Friday, August 2, 2013
முரண்பாடுகளை முறியடிப்போம் !
உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை !!!!!
"கவியன்பன்"
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை !!!!!
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு : 'கவித்தீபம்' அபுல் கலாம் அவர்களின் இக்கவிதை கடந்த [ 01-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
Subscribe to:
Post Comments (Atom)
Wow ! What a fantastic poem
ReplyDeleteSelf-confidence is extremely important in almost every aspect of our lives. So we will Prepare positive thinks ourself for Success !
Dear Uncle,
Can you translate this poem into English language if you do not mine
Assalaamu alaikkum, Dear niece Parveen Ayisha,
DeleteJazakkallah khairan. Thanks you lot for your heart-felt appreciation on my poem creation and your inducement to translate into English leads to reach my ambition. (below I have translated in such a way to be as en English poem; to write English poem is my next ambition too)
//Positive thinking always ever success Negative thinking always never success\\ this is an English proverb which try to adhere in your life. keep it up!
THE BELOW IS TRANSLATED FORM FOR MY ABOVE TAMIL POEM:
CONQUER THE CONTRARIETY
We are building the skyscrapers of superior complex
Whereas living with the inferiority complex
Paths and pavements are being constructed in broad-way;
Our minds and feelings are stuffed with narrow-way
We spend plenty;
Getting yield is tiny
Big houses are being built well;
Small home is to dwell
Lot of faculties is available;
Short of time is usable
Certifications are being obtained for intelligence;
Having lack of knowledge and experience
We have known lot of information
And utilize under justified discrimination
Scholars are grown multiplication
Same as are grown confusion
We have surplus of Medicines’ discovery;
We do not have much recovery
Belongings are being more and more grown
Values and respects of them have come down
We use our tongue to talk lavishly more and more
Love is shortened; scorn rules in the hearts’ core
we have learnt to produce livelihood:
But not how to live well mood
For life we are entering the Year in the scroll;
For span of life, not entered the soul
We have climbed up to sky
But not to see the people nearby
Even though won in sophisticated nature
We have failed to regularize the infrastructure
we have cleaned the atmosphere outer
But failed to clean the powerful soul inner
We have known how to shatter the Atom’s part
Have we learnt how to shatter the squalor of heart?
We are receiving highest pay:
We do not look after much disciplinary way
We had obtained quantity;
But not in quality
Profits have been multiplied;
But relationships have been deducted
For “Word Peace” Summit Conference held in foreign land
Crematorium is being created by riots in home land!
So many kinds of food are being daily cooked;
But, low nutrition only is being really looked
Husband and wife are earning and getting income both way
But, divorce is being grown; that is a shame in another way
We are dwelling in decorated house;
But, keeping the hearts with mess
We have built windows with ornamental look outside;
Nothing is kept in the locker’s inside
As now-a-days we got progress in the technology
Do not try to erase these words of my ideology!!
Walaikkum salam Uncle,
DeleteThank you for taking the time out of your busy schedules to write poems in English for me.
Assalaamu alaikkum niece,
DeleteJazaakkumullah khairan wa aafiya.
Actually, I must thank you lot for giving me chance to write an English poem. By the by, while I was attending IFTAR party arranged by our hometown family(my relative home) here, I admired your talent and surprised how many Adirai girls are now interested in higher studies. I think you should have become a degree holder, Or you should have been studying presently in college and asked me to write this translation in order for you to show to your class-met.
Any way, I have fulfilled your request and it is an inducement to write more and more English poems too.
As I explained in reply to SHAKKANA NIJAM, author of this blog, I am In Shaa Allah, going to commence a new blog for ENGLISH POEMS as I have already for Tamil poems where you can go and see http://www.kalaamkathir.blogspot.com//(கலாமின் கவிதைகள்)
Could you please name to my forthcoming new English blog?
Mostly I have reached Non-Tamil speaking readers too via my Facebook, Hence, it is now necessary for me to translate all of my Tamil poems into English language as you are the key person who opened my eyes.
Again I must thank you for giving reply soon after seeing my posting here.
முரண்பாடுகளை முறியடிப்போம் என்ற தலைப்பில் வாழ்வியலை மிகவும் அழகாக கவி வடித்துள்ளீர் என் அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கு.
ReplyDeleteஅன்புதோழியின் அன்பான வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்புநிறையும் நன்றிகள்.
Deleteஇன்றைய உலகின் நடப்புகளை அழகான கவிதை மாலையாக தொகுத்து கவிஞர் தந்துள்ளார்.
ReplyDeleteஒவ்வொருவரும் இந்த முரண்பாடுகளை உணர்ந்து சிந்தனை செய்து அதனை முறியடித்து அமைதியுடனும், நலமுடனும் வாழும் வழிகளில் தன்னை உட்படுத்தினால் உலகம் இனிமையாகும்.
நல்ல சிந்தனை.
வாழ்க கவிஞர் !
”தேடல்” என்னும் ஞானக் கருவூலத்தைத் தான் இவ்வாரம் இடுகையிடலாம் என்றிருந்தேன்; அதற்கும் வியாழன் கவிதை நேரத்திற்கான தலைப்பு “முரண்பாடு” என்று இலண்டன் வானொலி நிலையத்தாரின் அறிவுப்பு வந்ததனால், இன்று உங்களின் பார்வைக்கு இதனை இட்டுள்ளேன்.
Deleteமுரண்பாடுகளிலும் ஓர் ஆதங்கம் தொனிப்பது போல், என் “தேடலிலும்” ஓர் ஆன்மீகம் இருக்கும் என்பதை அப்பாடலை இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் காண்பீர்கள் என் ஞான குருவே!
நல்ல “விதைகள்” விதைக்கப்பட்ட மனநிலத்தில் தான் “நல்ல கவிதைகளும்” விளைச்சலாகும்; அதனை உண்டு இரசித்து எழுதிய உங்கட்கு என் உளம்நிறைவான நன்றிகள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அய்யாவின் நல்ல கவியை வாசித்து மகிழ்ந்தேன்
ReplyDeleteவாழ்க தமிழ். வளர்க தமிழ்பற்று.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உங்களை இத்தளத்தில் காண்கிறேன், தமிழன் அய்யா!
Deleteஉங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
சிந்தனைகள் உண்மைகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உண்மையாய்ச் சிந்திக்கும் உங்கட்கு உண்மையை உணமையாய் உரத்துக் கூற தயங்க மாட்டீர்கள் என்பதை உங்களின் உண்மையான வாழ்த்தில் அறிந்தவனாய், உங்கள் பக்கமாக என் சிறப்பான வாழ்த்துகளை இணைத்துக் கொள்கிறேன், அய்யா.
Deleteதமியேன் இந்தியாவில் இல்லாமல் தற்பொழுது விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்கு அபுதபி வந்து விட்டதால், சென்னையில் நடக்கும் “பதிவாளர்கள் மாநாட்டிற்கு” அன்பு தோழி அவர்கள் அழைப்பிதழ் அனுப்பியிருந்தும் கலந்து கொள்ளவில்லை; அம்மாநாட்டில் நீங்களும் கலந்து கொள்வதும்; உங்கட்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் நிகழ்வுகள் இருப்பதும் அன்பு தோழியின் அறிவிப்பிலிருந்து அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துகள்; பாராட்டுகள்.
கவிதையில் சமூகச்சாடல் மேலோங்கி காணப்படுகிறது. இப்படி கவிக்குரள் பொங்கி எழ நான் இதுவரையில் கண்டதில்லை.
ReplyDeleteதொடரட்டும் உங்களின் சமூக நலன் சார்ந்த எழுத்துப்பணி
ஆம். விழிய்ப்புணர்வு வித்தகரே!
Deleteநீங்கள் விரும்பும் “சமூகச் சாடல்” என்னும் சமூக விழிப்புணர்வு எல்லாக் கவிஞர்களிடமும் நிறைவாகவே நிரம்பி வழிகின்றன. உண்மையில் பாடல்கள் எல்லாம் அதிகம் சாடல்கள் தான் மையமாக இருக்கும்; சில காதலை மையமாக வைத்து வனையப்படும்.காட்டுகள்: பாரதியாரின் சாடல்கள்; பாரதி தாசனாரின் பாடல்கள். எனவே, எனக்கு மட்டும் உரித்தானதன்று இச்சாடல்; சமூகப் பேரழிவு என்னும் சமுத்திரப் பிரளய்த்தில் கவிஞர்களின் சிரத்தையும் ஒரு சிரட்டை அளவேனும் இருக்கும்.
உண்மையில் “தேடல்” என்னும் கவிதையைத் தான் இடுகையில் இட எண்ணினேன்; ஆனால், இடையில் வியாழன் கவிதை நேர அறிவிப்பில் “முரண்பாடு” என்று தலைப்பில் கவிதை வேண்டியிருந்ததால் இதனை எழுதி ஈண்டு இடுகையில் இட்டேன்.
நிற்க. என் இக்கவிதை நீண்டதாக இருப்பதால் வாசிக்கப்பட்டதன் பின்னர் அதன் பதிவு யூட்யூபில் இடம்பெற இடம் இல்லை (அதிக இடத்தை ஆக்ரமிப்பதால்) ஆனால், இக்கவிதைக்கானப் பாராட்டும் விளக்கமும் தொகுப்பாளரின் குரலுடன் காண்க:
http://www.youtube.com/watch?v=2kasIQ2lECI&feature=c4-overview&list=UUFzA5rHJf9nebaDWQ1HfjSg
சகோதரி ஆஷா பர்வீன் :
ReplyDeleteகவித்தீபம் அவர்கள் ஒரு பேராசிரியருக்குரிய ஆங்கில புலமையை பெற்றிருப்பவர். இவரிடமிருந்து ஏராளமானோர் ஆங்கில இலக்கணத்தை இலவசமாக கற்றுள்ளனர்.
நிச்சயம் உங்களின் அவாவை பூர்த்தி செய்வார்.
அன்பின் தம்பி விழிப்புணர்வு வித்தகரே! உண்மையில் உண்மையாய் என்றன் உள்ளத்தையும் உணர்வுகளையும் ஊடுருவிக் கணித்து வைத்திருக்கும் உங்களாற்றான் என்னைப் பற்றிய ஓர் அழகிய அறிமுகத்தை சகோதரி பர்வீன் ஆயிஷா அவர்கட்கு அளித்துள்ளீர்கள்; மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.
Deleteஉணமையில் இன்று எனக்கு இரு முக்கியமான விடயங்கள் இருந்தன:
1) மாதந்தோறும் எடுக்கும் மருத்துவ சிகிச்சைக்கான இரத்தப்பரிசோதனை மற்றும் மருத்துவரிடம் செல்லுதல்
2) அபுதபி த.மு.மு.க வின் மாபெரும் இஃப்தார் விருந்தில் தமியேனை ரமலான் கவிதை வாசிக்கவும்; “ஒன்றுபடுவோம்; நன்று பெறுவோம்” என்னும் எங்கள் (அய்மான் சங்க) கோரிக்கையை அடியேன் அந்த இஃப்தார் விருந்து விழா மேடையில் பேச வேண்டும் என்றும் அழைப்பிடப்பட்டேன்.
ஆயினும், முதலாவதாக, ஜூம் ஆ தொழுகை முடிந்து மருத்துவ சிகிச்சை முடிந்த பின்னர் தான் என் கணிணிப் பக்கம் வந்தேன்; திறந்ததும் சகோதரி ஆயிஷா பர்வீன் உடைய அன்பான வேண்டுகோளை ஏற்றேன்; த.மு.மு. விழா நிகழ்வில் கலந்து கொள்வதை விட்டு விட்டு (எனக்கு பதிலாக அதன் செயலாளர் அவர்களைப் பேசச் சொன்னேன்) அருமை சகோதரியின் ஆங்கிலப் புலமையில் வியந்தவனாகவும் எனக்கோர் சவாலாகவும் அமையும் அக்கோரிக்கைக்கு மறுமொழி கொடுக்கச் சரியாக அஸர் தொழுகைக்குப்பின்னர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்பை முழுவதும் ஆங்கிலக் கவிதையாகவே எழுதி முடித்தேன்; அல்ஹம்துலில்லாஹ்; மாஷா அல்லாஹ்.
கல்வியை நாடி கேட்பவர்கட்கு வாரி வழங்கும் தமியேனுக்காக துஆ செய்யுங்கள்.
மேலும், இந்த சகோதரிக்கு முன்பாகவே என்னிடம் இங்கு அபுதபியில் ஆங்கில இலக்கணம் (இலவயமாக) பயிலும் நம் தமிழ்முஸ்லிம் சகோதரியின் பள்ளி விழாவில் என் ஆங்கிலக் கவிதை வாசித்தார்கள் , அம்மாணவி. பின்னர் அதிரை நிருபரில் நம் கவிவேந்தர் சபீர் அவர்களின் மகளார் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கவிதைக்கு என் பின்னூட்டமாக மறுமொழி ஆங்கிலக் அக்விதை எழுதினேன்; அடுத்து என் இணைய தள யாப்பு வகுப்பில் ஓர் ஆசான் எழுதிய் ஆங்கிலக் கவிதைக்குப் பின்னூட்டமாக ஓர் ஆங்கிலக் கவிதை எழுதி அதனைச் சரிபார்க்க நம் சகோ. இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்கட்கு அனுப்பி அவர்களும் superb என்ற பாராட்டை அளித்துள்ள இவ்வேளையில் தான் இந்த சகோதரியின் கோரிக்கையும் என் கண்ணில் பட்டதால், எனக்குரிய மற்ற அழைப்புகளை எல்லாம் புறக்கணித்து விட்டு- இச்சகோதரியின் ஆங்கிலப் புலமையைக் கணித்து- அவர்களையும் ஆங்கிலக் கவிதை எழுத வைக்கத் தூண்டுகோலாய் நினைத்து மேற்காணும் என் பின்னூட்ட மறுமொழியில் எழுதினேன்.
இப்பொழுதும் இந்தப் பின்னூட்டத்தில் இவ்வளவு நீண்ட விளக்கம் கொடுப்பது ஒரே நோக்கம்: இதனைப் படித்து விட்டு அப்பெண்மணியாம் நம் சமுதாயக் கண்மணியிம் ஆற்றல் மிகு ஆங்கிலக் கவிதை எழுத வேண்டும் “முக்காடிட்டவர்கள் மூளைக்கு முக்காடு இடவில்லை” என்பதை பாருலகுக்குப் புரிய வைக்க வேண்டும்; அதற்குத் தமியேனும் ஒரு தூண்டுகோலாக அமைய வேண்டும் என்ற “உளத்தூயமையே’ ஆகும்.
எல்லாப் புகழும் பெருமையும் அல்லாஹ் ஒருவனுக்கே!
கவித்தீபத்தின் உணர்ச்சி பொங்க எழுதிய முரண்பாடு
ReplyDeleteமுரண்படா சுவையுடன் மேலோங்கி சிந்திக்க வைத்திருந்தது.
[மதியுடனே நீ நடந்தால்
விதிகூட முரண்படுமாம்]
வாழ்த்துக்கள்.
//[மதியுடனே நீ நடந்தால்
ReplyDeleteவிதிகூட முரண்படுமாம்]
|
ஆம். அதிரை மெய்சா அவர்களே! உங்களின் ஒலிபரப்பபட்டக் கவிதை வரிகளிலிருந்தே குறிப்பிட்டுள்ளது பின்னூட்டத்திற்கு அழகு சேர்க்கின்றது மட்டுமல்ல; அவ்வரிகளை மீண்டும் மீண்டும் “நெஞ்சைத் தொடும் வரிகள்” என்று நம் நெஞ்சம் மறவா தேன்குரல் தங்கை ஷைஃபா மலிக் அவர்களும், வர்ணணையாளர் அவர்களும் புகழும் அந்தஸ்தைப் பெற்று விட்ட அழகிய ஆழமான வரிகள் அல்லவா!
இதில் ஓர் இலக்கணமும் பொதிந்துள்ளது அன்புச் சகோதரரே! ஆங்கு இதனைக் கவனிக்காமல் விட்டன்ர என்றாலும் தமியேன் அவசியம் குறிப்பிட்டு உங்களின் இலக்கண அறிவையும் பாராட்டக் கடன் பட்டுள்ளேன். ஆம்.
எதுகை என்பது அடிகளின் இரண்டாம் எழுத்த் ஒன்றி வருவது மட்டுமல்ல; இவ்வாறான (உங்கள் கவி வ்ரிகளில்) காணப்படும் முறையில் அமைப்பதும்-அமைவதும் ஓர் எதுகை தான்.
இதற்கும் முரண் தொடை என்பர். நீங்கள் எடுத்துக் கொண்ட கருவும் பாடுபொருளும் முரண் பற்றியது என்பதும் ஓர் அசாத்தியமான- அசாதாரணமான் ஒற்றுமை; வியந்தேன்; வாழ்த்துகிறேன்.
விதி என்பதற்கு முரண் (அல்லது எதிர்மறை) மதி என்பதாலும், இயல்பாகா நீங்கள் இரண்டாம் எழுத்து ஒன்றி வ்ரும் வண்ணம் “தி” வரும் அமைப்பில் விதி- மதி என்றெழுதியிருந்தாலும் விதியும் மதியும் எதிர் எதிரான் முரண்பட்டவைகளானவைகளையே இவ்வடிகளில் முரண் தொடை இலக்கண் அமைப்பிலும் கொண்டு வந்து சாதித்து விட்டீர்கள்; இவ்வ்ருமையான அமைப்பை ஆங்குள்ளோர் கண்ணில் பட வில்லை; ஆயினும் அடியேனின் கண்களில் பட்டன; அதனால் இப்பின்னூட்டத்தில் வாழ்த்துரைகளை இடுகையில்என் விரல்கள் இட்டன.
வாழ்க வளமுடன்!
சூழ்க பலமுடன்!!
தாங்கள் உள்ளத்தூய்மையுடன் வாழ்த்துயது மட்டுமல்ல அந்த என் கவி வரிகளின் அர்த்தத்தை தெளிவுபட விளக்கமளித்து எனது கவிதைக்கும் மேலும் மெருகேற்றிய கவித்தீபம் அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
Deleteஉங்களின் அன்புநிறைவான நன்றியை அன்புடன் ஏற்கிறேன், அன்பு சகோதரர் மெய்சா அவர்களே!
Deleteசென்ற வார உங்களின் கவிதை “காற்று” கூட மெருகேறி மணம் வீசியதே; அதைப் புகழ்ந்து என் மனம் பேசியதே!
இன்னும் இன்னும் முன்னேற்றப் படிகளில் ஏறி மின்னும் உங்கள் கவிதைகள் என்று எண்ணும் என் மனம்.
அறிஞர்கள் அதிகமானதால்,
ReplyDeleteகுழப்பங்களும் கூடி விட்டன;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
இப்படியாய் அருமையான வரிகள் நிரம்பக் கிடக்கின்ற நண்பர் கலாம். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
கனடாக் கவிஞரான என் நண்பர் அன்புடன் புகாரி அவர்களின் வாழ்த்துக்கும் பாராட்டும் என் உளம்நிறைவான நன்றிகள்,
Deleteஎதோ ஒரு கலையில் அறிஞன். அவ்வளவுதான்.
ReplyDeleteமனிதன் மனிதனாக வாழும் நிலையில் அறிஞர்கள் கூடினால், குழப்பங்கள் இல்லாத சுவர்க்க பூமியாக இவ்வுலகம் திகழும்.
அறிஞர்கள் என்ற சொல் அதில் அணைத்துவகை அறிஞர்களையும் அது உள்ளடக்கிவுள்ளதால், இது எழுத நேர்ந்தது.
நன்றி !
கலகம் இல்லா
Deleteஉலகம் வேண்டும்
கலகமும் குழப்பங்கட்கும்
கற்றவர்களின் தூண்டுதலே;
கண்கூடான காரணமாகும்!
“ஈகோ” என்னும் மனோயிச்சையை
“யூகோ” என்று மனத்தை விட்டும்
விரட்டாதவரை விடியல் இல்லை!
அறிஞர்களைப் பற்றிய அழகிய ஓர் அறிவுரை வழங்கிய அறிஞராம் உங்களை வரவேற்று, நன்றிக்கு நன்றி கூறுகிறேன்.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!
அற்புதமான கவி ...
ReplyDeleteஅருமையான... அருமையான கவி
வாழ்த்துக்கள்
என்னை ஊக்குவிக்கு என் முன்னாள் முதலாளி (கைடு டுயூசன் செண்டர்) அதிரை தமிழூற்று சித்திக் அவர்கட்கும் என் உளம்நிறைவான நன்றிகள்.
ReplyDelete