Wednesday, September 4, 2013
துபாய்லே வாங்கிற சம்பளம் அபராதத்திற்கே பத்தலைங்க :)

துபையில் வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு பலவகைகளிலும் சிக்கல் வந்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்தியாவிலிருந்து படித்தவர்கள் துபையில் வேலை தேடுபவர்கள் குறைவாக இருந்தாலும். வேலைக்கு சேர்ந்தவுடன் கார் லைசன்ஸ், அல்லது இருசக்கர வாகன லைசன்ஸ் எடுக்கிறார்கள். லைசன்ஸ் எடுப்பதாக இருந்தால் குறைந்தது இந்தியா ரூபாய் 75 000 த்திலிருந்து 1 லட்சம் வரை செலவாகும்.
பலவிதமான கஷ்டங்களை தாங்கி வருகிறார்கள் இவர்களின் சம்பளம் பற்றிய
சிறிய தகவல் :
1 ) அதிகம் படித்தவர்களுக்கு சம்பளம் = 4000 Dhm to 10000 Dhm
2 ) கார் டிரைவருக்கு சம்பளம் = 3000 Dhm to 5000
3 ) இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சம்பளம் = 2000 dhm 3500
4 ) ஆபிஸ் பாய்க்கு சம்பளம் = 1500 dhm
5 ) ௬லிவேலை செய்வர்களுக்கு சம்பளம் : = 600 dhm to 1000 - இவர்களுக்கு மட்டும் தங்கும் வசதி உள்பட
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாரித்து ஊருக்கு அனுப்பலாம்ண்டு பார்த்தா ! அதிகப்படியான அபராதம் விதிக்கப்படுகிறது. கார் பார்க்கிங்காக டோக்கன் எடுத்து கார் முன்பு வைக்கணும். யாரேனும் டோக்கன் எடுக்க மறந்து விட்டால். அவருக்கு அபராதம் 210 dhm முனிஸ்பால்ட்டி வாகன எண்ணில் இணைத்து அபராதம் விதித்து விடுவார்கள். இது போன்று கார்களுக்கு பலவிதமான அபராதம் உண்டு.
இருசக்கர வாகனம் தற்போது அதிகமாக காணப்படுகிறது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு தனி இடவசதி அமைக்கவில்லை. வாடகை கார் வந்து போகும் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிருத்தி வைத்துள்ளார்கள். இதற்கு அபராதம் அளிக்க வாய்ப்பு உண்டு.
கார் இல்லாதவர்கள் பஸ்களில் பயணம் செய்தால் அங்கு டீட்டியார் கிடையாது, மாறாக பஸ் கார்டு அதை ரிச்சார்ஜ் செய்து, பஸ்ஸில் இருக்கும் ஸ்க்கேனிங் மிஷின் மீது ஏறும்போதும் இறங்கும் போதும் அதன்மேல் வைத்தால் பஸ் தேவையான திர்ஹம் கழித்துவிடும், யாரும் பஸ் கார்டு இல்லாமல் ஏறிவிட்டாலோ, கார்டுடில் திர்ஹம் இல்லாவிட்டாலோ ( RTA ) சோதனை செய்பவர் ( SPOT FINE ) உடனே அபராதம் கட்டச்சொல்வார் 210 DHM TO DHM 1000. ஆகலாம்.
அதுபோல்தான் மெட்ரோ ரயில்களிலும் அபராதம் விதிக்கிறார்கள். தண்ணிர் ௬ட குடிக்கக் ௬டாதாம். மேலும் குடித்தால் 200 லிருந்து 1000 திர்ஹம் விதிக்கப் படும் சரி கார்ல,பஸ்ல,மெட்ரோல போனாதான் அபராதம் கட்ட சொல்வாங்க ஆனா நடந்து போனாலும் அபராதம் கட்டனுமா ! வேட்டி உடுத்திக்கிட்டு போனாலும் அபராதம் கட்டனுமாம்.
தங்குவதற்கு (ROOM)அறை தனியாக தங்குவதாக இருந்தால் வாங்குற சம்பளத்தை இங்கேயே விட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் ஒரு (ROOM) அறைக்கு நான்கு அல்லது பத்து நபர்கள் சேர்ந்து தங்கலாம். (ROOM) அறைக்கு வருசத்துக்கு வாடகை 6 லட்சம் வருகிறது. அறையின் அளவு 30 க்கு 20 வது, அதிகமாக அளவு இருக்க வாய்ப்பு உள்ளது, அறைகளில் காற்று ஓட்டம் இல்லாமல் இருக்கும், சில அறைகளில் பால்கனி இருக்கும்.
துபையில் பலவிதமான அடுக்குமாடி இருந்தாலும், துணிகள் காய போடுவதற்கு போதுமான இடம்வசதி கிடையாது, இதுபோன்ற அறைகளில் தங்கும் சிலர் பால்கனிக்கு வெளியே துணிகளை காயப்போடுவார்கள். அதற்கும் கடந்த 28/2/2012 அன்றிலிருந்து முனிஸ்பால்ட்டி பால்கனிகளில் துணிகள் காய போட்டால் 510 திர்ஹம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்.
சில ( ROOM ) அறைகளில் சமையல் அறை இருக்காது. (KITCHEN) சமையல் அறை இருந்தால் சமைத்து சாப்பிடலாம், வாங்கும் சம்பளம் கொஞ்சமாவது மிஞ்சும். ( KITCHEN ) சமையல் அறை இல்லாதவர்கள் உணவு விடுதிகளில் சாப்பிட வேண்டிய கட்டாயமாக இருக்கிறது. பெரும்பாலும் மலையாளி உணவகம் அதிகமாக உள்ளது. அந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. தமிழ் உணவகத்தை அதிகளவில் இங்கே காண்பது கடினம்.
இங்கு மருத்துவமனைகள் அதிகமாக உள்ளது, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் சரியான மருத்துவ உதவி கிடைப்பதில்லை. மாத்திரைகள் அதிகவிலை உள்ளதால் குறைந்த சம்பளம் உள்ளவர்கள் மருத்துவமனை செல்லாமல் நாட்டு(கை) வைத்தியம்தான் உதவியாக உள்ளது. சில நபர்களுக்கு அவர்களின் கம்பெனி ஹெல்த் கார்டு மூலம் மருத்துவ சிகிச்சை செய்துக் கொள்கிறார்கள்.
இப்படியெல்லாம் கஷட்டத்தோடு காலத்தை ஓட்ட வேண்டி இருக்கு... துபாயில் வாங்கிற சம்பளம் அபராதத்திற்கே பத்தலைங்க !
சிராஜுதீன் M-S-T
Subscribe to:
Post Comments (Atom)
சகோ. சிராஜூதீன் அவர்கள் தளத்தில் பதியும் முதல் படைப்பு.
ReplyDeleteதொடர்ந்து பங்களிக்க வாழ்த்தி வரவேற்கின்றோம்.
உண்மை நிலையை உள்ளபடியே உரத்துச் சொன்னீர்கள்; மிக்க நன்றியும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஎன்ன பண்ணி தொலைக்கிறது நம்ம நாட்டுல ஏமாத்துறவன் தான் பிழைக்க முடியும்
ReplyDeleteவளைகுடா வாழ்வின் மறுபக்கம் ...
ReplyDeleteவேதனையை சம்பாரிகத்தான் வெளிநாடு செல்கிறீர்களா ?
ReplyDeleteஇளைஞர்கள் இதனை படிக்கவேண்டும். நன்கு படித்தவர்தான் அதிக சம்பளம் வாங்குகிறார். இதை நான் சொல்லலைங்க அன்பர் சிராஜுதீன் M-S-T அவர்கள் சொல்கிறார்கள்.
நல்ல கட்டுரை.
அன்பர் சிராஜுதீன் M-S-T அவர்களுக்கு வாழ்த்துகள்.
சமூக விழிப்புணர்வு பக்கங்களை நிரப்ப இன்னுமொரு பங்களிப்பாளராக வந்திருக்கும் சகோதரர் சிராஜுதீன் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
ReplyDeleteமுதல் கட்டுரையிலேயே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளீர்கள்
வெளிநாட்டு என்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று பலர் கனவு காணுகிறார்கள். அதில் எவ்வளவு பிரச்சனைகள் மன உளைச்சல்கள்.உள்ளன என்பதை யாரும் நினைப்பதில்லை.
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல கட்டுரை. இன்னும் பல விழிப்புணர்வு கட்டுரைகளை தாங்களிடத்திலிருந்து எதிர் பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
இப்படியும் இருக்கா?
ReplyDeleteஅட ராமா..........:(
ReplyDeleteஇளைஞர்கள்,புதியவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள் வருக வருக வாழ்த்துக்கள்
ReplyDeleteதுபாயில் பட்ட - படுகின்ற கஷ்டங்களை அழகாக வர்ணித்துள்ளார்.
ReplyDeleteசிராஜ் அவர்களின் முதல் கட்டுரையை வாசித்த எனக்கு நெஞ்சை நெகிழவைத்துவிட்டது.
வெளிநாட்டு மோகம் யாரை விட்டது.. இங்கே காசு/பணம் கொட்டிக்கிடக்கிறது கூட்டி அள்ள கையோடு ஒரு விளக்கமாறு கொண்டு போங்கனு சொல்லும் அளவுக்கு நம் மக்கள் மனதில் சின்ன வயதுலேர்ந்தே இந்த மோகத்தை பாலுடண் ஊட்டி வளர்த்திருக்காங்க...
ReplyDeleteI was in Dubai for 8 years and i never paid such fines...there are fines to discipline you...you have to pay the price if you dont want to follow the rules.
ReplyDeleteYou were in Dubai before 8 years. Isn"t it?. But, now you are not in Dubai. The article shows facts about fines which are now levied not before 8 years. In Abu Dhabi, it is more than Dubai.
ReplyDeleteThose who earn more than 10000 dhs only can live calmly with family!
Now-a-days, youngsters from our town who have obtained Engineering degrees are not liking to come to Gulf rather than willing to work in India, particularly in Bangalore. We also welcome their decision as we are struggling here as mentioned in the article.
I FULLY SUPPORT THIS ARTICLE AND THE AUTHOR WHO WROTE THIS.
\\வேதனையை சம்பாரிகத்தான் வெளிநாடு செல்கிறீர்களா ?\\
ReplyDeleteபுதுக்கவிதயாய்ச் சொன்னாலும் புத்தியில் அடித்தாற்போல் சொல்லி விட்டீர்கள் ஞானகுருவே!
அன்புத் தம்பி- நிர்வாகி சேக்கனா நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇவ்வாக்கத்தின் ஆசிரிய “அதிரை ஃபேக்ட்” வலைத்தள ஆசிரியர் அவர்கள் தானே?
இன்னும் தேடுங்கள்; இளைய எழுத்தாளர்கள்- கவிஞர்கள் ஊரில் இருக்கின்றனர்; அவர்களை எல்லாம் மூத்தவர்கள் நாங்கள் ஊக்கப்படுத்தக் காத்திருக்கின்றோம்.
\\வெளிநாட்டு என்றால் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்று பலர் கனவு காணுகிறார்கள். அதில் எவ்வளவு பிரச்சனைகள் மன உளைச்சல்கள்.உள்ளன என்பதை யாரும் நினைப்பதில்லை.\\
ReplyDeleteஉண்மையிலும் உண்மை; முக்காலும் உண்மை, அதிரை மெய்சா அவர்களே!
நாம் படும்வேதனைகளைச் சொல்லிக்காட்டாமல் தான் பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கின்றோம். நமது கஷ்டங்களைக் குடும்பத்தார் நினைப்பதில்லை; க்ஸ்டம்ஸார் நினைப்பதில்லை; கவர்ன்மெண்டும் நினைப்பதில்லை.
ஆயினும் நம்மால், குடும்பம் வளம் பெறுகின்றது; நாடு நலம் பெறுகின்றது. இருப்பினும், நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே அஃதே ஒரு பெரும் வேதனை.
சட்டைப் பையில் பணமிருந்தால்
சட்டென ஒட்டிக்கொள்ளும் “உறவுகள்”
சற்றை நிலை மாறினால்
சட்டை செய்யாது போகும் அதே “உறவுகள்”
வணிகமற்ற அன்பு என்பது உலகில் உண்டென்றால், அது அம்மா என்னும் அன்பு ஒன்றில் தான்!
முதல் கட்டுரையானாலும் முத்தாய்ப்பானக் கட்டுரையை வடிவமைத்த அன்புத் தம்பி சிராஜுதீன் அவர்களை அன்பொழுக வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன். இக்கட்டுரையை மட்டும் மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருக்கிறேன்; காரணங்கள்:
ReplyDelete1) இதுபோன்றே “இன்சூரன்ஸ்” என்னும் காப்பீட்டில் இங்கு நடைபெறும் பணம் பிடுங்கல் பற்றி வேறொரு தளத்தில் படித்ததும், அதுபோலவே இப்படிப்பட்ட அபராதங்களினால் நாம் கஷ்டப்பட்டு உழைத்துச் சேர்த்தது -குடும்பத்தை விட்டு வந்திருப்பது எல்லாம் வீண் என்றே நினைக்கும் அளவுக்கு “உணர்வின் ஓசையாக” இவ்வாக்கமும் கண்டேன்!
2) அபராதங்கள் தேவைதான்; கட்டுப்பாடுகள் வேண்டும் என்பதற்காக.; ஆனால், அளவுக்கும் அதிகமாக, குறைந்த சம்பளம் வாங்குவோர்க்கும் நிறைவான சம்பளம் வாங்குவோர்க்கும் ஒரே மாதிரியான அளவீட்டில் தொகை என்று வரும்பொழுது தான் மனம் சொல்லொணாத் துன்பம் அடையும்; அனுபவித்தவர்கள் மட்டும் உணரக் கூடிய வேதனையாகும்.
இது போன்ற ஆக்கங்கள் இருந்தால் போதும். மறைக்கப்பட்டிருக்கும் உணர்வின் சோகங்கள் வெளியுலகும், குடும்பமும் உணர்வார்கள்!
Thanks to everybody those who are read my article and supporting me .
ReplyDeleteYour's sopport is encouraged me to write more articles again inshallah...
U can expect my next article soon
Once again tnx to everybody..........
நல்ல ஒரு செய்தியை சொன்னீர்கள்,
ReplyDelete//லைசன்ஸ் எடுப்பதாக இருந்தால் குறைந்தது இந்தியா ரூபாய் 75 000 த்திலிருந்து 1 லட்சம் வரை செலவாகும்.//
ReplyDeleteஅது அபராதம் அல்ல...லஞ்சம் என்று நினைக்கிறேன். சரியா?
செங்கோவி .....
Delete///அது அபராதம் அல்ல...லஞ்சம் என்று நினைக்கிறேன். சரியா?///
கண்டிப்பாக லஞ்சம் கிடையாது...
துபாயில் எந்த துறையிலும் லஞ்சம் வாங்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது...
நம்ம ஊர்களில் உள்ள மாதிரி எங்கே லஞ்சம் பலிக்காது....
மாறாக நம்மவர்களின் அட்டுழியம் நிறையவே மிதந்து கிடக்கிறது...
ஒரு உதாரணம் உங்களுக்கு வேலை வாங்கி தருவாதாக இருந்தால்.
அரபியிடம் இலவசமாக விசாவைப் பெற்றுவிட்டு அதை நம்மளிடம் நம்மவர்கள் குறைந்தது ஐம்பது ஆயிரம் விசாக்கு வேண்டும் இல்லாவிட்டால் கிடையாது என்று மிரட்டுவார்கள் //// எமார்ந்தவர்கள் அதையும் கொடுத்து வேலைக்கு செல்லுவார்கள்....
அபராதங்களை செலவாக காட்டுவது சரியில்லை என்று கருதுகின்றேன். அங்கு செல்பவர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை சரிவர கடைபிடித்தால் இந்த சிக்கல் வராது
ReplyDelete"28/2/2012 அன்றிலிருந்து முனிஸ்பால்ட்டி பால்கனிகளில் துணிகள் காய போட்டால் 510 திர்ஹம் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும்."
இது மிகவும் சிக்கலான விடயம் தான். சிங்கப்பூரில் பால்கனிக்கு வெளியில் தடியில் உடை காயவைக்க அனுமதி உண்டு