பதர்கள் பல உண்டு
படிப்பினை அதிலுண்டு
நிதர்சன வாழ்வில்
நிதம்நாம் காண்கின்றோம்
நெல்மனியில் பதர்
நீயும்நானும் காண்பது
சொல்லில் பதர்
சொறிகிறோம் நிதம்
செயலில் பதர்
செய்வதே தினம்
இயல்பாய் நாம்மில்
இருக்கும் குணம்
எண்ணத்தில் பதர்
எக்கச்சக்கம் எப்போதும்
உண்ணுவதில் பதர்
உயிரழிக்கும் உரம்
மனிதரில் பதர்
மதியுடன் உணர்
புனிதராய் திகழ
புத்தியை மாற்று
உயிரில்லா நெற்கோலம்
உற்பத்தி ஆகிவிடும்
பயிராக முடியாது
படிப்பினையும் உண்டு
எண்ணத்தின் உயிர்
ஏற்றமிகு நம்பிக்கை
வண்ணமாய் வடித்தே
வாழ்விலே மிளிர்
நம்பிக்கை உயிர்
நன்கே விதைத்தே
தெம்பாக வாழத்
தெரிந்திட நம்பு
உதரிடும் நம்பிக்கை
உண்டாக்கும் பதர்
பதரில்லா எண்ணம்
படைத்திடு நித்தம்
நம்பிக்கை எண்ணம்
நாடியதை நிகழ்த்தும்
நம்பாதோர் திண்ணம்
நம்மின்பதர் தோற்றம்
நபிதாஸ்
படிப்பினை அதிலுண்டு
நிதர்சன வாழ்வில்
நிதம்நாம் காண்கின்றோம்
நெல்மனியில் பதர்
நீயும்நானும் காண்பது
சொல்லில் பதர்
சொறிகிறோம் நிதம்
செயலில் பதர்
செய்வதே தினம்
இயல்பாய் நாம்மில்
இருக்கும் குணம்
எண்ணத்தில் பதர்
எக்கச்சக்கம் எப்போதும்
உண்ணுவதில் பதர்
உயிரழிக்கும் உரம்
மனிதரில் பதர்
மதியுடன் உணர்
புனிதராய் திகழ
புத்தியை மாற்று
உயிரில்லா நெற்கோலம்
உற்பத்தி ஆகிவிடும்
பயிராக முடியாது
படிப்பினையும் உண்டு
எண்ணத்தின் உயிர்
ஏற்றமிகு நம்பிக்கை
வண்ணமாய் வடித்தே
வாழ்விலே மிளிர்
நம்பிக்கை உயிர்
நன்கே விதைத்தே
தெம்பாக வாழத்
தெரிந்திட நம்பு
உதரிடும் நம்பிக்கை
உண்டாக்கும் பதர்
பதரில்லா எண்ணம்
படைத்திடு நித்தம்
நம்பிக்கை எண்ணம்
நாடியதை நிகழ்த்தும்
நம்பாதோர் திண்ணம்
நம்மின்பதர் தோற்றம்
நபிதாஸ்
'பதர்' என்ற சொல்லுக்கு அறிந்தவர்கள் விளக்கம் தரவும்
ReplyDeleteபதர் என்கிற வார்த்தைக்கு எனக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை
ReplyDelete.
கவிவரிகளின்படி பார்த்தால் பதர் என்கிற சொல்லுக்கு உபரி,கழிவு, தவிடு என்பதாக பொருள்படுமென நினைக்கிறேன்.
பதர் என்ற சொல்லிற்கு அர்த்த விளக்கம்தான் இக்கவிதை.
ReplyDeleteஅகராதி விளக்கம்:
பதர் என்றால் (1) உள்ளீடற்ற நெல். (2) உபயோகமற்ற நபர்.
அதன்படி:
மணியில்லா நெல் பதர் என்றால்...
விளைவு இல்லா செயல் பதர்.
பயன்தரா எண்ணம் பதர்.
உயிரில்லா நெற்கோலம்
ReplyDeleteஉற்பத்தி ஆகிவிடும்
பயிராக முடியாது
படிப்பினையும் உண்டு//நான்கே வரிகளில்
நல்ல ..கவி கண்டேன்
கவிதையில் சிந்தனையை செலுத்தி
Deleteமுக்கிய கரு, அதனை இரசித்த தங்களுக்கு நன்றிகள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிதைக்கு நன்றி.
பதர்.
அருமையான தலைப்பு, அவரவர் தன்னைத்தானே ஆராய்ந்து பார்த்தால் தான் எப்படி என்று நன்கு புலப்படும், ஆனாலும் ஆராய்ந்து பார்க்கக்கூடிய பக்குவம் இல்லையென்றால்! அது பதரை விட மோசம் என்றே சொல்லலாம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
உள்ளீடற்ற நெல் முதலிய தானியம்; வெற்றுத் தானியம்; கருக்காய், பயனின்மை, பயனற்றவன்; பயனற்றவள்; வெற்றாள்; வெட்டி
Deleteபளுவான பாவப் பாரங்கள் யாவும் பதர் என்றே தள்ளிடுங்கள் (கிறித்தவக் கீர்த்தனம்)
Deleteகாற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும் கோதுமை மணிகள் தங்கட்டும் (கிறித்தவக் கீர்த்தனம்)
Deleteபங்குனி மாதம் பதர் கொள் (பழமொழி)
Deleteகாற்றுள்ளபோதே தூற்றிக்கொள். தூற்றுதல் என்பதற்கு நெல்லையும், பதரையும் பிரித்தல் என்பது பொருள். பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் லேசாக இருக்கும். அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும். காற்று வீசவில்லை என்றால் காரியம் நடக்காது. ஆகையால் அது வீசும்போதே வேலையைச் செய்துவிடவேண்டும். வாய்ப்பு நேரும்போது நழுவ விட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு காரிய சித்தி பெறவேண்டும் என்பது பொதுக் கருத்து.
Deleteபரஷ் பதர் (The Philosopher's Stone, 1958) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் பரசுராம் என்ற எழுத்தாளரின் கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டதாகும்.
Deleteதாக் பதர் என்பது டேராடூன்-சக்ரதா சாலையில் அமைந்துள்ள ஒரு அமைதியான சுற்றுலாத்தலம். இந்த இடத்தில் ஒரு நீர்மின்சார உற்பத்தி ஆலை உள்ளது. பனிசறுக்கு போன்ற பல்வேறு தண்ணீர் விளையாட்டுகள், படகு, நீர் சறுக்கு, மற்றும் படகோட்டம் போன்ற விளையாட்டுகளில் இங்கு ஈடுபட்டு திளைக்கலாம்.
Deleteவழக்கம்போல் தங்களது விளக்கங்கள் பதர் என்ற சொல்லுக்கு மெருகூட்டுகின்றன.
Deleteபரோட்டாவிற்கு மடிப்பு வைத்து அடுக்கு போடுவதையும் பதர் போடுதல் என்பார்கள்.
ReplyDeleteவழக்கத்தில் உள்ள சொற்கள் மருவி நிற்பதும் உண்டே.
Deleteஅருமை
ReplyDelete