.

Pages

Thursday, January 9, 2014

[ 17 ] அறிவுத்தேன் [ வணக்கமும், வழிபாடும் ]

வணங்கும் ஒன்று
வணங்கப்பட ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !

வணக்கம் வேறு வழிபாடு வேறு எவ்வாறு ? என்பதை அவசியம் தெரிந்தாக வேண்டும். இலையேல் வழிபாடெல்லாம் வணக்கமாகவும், வணக்கமெல்லாம் வழிபாடாகவும் தான் தோன்றும். உண்மையில் இரண்டும் ஒன்றல்ல. இரண்டும் நேர் எதிரிடையானது என்றால் நம் கண்கள் அகல விரியலாம்.
இத்தொடரின் ஆரம்பத்தில் வணக்கம் கவிதையின் முதலில் வரும் அடிகள்

ஒன்றை ஒன்று
தெளிவாய் அறிந்தும்
நன்றாய் வணங்க -அது
உருவ வணக்கம்.

வணங்கும் ஒருவன்
வணங்கபட ஒருவன்
இங்கே அவசியம் -இது
உருவ வணக்கம்.

என்று எழுதிய அடிகளை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

உருவ வணக்கம் அதற்கு குறைந்தது இரண்டு உருவங்கள் நிலைத்துத் தேவை. ஒன்று வனங்குபவனின் தனி இருப்புச் சுயவுருவம் மற்றது வணங்கப்படுவதின் தனி இருப்புச் சுயவுருவம். ஒன்று வணங்க, மற்றது வணக்கப்பட. வணங்கும்போது அங்கு உச்சப் பணிவு உண்டாகும்.

ஆனால், வணக்கத்தில் "முழுவதும் என்னையே அர்ப்பணிகின்றேன்" என்ற பூரண இழக்கும் இணக்கம் ஏற்பட வேண்டும். தன் சுயம் உச்சப் பணிவுக்குப் பின்  முழுவதும் அர்ப்பணிக்கப் பட்டாகிவிட வேண்டும். அங்குதான் வணக்கம் ஏற்படும். இருயிருப்புச் சுயங்கள் இருக்கும் வரைக்கும் பூரண அர்ப்பணிப்பு ஏற்பாடாது. அவ்வர்ப்பணிப்பு ஏற்படாத வரைக்கும் செய்யும் செயல்கள் யாவும் வழிபாடு என்றுதான் ஆகும். விபரங்ககளைக் கீழே காண்போம்.

பரிபூரண அர்ப்பணம் என்பது தன்னை முழுமையாக இழந்திடுதல், யாருக்கு அர்ப்பனமோ அவர்களின் எண்ணமும் செயலாகவும் ஆகிவிடுதல். இவைகள் நிகழ வேண்டும். இது அரூப வணக்கத்தில்தான் சாத்தியம். அரூப வணக்கத்தில் வணங்குபவன் தன் சுயம் என்ற உணர்வு இல்லாது வணங்கப்படுவதின் சுயம் நின்று அதன் உணர்வில் அனைத்து செயல்களும் இருக்கும், இருக்க வேண்டும். இவனிருக்க அவனில்லை, அவனிருக்க இவனில்லை.

பொதுவாக வணக்கத்தில் புகழ்ச்சியும், வேண்டுதலுமே இருக்கும்..
புகழ்ச்சி என்றால் புகழப்படும் ஒன்றின் விளக்கங்கள் (என்பதே சரியானக் கருத்து)  என்றால் மிகையாகாது.

மாம்பழம் பொதுவாக மஞ்சள் நிறம். அதனின் இனிமை தனி உருசியானது. இதயத்திற்கு நல்லது. வைட்டமின் A  அதிகமாக இருப்பதால் கண்களுக்கு நல்லது. இரும்புச் சத்து அதிகம் நிறைந்தது. இரத்தம் சுத்தம் செய்யும். இவ்வாறு விளக்கிக் கொண்டேப் போவது அதன் புகழ்ச்சிகள் தானே. ஆகப் புகழ் என்பது ஒன்றினது விளக்கம் ஆகும். வணக்கத்தில் புகழ்தல் என்பது விளங்கிக் கொள்ளுதலுக்கு உடையது. மன்னனைப் புகழ்ந்து பலர் அறியப்பட செய்யும்போது(விளங்கச் செய்யும்போது) அம்மன்னன் அகம் மகிழ்ந்து பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினான்.

விதைப்பதுதான் முளைக்கும். எண்ணப் படித்தான் செயல்கள் இருக்கும். பதப்படுத்தப்பட்ட இடத்தில் தான் விதைகள் இலகுவாக முளைக்கும். பதப்படுத்தப்பட்ட பக்குவமான வணக்கத்தில் வேண்டுதல் விதைகளாக விதைக்கப்பட்டு விளைவுகளாக ஏற்படத்தான் என்று சொல்வதும் மிகையாகாது.

அரூப வணக்கத்திலும் புகழ்ச்சியும் வேண்டுதலும் இருக்கும். ஆனால் இங்கு புகழ்ச்சி தன்னை விளக்கும் அல்லது அறியும் புகழ்ச்சியாகவும்;  வேண்டுதல் என்பது தன்னில் தன் தேவை எண்ணத்தைப் பதிய வைக்கும் செயலாக நடக்கும். உருவ வணக்கத்தில் புகழ்ச்சி, செயல்கள் யாவும் புகழப்படுவத்தின் கருணை உணர்வு அதிகப்படவும், அந்நிலையில் வேண்டுதலை சமர்ப்பித்து தேவைகளைப் பெரும் செயலாக இருக்கும்

உருவ வழிபாட்டுக் கோட்பாடு பிரகாரம் தருபவன் தன்னின் இருப்பிலிருந்துதான் தருவான். ஆனால் தன்னையே பூரணமாகத் தர இயலாது. வழிபாட்டின் பொருள்படி இரண்டு தனித்த இருப்புச் சுயங்கள் நிலைத்து இருக்க வேண்டும். ஒன்று வழிகாட்ட மற்ற ஒன்று வழிச் செல்ல.

இரண்டு இருப்புச் சுயங்கள் இருக்கும் வரை இணங்கி நடக்கும் செயல்கள் யாவும் வழிபாடு என்றுதான் ஆகும். பரிபூரண அர்ப்பணிப்பு என்ற தன்னையே இழத்தல் நிகழ்வான வணக்கம் நிகழாது. மேலும் அக்கவிதையில்

ஒன்றது உருவம்
மற்றது அறியா
இருப்பினு மதுவும்
உருவ வணக்கம் !

என்றும் வரும். மகா வலிமையுள்ள, ஆற்றல்கள் நிறைந்த ஒன்று எங்கோ எப்படியோ இருக்கிறது என்றும், அதனை வணங்குகிறேன் என்றும் சொன்னால், இங்கும் இரண்டு இருப்பு சுயங்கள் இருக்கின்றது. ஒன்று தெரிந்தது. மற்றது தெரியாதது. இருயிருப்புச் சுயங்கள் இருக்கும் வரைக்கும் வணங்கும் செயல்களில் உருவ வணக்கம் செயல்பாடுகள்தான் இருக்கும்.

வேறு ஒன்று தான் தெளிவாக அறியாவிட்டாலும் எங்கோ எப்படியோ இருக்கும் என்ற ஒன்றை வணங்கினாலும் அதுவும் உருவ வணக்கம் என்ற உருவ வழிபாடுதான் ஆகும். இங்கு வனங்குவதில் உருவம் புரியாததால் தெரியவில்லை.

ஏகன் என்ற எங்கும் நிறைந்தவன் (நீக்கமற நிறைந்தவன்) இறைவன் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. இதன்படி வணக்கம் என்று சொல்லப்படும் உருவ வழிபாட்டில் ஒரு குறிப்பிட்ட வடிவில் அல்லது உருவில் மட்டும் தான் இறைவன் மற்றவைகளில் இறைவன் இல்லை என்ற பொருள்தான் இறைவனைப்பற்றி இலகுவாகப் புலப்படும் மாறாக எங்கும் நிறைந்தவன் என்ற கருத்து விலகியே நிற்கும்.

வணக்கத்தில் முழுமையாக என்னை அர்ப்பணிக்கின்றேன் என்று சொன்னால் உருவ வழிபாட்டில் தன்னைவிட்டு மற்றவைகளை அர்ப்பணிக்கின்றேன் என்ற பொருள்தான் வர முடியும். இவன் இருக்கும் வரை முழு அர்ப்பணம் அங்கு ஏற்படாது. அப்படி அர்ப்பணிப்பு நிகழ வேண்டுமானால் இவன் தன்னை அழிக்க வேண்டும்.

தன்னை அழித்தல் அது வணக்கத்தின் நோக்கம் வழிமாறிபோகும் செயல். இறைவனை வணங்கி இவன் நன்மைகள் பெற்று நலமாக வாழ வேண்டும் என்ற நிகழ்வு நோக்கம் தெளிவில்லாமல் போகும். அதனால்
வணங்கும் ஒன்று
வணங்கப்பட ஒன்று (-இது)
வணக்கம் அல்ல !
வழிபா டன்றோ !   .

எனவே, இரண்டிருப்புகள் நிலைக்கும் நிலையில் செய்யும் வணக்கச் செயல்களை எப்படி வணக்கம் என்று சொல்வது. அது வணக்கம் அல்ல வழிபாடு என்றுதான் சொல்லவேண்டும். மேலும் மனிதர்களையோ அல்லது இறந்தவர்களையோ வணங்க முடியாது. அவர்களை உயர் கண்ணியம் தான் செய்ய முடியும். உயர் கண்ணியம் வணக்கம் அல்ல அது வழிபாடுதான்.
(தொடரும்)
நபிதாஸ்

8 comments:

  1. படிக்கும்பொழுது சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது என்பதனை மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. எவரெஸ்ட் சிகரம் ஏறவேண்டும். ஒருசிலரே முயல்கின்றனர். அவ்வாறானவர்களிலும் வலியில்லாமல் இருக்கமுடியாது. இருப்பினும் தீராத முயற்சி பலனுக்குத்தகுந்தவாறு கிடைக்கப்பெறும். வலிகளுக்கு வழிகள் இல்லாமல் போகாது. தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்.

      Delete
  2. நிச்சயமாக சற்று சிரத்தை எடுத்து வாசிக்கும் படி உள்ளது. நான் எப்போதும் சற்று நிதானமாக இவற்றை வாசிப்பது உண்டு.

    வணக்கம் - வழிபாடு ஆகியவற்றில் உள்ள இரு வேறுபாடுகளை நமக்கு சொல்லும் தொடர்களாக இருக்கின்றன.

    சரியா சகோ. நபிதாஸ் ?

    ReplyDelete
    Replies
    1. மூல மந்திரம் எல்லா மத மார்கங்களில் இருக்கின்றது. அதனை எல்லோரும் இலகுவாக வார்த்தையில் சொல்லிவிடுகின்றனர்.

      வார்த்தையின் கருத்தோ இவ்வுலகம் ஒரு தராசிலும் அக்கருத்து ஒரு தராசிலும் நிறுக்க கருத்தின் தட்டே தாழும் என்றாலும் யார் கவனிக்கின்றனர் ?

      அடித்தளம் ஆழமாகப் போட்டுத்தான் வணக்கம் - வழிபாடு இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறு என்று விளக்கவேண்டிய நியாய நிர்பந்தம். ஆனாலும் அனைத்திலும் தோண்ட தோண்ட உண்மைகள் தெளிவுகள் வராமல் போகாது.

      எல்லாமே மேம்போக்கில்தான் உலகம் இயங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

      Delete
  3. வணக்கம் என்றால் என்ன ..??

    வழிபாடு என்றால் என்ன..??

    வணக்கம் யாருக்காகா..??

    வழிபடுதல் யாருக்காக..???

    சற்று விளக்கம் தந்தால் விளங்கிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  4. நல்லக் கேள்வி அறிவில் பாதி என்பார் சான்றோர். தனக்கு வேண்டிய ஒரு தெளிவுக்கு, கேள்வி பாதி மீதி பதில் கிடைத்தால் சிந்தித்து கேள்வி கேட்டவர் பதிலில் திருப்தி பெறுவார்.

    ஏழை வரி (ஜக்காத்) கொடுப்பது வணக்கம் என்பதில் விளக்கம் என்ன ?

    எங்கும் நிறைந்த ஏகன் எல்லாம் வல்லவன் என்ற இறைவனின் வழிப்படி நடத்தல் அன்றி இறைவனின் படைப்பினங்களின் வழிப்படிச் செல்ல வாழ்த்த செய்யும் செயல்கள் வழிபாடு.

    இறைவன் ஒருவனுக்காக மட்டும் செய்யும் செயல்கள் எண்ணங்கள் அனைத்தும் வணக்கம். மற்றவைகளுக்குச் செய்யும் அனைத்தும் வழிபாடு.

    இறைவன் ஒருவனைத் தவிர்த்து வேறு யாரையும் வணங்கக் கூடாது.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    நபிதாஸ் அவர்களே,
    குட் மார்னிங்

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  6. காலை வணக்கத்திற்கு பயணத்தின் நிமித்தம் உடன் பதிலிடமுடியவில்லை. இன்று அதிகாலை பதிலாக கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களே, தங்களுக்கு குட்மார்னிங்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers