தியாகத் திருநாள் கொண்டாட்டம்
.....தெருவில் எங்கும் சந்தோசம்
தயாளம் மனதில் குடிகொண்டும்
.....தருவார் தானம் பலதந்தும்
நியாய நபிகள் இஸ்மாயில்
.....நேர்மை நிறைந்த இப்ராஹீம்
தியானம் கண்டே வென்றிடுவோம்
.....தினமும் வாழ்வில் பற்றிடுவோம்.
இறைவன் வகுத்த வழிதனையே
.....என்றும் பிசகா வாழ்வினையே
மறையில் பொறித்தான் வழிப்படவே
.....மதியோர் தன்னில் செயல்படவே
பிறையில் வேற்றுக் கண்டிட்டார்
.....பிரிந்தே இன்று நிற்கின்றார்
முறையில் பேதம் வந்ததேனோ ?
.....முன்னோர் வழிகள் விட்டதாலோ ! (தியாகத்)
அனைத்தும் மனதில் அவனுக்காய்
.....அழகாய் சொல்வார் வாய்ச்சொல்லாய்
நினைவில் செயலில் தனக்காக
.....நிகழ்த்தி பிரிந்தார் பிணக்காகி
முனைந்தே முதலோன் சுயநிலையே
.....முழுதும் இயங்கும் தனிநிலையாய்
புனையும் இணையில் புரிதலிலே
.....புகுத்தும் அறிவில் பிரிவினையே (தியாகத்)
தெளிவைத் தேடி நாடினாலே
.....தெரியும் குர்பான் உண்மையிலே
வெளியாய் உள்ளாய் உள்ளதெல்லாம்
.....வேறு என்றே இல்லையாமே
அளிக்கும் துவிதம் வேற்றுமையை
.....அழிக்கும் நிலையைப் பற்றுவாயே
ஒளிவைப் பெறுவாய் ஒருவனிலே
.....உயர்ந்தே வாழ்வாய் ஒற்றுமைலே. (தியாகத்)
நபிதாஸ்
யாப்பு இலக்கணம்: அரையடிக்கு மா மா காய் ஆசிரிய விருத்தம்.
.....தெருவில் எங்கும் சந்தோசம்
தயாளம் மனதில் குடிகொண்டும்
.....தருவார் தானம் பலதந்தும்
நியாய நபிகள் இஸ்மாயில்
.....நேர்மை நிறைந்த இப்ராஹீம்
தியானம் கண்டே வென்றிடுவோம்
.....தினமும் வாழ்வில் பற்றிடுவோம்.
இறைவன் வகுத்த வழிதனையே
.....என்றும் பிசகா வாழ்வினையே
மறையில் பொறித்தான் வழிப்படவே
.....மதியோர் தன்னில் செயல்படவே
பிறையில் வேற்றுக் கண்டிட்டார்
.....பிரிந்தே இன்று நிற்கின்றார்
முறையில் பேதம் வந்ததேனோ ?
.....முன்னோர் வழிகள் விட்டதாலோ ! (தியாகத்)
அனைத்தும் மனதில் அவனுக்காய்
.....அழகாய் சொல்வார் வாய்ச்சொல்லாய்
நினைவில் செயலில் தனக்காக
.....நிகழ்த்தி பிரிந்தார் பிணக்காகி
முனைந்தே முதலோன் சுயநிலையே
.....முழுதும் இயங்கும் தனிநிலையாய்
புனையும் இணையில் புரிதலிலே
.....புகுத்தும் அறிவில் பிரிவினையே (தியாகத்)
தெளிவைத் தேடி நாடினாலே
.....தெரியும் குர்பான் உண்மையிலே
வெளியாய் உள்ளாய் உள்ளதெல்லாம்
.....வேறு என்றே இல்லையாமே
அளிக்கும் துவிதம் வேற்றுமையை
.....அழிக்கும் நிலையைப் பற்றுவாயே
ஒளிவைப் பெறுவாய் ஒருவனிலே
.....உயர்ந்தே வாழ்வாய் ஒற்றுமைலே. (தியாகத்)
நபிதாஸ்
யாப்பு இலக்கணம்: அரையடிக்கு மா மா காய் ஆசிரிய விருத்தம்.
ஆஹா கவிதை அருமை !
ReplyDeleteஅனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழத்துக்கள்.
ஆஹாக் கவிதை அருமை
Delete.....அனைவர் பெறுங்கள் பெருமை
வாகாத் தந்தார் நிஜாமும்
.....வாழ்த்தில் மகிழ்வோம் நிதமும்
சாகாப் பரிசும் தம்மில்
.....சாந்த நபியும் இஸ்மா(யி)ல்
சோகம் நீக்கிப் பெற்றார்
......சோத னையில் வென்றார்
கவிதை வரியிலும் பாடி
ReplyDeleteகலக்கும் நல்ல பெருநாள்
அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
கவிதை வரியில் பாடி
Delete.....கலக்கும் நல்ல பெருநாள் ?
கவிஞன் அல்ல பெருநாள் !
.....கவனம் மீளேன் உன்னில்
குவிக்க வேண்டும் எண்ணம்
.....கொடுத்த வரியில் திண்ணம்
தவிப்பு உண்டே காண
.....தாரும் கவியில் பேண