ஊதிவிடும் சிகரெட்
ஆயூளெனும்
கதிரவனை மறைக்கின்ற
கருமேகம்!
ஆரோக்கியத்திற்குக் கேடு
அழிவிற்கே தங்கவைக்கும்
வீடு!
நீட்டி யுதவி
அவன் உயிரைக்
கூட்டிப் போகும்
எமனாகாதே!
இதய இசைக்கருவியில்
"லொட், லொட்" ராகம்
சிகரட் கரம்!
உலக சுகாதார தாபனம்
ஒரே மகிழ்ச்சி
ஜனத் தொகைக் குறைப்பு
'புகைக்காதே!'
சட்டம் நிறைவேற்றப்பட்டது
வட்டப் புகையால்
சட்டம் மறைவு!
சிந்தனையாளர் கையில்
சிகரட்
வந்தனம் போட்டுக்
கூட்டிப்போனான்
எமண்!
சுருட்டும் மலைப்பாம்பு
வெண்சுருட்டு!
புற்று நோய் நண்பன்
இதயத்தில் பூகம்பம்
புகையால்!
இனித் தொடாதே - உன்
கையால்!
ஆயூளெனும்
கதிரவனை மறைக்கின்ற
கருமேகம்!
ஆரோக்கியத்திற்குக் கேடு
அழிவிற்கே தங்கவைக்கும்
வீடு!
நீட்டி யுதவி
அவன் உயிரைக்
கூட்டிப் போகும்
எமனாகாதே!
இதய இசைக்கருவியில்
"லொட், லொட்" ராகம்
சிகரட் கரம்!
உலக சுகாதார தாபனம்
ஒரே மகிழ்ச்சி
ஜனத் தொகைக் குறைப்பு
'புகைக்காதே!'
சட்டம் நிறைவேற்றப்பட்டது
வட்டப் புகையால்
சட்டம் மறைவு!
சிந்தனையாளர் கையில்
சிகரட்
வந்தனம் போட்டுக்
கூட்டிப்போனான்
எமண்!
சுருட்டும் மலைப்பாம்பு
வெண்சுருட்டு!
புற்று நோய் நண்பன்
இதயத்தில் பூகம்பம்
புகையால்!
இனித் தொடாதே - உன்
கையால்!
'கவிஞர்' அதிரை தாஹா
சிறந்த விழிப்புணர்வு !
ReplyDeleteபாடப்புத்தகத்தில் இடம்பெறக்கூடிய தகுதி படைத்தவை
மூத்த கவிஞர் தாஹா அவர்கள் விழிப்புணர்வு தரும் தளமான சமூக விழிப்புணவு பக்கங்களை விழிப்புணர்வு தரும் கவிதைகளால் நிரப்ப தளத்தின் பங்களிப்பாளராக கைகோர்த்தமைக்கு வாழ்த்தி வரவேற்கிறேன். தொடர்ந்து தாங்களின் கவிதைகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
ReplyDeleteமூத்த கவியாளர் அவர்களுக்கு என்ன இனிய அன்பு அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteபுகைப்போர் பூமியல் பலபேர் அதன்
வீளைவூ பொதுவாக நம்மில் பலபேருக்கு .
காசு கொடுத்து சீக்கு வாங்கும் நல்லவர்களே
உங்கள் உடல் நலம் பார்த்து விட்டு விடூங்க்களேன்.
அருமையான கருத்துக் கோவை. புதுக்கவிதை வடிவில் காண மகிழ்ச்சி.
ReplyDeleteதாஹா சார் அவர்களுக்கு வாக்களித்த அவர்களின் கவிதைகள் பற்றிய தொகுப்புக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில்.
This comment has been removed by the author.
ReplyDeleteபுகை மனிதனுக்கு பகை அதில் சிுரழியும் ஒரு தொகை
ReplyDeleteஅருமையான கவிதை,
ஊதுகிறான் சிகிரெட் - இல்லை
ReplyDeleteஉயிரை ஊதுகிறான் மதிகெட்டு
ஓதுகிறான் தடுக்க - இல்லை
ஊறுகளை ஓதுகிறான் மிடுக்காய்
பாடுகிறார் கவிஞர் - கவியில்
பாதகத்தைப் பாடுகிறார் புவியில்
தேடுகிறார் மனிதம் - நம்மில்
தீதுக்குறையத் தேடுகிறார் புனிதம்.
Nice poems....
ReplyDeleteசொட்டுச் சொட்டாய் விழுந்த புதுக்கவிதைச் சொற்கள்
ReplyDeleteசிகரெம் எட்டும் வயதில்" சிகரெட்டா " என்று
சிந்திக்க வைத்த வைர வரி கற்கள்!
மூப்புக்கவி - யாப்புக்கவி அருட்கவி தாஹா ஐயா அவர்களின் வருகை எங்களுக்கு வகுப்பு எடுக்கும் அருமை!
ReplyDeleteஅன்பின் ஐயா அருட்கவி அவர்களின் மேலான பார்வைக்கு "புகைத்தல்" தலைப்பில் என் பாடலை சமர்பித்து , தங்களின் கருத்துரை வேண்டி நிற்கின்றேன் ஆசான் அவர்களே!
http://www.kalaamkathir.com/2010/11/blog-post_02.html
வதைத்திடும் புற்றுநோய்; வளர்த்திடும் காசநோய்;
விதைத்திடும் மனவழுத்தம்; வீணாக காசும்போய்(விடும்);
மிகைத்திடும் ரத்தழுத்தம்; மீளாத வருத்தம்;
நகைத்திடும் ஆண்மை நரம்பு தளர்ச்சி;
புகைத்தலின் கெடுதிகள் புரிந்தால் மகிழ்ச்சி
உடலிலும் உன்றன் உடையிலும் துர்நாற்றம்;
குடலில் புண்வரும்; குரலில் தடுமாற்றம்;
சுற்றி உள்ளோர்க்கும் சுகாதாரக் கேடு;
மற்றவர்க்கு நோய்தருதல் மாபெரும் சாபக்கேடு..!!!
உன்னை வளர்த்த உயர்வான சமூகத்திற்கு
உன்னால் தரப்படும் ஒழுக்கமற்ற துரோகத்திற்கு
என்ன தண்டனை என்ற போதே
உன்னை நீயே உருக்குலைப்பது போதுமே...!!!!
இதழ்முத்தம் உனக்கு இனிமேல் எட்டாது;
முதலிரவில் மனைவி முகமும் கிட்டாது
இதைவிடத் தண்டனை ஏற்குமா நெஞ்சே
விதைவிட முன்னே விரட்டிடு நஞ்சை
தோலில் சுருக்கம்; தோல்விகள் தொடர்தல்;
பாலில் நஞ்சுபோல் பார்வைக்கு தெரியாமல்
ஒவ்வொரு இழுப்பும் உயிரின் இழப்பு
ஒவ்வொரு நெருப்பும் உடலினைக் கருக்கும்
“கவியன்பன்’, கலாம், அதிராம்பட்டினம்