.

Pages

Tuesday, November 11, 2014

மனிதா சிந்தி !

தற்கொலை ஈனச் செயல்,
மிருகங்கள் செய்கின்றனவா
தற்கொலை!
உடல்சிதைய அடித்தாலும்
ஆமை உயிர்துடித்தும் வாழும்!
வாழும் ஆசையால்!
முயலா (ய்) மாளாதே
ஆமையாய் வெல்!
ஒன்றுபட்டு பலநாள்
பறக்கும்
வெட்டுக்கிளி!
ஒன்றுபட்டதால் _அதற்கு
வரவில்லை தோல்வி!
ஒற்றுமைக் கெட்டது
தாழ்வு மனப்பான்மைத்
தளிர்விட்டது!
தட்டுக் கெட்டாய்
கட்டித் தொங்க
எடுத்தாய் தீர்வு!
நாய்களுக்குத் தெரியாது
வர்ணபேதம்
ஒருதாய் வயிற்றில்
குடிக்கும் பால் பார்!
வர்ணபேதத்தால்
வசைகள் பாடினாய்!
வந்தவன் வெட்டினான்
படுகொலை! படுகொலை
பாதகமில்லையா?
நாய்களும் நகைக்கும்
நயமிலாச் செயலுக்கா
மனிதனாய்ப் பிறந்தாய்?
தற்கொலை செய்துகொண்ட
வீடு _
இழக்கும் பீடு!
தாயும் தந்தையும்
சுற்றமும்
சூழும் சோகத்தில்
நாளும்!
நேற்றை வாழ்வு
மறைந்தது!
நாளைய வாழ்வு
கற்பனை!
இன்றைய வாழ்வே
நிஜம்!
வாழ்ந்து காட்ட
துணிந்து நில்!
முள்ளில்லாதக் கடிகாரம் போல
மூளையில் படுக்காதே
துள்ளி எழுந்திரு
காலம் கருதி!
மரணம் வேண்டுமா?
காத்திரு
தவனைக் காலம்
வரும்வரை!
'கவிஞர்' அதிரை தாஹா

6 comments:

  1. தற்கொலை ஈனச் செயல்,
    மிருகங்கள் செய்கின்றனவா
    என்ற கருத்தான கவிதை,

    ReplyDelete
  2. தற்க்கொலை ஒரு ஈனச்செயலே ! அனைவரும் உணர்ந்து நடக்க வேண்டிய அவசியமான பதிவு தாஹா சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    தொடர்ந்து நல்ல விழிப்புணர்வு பதிவுகளை எழுதுங்கள்.

    ReplyDelete
  3. மூத்தக் கவிஞரின் முத்துக்கள்
    பார்த்த மனதினின் சொத்துக்கள்
    வார்த்த வகைகளோ வித்துக்கள்
    சேர்த்தே வாழ்ந்திடப் பற்றுங்கள்

    ReplyDelete
  4. தற்கொலை
    தரமற்றவர் செய்யும்
    கோழைச் செயல்.

    மறையத் துடிக்கும்
    மனிதா !
    ஏன் ?
    வாழத் துடிக்கவில்லை ?

    இறைவன்
    நம்பி தந்த
    வாழ்வை அழிக்கும்
    நம்பிக்கைத் துரோகம்

    நீ !
    உன்னைக் கொள்வதாக
    இன்று நினைக்கிறாய்
    ஆனால் !
    என்றுமே
    கொலை வேதனையை
    அனுபவிக்கும்
    நிரந்தர
    நரகில் விழ
    நினைக்கிறாயா ?

    தப்பிக்கப் பார்த்து
    தப்பவே முடியாத
    தப்புக் கணக்கு
    போடாதே !
    நிரந்தரத் தண்டனை
    அனுபவிக்கத் துடிக்காதே !

    ReplyDelete
  5. முள்ளில்லாதக் கடிகாரம் போல
    மூளையில் படுக்காதே
    துள்ளி எழுந்திரு
    காலம் கருதி!

    தோல்வியைத் தோல்வி அடையச் செய்து , துணிவூட்டும் வரிகள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers