.

Pages

Thursday, January 1, 2015

புத்தாண்டு வரவேற்பில்...

வருக வருக வரவேற்பு
.....வளத்தை நோக்கிச் சுறுசுறுப்பு
உருக உருக வேண்டுதலும்
.....உலகம் எங்கும் ஒர்மையிலே
திருகத் திருக மனதினிலும்
.....திருவைக் காண முயற்சிகளே
பெருகப் பெருக ஆனந்தம்
.....பெறுவோம் என்றும் நட்புடனே

பிறப்பைத் தினமும் போற்றிடுவார்
.....பிறந்தோர் புனிதர் பூமியிலே
அறத்தை அவரும் விதைத்திருப்பார்
.....அவரை உலகம் நினைத்திடுமே
இறப்பே இவர்கள் பிறப்பினிலே
.....இனியும் பிறக்க நினைத்திடுமோ
மறக்க நாமும் விட்டதில்லை
.....வருட வருடம் நினைத்திடுவோம்

வாழ்த்து எங்கும் கூறிடுவார்
.....வாரி அன்பைப் பொழிந்திடுவார்
ஆழ்ந்து நம்மில் சிந்திப்போம்
.....அவர்கள் வாழ்வை நினைத்திடுவோம்
வாழ்ந்தோர் புனிதர் புவியினிலே
.....மறவா திருக்க மதியினிலே
சூழ்ந்து அவரின் பிறப்பினையே
.....சுழல ஆண்டை அமைத்தாரே

இறைவன் தனதின் தூதுகளை
.....இகத்தில் இதுபோல் வைத்தானோ
மறைக்க யாரும் முடிந்திடுமோ
.....மதியைச் சுழற்றிப் பார்ப்பதிலே
நிறைகள் மனதில் நிறைந்திடவே
.....நீக்கம் நீக்கி சிந்திப்போம்
குறைகள் மறந்துக் கூடிடுவோம்
.....குன்றா அன்பைப் பொழிந்திடுவோம்

நபிதாஸ்

13 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎

    இந்த புத்தாண்டு தினத்தில், உங்கள் கவிதையும் நான் வரவேற்கின்றேன்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு அல்லது புது வருடம் (New Year) என்பது புதிய நாட்காட்டி வருடம் தொடங்குவதைக் குறிக்கிறது. பெரும்பான்மையான கலாச்சாரங்களில் புதுவருடத் தொடக்கம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தற்காலத்தில் உபயோகித்து வரும் கிரெகொரியின் நாட்காட்டியின் படி புது வருடமானது ஜனவரி மாதம் முதல் தியதி தொடங்குகிறது.

      Delete
    2. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

      அறியாமை இருளை நீக்கி, ஒற்றுமையின் பலத்தை அதிகரித்து, நாட்டில் அமைதியும், அன்பும் நிலைபெற தமிழக ஆளுநர் ரோசய்யா புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒற்றிணைந்து உழைத்திட திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார். ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், நம்பிக்கையும், வளர்ச்சியும், எழுச்சியும் ஏற்பட தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அனைத்து பிரச்னைகளையும் எதிர்த்து வெற்றி பெற வைகோ புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏமாற்றங்களையும், துயரங்களையும் விரட்டி, மகிழ்ச்சியையும், மலர்ச்சியையும் இந்த புத்தாண்டு ஏற்படுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார். புத்தாண்டில் புதிய வெளிச்சம் பரவட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Delete
    3. இந்தியாவின் அரசியல் மேலாண்மையையும், பொருளாதார வல்லமையும் உலகிற்கு எடுத்துரைக்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

      Delete
    4. எந்தத் தலைப்பிலும் எழுதினாலும் தாங்கள் எழுதி விளக்கம் தருவதைப் படிக்க பிரமிப்புகள். தோண்டித் தோண்டித் தருகின்றீர்கள். உங்கள் உள்ளார்ந்த ஈடுபாடு அதிரை நியூஸ்க்கு கிடைத்த ஒரு சொத்து என்றால் மிகையாகாது. வாழ்க பல்லாண்டு.

      Delete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    அன்புடன் DD...

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது தமிழ் TV உலகில் DD என்ற இரு ஆங்கில எழுத்துக்கள் மக்களைக் கவர்ந்துள்ளது. ஆனாலும் இணையத்தில் திண்டுக்கல் தனபாலன் DD-யே எங்களை மிகவும் கவர்ந்தது.இவ்வருட உதயத் தினத்தில் உங்கள் வாழ்த்துக்கள் மனதில் இன்பம் மலரத் தூண்டுகிறது. இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் உயர்வான வாழ்த்துப் பிரகாரம் இந்த ஆண்டின் தொடர்வாக என்றும் எல்லோருக்கும் வாழ்வில் மன இனிமை நிலைத்திட நானும் வாழ்த்துகிறேன்.

      Delete
    2. வந்து மறையுது வருசங்கள்
      வெந்து மடியுது மனித நேயங்கள்

      ஆண்டுகள் யாவும் புதிது புதிதாய்
      மலர்ந்தாலும்
      அகிலத்தில் அவலங்கள் நீங்கி
      புதிதாய் மலர்வது எப்போது..???

      இவ்வருட தொடக்கத்துடன்
      இனிவரும் வருசங்கள்
      இனிமையாய் மாறிட
      இகத்தினில் வாழும்
      மனிதமனங்கள்
      மாறவேண்டும்
      மகிழ்ச்சிபொங்க
      சபதம் கொள்ளவேண்டும்.

      Delete
    3. எங்கு நிறைந்த இறையாற்றலால் உலகில் மனித மனதிற்கு அதீத ஆற்றல் உண்டு. அதன் வெளிப்பாடுகளுக்கு ஏற்ப இப்பிரபஞ்சம் அசையும். ஒவ்வொரு கால மாற்றங்கள் இன்பமாகவோ, துன்பமாகவோ ஏற்பட மனிதனே காரணமாகின்றான். இவனை அவனின் பிரதிநிதியாகப் படைத்ததின் பொருள் உணரும் நிலையில் இதுப் புலப்படும். இதனையே தாங்களும் //இனிமையாய் மாறிட
      இகத்தினில் வாழும்
      மனிதமனங்கள்
      மாறவேண்டும் // என்று எழுதியுள்ளீர்கள்.

      Delete
  4. எந்நாளும் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் எந்நாளும் நன்னாளாக அமைய வாழ்த்துக்கள் நானும் கூறுகிறேன்.

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers