.

Pages

Saturday, November 9, 2013

[ 19 ] 'வளைகுடா வாழ்க்கை' [ பைக் மெசஞ்சர் ]

வளைகுடா வாழ்கையில் பைக் மெசஞ்சர் !
பொருளாதார ரீதியாக நிறைவு பெற்ற நாடுகளில் போக்குவரத்துக்கு கார்களே பயன்படுத்தபடும். அதில் பைக் போன்ற வாகனங்கள் காண்பது
மிக அபரிதான ஒன்று. ஆனால் ஆசிய நாடுகளில் சாலைகள் தொலை நோக்கு பார்வையோடு அமைக்க படவில்லை. மேலை நாடுகளில் பிரதான வீதிகள் மிக விசாலமாக இருக்கும் எவ்வளவு கார்கள் வந்தாலும் நிறுத்தும் வசதியும் இருக்கும்.

கடைவீதிகள் என்ற அமைப்புகள் குறைந்து வணிக வளாகங்கள் என அமைய
பெற்றிருக்கும். ஆனால் துபாய் போன்ற நகரங்களில் மக்கள் நெருக்கடி, குறுகிய வீதி போன்ற காரணங்களால் அதிக அளவில் கார் நடமாட்டம் தவிர்த்து பைக் பயன் படுத்தும் சூழல். இந்த சூழல் நம்மவர்களுக்கு வேலை வாய்பாய் அமைந்து விட்டது.

இது பற்றி வளைகுடா வாழ் வாசகர் எனக்கு தகவல் தந்து பதியும் படி வேண்டி கொண்டார் எனவே அதனை இவ்வார பதிவாக பதிகிறேன்... தனது பெயரை கூட பதிய விரும்பாத நல்ல மனம் படைத்த இவ்வாசகர்க்கு எனது நன்றி !

இதோ அவருடைய தகவல்...
வளைகுடா வாழ்க்கையில் முக்கியமாக குறிப்பாக துபையில் உள்ள அனைத்து  பிரதான வீதிகளிலும் நம் சகோதரர்கள் அனுதினமும் பைக்கில் வளம் வருவதைக் காணலாம். நமது ஊர்களில் நம் இளைஞர்களோ பந்தாவுக்காக பைக் வைத்து ஒட்டிகொண்டிருக்கிறார்கள். ஆனால் வளைகுடாவில் பைக் ஓட்ட லைசன்ஸ் எடுப்பது பிழைப்புக்கு ஒரு மூலாதனமாக இருக்கிறது. காரணம் பைக் மெசஞ்ஜர் என்று அழைக்கப்படும் இந்த வேலை விரைவாக கிடைப்பதுடன் கைநிறைய நல்ல சம்பளமும் கிடைக்கிறது.

நெடுஞ்சாலைகளில் இந்த வளைகுடா நாட்டில் பைக் ஓட்டிச் செல்வது என்பது
ஒரு சாகச நிகழ்ச்சியை செய்வது போலத்தான் நினைக்க வேண்டும். கரனம் தப்பினால் மரணம் என்று சொல்வது போல் அவ்வளவு ஆபத்து நிறைந்தது.

இங்கு நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் முதல் கனரக வாகனம் வரை கடும் வேகத்தில் செல்லும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து கவனமுடன் சிந்தனைகளை சிதறவிடாமல் பைக் ஓட்டிச் செல்லவேண்டும். ஆனால் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பைக் மெஸின்ஞ்ஜர் வேலைக்கு சேரவே அதிக பட்சம் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம் கல்வியில் பின்தங்கி இருப்பவர்களுக்கு வளைகுடாவை பொருத்தமட்டில்
பைக் லைசன்ஸ் வைத்திருப்பது டிகிரி வைத்திருப்பதற்கு சமமாக வேலைவாய்ப்பு இலகுவாக கிடைக்க பெரிதும் கை கொடுக்கிறது. அவர்களுக்கு மட்டுமல்லாது வேலையில்லா பட்டதாரிகளும் கூடஒரு சிலர் கடைசி கட்டத்தில் இந்த வேலைக்குத் தான் சேர்கிறார்கள்.

வளைகுடாவில் குறிப்பாக துபாய் போன்ற பெரு நகரங்களில் அதிக அளவில் ஏற்றுமதி இறக்குமதி என்று வியாபாரச் சந்தைகள் பெருகிவிட்டதால் சாலைகளில் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படும். எந்த ஒரு வேலையையும் செய்வதற்கு காரில் சென்றால் காரை பார்க் செய்ய பார்க்கிங் கிடைப்பது கடினம். அதற்காக மணிக்கணக்கில் நேரத்தை செலவிட வேண்டும். தவறான வழித்தடத்தில் நிறுத்தி விட்டால் அபராதம்
எழுத உடனே அதிகாரி வந்து விடுவார்.

இந்தப் பிரச்சனைகள் எதுவும் பைக்கிற்கு கிடையாது. ஆகவே அனைத்து தரப்பான வேலைகளையும் வேகமாக செய்து முடிக்க பைக்கே முக்கிய வாகனமாக திகழ்கிறது. காரில் சென்று ஒரு வேலையை முடிக்க ஆகும் நேரத்தில் பைக்கில் சென்றால் ஒன்பது வேலையை முடித்து வந்து விடலாம்.

ஆகவே பைக்மெசஞ்ஜர்களை இங்குள்ள அலுவலகம், கூரியர் சேவை, உணவு டோர் டெலிவரி போன்ற வேலைகளை துரிதமாக செய்து முடிப்பதற்காக அனைத்து ஸ்தாபனங்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கிறார்கள்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

14 comments:

  1. அனைவரின் வரவேற்பையும் பெற்றுச் செல்லுகின்ற தொடரில் வாசகரின் கருத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி தந்திருப்பது தங்களின் பெருந்தன்மையை காட்டுகின்றன.

    வாழ்த்துக்கள் காக்கா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ..தம்பி நிஜாம் அவர்களே

      Delete
  2. வளைகுடா வாழ்வில் பற்ப்பல பணிகளை நம்மவர்கள் செய்து வந்தாலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த பைக் மெசஞ்சர் பணி மிக முக்கியம் நிறைந்ததாகும். காரணம் பாதியிலேயே கல்வியை விட்டவர்களுக்கும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் மற்ற அனைத்து தரப்பினருக்கும் பெரிதும் கை கொடுக்கிறது.

    பயனுள்ள தகவல் அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதிரை மெய்சா அவர்களே ..
      தங்களின் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    நல்ல தகவல்கள் கொண்ட பதிவு இது.
    உண்மையில் கரணம் தப்பினால் மரணம்.

    அப்பேற்பட்ட சாகச உழைப்பில் பெறப்படுகின்ற சம்பளத்தை பெற்றோர்களுக்கு அனுப்பும்போது அந்த பெற்றோர்கள் இறைவனிடத்தில் கையேந்துகிறார்கள், இதன் பலன் நாடும் நல்லா இருக்கு, கம்பெனியும் நல்லா இருக்கு, உழைப்பவனும் நல்லா இருக்கின்றான்.

    இப்படி உழைப்பவர்களே தங்கள் பெயரிலும் பணத்தை தனியாக சேர்த்து வைக்க மறந்து விடவேண்டாம். மேலும் தர்மம் இதையும் மறந்து விடவேண்டாம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை மறந்து விடவேண்டாம்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆலோசனை காக்கா ..நன்றி

      Delete
  4. // கரனம் தப்பினால் மரணம் என்று சொல்வது போல் அவ்வளவு ஆபத்து நிறைந்தது.// இந்த பைக் மெசேஞ்சர் வேலை என்று அறியும்போது மனம் கனக்கிறது.

    எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், ஏகன் அவனே இவர்கள் அனைவரையும் நலமுடன் பாதுகாக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனம் கொண்ட அறிஞர் நபிதாஸ் அவர்களின்
      உருக்கமான இறைஞ்சல் ..தங்களின் தாயுள்ளத்தை
      காட்டுகிறது

      Delete
  5. நல்ல தகவல்கள் மெசேஞ்சர் வேலைக்கு வயது வரம்புகள் உண்டா சம்பளங்கள் எவ்வளவு லைசன்ஸ் கம்பனியே எடுத்து தருமா நாம் எடுப்பதாய் இருந்தால் எவ்வளவு செலவாகும் வாசகர்களுக்கு அறியப்படுத்தவும்

    ReplyDelete
    Replies
    1. வயது வரம்பு வேலை தருபவரின் அபிப்ராயத்தை பொறுத்தது .
      சம்பளம் முப்பதுனாயிரத்தில் இருந்து அதற்கு மேல் ..
      லைசென்ஸ் அமீரகம் சென்று கம்பெனி விசா பதிந்த பின்னர் ..அங்குள்ள போக்குவரத்து துரு அலுவலகம் சென்று பரிச்சையில் பாசாக வேண்டும் ..
      அதிக மான செலவில்லை .

      Delete
  6. இப்படிப்பட்டத் தொழிலில் என் உறவினர்களும் நண்பர்களும் உளர்; இப்படிப்பட்ட ஆபத்தான வேலையில் உள்ளவர்களாதலால் முடிந்த வரை இவர்கட்கு அலைபேசியில் பணிநேரத்தில் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கின்றேன்; எந்நேரமும் பணியில் இருக்கும் இவர்கள் பயணத்திலேயே இருப்பதால் நாம் அவர்களின் உயிரைப் பாதுகாக்கக் கடமையுண்டு; அதனால் அவர்கள் வாகனம் ஓட்டிச் செல்லும் தருணம் நமது அலைபேசி அழைப்புக்கு மறுமொழி கொடுப்பதற்காக வாகனம் ஓட்டும் பொழுதே அவரகளின் அலைபேசியை எடுத்தால் அதுவே அவர்கட்கு ஆபத்தாக முடியும். எனவே, எல்லாரும் இதனைக் கடைபிடியுங்கள். ஆக்கத்திற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் தந்தீர்கள் கவியன்பரே ..
      அனைத்து சகோதரர்களும் பைக் ஓட்டும்போது
      போன் பேசுவதை அவசியம் தவிர்க்க வேண்டும் ..
      அன்பு சகோதரர்களே ..!உங்கள் உழைப்பை
      நம்பி உங்கள் குடும்பம் உள்ளது என்பதை
      நினைவில் கொண்டு உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் ..
      கவியன்பரி தகவலுக்கு மீண்டும் நன்றி

      Delete
  7. நல்லதோர் படைப்பு வாழ்த்துக்கள்.

    சிலர் நல்லா படித்து வீட்டு இங்கு வந்தால் கூட இந்த பைக் மெசஞ்சர் வேலையை ஆசை படுகிறார்கள் ஏன் என்றால் இதில் உள்ள ஆபத்து தெரிய வில்லை இதில் டையத்துக்கு வீடு திருபலாம் தங்களுடைய வேலைகளை முடித்து கொள்ளலாம். ஆதாலாலே ஏன்னோ

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தகவலுக்கு நன்றி சகோ ..
      வளைகுடா வாழ்க்கை புத்தகமாக வெளியிட உள்ளோம் ..தங்களின் கருத்தும் இடம் பெரும்
      இன்சா அல்லாஹ்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers