணும், பெண்ணும் எவ்வாறு இருக்கவேண்டுமோ அதனைவிடுத்து மீறும்பொழுது கடைசியில் கொலைகள். வாழப பிறந்த உயிர் சாவதர்க்கா ? சாதனைகள் சாதிக்க வேண்டியவைகள் எத்தனையோ இருக்க உயிரை மாய்க்கும் வழிகளை தேடலாமா ? அதற்காகவா பெற்றோர்கள் வழர்த்தனர். வழர்த்தவர்களுக்கு நன்றியோடு இருக்கவேண்டுமல்லவா ? புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக !
// தாயும் மகளும் தாலியறுத்து // நெஞ்சுக்குள் வேதனை . பொருத்தமான நேரத்தில் எழுதி இருக்கிறீர்கள் தம்பி சபீர்.
ReplyDeleteஇளவரசன் இறப்புக்கு சாதி காரணம்! திவ்யாவின் தந்தை இறப்புக்கு மகள் காரணமல்லவா?
ReplyDeleteதிவ்யா இளவரசன் கூடவே இருந்திருந்தால் இளவரசன் இறந்திருப்பானா so இளவரசன் இறப்புக்கு யார் காரணம்
இத்தனை களேபரங்களுக்கும் காதல்தானே காரணம். சாதியை விடுங்கள் ஒரே சாதியில் வசதியான பெண்ணும் பரம ஏழையான ஆணும் காதலித்தால் என்னவாகும்
காதல் செய்ய ஆசைப்பட்டால் கரம் பிடித்தவளை காதல் செய்வீராக. நீங்கள் பாசத்தை பொழியும் பெற்றோகள், நீங்கள் விரும்பி கிடைத்தவர்களா!? கிடைத்ததை விரும்பி பாசத்தை பொழிகிறீர்கள் அல்லவா! so கிடைத்ததை விரும்புவீர் குழப்பங்களை தவிர்ப்பீர்
எத்தனையோ கனவுகளுடன் படிக்கவைத்து ஆளாக்கி உருவாக்கிய பெற்றோகளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால் இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் தொடராமல் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டு காதல் வலையில் சிக்கி தனது பெற்றோர்களையும் உற்றார் உறவினர்களையும் மனதில் ஆறாத ரண வடுக்களை ஏற்ப்படுத்தாமல் இருக்க இன்றைய கால இளைஞர்கள் சபதம் மேற்கொண்டு நம்நாட்டுக் கலாச்சார அடிப்படையில் காதலை தவிர்த்து நடந்து கொள்வதே நல்லது.
ReplyDeleteநடந்து முடிந்ததை விதி என நினைப்போம். இனி நடக்காமலிருக்க விழிப்புணர்வை ஏர்ப்படுத்துவோம்.
இந்து - முஸ்லீம் திருமணத்திற்கு இந்த கவிதை பொருந்துமா?
ReplyDeleteமுஸ்லீமை திருமணம் செய்துகொள்ளும் இந்து திருமணத்துக்கு பிறகும் இந்துவாக இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
சகோ.அருள் அவர்களே உங்களின் வரவு நல் வரவாகுக
ReplyDeleteஇஸ்லாம் காதலை முற்றிலுமாக எதிர்கின்றது தனியாக இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் சைத்தானும் இருக்கிறான் இது நபிகள்[ஸல்]அவர்களின் வாக்கு சைத்தானின் வேலை தீயதை அழகாக காண்பித்து கெட்ட செயலில் மனிதர்களை உட்படுத்துவதே அவன் வேலை.
தனி மனிதர்களின் காதலால் எந்த மதமும் தனது கோட்பாடுகளை மாற்றிக்கொள்ளாது உதாரணமாக இந்து மதத்தில் ஒரே மதத்தவர் இருபாளர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால் சாதி அடிப்படையில் ஏற்றுக்கொள்வதில்லை [எ.கா. திவ்யா இளவரசன்]அப்படி இருக்க இஸ்லாம் என்ன சொல்கிறது என்று உங்களுக்கு தெரிந்த பதிலுக்கு உண்டான கேள்வியை என்னிடம் கேட்பதன் காரணம் என்னவோ!?
பெற்றோரை மதிப்போம் மாண்போடு வாழ்வோம்
"பெற்றோரை மதிப்போம் மாண்போடு வாழ்வோம்"
ReplyDeleteநன்றி
காதல் என்பது புனிதமானதாகவும், தெய்வீகமானதாகவும்,எல்லைக் கோட்டுக்குள்ளும்- வரம்புக்குட்பட்டும் பழகிய காலம் பழைய காலம்! அப்படித்தான் அந்தக் கால “சினிமா”வும் அழகாய்ச் சித்தரித்த அன்பை விதைக்கும் காதல், இற்றைப் பொழுதில் எல்லை மீறிய வக்கிரம், காமத்தை மட்டும் மையமாகக் கொண்டு ஓர் ஈர்ப்பை உண்டாக்கும் சாதனமாகவே “காதல்” கணிக்கப்படுகின்றது’ சினிமாவிலும் காண்பிக்கப்படுகின்றது. இதனால் ஓர் ஈர்ப்பால் கவிழ்ந்து முற்றிலும் உடலும் உணர்வும் சார்ந்த ஒரு விளையாட்டாக “செய்து பார்த்தால் என்ன” என்ற ஓர் ஆவலைத் தூண்டும் கவர்ச்சியாகவே காதல் ஆகிவிட்டது! ஆனால், உண்மையில் காதலிப்பவர்கள், இறுதியில் இல்லறம் என்னும் நல்லறம் காண வேண்டும்;இல்லையேல், பெற்றோர்ப் பார்க்கும் கணவன்\மனைவியாக வாழ்வைத் துவங்கி அன்னாளிலிருந்து கணவனும் , மனைவியும் காதலிக்கலாமே!
ReplyDeleteஎல்லாரிடமும் நிறைவுகளும் இரா; குறைகளும் இரா. இரண்டும் கலந்தே மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்கள். எனவே,, பெற்றோர்கள் மணமுடித்து வைக்கும் வாழ்க்கையில் இருபாலார்க்குமிடையில் சுவையான வாழ்வைத் தொடர, படைத்தவனே தன் திருமறையில் ஓர் உத்தியைச் சொல்லிக் காட்டுகிறான்.
“உங்கட்கிடையில் குறைகள் இருப்பினும், நிறைகளை மட்டும் கண்டு வாழ்ந்தால் இந்த திருமண வாழ்க்கைச் சிறப்பாக இருக்கும்” என்னும் கருத்துப்பட உரைக்கின்றான்!
அன்புச் சகோதரர் அருள் அவர்களே!
இஸ்லாம் மார்க்கம் இறைவனின் மார்க்கம்; இஸ்லாமியச் சட்ட்ம இறைவனின் சட்டம். எனவே தான், படைத்தவன் தன் திருமறையில் சட்டமிட்டுள்ளபடி, “முஸ்லிமான ஆண், முஸ்லிமான பெண்ணையும்; முஸ்லிமான பெண், முஸ்லிமான ஆணையும் தான் மணம் முடிக்க வேண்டும்; மாறாக, முஸ்லிம்கள் இணைவைப்பார்களையோ, நிராகரிப்பார்களையோ மணமுடித்தலாகாது. இஃதே அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகட்கும் பாதுகாப்பானதும்- ஒரே மார்க்கத்தில் அவர்கள் வாழவும் முடியும் எனபதும் தெளிவானதாகும்.. மாறாக, தாயும் தகப்பனும் வேறு வேறு மதத்தில் இருந்தால் குழந்தைகளின் வாழ்க்கை எப்படி அமையும்? அவர்கள் யாரைப் பின்பற்றுவார்கள்?
இஸ்லாம் தூய அன்பை- காதலை எதிர்க்கவில்லை; அதன் எல்லைத் தாண்டாதவரையும் அதன் முடிவு இல்லறமாய் அமையும் வரைக்கும். மாற்றமாக காமத்திற்கு மட்டும் காதல் என்றால் நூறு விழுக்காடு விபச்சாரம் என்பதும் தெளிவானதாகும்.
இல்லறம் கண்ட பின்னர் இ|றுதியாய் மரணிக்கும் காலம் வரைக்கும் “காதலர்களாகவே” கணவந் மனைவியும் இனிய வாழ்வைச் சுவைக்கவும் முடியும். அதிலும் ஒன்றுக்கு நான்கு வரை கூட மனைவியாக வைத்துச் சுதந்திரமான - கவுரவமான- உரிமைகளுடனான வாழ்வை மனைவிகட்கு வழங்கவும் - இப்படியாக காதலை மனைவிகளிடம் காட்டலாம்; தவிர காதல் என்ற பெயரில், கள்ளத்தொடர்பு, வைப்பாட்டிகள் வைப்பது உண்மையில் பெண்களின் உரிமை, சுதந்திரம் பறிக்கப்பட்டு, அவர்களை அனுபவித்து விட்டுத் தூக்கி எறியும் ஓர் ஏற்பாடாக இந்தக் காதல் என்னும் சாதனம் பாதை அமைத்துக் கொடுக்கும்.
காதலித்தவர்கள் இறுதி வரைப் போராடி கல்யாணம் செய்வீர்களாக!
கவிக்குறள் தனிபாடமே எடுத்து நடத்திவிட்டார். இதை வீட ஒரு விளக்கம் வேண்டுமா ?
Deleteஜஸாக்கல்லாஹ் கைரன் = மிக்க நன்றி, விழிப்புணர்வு வித்தகரே!
ReplyDeleteவேனாம் மச்சான் வேனாம் இந்த பொன்னுங்க காதலூ......................
ReplyDeleteவேனாம் மச்சான் வேனாம் இந்த பொன்னுங்க காதலூ......................
ReplyDeleteஇது காதல் தந்த பாடமல்ல
ReplyDeleteசாதி தந்த பாடம்..........