அன்புடையீர்,
அவன் அடிமை (வெண்பா அந்தாதி) நூறு பாடல் ஒன்று எழுத விரும்பி முதற்கண் காணிக்கை. கடவுள் புகழ், கடவுள் வணக்கம், கடவுள் வாழ்த்து, என்பன தொடரின் தொடக்கமாக எழுதியத்தைப் பதிகிறேன்.
நபிதாஸ்
காணிக்கை :
ஈடில்லா உண்மைதந்தே ஏற்றம் திறந்திட
நாடியோர் காப்பாற்றும் நாயகமாம் - வாடியஎம்
வாழ்விலே உச்ச வழிதிறந்த எம்குருக்கே
தாழ்பனிந்தக் காணிக்கைச் சாறு.
கடவுள் புகழ்:
எங்கும் நிறைந்த எதுவுமாகா ரூபமில்லா
தங்கும் அனைத்தாய்த் தனியோனே - இங்கேயே
உன்னை எனதின் உணர்விலே மையமாகத்
தன்னைக் கொடுத்தாய் சமத்து.
கடவுள் வணக்கம்:
இல்லா ததில்லா திருக்கும் நிறையோனைச்
சொல்லாதே நீஎதையும் சொல்லிலவன் - எல்லாமே
ஒன்றின் உருவாய் உணர்ந்திட்டே வாழ்ந்திட
உன்னதமாம் நல்வணக்கம் ஒப்பு.
கடவுள் வாழ்த்து:
என்னில் கொடுத்தேநான் என்னை அறியவே
உன்னைப் படைத்தே உவந்தேனே - உன்னிலே
தன்னை யுணர்ந்தறிந்தே தன்னைத் தெளிந்ததால்
உன்னைநான் வாழ்த்திட ஓங்கு.
அவன் அடிமை (வெண்பா அந்தாதி) நூறு பாடல் ஒன்று எழுத விரும்பி முதற்கண் காணிக்கை. கடவுள் புகழ், கடவுள் வணக்கம், கடவுள் வாழ்த்து, என்பன தொடரின் தொடக்கமாக எழுதியத்தைப் பதிகிறேன்.
நபிதாஸ்
காணிக்கை :
ஈடில்லா உண்மைதந்தே ஏற்றம் திறந்திட
நாடியோர் காப்பாற்றும் நாயகமாம் - வாடியஎம்
வாழ்விலே உச்ச வழிதிறந்த எம்குருக்கே
தாழ்பனிந்தக் காணிக்கைச் சாறு.
கடவுள் புகழ்:
எங்கும் நிறைந்த எதுவுமாகா ரூபமில்லா
தங்கும் அனைத்தாய்த் தனியோனே - இங்கேயே
உன்னை எனதின் உணர்விலே மையமாகத்
தன்னைக் கொடுத்தாய் சமத்து.
கடவுள் வணக்கம்:
இல்லா ததில்லா திருக்கும் நிறையோனைச்
சொல்லாதே நீஎதையும் சொல்லிலவன் - எல்லாமே
ஒன்றின் உருவாய் உணர்ந்திட்டே வாழ்ந்திட
உன்னதமாம் நல்வணக்கம் ஒப்பு.
கடவுள் வாழ்த்து:
என்னில் கொடுத்தேநான் என்னை அறியவே
உன்னைப் படைத்தே உவந்தேனே - உன்னிலே
தன்னை யுணர்ந்தறிந்தே தன்னைத் தெளிந்ததால்
உன்னைநான் வாழ்த்திட ஓங்கு.
(தொடரும்)
நபிதாஸ்
கன்னல் கவிமொழியும் கற்றுணர்ந்த வெண்பாவும்
ReplyDeleteமுன்னைத் தமிழ்போல் முகிழ்த்தெழுக - தன்னந்
தனியானானின் தூயவனின் தாள்பணியும் பாடல்
கனியாக உண்பேன் களித்து!
தொடருங்கள் அய்யா!
வாழ்த்துகள்!
ஊமைக் கனவுகள் உந்தன் முகவரியில்
Deleteஆமை நினைவில் அசந்தேனே - தூய்மை
விரும்பும் தெளிந்த விளக்கம் நுகர
அரும்பும் குணத்துன் அகம்.
வாழ்த்துக்கள் அகத்தின் உணவு. உண்டேன். நன்றிகள் பல.
This comment has been removed by the author.
ReplyDeleteகற்றவர் போற்றிட, மற்றவர் கற்றிட,
ReplyDeleteபெற்றவர் உன்மீது பற்றிட – நற்பலம்
உற்றவர் கற்ற உயர்தமிழை என்றென்றும்
அற்புதம் மின்னிட ஆக்கு!
தொடர வணக்கத்துடன் வாழ்த்துக்கள் ஐயா.
அருணா அவரின் அருமைக் கருத்தாம்
Deleteதருணம் வரும்போதும் தட்டு - அருமைத்
தமிழும் பெருமைகள் தந்திட்டே மின்னக்
குமியும் மனதில் குறி.
வாழ்த்துக்கள் தந்த உற்சாகம் மகிழ்வே. நன்றிகள் பல.
வெண்பாக்களால் தீட்டிய உங்கள் வரிகள்
ReplyDeleteஎன்பார்வையில் புதிதாய்ப் பூத்த குண்டுமல்லி
உம்பார்வையில் பட்ட அடிமையில் கடவுள்
வணக்கமும் வாழ்த்தும் புகழும் சிந்திக்க வைத்தன
சிந்திக்க வைத்தச் சிறப்புகள் கண்டேனே
Deleteஎந்தனதின் நோக்கம் இதுவேதான் - அந்தமும்
ஆதியும் அற்றவன் அன்பினில் ஆகிட
சேதியும் வென்றதாச் செப்பு
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகவிதைக்கும் நன்றி.
ஐயா,
எல்லோரும் உங்கள் கவிதையை படித்து விட்டு, கவி நடையில் பின்னூட்டம் இட்டு வாழ்த்துகின்றனர்.
என்னால், கவி நடையில் பின்னூட்டம் இட்டு வாழ்த்த முடியலையே என்று வருத்தப்படுகின்றேன் ஐயா.
அந்தக் கவிதையை, ஒடிச்சி/நெடிச்சி/வளைத்து/நிமிர்த்தி/வேறு ஒரு வழியில் படித்தால் உரைநடையாக வருமே ஐயா.
உங்கள் அனுமதி இல்லாமல் என்னால் அப்படி செய்ய முடியாது ஐயா.
இருந்தாலும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் ஐயா..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கார்
Deleteஅப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும்.
Deleteநீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு ஆண்டுகள் மட்டுமே உங்களுக்காக உழைப்பான். ஆறு ஆண்டுகளுக்குப்பின் அவன் விடுதலை பெறுவான். கட்டணமாக எதையும் அவன் செலுத்தத் தேவையில்லை.
Deleteஒருவன் உங்கள் அடிமையாகும்போது மணமாகாதவனாக இருந்தால், விடுதலையாகும்போது தனியனாகப் போவான். ஒருவன் அடிமையாகும்போது திருமணமானவனாக இருந்தால், அவன் விடுதலை பெறும்போது மனைவியை அழைத்துச் செல்லலாம்.
Deleteஅடிமை மணமாகாதவனாக இருந்தால், எஜமான் அவனுக்கு ஒரு மனைவியைக் கொடுக்கலாம். அவள் மகன்களையோ, மகள்களையோ பெற்றெடுத்தால் அவளும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கு உரிமையாவார்கள். அடிமையின் வேலையாண்டுகள் முடிந்தபின், அவன் மட்டும் விடுதலை பெறுவான்.
Deleteஆனால் அடிமை எஜமானோடு நீடித்து இருப்பதாக முடிவு செய்தால் அவன், ‘நான் என் எஜமானை நேசிக்கிறேன். நான் எனது மனைவியையும், என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். நான் விடுதலை பெறமாட்டேன். நான் இங்கேயே தங்குவேன்’ என்று சொல்லவேண்டும்.
Deleteஇவ்வாறு நிகழ்ந்தால், எஜமான் அடிமையைத் தேவனுடைய சந்நிதானத்தில் கொண்டுவரவேண்டும். எஜமான் அடிமையை ஒரு வாசலருகே அல்லது வாசலின் நிலைக்காலின் அருகே அழைத்துச் சென்று, அடிமையின் காதில் கூர்மையான கருவியால் ஒரு துளை போடவேண்டும். அப்போது அடிமை தன் வாழ்க்கை முழுவதும் எஜமானுக்கு தொண்டு செய்வான்.
Deleteஒரு மனிதன் தன் மகளை அடிமையாக விற்க முடிவு செய்தால், அவளை விடுதலை செய்வதற்குரிய விதிகள் ஆண் அடிமையை விடுவிப்பதற்கான விதிமுறைகளில் இருந்து மாறுப்பட்டவை.
Deleteஎஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான்
Deleteஅடிமைப் பெண் எஜமானின் மகனை மணப்பதற்கு எஜமான் சம்மதித்தால் அவளை அடிமையாக நடத்தக்கூடாது. அவளை ஒரு மகளைப் போல் நடத்தவேண்டும்.
Delete“எஜமான் மற்றொரு பெண்ணை மணந்தால் முதல் மனைவிக்குக் குறைவான ஆடையோ, உணவோ கொடுக்கக்கூடாது. அவன் அவளோடு தூங்குவதை நிறுத்தக் கூடாது. விவாகத்தில் அவளுக்கு உரிமையான எல்லாப் பொருட்களையும் அவன் கொடுத்து வர வேண்டும்.
Deleteஅவன் அவளுக்கு இந்த மூன்று காரியங்களையும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யவில்லையென்றால், அப்பெண் விடுவிக்கப்படுவாள். அவள் செலுத்தவேண்டிய கடன் எதுவுமிராது
Delete“ஒரு மனிதன் இன்னொருவனை திட்டமிட்டு அடித்துக் கொன்றால், அப்போது அம்மனிதன் கொல்லப்பட வேண்டும்.
Deleteஆனால் ஒருவன் மற்றொருவனைத் திட்டமிடாமல் கொன்றால், தேவன் அந்த விபத்தை அனுமதித்தார் என்று எண்ணலாம். குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாப்பிற்காக ஓடி உயிர்தப்பும்படி நியமிப்பேன். அதனால் இத்தகைய ஒருவன் அங்கே ஓடலாம்.
Deleteஒருவன் மற்றொருவனைச் சினந்து அல்லது வெறுத்துக் கொல்லத் திட்டமிட்டால், கொலையாளி தண்டிக்கப்பட வேண்டும். அவனை எனது பலிபீடத்திற்குத் தொலைவில் அழைத்துச் சென்று கொல்லவேண்டும்.
“தந்தையையோ, தாயையோ அடிக்கிற எந்த மனிதனும் கொல்லப்படவேண்டும்.
“ஒருவனை அடிமையாக்கவோ, அடிமையாக விற்பதற்கோ திருடிச் சென்றால், அவ்வாறு திருடிச் சென்றவன் கொல்லப்பட வேண்டும்.
தந்தையையோ, தாயையோ சபிக்கிற எந்த மனிதனும் கொல்லப்பட வேண்டும்.
“இருவர் வாக்குவாதம் செய்து, ஒருவனை மற்றொருவன் கல்லால் அல்லது கையால் தாக்கினால் எவ்வாறு அம்மனிதனைத் தண்டிக்க வேண்டும்? தாக்கப்பட்ட மனிதன் மரிக்க வில்லையென்றால் அவனைத் தாக்கிய மனிதனும் கொல்லப்படக் கூடாது.
Deleteதாக்கப்பட்ட மனிதன் படுக்கையில் சில காலம் இருக்க நேர்ந்தால், அவனைத் தாக்கிய மனிதன் அவன் குணமாகும்வரை அவனை ஆதரிக்க வேண்டும். அவன் சம்பாதிப்பதற்குரிய நாட்களை வீணாக்கியதற்குப் பணம் கொடுக்க வேண்டும். அம்மனிதன் அவன் முழுமையாக குணமாகும் வரை உதவி செய்ய வேண்டும்.
“சில வேளைகளில் ஜனங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் அடிமைகளை அடிப்பார்கள். அடிபட்டு அடிமை மரிக்க நேர்ந்தால், அவனைக் கொன்றவன் தண்டிக்கப்படவேண்டும்.
அடிமை மரிக்காமல் சில நாட்களுக்குப் பின் குணமடைந்தால், அம்மனிதனைத் தண்டிக்க வேண்டாம். ஏனெனில் எஜமானன் அடிமையைப் பணம் கொடுத்து வாங்கியிருந்ததால் அந்த அடிமை அவனுக்குரியவன்.
யாத்திராகமம் 21
Deletehttp://bible-library.com/?bookid=2&chapter=21&translation=14
Deleteஅன்பரே, அடிமையை அலசியவிதம் அருமை. இன்னும் நான் அடிமைப் பற்றி சமூக விழிப்புணர்வு பகுதியில் எழுதவில்லை. அதற்கு முன்பாக உங்கள் விபரங்கள் வந்தது. மிக்க மகிழ்வு. அந்தாதி எழுதும் முன் கடவுள் வாழ்த்து, கடவுள் வணக்கம், கடவுள் புகழ், காணிக்கை போன்ற வழிமுறைகளை எழுத நேர்ந்தது.
ReplyDeleteஇதில் வழக்கம் போல் அனைத்தும் அமைந்தாலும், கடவுள் வாழ்த்து என்பது இங்கு மாறுபட்டக் கோணத்தில் வனையப்பட்டுள்ளது.
மனிதன் கடவுளை வாழத்துவதாக பொதுவாக இருக்கும், ஆனால் இங்கு கடவுள் மனிதனை வாழ்த்துவதாக வனையப்பட்டுள்ளது. விளக்கங்கள் வேண்டின் எழுதலாம். நன்றிகள் பல.