.

Pages

Wednesday, December 10, 2014

குப்பைத்தொட்டி !!!


 பெயர்:  குப்பைத்தொட்டி

 மாற்றுப்பெயர்: சுகாதார 'குப்பைத்தொட்டி'

 வயது: எப்ப வேனும்ண்டாலும் 'துரு'ப் பிடித்து தூக்கி வீசப்படலாம்.

 நிரந்தரமா இருக்குமிடம்: 1. ரோட்டோரம், 2. தெருவோர முச்சந்தி, 3. சாக்கடையோரம்

 வேதனைப்படுவது: மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்காமல் எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகச் சேர்த்து எங்கள் மீது கொட்டுபவர்களை நினைத்து.

 எதிரிகள்: குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை அல்லாமல் காலதாமதம் செய்யும் உள்ளாட்சி ஊழியர்கள்

 வருந்துவது: எங்கள் மீது மலக் கழிவுகளை கொட்டுபவர்களை நினைத்து

 சாதனை: சுற்றுப்புறத்தைச்  சுத்தப்படுத்தும் தொட்டி

 வேண்டுகோள்: மக்கள்தொகை பெருகிக்கொண்டு இருக்கும் ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கும் கூடுதல் இட ஒதுக்கீடு அளித்து பொதுமக்களுக்கு கூடுதல் சேவையை அளிக்க ஆங்காங்கே தெருவின் முக்கியப் பகுதிகளில் தொட்டிகளை அதிக எண்ணிக்கையில் வைக்க வேண்டுகிறோம். மேலும் கொசுக் கடியிலிருந்து எங்களை பாதுகாக்கும் விதமாகவும், எங்கள் மீது வீசும் துர்நாற்றத்தை போக்கும் விதமாக எங்களைச்சுற்றி 'பிளிச்சிங்' பவுடரை இட வேண்டுகிறோம்.

 கருத்து: "குப்பைகளை தொட்டியில் போடுங்கள், வெளியில் போடாதீர்கள்", "உங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்து ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்’’

இது ஒரு மீள்பதிவு

18 comments:

  1. மீள் பதிவாயினும் காலத்திற்க்கேற்ற நினைவூட்ட வேண்டிய பதிவு.

    பதிவில் கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    நாம் தான் மீண்டும் பிறக்க முடியாது, பதிவாவது மீண்டும் மீண்டும் ‎பதியப்படட்டுமே.‎

    சென்ற பதிவில் குப்பை குறைவாக இருந்தது,‎

    இந்த பதிவில் குப்பை சற்று அதிகமாக இருக்குது,‎

    அடுத்த பதிவில் குப்பைகள் குப்பைத் தொட்டியை மூடி மறைத்துவிடும் ‎போல் தெரிகின்றது.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. குப்பை (Wastes, rubbish, trash, refuse, garbage, junk, litter) என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள் ஆகும். இவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என இரு வகைப்படும். பழங்காலத்தில் குப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது வேளாண்மைக்குப் பயன்படும். இன்று நம் பயன்பாட்டில் குப்பை மேடுகள் தான் இருக்கின்றன. அதில் உக்காத குப்பைகளான நெகிழிகளே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி இடத்தை அசுத்தமாக்கி மண்ணையும் மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து சாக்கடைகளாக்கி கொசு உற்பத்தியை அதிகரிக்கிறது.

      Delete
    2. குப்பை இன்று சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில், ஆறு ஏரி, குளம்,குட்டை, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டி விடுகிறோம். இதனால் நம் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் பேரின்னலை விளைவிக்கிறது. குப்பைகளைக் குறைப்பதற்கு உக்காத பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது (Reduce), பொருட்களை மறுபடியும் பயன்படுத்துவது (Reuse), கழிவுகளில் இருந்து புதிய பயன்பாட்டை பெறுவது (Recycle) போன்ற வழிமுறைகளைக் கையாளலாம்.

      Delete
    3. குப்பையிலிருந்து காகிதம் தயாரிப்பது, மண் புழு உரம் தயாரிப்பது, எரிபொருளான மீத்தேன் வாயு தயாரிப்பது போன்றவை பரவலாக்கப்படலாம்.

      இவை மட்டுமல்லாமல் குப்பை இயற்கை குப்பை, விண்வெளிக் குப்பை என மேலும் இருவகைப்படும்.

      Delete
    4. ஆலந்துார் மண்டலத்தில், அடுக்குமாடி குடியிருப்பு மூலம் மக்கும், மக்கா குப்பை தரம் பிரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ௧௦ வீடுகள் கொண்ட அடுக்குமாடி இருந்தாலே, அங்கு இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முனைப்புடன் களம் இறங்கிஉள்ளது.
      முதல்கட்டமாக, முகலி வாக்கத்தில் உள்ள, 426 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், குப்பை தரம் பிரிக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு உள்ளது.

      Delete
    5. ஆலந்துார் மண்டலத்தில், தினமும், 750 டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. மக்கும், மக்கா குப்பையாக செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குப்பையை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து பயன்படுத்த ஆலந்துார் மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். முதல்கட்டமாக, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து இந்த திட்டத்தை துவக்க உள்ளனர். ஆலந்துார் மண்டலம், 156வது வார்டு, மதனந்தபுரம் பகுதியில் உள்ள, 'எக்ஸ்.எஸ் ரியல்' என்ற அடுக்குமாடி குடியிருப்பில், 426 வீடுகள் உள்ளன.

      Delete
    6. அங்கு சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் மற்றும் மக்கா குப்பையாக தரம் பிரிக்கப் படுகிறது. அதற்காக, குடியிருப்பு வெளியே மாநகராட்சி தனித் தனியாக தொட்டிகள் அமைத்து கொடுத்துள்ளது. அதன்மூலம், தினமும், 1,250 கிலோ மக்கும் குப்பை, 250 கிலோ மக்கா குப்பை சேகரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பை, பெருங்குடிக்கு அனுப்பப்படுகிறது; மக்கா குப்பை, சாலை போட துகள்களாக்கப்படுகின்றன. மேலும், அங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சிறிய குப்பை தொட்டி, இந்த மாத இறுதிக்குள் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

      Delete
    7. மக்கும் குப்பை கொட்ட, பச்சை நிற தொட்டியும்; மக்கா குப்பை கொட்ட சிவப்பு நிற தொட்டியும் வழங்க உள்ளனர். தொட்டி வாங்க, ஒரு வீட்டுக்கு, 36 ரூபாய் வீதம் கணக்கிடப்பட்டு உள்ளது.
      ஆலந்துார் மண்டலத்தில்,

      Delete
    8. 10 வீடுகளுக்கு மேல் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு, அங்கும் குப்பை தரம் பிரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 50 வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கிடைக்கும், மக்கும் குப்பையை அங்கு மறுசுழற்சி செய்து, உரமாக்கும் திட்டமும் செயல்படுத்தபட உள்ளது.

      Delete
    9. இதுகுறித்து, மண்டல அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்கட்டமாக, 156வது வார்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள் மூலம் குப்பை தரம் பிரிக்கப்படும். மற்ற வார்டு களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் படிப்படியாக செயல்படுத்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
      மண்டலத்தில், தினசரி, 175 டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. தரம் பிரிக்கும் திட்டம் முழுமையடையும்போது, மொத்த குப்பையில் இருந்து, 20 டன் மக்கா குப்பை கிடைக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய தொட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்காக, சிறப்பு நிதி ஒதுக்க மாநகராட்சியை கேட்டு உள்ளோம். அதன்மூலம், குப்பையில் இருந்து கிடைக்கும் மறுசுழற்சி மூலம் பயன் கிடைப்பதுடன், சுற்றுச்சூழலும் பாதுக்காக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

      Delete
    10. மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன.

      Delete
    11. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன.

      Delete
    12. ஐ.நா.சபை அறிக்கையின்படி மின்னணுக் கழிவுகள் பிரச்னையில் ஆசியாவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் மின்னணுக் கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் தமிழகமும் உள்ளன. மின்னணுக் கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது .

      Delete
    13. 2011ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழகத்தில் மட்டும் 28,789 டன் மின்னணுக் கழிவுகள் சேர்ந்துள்ளது . இதில் கணினிக் கழிவுகள் மட்டும் 60 சதவீதம் என்றும் தெரியவந்துள்ளது

      Delete
    14. மின்னணுக் கழிவுகளில் தங்கம், வெள்ளி, செம்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகப்பொருள்கள் கிடைப்பதால் காயலான் கடைக்காரர்கள் அவற்றின் மீது ஆர்வம் காட்டுகின்றனர். மின்னணுக் கழிவுகளை எரிப்பதால் வெளியாகும் டையாக்சின் நச்சுவாயு சுவாச நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் காரீயம், குரோமியம், காட்மியம் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் வெளியாகின்றன. இவற்றால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

      Delete
  3. வீட்டை சுற்றிலும் குப்பை... உள்ளே இருப்பவர்கள் மனதில் உள்ள குப்பை - குட்பை எப்போது...?

    ReplyDelete
  4. குப்பைத்தொட்டி கொசு வளரும் தொட்டி
    சப்புக்கொட்டி மூக்கை மூடிவிடுவோம்
    அப்புறப்படுத்த அழகு வழிகள்காண
    இப்பொழுதே யோசிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers