Saturday, August 24, 2013
தலைவா ! தலைகுனிவா !? தலைமை ஏற்கவா !?
தலைவனுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை பார்க்கையில் என்ன பிரச்சனை, ஏன் பிரச்சனை, ஒன்றும் புரியாமல் அவர்கள் ரசிகர்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கலைஞர்களுக்கும் தாம் எப்படியாவது சினிமா துறையில் பங்காற்ற வேண்டும் என்பது ஆழ்மனது ஆசையாக இருக்கும் காரணம் சுலபமாக மக்களிடத்தே பரிச்சயமாகும் வாய்ப்பு,கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு, புகழ்,,, எல்லாமே இத்துறையில் வந்துவிட்டால் சுலபமாக கிட்டிவிடும் தனக்கென்று ஓர் இடம் கிடைத்தவுடன் அடுத்த ஆசை வரும் அதுதான் அரசியல்.
அறிஞர் அண்ணா அவர்கள் துவங்கி வைத்தது கருணாநிதி,எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா, இன்று எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் வரைக்கும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான் சினிமாவின் புகழ் ஆட்சி பீடத்திலும் அமர வைத்து விட்டது அமர்ந்த அத்துனைபேர்களும் அடுத்து ஒரு சினிமாகாரன் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள் இதற்கு எம்.ஜி.ஆரும் விதிவிலக்கல்ல அன்று அவரிடம் அடிவாங்கியவர்கள் இன்று விஜய்க்கு இதுபோல் நிறைய பிரச்சனைகள் சந்திக்க வேண்டிவரும் என்று சமாதானம் கூருகின்றனர்.
சினிமாவில் சுலபமாக அநீதிக்கு போராடியவர்கள் தம் சொந்த வாழ்வில் ஏற்படும் பிரச்சனைக்கு தீர்வு காண திணறுகிறார்கள் தன் சொந்த படம் வெளிவர போராட உண்ணா விரதம் மேற்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர் தம் ரசிகர்கள் இருந்த உண்ணாவிரதத்தையும் எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிக்கை விடுகிறார் காரணம் புரியாமல் ரசிகர்களோ மனம் வெதும்புகின்றனர் வெள்ளை திரையில் காட்டிய நடிப்பால் சேர்ந்த கருப்புப்பணம் செய்யும் வேலைதான் தன் தலைவன் பரிதவிப்புக்கு காரணம் என்று பாவம் அவர் ரசிகர்களுக்கு தெரியாது
ஒரு நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படத்தை தடைசெய்வதில் காட்டும் அக்கறை நாட்டின் வளர்ச்சியில் காட்டட்டும் என்று காட்டமாக சூளுரைத்தார் என்ன மாயமோ தெரியல மறு அறிக்கையில் நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை என்று பல்டியடித்தார் [ எல்லாம் கருப்பு பணம் செய்யும் மாயம்தான் ]
நான் எப்ப வருவேன் எப்படிவருவேன் வரவேண்டிய நேரத்துக்கு சரியா வருவேன்னு பன்ச் டயலாக் பேசிக்கொண்டே தன்னோட காரியத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொண்டு போகின்றார் ஒரு நடிகர் ! எல்லா நடிகர்களும் கட்சி ஆரம்பிக்கும் வரையில் நிறைய சிரமங்களை அனுபவித்துதான் ஆகவேண்டும் கட்சி ஆரம்பித்து 10 சீட் ஜெயித்து விட்டால் பிறகு தடை ஏற்படுத்தியவர்களே சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்பார்கள்
தலைவாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை சில பாடங்களை நமக்கு கற்று தந்துள்ளது
1. அளவிற்கு மீறி கடன் வாங்கி எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்த தயாரிப்பாளர் ஆட்சியாளரிடம் கெஞ்சிய கெஞ்சலும் தடை நீட்டித்ததால் ஏற்பட்ட மன உளைச்சலால் நெஞ்சுவலி மருத்துவமனையில் அட்மிட்
2. அளவிற்கு மிறிய சினிமா மோகம் நடிகர்மேல் பாசம். படத்தின் தடை தற்கொலைவரை அந்த ரசிகரை கொண்டு சேர்த்தது
3. ஊருக்கு உபதேசம் தாம் செய்வதெல்லாம் அநியாயம் சம்பாதித்த பணங்களை கணக்கு காட்டாமல் கருப்பாக்கியதன் காரணமாய் ஆட்சியாளர் மிரட்டும் மிரட்டலுக்கு கட்டுப்படவேண்டிய சூழல்.
இந்த மூன்று விஷயங்களும் நாம் கவனிக்கவேண்டிய விஷயமாகும்
தலைவா பட தலைப்பில் TIME TO LEAD இதுதான் அவர்களின் எண்ணமும் ? அவர்களின் பிரச்சனையும் ? பிரச்சனைக்கு தீர்வென்ன போராட்டமா அல்லது வாசகத்தை வாபஸ் வாங்குவதா தலைவன் எடுத்த முடிவு போராட தலைமை ஏற்றாரா ? வாசகத்தை நீக்கி தலைகுனிவை ஏற்றுக்கொண்டாரா ?

மு.செ.மு.சபீர் அஹமது
Subscribe to:
Post Comments (Atom)
சொன்ன மூன்று பாடங்களும் அருமை
ReplyDeleteசிந்திக்க வேண்டியவை !
appadi iruppavargalukku nandraaga uraikka vendiya padhivu nandri
ReplyDeletesurendran
விசுவரூபத்தில் “கருத்துச் சுதந்திரம்” பற்றிப் பேசியவர்களும், தொலைக்காட்சிப் பேட்டிகள் போட்டுத் தொல்லைக் கொடுத்தவர்களும் இப்பொழுது எங்கே போனார்கள்?
ReplyDeleteஎனவே, முடிவாக:
மதத்தை, அரசியலை மையமாக வைத்துப் படமெடுப்பதால், சினிமா என்ற மாபெரும் சக்தி வாய்ந்த ஊடகத்தால் பாதிப்புகள் வரும் என்பதும் படம் சொல்லும் பாடம்!
நகைச்சுவை, குடும்ப வாழ்க்கை என்று எவ்வளவு அருமையான படங்களும் பாடல்களும் அன்று எடுத்தார்கள். இப்பொழுது, காமம், அரசியல், வன்முறை இதனை விட்டால் வேறு கதையே தெரியாதா?
இனியாவது திருந்தட்டும்!
சீரழியச் சினிமாவைப் பாருங்கள் என்றது முன்பு
சினிமாவே சினிமாவைச் சீரழிக்குது பாருங்கள் என்பது இன்று!
//கட்சி ஆரம்பித்து 10 சீட் ஜெயித்து விட்டால் பிறகு தடை ஏற்படுத்தியவர்களே சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்பார்கள்//
ReplyDeleteஅப்படி ஆன மாதிரி தெரியலியே,, நிறைய எம்.எல்.ஏக்கள் களண்டுலே ஓடுறாங்க.. ஓணானை எடுத்து வேட்டிக்குள்ளார விட்டாமாதிரி நெளியிறார்... ஒருத்தர்
இன்னொருத்தர் அரசியல் பற்றிய எண்ணைத்தையே அடியோடு அழித்துவிட்டேன் நீங்களும் அதையே செய்ங்கனு அறிக்கை விடுறார்.
என்னா அடி????
சமூகத்திற்கு பயன்தராத மக்களை சோம்பேறியாக்கும் சினிமாக்களை அரசு தடை செய்யவேண்டும்.
ReplyDeleteஇந்த தளத்தில் இப்படியொரு பதிவை எதிர்ப்பார்க்கவேயில்லை...
ReplyDeleteசினிமா சினிமா என்று சினிமாவில் சொல்லப்படுவதை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டு முழுமையாக நம்பி மோசம் போவோர்க்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிந்திக்க வேண்டிய விஷயம். தமிழனின் நிலை இருட்டில் தலைவரை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ReplyDeleteவிழித்துக் கொள் இளைய சமுதாயமே.....?
ReplyDeleteசிந்திக்க வேண்டிய விஷயம் இந்த கால இளைஞனுக்கு சிந்தனை என்றால் என்ன என்பதே தெரிவது கிடையாது அளவிற்கு மிறிய சினிமா மோகம் நடிகர்மேல் மோகம். படத்தின் தடை தற்கொலைவரை அந்த இளைஞனை கொண்டு சேர்த்தது சினிமாவில் சொல்லப்படுவதை நிஜ வாழ்க்கையில் செய்ய முடியுமா....? உன் சிந்தனையை தட்டி எழுப்பு என் இளைய சமுதாயமே. உன்னை நம்பி இருக்கும் உன் குடுபத்தை உன் கண் எதிரே தொண்டுவா. இனியாவது திருந்தட்டும்! என் இளைய சமுதாயம் அளவிற்கு மீறி கடன் வாங்கி எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்த தயாரிப்பாளர் கூட உன் நிலைக்கு போகவில்லை ஒன்றுமே இல்லாத உனக்கு ஏன் இந்த நிலை>>>>>>>>>>>>?
நல்ல கட்டுரை. அவசியமான கட்டுரை. பாராட்டுக்கள்
ReplyDeleteஅன்புடன் புகாரி
நடிப்பதற்கு நடிகர் கதை கேட்பதற்கு முன்
ReplyDeleteதயாரிப்பாளர் கேட்க வேண்டும் ..
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கட்டுரை, தலைவன் இறைவனுக்கு சிரம் பணிந்து தலைமை ஏற்கவேண்டும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை