வேலைக் கூடச் சிறைதனிலே
விரும்பி நாமே நுழைந்துவிட்டு
மாலை நேர விடுதலையால்
மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்!
வேலை யில்லாப் பட்டதாரி
வேலை தேடா வேடதாரி
மாலை சூடும் மணமகளும்
மதிக்க என்றும் துணிவதில்லை!
வேலை தருமே மரியாதை
விரைந்து கிடைக்கும் ஒருபாதை
காலைத் தூக்கம் வெறுத்ததினால்
கடமை உணர்வு பெருத்திடுமே!
வேலை செய்து பெறும்பணமே
வெல்லும் வாழ்வில் பெருமிதமே
சோலை வனமாய்த் துளிர்த்திடுமே
சோகம் யாவும் துடைத்திடுமே!
வேலை செய்ய உலகமெலாம்
விழைந்து பறந்து அலைந்திடுக
பாலை வானமும் அரவணைக்கும்
பாடு பட்டால் புகழுனக்கு!
வேலை யில்லா இளைஞர்கள்
வீணர் களிடம் விழுவார்கள்
மூளை யில்லா வன்முறைகள்
முழுது மிவர்கள் செய்முறைகள்!
விரும்பி நாமே நுழைந்துவிட்டு
மாலை நேர விடுதலையால்
மகிழ்ந்து கொள்ளும் மனிதமனம்!
வேலை யில்லாப் பட்டதாரி
வேலை தேடா வேடதாரி
மாலை சூடும் மணமகளும்
மதிக்க என்றும் துணிவதில்லை!
வேலை தருமே மரியாதை
விரைந்து கிடைக்கும் ஒருபாதை
காலைத் தூக்கம் வெறுத்ததினால்
கடமை உணர்வு பெருத்திடுமே!
வேலை செய்து பெறும்பணமே
வெல்லும் வாழ்வில் பெருமிதமே
சோலை வனமாய்த் துளிர்த்திடுமே
சோகம் யாவும் துடைத்திடுமே!
வேலை செய்ய உலகமெலாம்
விழைந்து பறந்து அலைந்திடுக
பாலை வானமும் அரவணைக்கும்
பாடு பட்டால் புகழுனக்கு!
வேலை யில்லா இளைஞர்கள்
வீணர் களிடம் விழுவார்கள்
மூளை யில்லா வன்முறைகள்
முழுது மிவர்கள் செய்முறைகள்!
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
நாளை உலகில் நலம்பெறவே
ReplyDeleteவேலைகுறித்த விழிப்புணர்வு
விளக்கமாய் கண்டேன் கவிவடிவில்
தீபம் தந்திட்ட நற்க்கவியில்
தேகம் துடித்திடும் தீர்ச்சையாக
வியர்வை சிந்தி உழைத்திட்டால்
வியக்கும் உலகு உனைப் பார்த்து
வேளை பளுவிலும் வேகமாய்ப் பின்னூட்டம்
Deleteநாளை எனச்சொல்லி நாளையும் தள்ளாமல்
வாழ்த்தும் பெருங்குணம் வாழ்த்தி மகிழ்கின்றேன்
ஆழ்த்தும் இனியதோர் அன்பு.
வேலைப் பளுவின் நிமித்தத்தால்
ReplyDeleteவிலகி நின்றீர் என்றுணர்ந்தேன்
மேலை நாட்டில் இருந்திடினும்
மீறக் காதல் தமிழின்பால்
நாளை என்றுத் தாழ்த்தாமல்
நறுக்காய் கவிகள் தருகின்றாய்
மூளை முழுதும் படைத்தவன்பால்
முயற்சிச் செய்தே நிற்கின்றாய்
விலகும் துன்பம் விரைவாக
Deleteவிலகா நமது தமிழின்பம்
நலமாய்ப் பாடல் வனையத்தான்
பலமாய் வந்தேன் இனிதாக!
வேலையின் சிறப்பு அருமை !
ReplyDeleteவேலை பளுவிலும் விரைந்து சொன்ன மறுமொழிக்கு நன்றி
Deleteஉத்தியோகம் புருஷ லட்ஷனம்
ReplyDeleteமனிதன் உழைத்து கொண்டே இருக்கணும்
மரியாதை தழைத்துக் கொண்டே இருக்கும்
என்பதை அழகாகச் சொல்லும் கவிதை,
உன்னிப்பாய்க் கவனித்து என் கவிதையினுட்கருத்தை உணர்ந்து எழுதிய மறுமொழிக்கு நன்றி,சகோதரா சாதிக் பாஷா
Delete