பற்றுவை பெற்ற தாயிடம்
பிறந்த நாட்டிடம்!
உறுபொருள் கொடாமல்
உதவி புரிந்தவை!
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!
தொப்புள் கொடியே
கொடுத்தது உணவு
தொட்டில் பிள்ளை
பால்தரும் அன்னை
தேசக்கொடியே
வேர்; நம் எல்லை!
உடலை மட்டும் பேணா,
ஊரையும் பேணுக!
இழுக்கும் மூச்சுக்காற்றாம்
உறவுகள்
காத்து நிற்பதால்
கடவுளின் அருள் சூளும்!
மதங்கள் எல்லாம்
"மதம் " உண்டாக்கும்
தேசநேசமே
மனிதம் சேர்க்கும்!
நாதத்தில் சிறந்தது
தேசிய கீதம்
கண்ணியம் செய்!
இன்னொருப் பகுதியில்
இடர்துயர் என்றால்,
உன்னது உயிரோ
உசும்பிட வேண்டும்!
வீட்டுக் கொரு
மரம் நடு
இதயங்களில்
நாட்டுப் பற்றை
நாட்டி வளர்!
மழை மண்ணுக்கு
மனித நேயம்
வாழ்வுக்கு!
வாதத்தில் வீழ்ந்தவரை
வாரி அணைக்கலாம்,
தீவிர -
வாதத்தில் வீழ்ந்தவரை
வீழ்த்தி சாய்க்கலாம்!
பிறந்த நாட்டிடம்!
உறுபொருள் கொடாமல்
உதவி புரிந்தவை!
தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை!
தொப்புள் கொடியே
கொடுத்தது உணவு
தொட்டில் பிள்ளை
பால்தரும் அன்னை
தேசக்கொடியே
வேர்; நம் எல்லை!
உடலை மட்டும் பேணா,
ஊரையும் பேணுக!
இழுக்கும் மூச்சுக்காற்றாம்
உறவுகள்
காத்து நிற்பதால்
கடவுளின் அருள் சூளும்!
மதங்கள் எல்லாம்
"மதம் " உண்டாக்கும்
தேசநேசமே
மனிதம் சேர்க்கும்!
நாதத்தில் சிறந்தது
தேசிய கீதம்
கண்ணியம் செய்!
இன்னொருப் பகுதியில்
இடர்துயர் என்றால்,
உன்னது உயிரோ
உசும்பிட வேண்டும்!
வீட்டுக் கொரு
மரம் நடு
இதயங்களில்
நாட்டுப் பற்றை
நாட்டி வளர்!
மழை மண்ணுக்கு
மனித நேயம்
வாழ்வுக்கு!
வாதத்தில் வீழ்ந்தவரை
வாரி அணைக்கலாம்,
தீவிர -
வாதத்தில் வீழ்ந்தவரை
வீழ்த்தி சாய்க்கலாம்!
'கவிஞர்' அதிரை தாஹா
பற்றை வளர்க்கும் கவிதை !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
பற்றைத் தலைப்பிட்டு
ReplyDeleteபயனுள்ள பல பற்றுக்கள்
நித்தமும் பேணிடனும்
நிம்மதியுடன் வாழ்ந்திடனும்
தாயிடம் பற்று
ReplyDeleteதந்தையிடம் பற்று
ஆயினும் பற்று
அன்புநாட்டின் பற்று
அனைத்தையும் ஏற்று
அகம்நிறைப் பெற்று
நினைப்பிலே கொண்டு
நேசமாய் இன்று
படிப்பினைக் கொண்டேன்
பாசம் கொண்டேன்
அடிகடி உங்கள்
ஆக்கங்களுக்கே நாங்கள்
மொழிப் பற்று, நாட்டுப் பற்று, மார்க்கப் பற்று இம்மூன்றுக்கும் ஒரே தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தான் என்பதை 04.12.14 அன்று அபுதாபியில் வெளியிடப்பட்ட ஆவணப் படத்தில் அறிந்து அழுதேன். தங்களின் இந்தப் பற்றுப் பற்றிய கவிதையைப் படித்ததும் மேலும் பற்று கொண்டேன், மொழியின் மீதும், நாட்டின் மீதும், மார்க்கத்தின் மீதும். உள்ளத்தைத் தூண்டிய உரமிக்கக் கவிதை படைத்த அருட்கவி அவர்களுக்கு உளம் நிறைவான நன்றிகள். ஜஸாக்கல்லஹ் கைரன்
ReplyDelete