அதிரை ஜாஃபரின் இனிய குரலில் கவியன்பன் கலாம் அவர்களின் அழகிய வரிகள்...
வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் :
தொற்றிவிடும் சோம்பலினைத் தூக்கியெறி(ந்து) போடு
வெற்றிபெறும் நோக்கத்தை விட்டுவிடா தோடு
பற்றிவிடும் வேகமுடன் பாருலகைச் சுற்றிக்
கற்றுதரும் பாடமும்தான் காண்பதெலாம் வெற்றி!
ஊக்கமதை மனத்தினிலே ஊன்றுவதால் கிட்டும்
வாழ்க்கையிலே வாய்ப்புகளாய் வாசலையும் தட்டும்
தாக்கவரும் சூழ்ச்சிகளைத் தாங்கிடவே நில்லு
போக்கினிலே வாழ்த்துகளும் போற்றுதலும் சொல்லும்
பூவுலகும் காட்டுமிடம் பூரணமாய்த் தேடு
நாவுதனில் சொல்வதற்கு நற்புலமை பாடு
தூவுகின்ற வாழ்த்துகளால் தோல்வியெலாம் ஓடும்
மேவுகின்ற நல்வழிகள் மேதினியில் கூடும்
உள்ளமதில் நற்குணங்கள் ஒன்றிவிட வேண்டி
முள்மலரில் காட்டுதல்போல் முன்னறிவைத் தூண்டிக்
கள்மனத்தை அன்புடனே கட்டிவிட நாடி
கொள்ளுமங்கு இன்பமெலாம் கோடியிலும் கோடி
அச்சமின்றிக் கூறிவிடு ஆய்வுரைகள் தந்தால்
துச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்
மிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு
நிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்!
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
1. இவர்கள் இருவரின் கூட்டணியில் முதல் வெளியீடாக அருளைச் சுமந்த ஹாஜிகளே, இரண்டாம் வெளியீடாக பாலைவனப்பாட்டு, மூன்றாம் வெளியீடாக வாழ்க்கை என்னும் பாடம், நான்காம் வெளியீடாக எதிர்நீச்சல் ஆகியவற்றை தொடர்ந்து ஐந்தாம் வெளியீடு வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
1. இவர்கள் இருவரின் கூட்டணியில் முதல் வெளியீடாக அருளைச் சுமந்த ஹாஜிகளே, இரண்டாம் வெளியீடாக பாலைவனப்பாட்டு, மூன்றாம் வெளியீடாக வாழ்க்கை என்னும் பாடம், நான்காம் வெளியீடாக எதிர்நீச்சல் ஆகியவற்றை தொடர்ந்து ஐந்தாம் வெளியீடு வெற்றிதரும் பாதைகளைக் கற்றுதரும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
2. மேலும் இந்தக் கவிதை கடந்த [ 28-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...
தன்னம்பிக்கை வரிகள்...திரும்ப திரும்ப கேட்க தூண்டுகின்றன.
ReplyDeleteவெற்றிக்கூட்டணி தொடரட்டும்...
அன்புத் தம்பி நிஜாம், அஸ்ஸலாமு அலைக்கும்
Deleteஉங்களின் ஆசியும் ஆதரவும் இருக்கும் வரைக்கும் எங்களின் கூட்டணியின் வெற்றி, இன்ஷா அல்லாஹ் உறுதி செய்யப்பட்டதாகும்,
என்றும் நன்றியுடன், ஜஸாக்கல்லாஹ் கைரன்.
Dear Brother Ninam, Assalaamu alaikkum
DeleteALHAMDULILLAH, I GOT THE YOU TUBE LINK AND SPECIAL COMMENTS OF MRS. RAJA GOWRI (LONDON FA TV) ABOUT JAFARULLAH'S SON
PLEASE INERT NOW THIS LINL
இப்பாடல் தொடங்கும் நேரப்பகுதி: 44ம்m to 50
http://youtu.be/MUuELnRNulQ?t=44m
http://youtu.be/MUuELnRNulQ?t=44m14s
\\ABOUT JAFARULLAH'S SON\\ ABOUT JAFARULLAH'S SONG என்று படிக்கவும்
Deletethanks you lot Broither Nijam for updating with London youtube link
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிதை குறித்து தகவலுக்கும் நன்றி.
அருமையான ஆக்கம், படிக்க கேட்க மிகவும் இனிமை.
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
மச்சானை என் கவிதை வரிகளும் எங்கள் பாடகரின் குரலினிமையும் ஈர்த்தன எனபதை அறிந்து மிக்க மகிழ்ச்சி; நன்றிகள்.
Deleteதுச்சமென்று சொல்லிவிடு துன்பமது வந்தால்
ReplyDeleteமிச்சமுள வாழ்க்கையினை மேன்மையுடன் வாழு
நிச்சயமாய் ஈருலகும் நிம்மதியால் சூழும்!////.
வாவ் ...நல்ல வரியுடன் நலமாய் முடித்துள்ளீர்கள் ..
வாழ்த்துக்கள் கவியன்பரே
இப்பாடலை எழுதும் வேளையில் என் கண்முன்னால் சமூக விழிப்புணர்வுப் பக்கங்களின் நிர்வாகி, விழிப்புணர்வு வித்தகர் நிஜாம் அவர்களின் அதிகமான வேண்டுகோளான :”விழிப்புணர்வு கவிதைகளாய் வனையுங்கள்” எனபதே என் செவிகளில் ஒலித்தன;அதன்படியே என் வரிகளில் வந்தன. நீங்களும் இரசித்துள்ளீர்கள்; மிக்க நன்றி.
Deleteகவிக்குரல் வரிகள் ,ஜாபரின் குரலிளான கூட்டணியில் கவிவரிகள் மிளிர்ந்து நிற்கின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் அதிரை மெய்சா அவர்கள் சென்ற வாரம் எனக்கு ஊட்டியத் தெம்பு தரும் அறிவுரைகள் என்றும் வாழ்வை நிம்மதியாக்கும்; அவைகளே என் கவிதைகளிலும் வரிகளாய் நிறைந்து நிற்கும்; எங்கள் கூட்டணியின் பாடகரின் குரலினிமைக்கும் உச்சரிப்புக்கும் அவைகள் ஈடுகொடுக்கும், இன்ஷா அல்லாஹ். உங்களின் உளம்போந்த வாழ்த்தினுக்கு எங்களின் உளம்நிறைவான நன்றிகள்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசோதனைதான் வேதனைதான் சொல்வதெல்லாம் இல்லை
ReplyDeleteமீதமானா வாழ்வினிலும் மீட்சிகளே எல்லை
போதுமான சேதிகளைப் புத்துணர்வாய் தந்தார்
கீதமான பாடலிலே கீர்த்திகலாம் சொன்னார்
நாளும் தெரிந்த நல்கவி என்று உங்களுக்கு பட்டம் அளிக்கள்ளம் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறோம் நாங்கள்
ReplyDeleteஉங்களின் அன்பான அழைப்புமொழியை- அடைமொழியை- பட்டத்தை அன்புடன் ஏற்கின்றேன். இன்று இதே நேரம் இலங்கையில் “கவியருவி” பட்டத்துடன் கவுரவமும் வழங்க எனக்கு அழைப்பும் வந்தும் என் அலுவல் நெருக்கம் காரணீயமாகத் தவிர்த்து விட்ட வருத்தத்தில் இருந்தாலும் (அதிரையின் பெயரை இலங்கையில் உச்சரித்துப் புகழும் ஓர் அரிய வாய்ப்பைத் தவற விட்டேன் என்று வருததமாய் இருந்தாலும்), அதிரையிலிருந்து ஓர் அன்பர் தரும் இந்த அடைமொழியும் அதற்கு ஈடென்று ஏற்கின்றேன்; ஆயினும்,யான் பட்டங்களைத் தேடிச் செல்வதுமில்லை; பட்டங்கள் தானாய்க் கிட்டும் பொழுதுத் தட்டிக் கழிப்பதுவுமில்லை;இஃதே என் கொள்கையாகும்.
Deleteபுரிந்துணரிவில் சிற்ந்தோர் புரிந்து கொள்வார்களாக; “எவரும் என்பாலும் என் பாக்களின் பாலும் கொண்டுள்ள அன்பால் தரும் அடைமொழிகள், அன்பளிப்புகள் இவற்றை ஏற்காமல் திருப்பிக் கொடுத்தால் அல்லது மறுத்தால் அந்த அன்பர்களின் அன்பு மனம் வருந்தும் என்பதாலேயே தான் அன்புக்காக் ஏங்கும் யான் அன்புடன் ஏற்கின்றேன். இதனை வேறுவிதமாக முடிச்சுப் போட்டால் அது புரிந்துணர்வின் குறைபாடேயாகும்.
மிக்க நன்றி வாழ்த்துக்கும், வழங்கிய அடைமொழிக்கும்.
ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா
எங்கள் கூட்டணியை ஆதரித்து தொடர்ந்து வெளியிட்டு வரும் இத்தளத்திற்கு என்(எங்கள்) மனமார்ந்த நன்றி..
ReplyDeleteஇதே போல இத்தள் கூட்டணியுடன் மேலும் பல படைப்புகள் படைக்க்கலாம்..
கருத்திட்ட நல்லுல்லங்களுக்கும் எங்கள் நன்றி..
லா லலலா லா லலலா ஆஹா நல்ல மெல்லிசை ஜகஅபர் ஹசன் [மெல்லிசை இளவல்]அருமை
Deleteஇது ஒரு வெற்றி கூட்டணி சந்தேகேமே இல்லை.
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ், அதனாற்றான் கடல்கடந்து வான்வெளியில் இலண்டன் வானொலியிலும் இவரின் குரலையும் என் வரிகளையும் அங்கீகரித்து இன்று வெளியிட்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! மிக்க ந்னறி; ஜஸாக்கல்லாஹ் கைரன்
Deleteஅழகான நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்... அருமையான கூட்டணி... தொடரட்டும்... பல படைப்புகளுக்கு.... இரண்டு காக்கா மார்களுக்கும் மிக்க நன்றி..!
ReplyDeleteஅன்பின் தம்பி இர்ஷாத் அவர்களின் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் எஙகள் (இந்த இரு காக்காமார்களின்) அன்பான நன்றிகள்.
DeleteALHAMDULILLAH, I GOT THE YOU TUBE LINK AND SPECIAL COMMENTS OF MRS. RAJA GOWRI (LONDON FA TV) ABOUT JAFARULLAH'S SON
ReplyDeletePLEASE INERT NOW THIS LINL
இப்பாடல் தொடங்கும் நேரப்பகுதி: 44ம்m to 50
http://youtu.be/MUuELnRNulQ?t=44m
http://youtu.be/MUuELnRNulQ?t=44m14s
அல்ஹம்துலில்லாஹ். உங்களனைவரின் ஆசிகளும் ,துஆக்களும், பிரார்த்தனைகளும் ஒருங்கே அமையப்பெற்றதால் தான் இந்த வெற்றிக் கூட்டணிக்கு இலண்டன் வானொலியில் அங்கீகாரமும் “சிறப்ப்பான் வாழ்த்துகளும் “ கிட்டிவிட்டன; இதோ இந்த இணைப்பில் சென்று கேளுங்கள்; அதிரையின் பாடகர் சகோதரர் ஜஃபருல்லாஹ் அவர்களின் இனிய குரலோசை என் கவிதை வரிகளில் ஒன்றி ஒலிக்கும்; ஆங்குள்ளோரின் ஆதரவும் பாராட்டும் இவ்விளம் பாடகரின் குரலுக்கு இலண்டன் காற்றலைகளிலிருந்து இகமெங்கும் பரவிக் கொண்டிருக்கும், இன்ஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ்/
இனி அடுத்தப் படைப்புகளைக் காணொளியாகப் பாடகர் அவர்களின் திருமுகத்துடன் அவர்களே நேரடியாகப் பதிந்து விடுவாரகள்; இதனால் அவர்களின் குரலும், முகமும ஆங்குஒலி, ஒளியாக அமைபும். அனைவரின் உளம்போந்து அளித்த வாழ்த்தினுக்கு எங்களிருவரின் இதயங்களின் கூட்டு நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும்.
miga nanru
ReplyDeletethanks you lot for registering your comments here for our great endeavor and welcome you at all times.
Delete