.

Pages

Friday, November 7, 2014

மது !?

மாது நினைவில்
மிதக்கும் சூது இந்தமது!

மதுக்கறை மீதில்
நடப்பவனே
துன்பக்கடலாய் ஆடுகிறது
அதில் நீ யொரு

மிதப்புக்கட்டை!
வாயால் சண்டை - பின்பு
கையால் சண்டை! - பின்பு
கத்தியால்.
இது
மதுவின் இலக்கணம்!

"ஓராண்டுதானே ஆகிறது
தாலி கழுத்திலேறி"
மனைவி சொன்னாள்
ஏறிய தாலியை
இறக்கடி
குடிக்க!
கணவனின் கருத்துரை!
பகா சூரனை
வெடியால் வெல்லாம்! - இந்த
மதுவரக்கனை...?

வெல்ல முடியாத
வெற்றி யாளனை
அரசு
தொட்டில் கட்டி
"என்வெல்லக்கட்டியே
என்று கொஞ்சித்
தாலாட்டுகிறது"!

வருமானம் கருதி
வரும் "மானம்" போகிறது!
எத்தனைக் குடும்பங்களில்
அரிசி வேகப் பாத்திரமில்லை,
அழும்பிள்ளைக்குப்
பாலில்லை
அடர்பசியால் உயிர்பிரிகிறது!

நாட்டையே சுடுகாடாக்கும்
வியாபாரிகளுக்குக்
கொண்டாட்டம்!
கோடி கோடி குடிகளுக்குத்
திண்டாட்டம்!

போதையிலே
புலியாட்டம்
குழந்தைகளிடம் பாலியல்
பலாத்காரம்!
குடிகெடுக்கும் கொடுமை!

டீகடைபோல ஆனதாம்
மதுக்கடை!
பால்மணம் மாறாப்
பையன்களும்
போடுகிறார்களாம்
மில்லி!
இதை எங்கே போய்
அழுவது
சொல்லி!...
'கவிஞர்' அதிரை தாஹா

4 comments:

  1. மது குடிப்பதால் ஏற்ப்படும் தீமையான விபரீத நிகழ்வுகளை தாங்களுக்கே உரித்தான அழகு தமிழில் கவிதையாக்கி உணர்த்தியவிதம் அருமை நன்றி.

    ReplyDelete
  2. சிறந்த விழிப்புணர்வு !

    ReplyDelete
  3. கவிஞர்
    ஆம் !
    இவர் கவி மதுவை
    ஊற்றி தருகிறார்.
    அதன் போதையில்
    ஏதோ நானும்
    கிறுக்கிறேன்.

    இவர் மதுவில்
    என்ன அதிசியம் !
    அறிவுகள் தீட்டப்படுகிறது.
    சமூகச் சீர்கேடுகள்
    படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

    இவர் மதுவை
    குடிப்பவர்கள்
    கெட்டிக்காரர்கள்.
    அதனாலோ !
    பலர்
    பி ஹெச்டி -க்கு
    இவர் மதுவிலே நீந்துகின்றனர்
    பல்கலைக் கழகப்
    பாட்டமும் பெறுகின்றனர்.

    ReplyDelete
  4. //பையன்களும்
    போடுகிறார்களாம்
    மில்லி!
    இதை எங்கே போய்
    அழுவது
    சொல்லி!...//
    ஈற்றுச் சந்தங்களின் ஈர்ப்பு இதயத்தைத் தொட்டது;சுட்டது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers