செய்தியும் அதன் பின்னணியும்...
ஒரு செய்தியாளன் தான் அறிந்த செய்தியை உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை அறிய நிகழ்வின் பின்னணி அவசியம.
1970 களில் செய்தியாளர்கள் தனது செய்திகளை
பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்க மிகவும் சிரமப்படுவர் கடிதம் மூலம் அனுப்பி வைத்தால் மூன்று நாள் கழித்தே செய்தியாக வரும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே போன் மூலம் செய்தியை தெரிவிப்பர்.
புகைப்படம் பதியபட வேண்டும் என்றால் உள்ளூர் புகைப்பட கலைஞர்ர்களை அணுகி புகைப்படம் எடுக்க வேண்டும். ஸ்டூடியோ வைத்து இருப்பவர்கள் ஆதலால் இலகுவாக இசைய மாட்டார்கள். காரணம் அவர்களுக்கு புகைப்பட கருவிகள் எடுத்து வருவது மிககடினம். எனவே படத்துடன் செய்தி வந்தால், புகைப்பட உதவி 'ஸ்டூடியோ' பெயரையும் போட்டு அவர்களை மகிவிப்பர் .
புகைப்பட கலைஞர்கள் எடுத்த படம் விபத்து, கொலை போன்றதாக இருந்தால் போலிசுக்கு ஒரு காப்பி கொடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குண்டான தொகையை கொடுக்காமல் அழைகளிபார்கள். எனவே புகைப்படத்துடன் கூடிய செய்தி வருவது அன்றைய காலத்தில் அபூர்வம். அதே போன்று செய்தியாளர் எடிட்டருடன் நல்ல தொடர்பு வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் எவ்வளவு முக்கிய செய்தியாக இருந்தாலும் ஒரு பத்தி செய்தியாக போட்டு விடுவர். தினபத்திரிகையில் ஒரு பக்கத்திற்கு எட்டு பத்திகள் ( அதாவது காலம் )
குறைந்தது மூன்று பத்திகள் அளவில் உள்ள செய்தியே வாசகரை கவரும் செய்தியாக கொள்ளலாம். செய்தியின் பின்னணி நன்றாக அறிந்து வெளியிடும் செய்தியாளரின் செய்தியை கூட பத்திரிகை செய்தியின் தலைப்பால் தடம் புரளுவதுண்டு. உலகிற்கு உணர்த்த நிகழ்வின் உண்மையை
அறிய நிகழ்வின் பின்னணி அவசியம்.
உதரணத்திற்கு ஒரு நிகழ்வை பார்ப்போம்...
ஓடும் பஸ்ஸில் ஏற முயன்ற வாலிபர் கீழே விழுந்து பலி !
இதன் பின்னணி தலைப்பை பார்த்தே பலியானவரின் தவறு தெரிய வரும்...
பஸ்ஸில ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி ! ஓட்டுனரின் அவசரத்தால் நிகழ்ந்த பரிதாபம் !!
இந்த தலைப்பை பார்த்தால், ஓட்டுனர் மீது கோபம் வரும். செய்தியாளர் மனசாட்சியுடன் செய்தி பின்னணியை தெரியப்படுத்த வேண்டும்.
சென்ற வாரம் எஸ் பி பட்டினத்தில் நிகழ்ந்த சம்பவம் விசாரணைக்கு சென்றவர் போலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கூட தினமலரில் ஒரு தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது கோபம் வரும். அதே தினத்தில் மற்றொரு நாளிதழ் தினத்தந்தியில் வந்துள்ள தலைப்பை பார்த்தால் மரணித்தவர் மீது பரிதாபம் வரும். எனவே செய்தியாளர் பணி மிக மகத்தானது அதேபோன்று பேட்டி எடுப்பது குறித்து அடுத்த பதிவில் விளக்கமாக காண்போம்.

தொடரும்...
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
செய்தியும் அதன் பின்னணி விளக்கமும் மிகத் தெளிவாக இருக்கிறது.
ReplyDeleteபத்திரிகை துறையில் இருந்த தாங்களின் அனுபவத்தை பதிவாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இன்னும் தாங்களிடமிருந்து நிறைய அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்.
உண்மையை உரைக்க சொன்ன ஆசிரியருக்கு பாராட்டுகள்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான வழி வகைகளோடு விளக்கிய விதம் நன்று. இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்ற ஆக்கம், தொடருங்கள் உங்கள் வழி வகைகளை.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
உலகளாவிய தமிழர்களும் பள்ளிக் கல்வி மட்டும் முடித்தோரும் கூட புரிந்து கொள்ளத் தக்க வகையில் கட்டுரையின் மொழி நடை இயன்ற அளவு எளிமையானதாக இருத்தல் வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும் என்ற போதிலும், கட்டுரைகளின் நடை ஒரு கலைக் களஞ்சியத்திற்கு ஏற்ற நடையாக இருத்தல் வேண்டும். வலைப்பதிவுகளிலோ இதழ்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காகவோ மெல்லிய வாசிப்பிற்காகவோ எழுதும் பொழுது நாம் சிலவகை நடைகளைப் பயன்படுத்துவோம்.
Deleteஎப்படி எழுதுவது என்பது சரியாகப் பிடிபடாவிட்டாலும் எழுத ஆசை உள்ள நிறைய பேர் இருக்கிறோம். அமெரிக்காவில் Stock Market for Dummies, Wine for Dummies, Programming for Dummies என்று புத்தகம் போடுவார்கள். அந்த மாதிரி யாராவது Writing for Dummies என்று ஒரு புத்தகம் போட்டால் தேவலை
Deleteகட்டுரைக்கு ஒரு கச்சிதமான வடிவம் தேவை. பக்க அளவு முக்கியம். ஆய்வுரை முற்றிலும் வேறுபட்டது. முக்கியமான வேறுபாடு இதுதான். கட்டுரைக்கு ஒரே ஒரு கோணம்தான் உண்டு. ஆய்வுரை பலகோணங்களில் ஒரு கருத்தை முன்வைப்பது
Deleteகட்டுரை ஏற்கனவே ஆராய்ந்து தெளிந்தவற்றை எடுத்துக்கூறும் தன்மை கொண்டது.ஆய்வுரை ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்ந்து பார்க்கும் தன்மை கொண்டது. கட்டுரையில் விரிவான விளக்கங்களோ விவாதங்களோ நிகழ்த்த முடியாது. அதற்குரியது ஆய்வுரையே.
கட்டுரை எதைப்பற்றியது என ஒரே ஒருவரியில் சொல்ல உங்களால் முடியவேண்டும். அதுவே அதன் மையம். அதாவது ‘கரு’
Deleteகட்டுரையில் முதல்வரியிலேயே அந்த கரு நேரடியாக வெளிப்படுவது நல்லது. அல்லது அந்தக் கருவை நோக்கி நேரடியாகச் செல்லும் ஒரு வழி அந்த முதல்வரியில் திறந்திருக்க வேண்டும்
Deleteஅந்த மையக்கருவை நிறுவக்கூடிய விவாதங்களாக தொடர்ந்துவரும் வரிகள் வெளிபப்டவேண்டும். அதற்கான ஆதாரங்கள், அதை நிறுவும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அதை மறுக்கும் வாதங்களுக்கான பதில்கள் ஆகியவை.
Deleteகட்டுரையில் பேசப்படும் கருத்துக்கு ஆதாரம் காட்டும்போது வலிமையான ஒரு ஆதாரம் கொடுக்கப்பட்டால் போதும். ஒன்றுக்குமேல் ஆதாரங்களைக் கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அது கட்டுரையை சோர்வுற்றதாக ஆக்கும். பெரும்பாலும் ஒரு உதாரணத்தை நாம் சொல்லியதுமே அதேபோன்ற பல உதாரணங்கள் நம் நினைவுக்கு வரும். அவற்றை வரிசையாக சொல்லிச்செல்லும் உற்சாகம் ஏற்படும்.அது கட்டுப்படுத்தப்படவேண்டும்.
Deleteவரிசையாக ஆதாரங்கள் கொடுத்து ஒன்றை நிறுவுவதாக இருந்தால் கட்டுரையின் நோக்கமே அதுவாக இருக்கவேண்டும், வேறு விஷயமே கட்டுரையில் இருக்கக் கூடாது.
Deleteகட்டுரையில் ஒரு விஷயம் குறிப்பிடப்படும்போது அக்கட்டுரையின் விவாதத்துக்கு என்ன தேவையோ அதைமட்டுமே அவ்விஷயத்தில் இருந்து எடுத்து முன்வைக்கவேண்டும். சுவாரஸியமாக இருக்கிறதே என தொடர்பில்லாதனவற்றை சொல்ல முயலக்கூடாது. உதாரணம், முக அறுவை சிகிழ்ச்சை பற்றிய ஒரு கட்டுரையில் மைக்கேல் ஜாக்ஸனைப்பற்றி சொல்லவரும்போது அவரது சமீபத்திய இசைத்தட்டின் விற்பனை எத்தனை லட்சம் என்ற தகவல் தேவையில்லை
Deleteகட்டுரை ஒரே உடல் கொண்டதாக இருக்க வேண்டும். இரு தனி விஷயங்கள் இணைக்கப்பட்டதுபோல தோன்றவே கூடாது. ஒருவிஷயத்துக்கு ஒரு கட்டுரை என்பதே நல்லது
Deleteகட்டுரையில் முன்னுரை ,அல்லது பீடிகை இருந்தது என்றால் அது அக்கட்டுரையில் அளவில் எட்டில் ஒருபகுதிக்கும் குறைவாகவே இருக்கவேண்டும். எவ்வளவு சுருக்கமான பீடிகை இருக்கிறதோ அந்த அளவுக்கு நல்லது. பீடிகை கண்டிப்பாக மையக்கருவை சுட்டவேண்டும்– நுட்பமாகவேனும்.
Deleteமையக்கருவிலிருந்து விலகி சில தகவல்களை அல்லது கருத்துக்களைச் சொல்வதாக இருந்தால் அவற்றை இடைவெட்டுகளாக ஒருவரியில் அல்லது இரண்டு வரியில் சொல்லிச் செல்வது நல்லது. அடைப்புக் குறிக்குள் சொல்வது, — போட்டுச் சொல்வது சிறப்பு.
Deleteகட்டுரைக்கு தகவல்கள் எப்போதும் அவசியம். ஆனால் எத்தனை முக்கியமான தகவலாக இருந்தாலும் அது கட்டுரையை வரட்சியானதாக ஆக்கும். ஆகவே தகவல்களை எப்படியெல்லாம் சுவாரசியமாக ஆக்க முடியுமோ அப்படியெல்லாம் சுவாரஸியமாக ஆக்கவேண்டும். தகவல்களை குட்டிநிகழ்ச்சிகளாக ஆக்கலாம். ஒன்றுடன் ஒன்று பிணைக்கலாம். சொல்லும் மொழியால் வித்தியாசப்படுத்திக் காட்டலாம். பட்டியல்கள் ஒரு கட்டுரைக்கு எப்போதுமே பெரும் பாரம்
Deleteஒரு கட்டுரை முழுக்க ஒரே வகை மொழி இருக்கவேண்டும். விளையாட்டுத்தனமான ஒரு கட்டுரை திடீரென்று கோபம் கொள்வ§தோ சட்டென்று தீவிரமடைவதோ கூடாது. அடிப்படையில் இது என்ன மனநிலை [mood] உள்ள கட்டுரை என்ற தெளிவு அக்கட்டுரையில் இருக்கவேண்டும். நகைச்சுவையாக ஆரம்பித்து மெல்ல தீவிரமடையும் கட்டுரைகளும் தீவிரமாக ஆரம்பித்து வேடிக்கையாக ஆகும் கட்டுரைகளும் உண்டு. அப்போது அந்த மாறுதல் சீராக ஆசிரியரால் கொண்டு வரப்படவேண்டும். எது மைய உணர்ச்சியோ அதுவே பெரும்பாலான அளவுக்கு இருக்க வேண்டும். பாதிப்பாதி என்றெல்லாம் இருக்கக் கூடாது
Deleteமேற்கோள்களை முடிந்தவரை தவிர்ப்பதே கட்டுரைக்கு நல்லது. மேற்கோள் கொடுக்கும்போது வித்தியாசமாகவோ கவித்துவமாகவோ தீவிரமாகவோ வேடிக்கையாகவோ கூறப்பட்ட மேற்கோள்களை மட்டுமே ” … ” போட்டு அப்படியே கொடுக்க வேண்டும். அதாவது அந்த மேற்கோள் வாசகனை நின்று கவனிக்க வைப்பதாக இருக்க வேண்டும். எக்காரணத்தாலும் நீண்ட மேற்கோள்கள் ஒரு கட்டுரையில் வரக்கூடாது. ஒருபோதும் எல்லாருக்கும் தெரிந்த மேற்கோள்களை கொடுக்கக் கூடாது. பொதுவான சாதாரணமான கருத்துக்களை ஒரு முக்கிய பிரமுகர் சொல்லியிருந்ததை எடுத்துக்காட்டுவதானால் அக்கருத்துக்களை சுருக்கி நம் சொற்களில் கொடுப்பதே நல்லது.
Deleteகட்டுரையில் வழக்கமான வரிகளையும் வளர்த்தல் வரிகளையும் தேடிக் கண்டடைந்து வெட்டித்தள்ள வேண்டும். எழுதும்போது சரியாகச்ச் சொல்லிவிட்டோமா என்ற ஐயத்தில் நாம் மேலும் ஒருவரி சொல்ல உந்தபப்டுவோம். அதை கட்டுபப்டுத்த வேண்டும். ”இதை எப்படி சொல்வதென்று தெரியவில்லை, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும்’ போன்ற வரிகள் கூடவே கூடாது.
Deleteபிரபலமான சொற்றொடர்களையும் தேய்ந்த சொற்றொடர்களையும் [ஜார்கன், க்ளீஷே] முற்றிலும் தவிர்க்கவேண்டும். ‘திருடனைத் தேள்கொட்டியது போல’ போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தில் எழுதும்போது இது நிறையவே நமக்கு வரும். நமது ஆங்கிலக் கல்வி அத்தகையது. ‘ஸ்டெப்பிங் இன் அதர்ஸ் ஷ¥ஸ்’ என்றெல்லாம்…
Deleteஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்
Deleteஎழுத்தான் எண்ணத்தில் எதை முக்கியப்படுத்த எண்ணுகிறானோ அதனை அவன் செயலாக்குகின்றான் அவன் வண்ணத்தில். ஆனாலும் உண்மைகள் உறங்குவதில்லை.
ReplyDeleteஇன்றய சூழல் பத்திரிக்கைக்கு முண்னாள் டீவியிலும் டிவிக்கு முன்னாள் வாட்சாப்பிலும் செய்திகள் பரவுகிண்றன
ReplyDeleteமீண்டும் தமிழூற்று தொடருமா?
ReplyDeleteசெய்தி ஆசிரியரான நீங்கள் அதிரையின் சொத்து