.

Pages

Monday, October 13, 2014

[ 1 ] எழுதலாம் வாங்க ! புதிய தொடர்

'எழுதலாம் வாங்க !'  என்ற தலைப்பில் புதிய தொடர் எழுத எண்ணி உள்ளேன். இது பத்திரிகையாளர் எழுதும் முறை, கதை, கட்டுரை எழுதும் முறை, பத்திரிகை நடத்தும் முறை ஆகியன குறித்து பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன்.
அதிரை சித்திக்

செய்தியாளர் ( பத்திரிக்கையாளர் ) :
1970-1980 களில் பத்திரிக்கையாளர் என்றால் ஊருக்கு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பர். ஊர் நிகழ்வுகள் எதுவானாலும் இவர்கள் மூலமே செய்தியாக பத்திரிகைகளில் வளம் வரும் உள்ளூர் நிகழ்வுகள் பத்திரிகையில் வருமாயின் ஆச்சர்யமாய் பார்போம். குறைந்தது. ஐந்தாறு முறையாவது அந்த செய்தியை படித்து பாப்போம். சாதாரண மக்களுக்கு எப்படி செய்தி பதிவாகிறது என்றுகூட தெரியாது. அதனால் அந்த துறை மீது ஆர்வமும் கிடையாது. ஆனால் இன்றோ ஆட்சியாளர் கூட பயப்படும் அளவிற்கு ஊடகத்தின் சக்தி பலம்பொருந்தியதாக உள்ளது. எனவே பத்திரிக்கையாளருக்கு வேண்டிய குறைந்த பட்ச தகுதியை மட்டும் பார்போம்.

ஒரு விபத்து நடக்கிறது. அந்த வழியே நீங்கள் செல்கிறீர்கள் அப்போது நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் ?

A. எதோ நடக்கிறது நமக்கென்ன என சென்று விடுவீர்களா ?
B. என்ன நடக்கிறது என்று ஆவலாய்  சென்று பார்பீர்களா ?
C. என்ன நடந்தது என்று பார்ப்பதோடு அங்கு நின்றுகொன்றிப்போரிடம்
நிகழ்வை பற்றி கேட்டுதெரிந்து கொள்வீர்களா ?

இதில் எந்த ரகம்...

செய்தியை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ள 'C' யாக இருப்பீர்களாயின் அதுவே முதன்மையான தகுதி.

நீங்கள்  செய்தியை தெரிந்து கொள்ளும் ஆவல் உள்ளவர் என்பது முதல் தகுதி. அந்த நிகழ்வு நடந்த இடத்தை விட்டு அகன்று வேறு நபரிடம் விவரமாக செய்தியை கூறும் தன்மை. நிகழ்வை கண்டது போன்ற உணர்வு கேட்டவருக்கு வரவேண்டும் அப்படி உங்களால் முடியும் என்றால் முழு தகுதியும் உள்ளவராகிறீர்கள்.

அதே போன்று நீங்கள் நிகழ்வு நடந்து முடிந்த பின்னர் அங்கு செல்கிறீர்கள், பார்த்த சாட்சியை விசாரிக்கும் நீங்கள் கேட்கும் ஐந்தாறு கேள்விகளில் முழு விவரமும் வந்து விட வேண்டும் அந்த சாதுர்யம் தங்களுக்கு இருக்குமாயின் நீங்கள் செய்தியாளனுக்கு முழு தகுதியானவர் என்றே பொருள் கொள்ளலாம்!
தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

12 comments:

  1. இந்த தொடர் நிச்சயம் ஊடக ஆர்வலர்களுக்கு பயனைத் தரும் !

    தொடர்ந்து வழங்கிட வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..தம்பி நிஜாம்..
      பழைய அனுபவங்களை பகிர்வதும் .புதிய யுக்திகளை
      பரிமாறிகொள்வோம் ...தர்கங்களும்..ஆரோக்கியமாய்
      பகிர்வோம்

      Delete
  2. தாங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். தாங்களிடமிருந்து சிறந்த தகவல்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நல்லமனம் ..கொண்ட அதிரை மெய் சா .அவர்களின்
      வாழ்த்துக்கள் மனம் மகிழ செய்கிறது

      Delete
  3. சொல்ல, மற்றும் செய்ய வேண்டியதை, தெளிவாக அருமையாக கூறி உள்ளீர்கள் .

    வாழ்த்துக்கள்,மற்றும் பல .

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் .அய்யூப் கான் ...தங்களின் வருகை நல்வரவாகுக .தங்களின் பின்னூட்டம் எனக்கு மகிழ்வை தருகிறது

      Delete
  4. எழுதலாம் வாங்க அல்ல ,
    எழது வோம் நாங்க .என்று சொல்லுங்கள் .

    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. எழுதலாம் வாங்க ...என தங்களையும் அழைக்கவே
      இந்த தலைப்பு .நன்றி

      Delete
  5. எழுதத் தூண்டுவது அறிவை விருத்திச் செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. சுரந்த பால் ..
      பசு மடியில் இருந்தால் சோதனை .
      பாலை கறந்தால் ..அது சாதனை ..சுகமே
      அறிஞர் நபி தாசின் கருத்து எழுத்தார்வத்தை
      தூண்டும் ...நன்றி

      Delete
  6. அருமையான விளக்கம்தொடருங்கள் ஐயா!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers