இலக்கினைப் பார்த்து வாழ்வினை நகர்த்து இடைவரும் சோம்பலை யொழித்து
கலக்கமே யின்றி யிலக்கினைப் பற்றிக் களத்தினு ளிறங்கினால் வெற்றி
விலக்கிடு ஐயம் யாவுமே துணிந்து விதைத்திடு மனத்தினுட் பதிந்து
துலங்கிடும் புதிய வழிகளும் உன்னால் துவக்கிடுப் புள்ளியும் முன்னால்
நோக்கியே தேவை யுணர்ந்திட வேண்டும் நோக்கமும் முடிவுறும் நாளை
ஊக்கமாய்த் தெரிவு செய்திட வேண்டும் ஊடலும் விலகவும் வேண்டும்
ஆக்கமும் குறையக் காரணம் என்ன ஆர்வமாய்த் துலக்கிட வேண்டும்
தாக்கிடும் விபத்தில் பரிவுடன் வந்து தாங்கிடும் நண்பரும் வேண்டும்
திட்டமிட் டபடி யிலக்கினை நோக்கித் திண்ணமா யுழைத்திட வேண்டும்
வட்டமாய்க் கவலை சுற்றியே மனத்தை வதைத்திடா திருந்திட வேண்டும்
நட்டமே வந்து தடுத்திட முனைந்தால் நம்பியே வென்றிட வேண்டும்
பட்டதும் தெளிவுக் கிட்டவும் வேண்டும் படைத்தவ னருளவும் வேண்டும்

"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
இலக்குகள் அடைய நிதானமும் வேண்டும் இதுவரைப் பெற்றதைக் கொண்டு
ReplyDeleteகலக்கமும் வேண்டாம் இடையினில் தடுக்கம் காத்திருக் கடைசியில் ஏற்றம்
விலக்கமும் பெறுதல் விவரமும் குறையில் விலகிட அமைதியும் உண்டு
துலக்கிடும் முறையில் துன்பமும் கண்டால் தொடருதல் விடுதலே நன்று.
மிக்க நன்றி
Deleteசோம்பலால் அனைத்தும்
ReplyDeleteசாம்பலாய்ப் போகுமுன்
சுறுசுறுப்பாய் இருந்து
இலக்கினை அடைய
கவியன்பாரின் இக்கவி
காலத்தில் பயிரிடப்பட்ட
நெல்மணிக் கதிர்
மிக்க நன்றி
Deleteஇலக்கினை ...
ReplyDeleteஅடைய சோம்பலை துரத்த ..
கவிஞரின்...கவி ஒரு பாடம்
மிக்க நன்றி
Deleteநல்ல மெசேஜ்
ReplyDelete