முதலீடுகள் பலவிதம் அதில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு விதம் உடனடியாக பணமாக மாறக்கூடிய அதன் தன்மையினால் தங்கத்தை லிக்விட் அசெட் ( Liquid Asset ) என்று அழைக்கக் கூடியவர்களும் சமூகத்தில் இருக்கின்றார்கள்.
சரி விசயத்துக்கு வருவோம்...
தங்க முதலீட்டில் பல பெயர்களில் திட்டங்கள் வந்தபிறகும், பெண்களுக்கு நகைச் சீட்டின் மீது இருக்கும் மோகம் கொஞ்சமும் குறைந்தபாடில்லை. யாரும் எளிதாகப் புரிந்துகொண்டு ஈஸியாக பணத்தைக் கட்ட முடியும் என்பதால் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
தங்க நகைச் சீட்டு கட்டாத ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் தேடிக் கண்டுபிடிப்பது என்பது கடினமான வேலை. மாதச் சம்பளம் 5,000 ரூபாயோ, 50,000 ரூபாயோ அக்கம்பக்கத்தில் இருக்கும் நகைக் கடையில் நகைச் சீட்டு போட்டு தங்கம் வாங்க நினைக்காத பெண்களே இல்லை.
நகைகள் வியாபாரம் செய்யும் நிறுவனங்களும் தன் பங்கிற்கு தங்களிடம் வருகை புரியும் வாடிக்கையாளர்கள் தங்களிடம் நகைகள் வாங்குகின்றார்களோ இல்லையோ !? முதலில் அவர்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற தங்க நகைச் சீட்டுகளில் இணைந்து மாத தவணையாக பணத்தை எங்களிடம் செலுத்துங்கள் என்று மூளைச்சலவை செய்து, அவர்களின் கையில் விண்ணப்பங்களை திணிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தங்க நகைச் சீட்டு நடத்தும் நிறுவனங்கள் வைக்கும் நிபந்தனைகள் :
1. உங்களது மாத தவணையை 20 / 15 மாதங்கள் ஒவ்வொரு அங்கத்தினரும் சேலுத்த வேண்டும். பணம் செலுத்தும் போது அதற்குறிய ரசீதை பெற்றுக்கொள்ளவும்.
2. பிரதி ஆங்கில மாதம் 10-ம் தேதிக்குள் மாதத்தவணை தொகையை செலுத்தி கண்டிப்பாக பதிவேட்டை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
3. பிரதி ஆங்கில மாதம் 15-ம் தேதி மாலை 4.00 மணியளவில் எங்களது கடையில் தங்க நகை சிறுசேமிப்பு அதிர்ஷ்டசாலி தேர்வு நடைபெறும். பரிசு விழுந்தவர்கள் பரிசு தொகைக்கு உண்டான நகைகளை பெற்றுக்கொள்ளலாம். மேற்கொண்டு தவணைகள் கட்ட வேண்டிய தேவையில்லை.
4. மாதத்தவணை தவறாது 20 / 15 மாதங்கள் தொடர்ந்து செலுத்திவருபவர்கள், 20 / 15 மாதங்கள் முடிந்ததும் போனஸ் தொகையை சேர்த்து அன்றைய விலைக்கேற்ப தங்க நகைகள் பெற்றுக்கொள்ளவும்.
5. பரிசு விழாதவர்களுக்கு மட்டும் போனஸ் தொகை உண்டு, விற்பனை வரி கிடையாது. வரியை கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்.
6. மாதத்தவணை தவறி செலுத்துபவர்கள் தங்களின் போனஸ் தொகயை இழக்க நேரிடும்.
7. மாதத்தவணை தொடர்ந்து கட்டமுடியாமல் நடுவில் நிறுத்தி விடும் அங்கத்தினர்கள் 20 /15 மாதத்தவணை முடிந்த பின்பு அன்பளிப்பு சாமான் கிரயத்தை செலுத்திவிட்டு கட்டியுள்ள தொகைக்கு நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.
8. எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.
9. மாதத்தவணை தொடர்ந்து செலுத்தி வரும் அங்கத்தினர்களால் 20 / 15 மாதம் முடியும் முன்பு நகைகள் வாங்க விரும்பினால் செலுத்திய தொகை போக பாக்கி மாதங்களின் தவணை தொகையையும் அன்பளிப்பு சாமான் கிரயம் ரூ 500/- ஐயும் செலுத்திவிட்டு தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
10. முத்திரை பவுன், தங்க கட்டிகள் மேற்படி சேமிப்பிற்கு தரப்பட மாட்டாது.
11. ஒவ்வொரு மாதமும் செலுத்தும் தவணைத் தொகை ரசீதுகளையும் இந்த பதிவு புத்தகத்தையும் தங்க நகைகள் வாங்கும் வரையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
12. இந்த பதிவு புத்தகத்தை தவறவிட்டு விட்டால் அதனால் ஏற்படும் நஷ்டத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
13. பிரதி மாதம் செலுத்தும் தொகைக்கு வெளியூர் செக்குகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
என இது போன்ற நிபந்தனைகளுடன்...
மாதம் 500 ரூபாய் வீதம் பணம் கட்டினால், பதினைந்தாவது மாதத்தில் நாம் 7,500 ரூபாய் கட்டியிருப்போம். இதற்கு போனஸாக ஐநூறு ரூபாய் சேர்த்து 8,000 ரூபாய்க்கு நகை வாங்கிக் கொள்ளலாம். கூடுதலாக 200 ரூபாய் மதிப்புள்ள கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருள் அல்லது அந்த தொகைக்கும் சேர்த்து நகையாக வாங்கிக் கொள்ளலாம். இது போன்ற திட்டத்தை தமிழகம் முழுக்க இருக்கும் சிறிய, பெரிய நகைக் கடைகள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் நம்மிடம் ஒவ்வொரு மாதமும் வசூல் செய்யப்படும் தொகையை பிற தொழில்களில் அவர்களால் முதலீடு செய்யபட்டு கொழுத்த இலாபம் சம்பாதிக்கப்படுகின்றனர் என்பது பலரின் கருத்துகளாக இருக்கின்றன.
சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. இது போன்ற தங்க நகைச் சேமிப்புத் திட்டத்தில் தாங்கள் இணைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
2. "அதிக லாபம்" என ஆசை காட்டும் இடங்களில் எல்லாம் முதலீடு செய்யாதீர்கள்.
3. "உடனே முதலீடு செய்யுங்கள்...இன்றே கடைசி !" என்றெல்லாம் உங்களை அவசரப்படுத்தும் நிறுவனங்களின் அழைப்புகளை அலட்சியப்படுத்துங்கள்.
4. மற்றவர்கள் இணைகிறார்கள் என கண்மூடித்தனமாக நீங்களும் போய் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
5. கவர்ச்சிகரமான கிஃப்ட் பொருட்கள் கிடைக்கும் என்பதற்காகவெல்லாம் இதில் இணையாதிர்கள்.
6. பிரபல நடிகர், நடிகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தும் இது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களில் இணைவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
7. எங்கள் நிறுவனங்கள் சார்பாக திருமண மண்டபங்களில் நடைபெறும் "ஒரு செமினாருக்கு வாங்க", "சாப்பாடு ஃப்ரீ..." டிபன் ஃப்ரீ” என்றெல்லாம் அழைப்பு வந்தால் போகாதீர்கள்.
குறிப்பு : கடந்தகாலங்களில் இது போன்ற நிறுவனங்களால் பணம் வசூல் செய்வதற்காக நியமிக்கப்படும் வெளிமாநில நபர்களால் எற்பட்ட பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு சமூகத்தினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே பதியப்பட்டுள்ளது.

சேக்கனா M. நிஜாம்
இது ஒரு மீள்பதிவு
நல்ல விழிப்புணர்வு. பெண்கள் அவசியம் படிக்கவேண்டும். அல்லது அவர்களுக்கு படித்து காட்டவேண்டும். இருந்தாலும் பொன் மோகம் பெண்களோடு ஒட்டிபிறந்த ஒன்று. பெண்ணைப் பெற்றவர்கள் அதிக விலை கொடுத்து எப்படியோ நகை சேர்த்துவிடுகின்றனர். அவர்களின் அறியாமை; இயலாமை, அதனை பயன்படுத்தி சிலர் அதிக இலாபம் இலகுவாக அடைகின்றனர்.
ReplyDeleteநன்றி ! சேக்கனா நிஜாம் அவர்களே !
// எக்காரணத்தை முன்னிட்டும் ரொக்கம் திருப்பி தரப்படமாட்டாது.//
ReplyDeleteபலரின் ஒருநாள் பணம் வந்தவரைக்கும் தங்கம் விற்றது போல்தான். ஆனாலும் தங்கம் அவர்களிடம் தான். அதனை வைத்து அதாவது அடுத்தவர் முதலில் அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். என்ன திறமை !
இது வரை இப்படி இணைந்ததில்லை.. நல்ல பகிர்வு.
ReplyDeleteidhu oru nalla vizhippuNarvu seidhithaan. aayinum ungaL karuththu nootril paththu pEr yEtRukkondaalE adhigam. avaravarum edhilaavadhu sikki alaimOdhumpOdhuthaan uNaarvargaL. eninum ungaL karuththai sutRam natpil pagirvOm.
ReplyDeletenandRi.
anwar basha. chennai.
விழிப்புணர்வு வித்தகரின் விழிப்புணர்வு ஆக்கங்களில் இதுவே மிகவும் தலை சிறந்ததாகும். இதனை “தினமணி” நாளிதழில் வெளியிடலாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
ReplyDeleteநல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு.
ReplyDeleteபகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுதுயமைக்கு மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.
நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல பதிவு.
எதிவரும் நவம்பர் மாதம் நான் ஒரு நகைக்கடை ஒன்று தொடங்கலாம் என்று இருக்கின்றேன்.
என்னோடு ஒத்துழைக்க யார் யார் தயார்?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
not a good ... so many points are missing
ReplyDeletethats....
1. if you paid in old rate per gram like Rs.2000
but you will get gold in Rs.3000 per gram after maturity...
so, your money was waste in hike of gold rate...
hence, the gold recurring scheme is not good for
investment...
you can try RD in bank and get the maturity and buy gold
or get the loan from bank buy gold and repay the loan with interest..
http://sivaparkavi.wordpress.com
அருமையான ஆக்கம் இதை ஒரு துண்டு பிரசுரம் எடுத்து ஜும்மா நாளில் எல்லோருக்கும் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteதங்கமானத் தம்பியின் தங்கமானப் பதிவு; இதயங்களின் உண்டாக்கும் ஓர் அதிர்வு!
ReplyDeleteநண்பர் நிஜாம் அவ்வப்போது இதுபோன்று விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டு இருங்கள்..
ReplyDeleteஅப்போதுதான் நாங்கள் கொஞ்சம் ஏமாறாமல் இருக்க முடியும்..