.

Pages

Friday, January 3, 2014

மனமென்னும் புத்தகத்தைப் பார்க்கையிலே...

பாடல் எழுதியவர் : கவியன்பன் அபுல் கலாம்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்

மனமென்னும் புத்தகத்தில்
.....மலிந்துள்ள பக்கமதை
தினம்நாமும் பார்க்கையிலே
...திருந்தத்தான் வைத்திடுமே!

மருவில்லா எண்ணமது
......மனத்தின்பால் உள்ளிருக்க
உருவில்லா வண்ணவொளி
.....உருவாகும் பக்கமன்றோ?

வெறுந்தாளின் பக்கமதாம்
.......விரிந்துள்ள உள்ளமெலாம்
நறுந்தேனாய் வித்திடுக
......நலமான வார்த்தைகளாய்!

கருந்தேளின் நஞ்சினைப்போல்
.......கருத்தாளும் நெஞ்சுகளும்
வருந்தாமல் கொட்டுகையில்
....வழிதோறும் முட்களாகும்!

பணந்தேடும் பாரினிலே
......பரிதாபம் ஏதுமில்லை
குணந்தேடிப் பார்க்கையிலே
....குறைவானப்  பக்கமதாம்!

கடல்போல ஆழமதாம்
....கனிவான மாதருள்ளம்
மடல்போட்டும் கூறாத
.....மதியாளும் பக்கமதான்!

தடுமாறும் பக்கமதால்
......தடுப்பாகும் எக்கணமும்
நெடுநாளும் நின்றிடுமோ
....நினைத்தாலும் வென்றிடுமோ?
"கவியன்பன்"
அபுல் கலாம் 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 02-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

11 comments:

  1. // நறுந்தேனாய் வித்திடுக
    ......நலமான வார்த்தைகளாய்! //

    சிறப்பான வரிகள் பல...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான வாழ்த்தினுக்குச் சிறப்பான ந்னறிகள்.

      Delete
  2. சகோதரர் ஜாஃபரின் சிறப்பான குரல் வளத்தில் கவித்தீபத்தின் சிறப்பான வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் சிறப்பான வாழ்த்தினால் எங்கட்குச் சிறப்பான ஊக்கம் கிடைக்கின்றது; மிக்க நன்றி.

      Delete
  3. மிக அழகாக வார்த்தைகள் கோர்க்கப் பட்டுள்ளது. அதற்கு வருணனையும் மிகச் சிறப்பு. அழகான குரல்வளமும் அதனை நன்கு மெருகூட்டுகிறது. எண்ணத்தைப் பற்றிய கருத்துக்கள் மனித வாழ்வை நேராக்கும் சிந்தனை சிறப்பு.

    ReplyDelete
  4. அன்பின் பாவலர் அன்புடன் வழங்கிய பாராட்டுகட்கு எங்களின் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  5. ராகத்தில் சௌகர்யமாக அமரும் சரியான வார்த்தை AR ரஹ்மானும் வைரமுத்துவும் சேர்ந்த கூட்டனிபோல் சிறப்பாய் உள்ளது

    ReplyDelete
  6. //ராகத்தில் சௌகர்யமாக அமரும் சரியான வார்த்தை//

    சரியான ஆய்வு; உண்மையான கூற்று; ஆழமான தேடலின் விடை!

    ஆம். புதுக்கவிதை எழுதும் கவிஞர்கட்குக் கிட்டாதது எம்மைப் போன்ற மரபின் வழி நின்று வண்ணப்பாடலின் சந்தக்குழிப்பும். யாப்பின் சீர், அசை, தொடை, எதுகை, மோனை, சந்தங்களின் சொந்தங்களில் உட்காரும் வண்ணம் “வாய்பாடு” என்னும் அமைப்புக்குள் பாட்டுக் கட்டும் பொழுது மட்டும் தான் இது சாத்தியமாகும்; சத்தியமாகும்.

    அதனாற்றான்,

    புதுக்கவிதை புனைவோரை= கவிஞர்கள் என்கின்றோம்; அவர்கள் வார்த்தைகளை உள்ளத்தில் “விதைகின்றார்கள்”

    மரபின் வழிநின்று செய்யுள் யாத்திடுவோரை= புலவர்கள் என்கின்றோம். அவர்கள் செய்வது செய்யுள்.

    பாடலாசிரியர்கள், பல்லவி, சரணம் என்னும் தாள இலக்கணத்துக்குள் இணங்கிப் பாட்டெழுதுவதால் பாடலாசிரியாகின்றார்.

    தமியேன் புதுக்கவிதையின் புதுப் பாதையை விட்டு , மரபென்னும் பழைய பாதையில் - முன்னோர்கள் கண்டெடுத்த அந்த முத்தைக் காண முத்துக் குளித்து- மரபென்னும் ஆழ்கடலில் இறங்கிய போதினில், ஏளனம் செய்தவர்கள், “பழமை விரும்பி” என்றும் என்னும் கேலி செய்தவர்கள் இன்று தன் பாடலுக்கும் பாட முடியுமா>? என்று ஏங்குகின்றனர். அப்படிப் பாடப் பாடகரால் இயலாமென்றால், புதுக்கவிஞர்கள் மரபின் வாசலைத் தட்டுங்கள் (நேராக எம்மிடம்) ‘ திறக்கப்படும்; கற்பிக்கப்படும்.

    அன்று, என் ஆசான், அதிரை அஹ்மத் என்னும் பாவலர் சொன்னது இன்று உண்மையாகி உலகமெலாம் உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆம்.

    “........................இற்றைப் பொழுதினில் மரபை நீ பற்றிப் பிடித்துக் கொண்டால், தமிழறிஞர்களின் பட்டியலில் உனக்கோர் இடம் உண்டு, இன்ஷா அல்லாஹ்”

    அன்று சொன்னது
    இன்று நடக்கின்றது,
    இன்ஷா என்றும் நடந்தே தீரும்.

    உங்களின் ஆய்வு தான் என் மனத்தினில் தேக்கி வைத்திருந்த உண்மைகளை உரக்கச் சொல்ல வைத்தது; மிக்க நன்றி

    ஜஸாக்கல்லாஹ் கைரன்.

    ReplyDelete
  7. பதிவுக்கு நன்றி.

    அருமையான கவிதை.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. மச்சானின் பாராட்டுகட்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
      ஜஸாக்கல்லாஹ் கைரன்.

      இன்ஷா அல்லாஹ் இம்மாதம் இறுதியில் தாயகத்தில் சந்திப்போம்.

      Delete
  8. கருத்திட்ட சகோதரர்களுக்கு நன்றியும் துஆவும்...

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers