உழுகின்ற ஏர்கலப்பு
எங்கே போனது?
மாடுகள் மாண்டனவா?
காடுகளைக் கண்டனவா?
வயல் வெளிகளில்
சாணத்தைப் பார்த்தோ
மில்லை!
எருவை எங்கே
போட்டீர்கள்?
எருது மில்லை!
எருவுமில்லை!
இராட்சத வாகனம்
பூமி அதிர்கிறது
பூகம்பம் போல!
அதிலே,
நாங்க ளெல்லாம்
மாண்டுப் போகின்றோம்!
போர்க்களத்தில் உடல்
புண்படல் போல,
நிலம் புண்படுகிறது!
மண்புழுக்களாகிய
நாங்கள் புறமுதுகுக்
காட்டுகிறோம்!
மக்கிப்போன எருக்களை
மண்ணில்
தூவினர், மண்டும்
புழுக்களை
உணவாக உண்டோம்!
இறைவன்,
மண்ணிலே படைத்தான்
மண்ணையே உழுதோம்,
மண்ணில் கிடைப்பதை
மாந்தியே உண்டோம்
மண்ணிலே மடிந்தோம்
விளைச்சலுக் குதவ
உரமாக ஆனோம்!
"உழவரின் நண்பனென"
உலகமே உரைக்கும்
மண்டும் காசை
மடியில் கட்ட - எங்களை
மண்ணுக்குள் மாய்த்தீர்கள்!
மண்ணுள் புதைத்தப்
பெண்பிள்ளை போல,
நாங்கள்...!
எங்கே போனது?
மாடுகள் மாண்டனவா?
காடுகளைக் கண்டனவா?
வயல் வெளிகளில்
சாணத்தைப் பார்த்தோ
மில்லை!
எருவை எங்கே
போட்டீர்கள்?
எருது மில்லை!
எருவுமில்லை!
இராட்சத வாகனம்
பூமி அதிர்கிறது
பூகம்பம் போல!
அதிலே,
நாங்க ளெல்லாம்
மாண்டுப் போகின்றோம்!
போர்க்களத்தில் உடல்
புண்படல் போல,
நிலம் புண்படுகிறது!
மண்புழுக்களாகிய
நாங்கள் புறமுதுகுக்
காட்டுகிறோம்!
மக்கிப்போன எருக்களை
மண்ணில்
தூவினர், மண்டும்
புழுக்களை
உணவாக உண்டோம்!
இறைவன்,
மண்ணிலே படைத்தான்
மண்ணையே உழுதோம்,
மண்ணில் கிடைப்பதை
மாந்தியே உண்டோம்
மண்ணிலே மடிந்தோம்
விளைச்சலுக் குதவ
உரமாக ஆனோம்!
"உழவரின் நண்பனென"
உலகமே உரைக்கும்
மண்டும் காசை
மடியில் கட்ட - எங்களை
மண்ணுக்குள் மாய்த்தீர்கள்!
மண்ணுள் புதைத்தப்
பெண்பிள்ளை போல,
நாங்கள்...!
'கவிஞர்' அதிரை தாஹா
விளைநிலங்களெல்லாம்
ReplyDeleteமனைகளாக்கி விற்றுத் தீர்த்தாச்சு
குளக்கரைகளைஎல்லாம் கூறுபோட்டு
குடும்பச் சொத்சாக்கியாச்சு
மீதமுள்ள - குண்டும்குழியிலும்
குப்பைக்கூளங்களை கொட்டி
கொசுவும் புழுவும் பெருத்தாச்சு
உண்ணும் உணவும்
உயிர்காக்கும் மருந்தும்
கலப்படாமாயாச்சு
எண்ணும் எண்ணத்திலும்
ஏகபோக சிந்தனையிலும்
இறையச்சம் இல்லாது போச்சு
விண்ணில் பறந்தாலும்
வீரனாய் வாழ்ப்தாலும்
பணத்தில் புரண்டாலும்
பஞ்சணையில் படுத்தாலும்
மண்ணில் புதையுறும்
மறுமை வாழ்க்கையை
மறந்தே போயாச்சு
எண்ணமும் எழுதும் வண்ணமும்
ReplyDeleteசொல்லும் அதன் பயனும்
அருமையான கவி வரிகள்
ஆழ்ந்த சிந்தனை மொழிகள்
அருமை .
வாழ்த்துக்கள் .
இந்தியாவின் எதிர்காலம் விவசாயின் கையில் ! அழிந்துவரும் விவசாயத்தை உயிர்பிக்க செய்வது அரசின் தலையாய கடமையாக இருக்கிறது.
ReplyDeleteமண்ணுக்குள் புதைத்த
ReplyDeleteபென்பிள்ளப் போல்...
என்னுக்குள் படிக்க
எழுகின்றது வேதனை.
நாகரீகம் என்று
நல்லப் பல இருந்தாலும்
சோகரீகம் இல்லாமல்\
சுகங்கான முடியாதோ !
வாகாக வந்ததை
வசதியாக பயன்படுத்தாமல்
போகாத முறையில்
போகிறதே இன்பம்.
மண்புழு மட்டும்
மனதில் துடிக்கவில்லை
பெண்புழுக்கள் இன்று
பின்னாடி செல்கிறதே !
அன்பென்று அணைக்க
அகிலமெல்லாம் கண் திறக்க
பண்பெல்லாம் பறக்கிறதே
பரிதவிக்க மனிதகுலம்.
மிருக வாழ்க்கை
மிக வேகமாய்
அருகில் வருகிறதோ
அந்தோ ! பரிதாபம் !
முத்தமிட நீ நினைத்தல்
மோசம் போ ! எப்படியும்
பத்தினிகள் இருக்கின்றார்
பயமில்லை எங்களுக்கு.
ஏா் கலப்பு பற்றிய கவலையுடன் ஒரு கவிதை
ReplyDeleteஎருதுமில்லை
எருவுமில்லை
மண் புழும் மனிதனை போலவே புலம்புகிறது,
எங்கள் கவிஞருக்கு மண் புழு மிூது எத்தனை கருணை.
//போர்க்களத்தில் உடல்
ReplyDeleteபுண்படல் போல,
நிலம் புண்படுகிறது!//
நிலத்தின் வேதனை வலிகள் நிஜமாய் , தங்களின் வரிகள் .