பசுத்தோல் போர்த்திய
பயங்கரப் புலிகள்
இசுலாம் கூறிடா
இழிசெயற் கூலிகள்!
வேலையற்றோர் கூடாரம்
வீணர்களின் குழுவாகும்
மூளையற்றோர் இவராலே
முசுலிமுக்கு இழிவாகும்!
சொந்த தேசத்தின்
சொத்துகள் குழந்தைகளாம்
எந்த மூடர்கள்
இப்படி அழித்திடுவர்?
”மாணவர்கள்” பெயருடன்
மாண்புக்கு ஊனமன்றோ?
மாணவர்கள் உடலழித்து
மார்தட்டல் ஈனமன்றோ?
பின்னாளில் இப்படிப்
பிற்போக்காய் வருமென்று
முன்னோர்கள் எங்களை
முற்கூட்டித் தடுத்திட்டார்!
பிரிந்து என்பயன்?
பிணங்களே கூடின
வரிந்து வன்முறை
வலிகளே தேடின!
மார்க்கத்தின் துரோகி
மன்னிப் பெளிதா
மூர்க்கத்தில் கொலையா?
முட்டாள் மனிதா ?
குறிப்பு:"மாணவர்கள்" என்பது தாலிபான் என்ற சொல்லின் பொருளாகும்.
பயங்கரப் புலிகள்
இசுலாம் கூறிடா
இழிசெயற் கூலிகள்!
வேலையற்றோர் கூடாரம்
வீணர்களின் குழுவாகும்
மூளையற்றோர் இவராலே
முசுலிமுக்கு இழிவாகும்!
சொந்த தேசத்தின்
சொத்துகள் குழந்தைகளாம்
எந்த மூடர்கள்
இப்படி அழித்திடுவர்?
”மாணவர்கள்” பெயருடன்
மாண்புக்கு ஊனமன்றோ?
மாணவர்கள் உடலழித்து
மார்தட்டல் ஈனமன்றோ?
பின்னாளில் இப்படிப்
பிற்போக்காய் வருமென்று
முன்னோர்கள் எங்களை
முற்கூட்டித் தடுத்திட்டார்!
பிரிந்து என்பயன்?
பிணங்களே கூடின
வரிந்து வன்முறை
வலிகளே தேடின!
மார்க்கத்தின் துரோகி
மன்னிப் பெளிதா
மூர்க்கத்தில் கொலையா?
முட்டாள் மனிதா ?
குறிப்பு:"மாணவர்கள்" என்பது தாலிபான் என்ற சொல்லின் பொருளாகும்.
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
ஆண்டு இறுதியில் நிகழ்ந்த மிக்கபெரிய சோகம் !
ReplyDeleteஅமிதாபிமானமற்ற செயல். மனம் கனக்கிறது.
ReplyDeleteஇந்த இழிச்செயலுக்கு யூதனின் சதிவலை என்று நம்மவர்களிள் சிலர் செய்தி பரப்புகிறார்கள்
ReplyDeleteசதிவலையின் ஏன் சிக்கவேண்டும்
வில்லை விட்டு
ReplyDeleteவேகமாகப் போகும் அம்பு
சொல்லைத் தொட்டு
சொரிந்திடாதா வாகாய் பட்டு
எல்லை விட்டு
எல்லாமும் சொன்னார் மன்னர்
பல்லை இளித்து
பக்கத்தில் நெருங்கார் பின்னோர் !