.

Pages

Wednesday, February 4, 2015

மொழியின் நாயகன் யார்?

மொழி அறியா
மழலை சொல் இனிதென்று
இனம் புரியா மகிழ்வை தரும் என்று .
இசைவெள்ளத்தில் மூழ்க செய்யும் ..
யாழிசையும் குழலிசையும் கூட
மழலை முன் ஒன்றுமில்லை
என கூறும் நாயகனே ..நீ

காற்றிடமும் பேசிடுவாய் ..
கல்லிடமும் பேசிடுவாய்
நீரிடமும் பேசிடுவாய்
நெருப்பிடமும் பேசிடுவாய்

பூவிடமும் உறவாவாய்
புல்லிடமும்பாசம் வைப்பாய்
பசுவையும் நீ தாய் என்பாய்
உயிரில்லா பொருளிற்கும்
உறவு வைத்து அழைத்திடுவாய்

உன் பார்வை புதிரானது ..
கதிரவனின் கதிர்களை நீ கோபம் என்பதும்..
தென்றலின் இதம் காதலின் குணம் என்பதும்
அலையை நீ கடலின் சிறு கோபம் என்பதும்
ஆழியை நே பெரும் கோபம் என்பதும்
புதிரான பார்வைதான்

மொழியின் வளத்தை ..
உன் இனமே பறை சாற்றும்
ஓராயிரம் கட்டுரைகளை ..
ஒரே வரியில் சொல்லிடுவாய் .

உன் உள்ளத்தில் உதிக்கும் ..
கருத்துக்கள் ..பசுவின் பால்மடி
அல்லது உயிரினத்தின் தாயின் பால்மடி
உன் கருத்து எழுத்தாகும் வரை
சுரந்த பால் கரக்காத ..
தாயின் மார் வலி...

கரந்தப்பின் ..இனிய அயர்வு
அதுவே உனது உணர்வு
கவிஞனே ..நீயே மொழியின் நாயகன்
நான் பார்க்கும் பார்வையிலே கவிஞா...
நீயே மொழியின் நாயகன்.
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

16 comments:

  1. ஆறாவது வரியில் ..மலை...என்பதற்கு பதிலாக மழலை என படிக்கவும் ..
    அதே போன்று ..ஆழியை ..நீ ..பெரும் கோபம் என வாசிக்கவும்

    ReplyDelete
  2. தாயின் மார்வலிக்கு ஒப்பிட்டு கவிஞனை போற்றியமை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. சிந்தையில் உதிக்கும் கருத்து
      ஏட்டில் ஏறும்வரை ...மனதில் ஏற்படும்
      ஒருவகை அழுத்தம் ...
      தாய்மையின் வலிதான் அன்பரே

      Delete
  3. பதிவுக்கு நன்றி.

    அருமையான நல்லதொரு கவிதை, சுவாரஸ்யமான வரிகள்.
    மேலும் தொடர வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
    Replies
    1. மொழி அறியா.. மழலை போல்... விழி வழியே வழியும் கண்ணீராய் - என் மௌனத்தின் பரிபாஷை புரிந்து கொள்வார் இங்கே யாருமுண்டோ....!!!

      Delete
    2. நன்றி ..ஜமால் காக்கா

      Delete
  4. சித்திக் காக்காவின் அடுத்த படைப்பு 100 வது ஆக்கமாக அமையும்.

    ReplyDelete
    Replies
    1. இறைவன் நாடினால் நலமாக அமையும் தம்பி

      Delete
  5. மொழியின் நாயகன் யாரென
    அருமையான தலைப்பெடுத்து
    மொழிகளின் விதத்தை பெருமைப்பட
    கூறியுள்ளீர்கள்.அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..
      கவிஞர் அதிரை மெய்சா..அவர்களே

      Delete
  6. தாங்களது 100-வது ஆக்கம் நல்லதொரு சிறந்த விழிப்புணர்வு ஆக்கமாக எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இறைவன் ..நாடினால் நலமாக அமையும் நண்பரே

      Delete
  7. மொழிப் புலமைதான் கவிஞனின் மூலாதாரம் என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து, அதனை அழகிய மொழி நடையில் அமைத்தும் விட்டீர்கள், அதிரைத் தமிழூற்றே! கவிஞர்கள் சார்பாக அடியேனின் நெஞ்சத்தின் அடியிலிருந்துப் பீறிட்டெழும் நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. கவிஞர்களின் ..கவிகளால்
      காலம் கடந்த படைப்புகள் பல
      அப்படைப்புகள் மக்களால் மதிக்க பட்டு
      பாதுகாக்க படும் நிலையில் ..அம்மொழியும்
      பாதுகாக்க படுகிறது .மொழியை பாதுகாக்கும்
      நாயகன் ...புலவன் ,கவிஞன் என கூறலாம் .கவியன்பரின் வாழ்த்துக்கு நன்றி .

      Delete
  8. அழகான ஆக்கத்தில
    பழகிய எழுத்துக்களில்
    அதிரை சித்திக்
    பதிவைக் கண்டு...

    மொழியின் நாயகன் யார் ?
    பொழியும் விதைகளாக வார்த்தை
    வழியில் நீதிகள் முளைக்க
    எழிலான எண்ணம் கொண்டவன்...

    கருத்தும் மலர்ந்தது.
    கருக்கள் பலதந்தும்
    உருவாக்கும் நற்குணமே
    தருக பலயிதுபோல்.

    ReplyDelete
    Replies
    1. சூரிய ஒளியை பூத கண்ணாடியால் சுருக்கு ..
      அதன் வெப்பத்தை ஒரு புள்ளியில் கொண்டு வந்து
      நெருப்பாகும் நிலை காண்கிறோம் அதே போன்றே
      பல ஆயிரம் வார்த்தைகளை ஓரிரு வார்த்தைகளில்
      கொண்டு வரும் நய மிக்கவர்களே கவிஞர்கள் ..
      வாழ்த்துக்கு நன்றி அறிஞர் ..கவிஞர் நபி தாஸ் அவர்களே

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers