வாழ்கையில் வறட்சியா
நகை கடன் என்றது
கையில் இருப்பா
நீண்ட கால வைப்பு
இருக்கவே இருக்கு என்று
சிவப்பு கம்பளம் விரித்தது
திருடர்கள் தொல்லையா
பாதுகாப்பு பெட்டகம்
பவ்வியமாய்
உண்டென்றது
சிறப்பான வாழ்வுக்கு
சிறுசேமிப்பு கணக்கு
உங்களுக்காகவே என்றது
பேரனின் கல்விக்கு
கவலை வேண்டாம்
கடனாய் தருகிறோம்
வாருங்கள் அழைத்தது
வீட்டுக்கடன், வாகனக்கடன்
வகை வகையாய்
அழைப்பு விடுத்தது
உங்கள் கடனும் வேண்டா,
என் காலடி தடமும்
உங்கள் இடத்தில்
பதிய வேண்டாம்
என்றிருக்க
கடைசி கொக்கியாய்
கேஸ் மானியம்
என்ற பெயரால்
என்னை இழுக்க !
என்ன செய்யப்போகிறேன் ?
நகை கடன் என்றது
கையில் இருப்பா
நீண்ட கால வைப்பு
இருக்கவே இருக்கு என்று
சிவப்பு கம்பளம் விரித்தது
திருடர்கள் தொல்லையா
பாதுகாப்பு பெட்டகம்
பவ்வியமாய்
உண்டென்றது
சிறப்பான வாழ்வுக்கு
சிறுசேமிப்பு கணக்கு
உங்களுக்காகவே என்றது
பேரனின் கல்விக்கு
கவலை வேண்டாம்
கடனாய் தருகிறோம்
வாருங்கள் அழைத்தது
வீட்டுக்கடன், வாகனக்கடன்
வகை வகையாய்
அழைப்பு விடுத்தது
உங்கள் கடனும் வேண்டா,
என் காலடி தடமும்
உங்கள் இடத்தில்
பதிய வேண்டாம்
என்றிருக்க
கடைசி கொக்கியாய்
கேஸ் மானியம்
என்ற பெயரால்
என்னை இழுக்க !
என்ன செய்யப்போகிறேன் ?
மு.செ.மு.சபீர் அஹமது
ரசித்து வாசித்தேன்
ReplyDelete// கடைசி கொக்கியாய்
கேஸ் மானியம்
என்ற பெயரால்
என்னை இழுக்க !
என்ன செய்யப்போகிறேன் ?//
மார்ச் 31 க்குள் அப்பளை செய்துவிடுங்கள்
என் நண்பர் ஒருவர் வயது 50ஐ தான்டி இருக்கும் நீண்ட நாளைக்கு முன் அவர் சொன்ன ஞாபகம் "எனக்கு வங்கி கணக்கே இல்லை" அதன் மேல் நாட்டமும் இல்லை "என்றார் அவரை நினைத்து வந்த கிருக்கள்தான் மேலே சொன்னது
ReplyDeleteகடன்படுவதிலிருந்து எவ்வளவுதான் மீள நினைத்தாலும் மீள முடியாக் கடன்காரர்களாகத்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ReplyDeleteநாம் விலகிப் போனாலும் நம்மைத்துரத்திப் பிடித்து விடும் தொற்றுநோயாகத்தான் உள்ளது. கடன்.
இருந்தாலும் விரலுக்குத்தக்க வீக்கத்தொடு கடன்கொடுத்தலும் வாங்குதலும் இருந்தால் வாழ்க்கையை ஆரோக்கியமாக நடத்திச் செல்லலாம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தக் காலத்திற்கேற்ற கவிதை, இதை நான் வங்கி மேலாளருக்கு மினஞ்சல் மூலம் அனுப்பி விட்டேன்.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.
Delete‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.
Deleteஏதேனும் தொழில் தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கும் பலர் பணப்பற்றாக்குறை காரணமாக சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் பழைய நிலைமைக்கே வந்து விடுகின்றனர் .
Deleteஅதனையும் மீறி வங்கியில் கடன் உதவி பெற்று தொழில் ஆரம்பிக்கலாம் என்றாலும் வங்கியின்அலைகளிப்பால் அந்த முயற்சியும் கை விட்டுவிடுகின்றனர் .
இன்று பிரமாண்டமான வெற்றியை பெற்றுள்ள பலரும் அன்று அவர்களின் நிறுவனத்தை ஆரம்பிக்க வங்கியில் கடன் பெற பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல.
அவர்களின் கஷ்டங்கலோடு ஒப்பிடுகையில் இன்றைக்கு வங்கியில் கடன் பெறுவது எளிதான ஒரு விசயமே ... ஒரு வங்கியில் கடன் பெறுவது என்று முடிவெடுத்தவுடன் அதற்கான தயாரிப்புகளை நாம் தயாராக வைத்து கொள்ள வேண்டும்
ஒரு வங்கியில் கடன் பெற நாம் சென்ற உடனேயே அவர்கள் உங்களை உபசரித்து உடனே கடன் கொடுத்து விடுவார்கள் என்று நினைப்பது பெரும் தவறு.
Deleteவங்கியில் முதலில் தன்னம்பிக்கையை பரிட்சித்து பார்க்கும் வகையில் பல கேள்விகளை கேட்பார்கள்
நீங்கள் அதுவரை கஷ்டப்பட்டு தெரிந்து கொண்ட வியாபார யுக்திகள் அனைத்துமே பயன்தராது என்பது போல்தான் பேசுவார்கள் ......
சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.
Delete‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.
Deleteஆனால் எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களது தன்னன்பிக்கையை கை விட்டு விடாதிர்கள். நீங்கள் எந்த ஒரு தொழிலை செய்ய முடிவெடுத்தாலும் அதனை பற்றிய அனைத்து விவரங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .
Deleteஅடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும்
Deleteஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்
Deleteஅடையாளச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ்,
Deleteபிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ், திட்ட அறிக்கை, வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்), உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்), பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!
நில மேம்பாட்டு வங்கி (LDB)
Deleteநீண்ட தவணை கடன்கள் வழங்கும் சிறப்பு வங்கிகள் நில மேம்பாட்டு வங்கிகள் எனப்படும். இதன் வரலாறு மிகவும் பழமையானது. முதன் முதலில் பஞ்சாப் மாநிலம் ஜாங் என்ற ஊரில் 1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இவ்வங்கியின் உண்மையான உத்வேகம் “நில அடமானம் வங்கிகள் விதி 1930 ஆம் ஆண்டு அமல் செய்த பின்பு தான் ஆரம்பமானது (எல்.டி.பி உண்மையாக நில அடமான வங்கிகள் என்று அழைப்பர். இந்த விதியை அமல் செய்தபின், எல்.டி.பி வங்கிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தொடங்கப்பட்டது.
விவசாய கடன் மறு ஆய்வுக்குழு (ACRC) 1989 ஆம் ஆண்டு எல்.டி.பி முக்கியப் பங்கினை எடுத்துரைத்து, வேளாண்மை வளர்ச்சி மற்றும் இதர துறைகளான தரிசு நிலம், பண்ணை சாரா துறை வளர்ச்சி ஆகியவற்றை அடைய பரிந்துரை செய்தது. வங்கி மேலும் நாட்களில், அதன் பணிகளை விரிவுபடுத்திய அதே சமயம் நபார்டு வங்கி 1982 ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாடு மற்றும் தரிசு நிலங்கள் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்க ஆவண செய்துள்ளது. 80 - களின் இறுதியிலும், 90 - களின் தொடக்கத்திலும், எல்.டி.பி வங்கி நீண்ட தவணை கடன்களை கிராம மேம்பாட்டு செயல்களான சிறு மற்றும் குடிசைத் தொழில்கள், கிராம கைவினைஞர்கள் ஆகியவற்றிற்கு வழங்கியது. கிராம வீட்டுத் திட்டங்களுக்கு தேசிய வீட்டு வசதி வாரியத்தின் மூலம் மறுநிதியளிப்புகள் ஒரு சில குறிப்பிட்ட மாநிலங்களான கேரளா, கர்நாடகா, உத்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அகன்ற பங்குகளில் தற்போது எல்.டி.பி வங்கிகள் மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கிகள் (SCARDB) என்று வழங்கப்படுகிறது.
Deleteகுறிக்கோள்
Deleteநில மேம்பாட்டு வங்கியின் முக்கியக் குறிக்கோள் வேளாண் வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் அதன் உற்பத்தியை பெருக்குதல் சி.எல்.டி.பி வங்கிகள் நீண்ட தவணை கடன்களை இதற்குச் சேர்ந்த பி.எல்.டி.பி வங்கிகளுக்கு வழங்கும் அல்லது அதன் கிளைகளுக்கு நேரடியாக நிதி வழங்கும்.
அமைப்பு
Deleteஇந்த வங்கிகள் இரண்டு அடுக்கு அமைப்புகளைக் கொண்டது.
மாவட்ட அளவில் உள்ள தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் அதன் கிளைகள் தாலுக்கா அளவில் கொண்டு இயங்குகிறது.
மாநில நில மேம்பாட்டு வங்கி அனைத்து தொடக்க நில மேம்பாட்டு வங்கிகளும் மாநில அளவில் மத்திய நில மேம்பாட்டு வங்கி §பரவையுடன் இணைக்கப் பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் ஒரு அமைப்பு முறை மட்டு§ம உள்ளது. மாநில நில மேம்பாட்டு வங்கி அதன் கிளைகள் மூலம் இயங்குகிறது. அதன் சிறு கிளைகள் மாவட்ட அளவிலும் அதற்கு கீழ் அளவிலும் இயங்குகிறது.
தொடக்க நில மேம்பாட்டு வங்கிகள் (பி.எல்.டி.பி)
Deleteஇந்த வங்கிகள் மாவட்டத்தில் ஒன்று அல்லது சில தாலுக்காக்களை மட்டுமே பார்க்கும்படி அமைத்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தற்போது அது ஒரு மேம்பாட்டு வட்டாரத்தை மட்டுமே பார்க்கத் தகுதியுடையவை. அனைத்து நில உரிமையாளர்களும் இதில் உறுப்பினராகத் தகுதியுடையவர்கள். அவர்கள் தங்களது நிலத்தை அடமானம் வைத்து நிதி பெறலாம். அசல் தொகை மட்டும் கடன் பெற்றிருப்பின் ஏ வகுப்பு உறுப்பினர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடகு வைத்த சொத்தில் வட்டி செலுத்த வேண்டிருப்பின் பி வகுப்பு உறுப்பினர்கள் ஆவர்.
மத்திய நில மேம்பாட்டு வங்கி
Deleteசி.எல்.டி.பி - ல் உறுப்பினராக இருப்பவர்கள் பி.எல்.டி.பி -யில் உறுப்பினர்கள் மற்றும் சிலர் தனிப்பட்ட ஊக்குவிப்பாளர்கள். இது நீண்ட தவணை கடன்களை விவசாயிகளுக்கு பி.எல்.டி.பி மற்றும் சி.எல்.டி.பி யின் கிளைகள் மூலமும் வழங்கப்படும். இது மாநில அரசு அங்கீகரித்த கடன் பத்திரங்கள் மூலம் நிதியை திரட்டுகின்றது. பி.எல்.டி.பி வங்கி சி.எல்.டி.பி வங்கியிடம் கடன் பெறும்பொழுது, அது தன்னிடம் கடன் பெற்றவர்களிடம் சி.எல்.டி.பி வங்கிக்கு கடன் பத்திரங்களை குறிப்பிட்டு இருக்கும். சி.எல்.டி.பி வங்கி கடன் பத்திரங்களைக் கொடுத்து சொத்து மதிப்பின் மீது நிதியை திரட்டும். நபார்டு வங்கி மற்றும் எல்.ஐ.சி கடன் பத்திரங்களின் மீது நிறைய தொகையை அதோடு நபார்டு வங்கி நில மேம்பாட்டு வங்கிக்கு மறுநதியளிப்பு அளிக்கும்.
சரியான செய்தி
ReplyDelete