.

Pages

Saturday, December 14, 2013

[ 24 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இரட்டை குதிரை சவாரி !? ]

இரட்டை குதிரை சவாரி !?
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகள் வேண்டும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் குறுகியகாலத்தில் முன்னேற வேண்டும் என்ற அவசர புத்தியால் ஏற்படும் விபரீதம் பற்றியே இவ்வார பதிவு !

வளைகுடா வாழ்வில் சிலருக்கு சுபஸ்வரம் சிலருக்கு அபஸ்வரம். அந்த அபஸ்வரம் பற்றிய தகவலையே இவ்வார பதிவாக பதிய விரும்புகிறேன்...

குடும்ப கஷ்டங்கள் போக்க வளைகுடா வந்த வாலிபன் எப்படியும் முன்னேற வேண்டும் வேட்கை அவனுள் தீயாக எரிந்துகொண்டு இருந்தது. அவனுடைய ஆவலுக்கு ஏற்ப நல்ல வசதியான பெரும் பணக்கார ஷேக் (அரபி )வீட்டு
வேலைக்கார பையனாக தனது வளைகுடா வாழ்கையை துவக்கியவன் மிக குறுகிய காலத்தில் அரபி மனதில் இடம் பிடித்தார். சுறுப்பான வேலை, பொறுப்பை நிறைவேற்றுவதில் அதிக சிரத்தை மற்றும் ஒவ்வொரு நிகழ்வுகளை ஞாபகமூட்டுவது எல்லாவற்றிலும் அக்கறை எடுத்து செயல் படுவதன் அரபியின் தனி செயலாளர் ஆனார். அதன் மூலம் பல தரப்பட்ட வசதி படைத்த அரபிகளின் நட்பு ஏற்பட்டு நல்ல நிலைக்கு வந்தார். பல அரபிகளின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேவைபட்டால் இவைரையே அரபிகள் அணுகுவர். பல ஆட்களை அரபு நாடுகளுக்கு அழைத்து வந்த பெருமை பெற்றார்.

நல்ல வருமானம் சிலரின் வருமானம் ரகசியமாய் இருக்கும் சிலரின் வருமானம் பகிரங்கமாய் இருக்கும். இவருடைய வருமானம் பலரின் பார்வைக்கு வரும் அளவிற்கு பகிரங்கமாய் அமைந்து இருந்தது. குறுகிய காலத்தில் பெரிய வீடு கட்டினார் எல்லோரின் முகத்திலும் ஆச்சர்ய குறி !
சிலரின் முகத்தில் கேளிவி குறி ? நல்ல நிலை அடைந்த அவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஊர் வந்து செல்வார். நில தரகர்கள் அவரையே வட்டமடிப்பார். தோட்டம் விலைக்கு வருகிறது, கட்டிடம் விலைக்கு வருகிறது என்று தகவல்கள் தந்த வண்ணமே இருப்பர்கள். தன்னிடம் உள்ள பணத்தை விரயம் செய்யாது முதலீடு செய்து வந்தார்.

நன்றாக சென்று கொண்டிருந்த அவரின் வாழ்வில் இடியாய் வந்து அமைந்தது வியாபாரம் செய்யும் யோசனையை கேட்டு செயல்பட துவங்கியது தான். ஆம் தெரியாத தொழிலை பிறரை நம்பி துவங்கியதுதான் அவர் வாழ்வில் பேரிடியாய் அமைந்தது.

குறுகிய காலத்தில் பெரிய லாபம் பார்க்கலாம் என்ற யோசனையை கேட்டு களத்தில் இறங்கினார். ஊரில் இருந்த நிலா புலன்களை விற்று வியாபாரம் துவங்கினார். அவர் வேலை பார்க்கும் இடம் வேறு, வியாபாரம் செய்யும் இடம் வேறு இரண்டையும் கவனிப்பதில் இவருக்கு சிரமம் ஏற்பட்டது. வேளையில் சரியாக கவனம் செலுத்தாமல் அரபியின் அதிருப்தி வியாபாரத்தை சரியாக கவனிக்காமல் வியாபாரமும் நஷ்டத்தில் முடிந்தது.

கால போக்கில் வேலை இழந்து ஊர் வந்தார் மீண்டும் கஷ்டம் ? மீண்டும் முயற்சி ஒருவருக்கு ஒருமுறைதான் வாய்ப்பு வரும் அதனை முறையாய் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

ஜாக்கிரதை   நண்பர்களே ...!
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

16 comments:

  1. இளைஞர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியான படிப்பினை !



    ReplyDelete
    Replies
    1. மிக விரைவில் இவ்வாக்கத்தினை ..
      புத்தகமாக வெளியிடுவோம் ..நன்றி தம்பி நிஜாம்

      Delete
  2. கவனக்குறைவு சந்திப்பது மனவேதனை, இழப்பு என்றதொரு விழிப்புணர்வு விதைகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்தை வரவேற்கிறேன்

      Delete
  3. நல்ல நிறைவான எடுத்துக்காட்டு

    ///ஒருவருக்கு ஒருமுறைதான் வாய்ப்பு வரும் அதனை முறையாய் பயன்படுத்தி கொள்ள வேண்டும் //// இது உண்மையோ கற்பனையோ தெரியாது ஆனால் தோல்வியுற்றவர் ஒருமுறைதான் வாய்ப்பு வரும் என்று சோர்ந்துவிட கூடாது என்பது என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து முற்றிலும் உண்மையே. தோல்விகளை வெற்றியின் படிக்கல்லாக பயன்படுத்தவேண்டும் என்று சொன்னதையும் கேட்டுள்ளேன்.

      Delete
    2. நண்பரே ..தோற்றவ்ற்கு நீங்கள் கூறும் அறிவுரை சரி ..வாழ்வை துவங்கு பவர்க்கு நான் கூறுவது
      சரி ..இதுவே முதல் வாய்ப்பு ..இதுவே கடைசி வாய்ப்பு என்ற நினைவோடு கவனமாய் செயல் படவே ஒருவருக்கு வாய்ப்பு ஒரு முறையே என்று
      குறிப்பிட்டேன்

      Delete
  4. அருமையான ஆக்கம்; இற்றைப் பொழுதினில் எனக்குள் ஏற்பட்டிருக்கும் அலுவல் பிரச்சினைக்கு உங்களின் இவ்வாக்கத்திலிருந்து நல்லதொரு குறிப்பும் யோசனையும் பெற்றேன்; மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    ஓர் ஆக்கம் , பிறரின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற நன்னோக்கம் உங்களிடம் இருப்பதால் எனக்குள் ஓர் ஊக்கம் பிறக்க வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இவ்வாக்கத்தின் மூலம் நலமாய் முடிவெடுத்து ..
      வாழ்வில் வளம்பெற வாழ்த்துகிறேன்

      Delete
  5. தாங்கள் இவ்வாக்கத்தில் குறிப்பிட்டிருப்பதை போல சிலருக்கு இத்தகைய நிகழ்வுகள் ஏற்ப்பட்டு இருக்கிறது. எவ்வளவு செல்வம் கைக்கு வந்தாலும் நிதானமுடன் செயல் படவேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியுள்ளீர்கள். அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அதிரை மெய்சா அவர்களே
      இத்தளம் மூல விழிப்புணர்வு பெற்றால் சரிதான்

      Delete
  6. வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பதுபோல, கடினப்படுபவருக்குத்தான் பணத்தின் அருமை தெரியும்.. அப்படி இப்படி வந்த தொகை என்றால் அவ்வளவாகத் தெரியாது. என்பது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு நன்றி ..
      நல்ல கருத்தை நலமாய் பகிர்வோம்

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    நல்லதொரு உண்மையான சம்பவம.
    தாய்க்குப் பின் தாரம் எதற்கு? வெறும் பிள்ளைகளை பெற்றுத் தள்ளவா? கணவனுக்கு நல்ல ஆலோசகரா இருக்கவும்தான்.

    இவர் மாணவி சொல்லை கேட்க்கவேண்டிய நேரத்தில் கேட்டிருந்தால் இப்படி நடந்து இருக்காது.

    அதே நேரத்தில் ஊதாரியான மனைவிமார்களும் உண்டு. ஊதாரியான நண்பர்களும் உண்டு.

    ஜாடை அறிந்து செயல்படாதவன் சர்வ முட்டாள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. ஆலோசனை ..என்பது மிக முக்கியம் ..
    சரியான கருத்தை பதிந்தீர்கள் காக்கா

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers