மெய் மறைத்து
பொய் பகட்டு
மயக்கும் உலகில்
தாக்கம் கொண்டன.
புனிதர் உள்ளம்
சொன்ன உண்மை
நஞ்சு நரியும்-அதில்
திட்டம் வகுத்தது.
பணம் பன்ன
குணம் கெட்ட
குள்ள நரியின்
வித்தையது.
பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!
பூமி தட்டை
பகுத்து கண்டது
பின்பு கோலம்
என்று சொன்னது.
இந்த உண்மை
இருப்பது போல
நச்சு திணிக்க
நன்கு தீட்டியது.
பகுத்த அறிவே
தகுந்த கருவியென
வகுத்து கொண்டு
களம் வந்தது.
உண்மை அதில்
பகுத்து பிரித்து
உள்ளில் அழகாய்
கள்ளம் கலந்து
வெளியில் மின்ன
திறமை நுழைத்தது.
தேனை தடவி
வண்ணம் பூசி
கள்ள வஞ்சகம்
நூலை விட்டது.
இகத்து இளமை
அகத்து ஏற்று
பகுத்த அறிவு
என்றே ஏமாறின.
இன்றதனால் இந்த
நல்லவர்வாழ் பூமி
மயான கோலம்
நிறைந்தே உள்ளது.
நல்ல
உள்ளமதின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக்
கொல்லும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்.
நபிதாஸ்
பொய் பகட்டு
மயக்கும் உலகில்
தாக்கம் கொண்டன.
புனிதர் உள்ளம்
சொன்ன உண்மை
நஞ்சு நரியும்-அதில்
திட்டம் வகுத்தது.
பணம் பன்ன
குணம் கெட்ட
குள்ள நரியின்
வித்தையது.
பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!
பூமி தட்டை
பகுத்து கண்டது
பின்பு கோலம்
என்று சொன்னது.
இந்த உண்மை
இருப்பது போல
நச்சு திணிக்க
நன்கு தீட்டியது.
பகுத்த அறிவே
தகுந்த கருவியென
வகுத்து கொண்டு
களம் வந்தது.
உண்மை அதில்
பகுத்து பிரித்து
உள்ளில் அழகாய்
கள்ளம் கலந்து
வெளியில் மின்ன
திறமை நுழைத்தது.
தேனை தடவி
வண்ணம் பூசி
கள்ள வஞ்சகம்
நூலை விட்டது.
இகத்து இளமை
அகத்து ஏற்று
பகுத்த அறிவு
என்றே ஏமாறின.
இன்றதனால் இந்த
நல்லவர்வாழ் பூமி
மயான கோலம்
நிறைந்தே உள்ளது.
நல்ல
உள்ளமதின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக்
கொல்லும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்.
நபிதாஸ்
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல
ReplyDeleteஉள்ளமதின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக்
கொல்லும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான். பூமியல் இத்தனை வகையாக்கள் மனிதர்கள். மயான பூமி அமைதியாகட்டும்.
ஆம் !
Deleteமயான பூமி
அமைதியாகட்டும்.
பெரியோர் மரியாதை
முன்புபோல் எங்கும்
நிலவட்டும்.
வயதுக்கு மூத்தவர்
அறிவில் புனிதர்
இவர்கள் சொல்வதில்
இளைஞன் சிந்திக்கட்டும்.
புரியாவிட்டால்
பொறுமையாக இருந்து
பணிவுடன்
உண்மை தெளிவு தெரியட்டும்.
தன் மனம் போல
பிறர் மனம் அறிந்து
யார் மனமும் புன்படாமல்
எதையும் பேசட்டும்.
அறிவோ அறியாமையோ
அமைதி எங்கும் நிலவ
அனுபவித்தவர்கள் வழி
அதனை ஏற்று
அனைவரும் வாழட்டும்.
பெண்மையின்
ReplyDeleteமென்மையைக்
கருக்கிச் சுட்டு
உருக்கிக் காட்டும்
மயான பூமியிது!
அதனால்,
மலர்களில் வாசமோ
மக்களின் நேசமோ
தென்றலில் சுகமோ
தீண்டாத மயான பூமியானது!
சுயநலப் பேய்களின்
நயமிக்க வாய்களால்
பயமற்ற பேச்சுக்களால்
பகைகள் என்னும்
புகைமூட்டமுள்ள
மயான பூமியிது!
அடங்கும் வரைக்கும்
அடங்காமையில் கழிக்கும்
மானிடப் பேய்கள் உலாவும்
மயான பூமியிது!
கண்ணுக்குத் தெரியாதென்பதால்
காற்றில்லை என்பதா?
விண்ணுக்கும் மண்ணுக்கும்
எண்ணிலாப் படைப்புக்கும்
ஏகனொருவன் இல்லையென்று
மோகமுள்ளில் குத்தியிருக்கும்
வேகமுள்ள “பகுத்தறிவு” கூறும்
சோகமுள்ள நாளை அறியாத
சொர்ப்பன - மயான பூமியிது!
தங்களின் அருமையானக் கவிதையைப் படித்ததும் என்னுள் எழுந்தவற்றை எழுதி விட்டேன்; தவறு காண்பின் திருத்திக் கொள்ளவும்.
தங்களால் மரபும் புதுமையும் கலந்து யாத்திட இயலும் எனப்தை நிருபித்து விட்டீர்கள்.
யான் அறிந்ததெல்லாம் மரபென்னும் யாப்புக் கவி மாத்திரமே என்பதால், இப்படிப்பட்ட புதுக்கவிஞர்களை நோக்குங்கால் எனக்குள்ளும் இப்படி புதுக்கவிதை எழுதும் உணர்வாளர்களிடம் நிரம்ப்க் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனம் நாடுகின்றது. மரபுப் பாக்களைப் படித்தும், பயிற்சி எடுத்தும் கற்கலாம்; ஆனால், புதுக்கவிதையை இப்படிப் பார்த்துப் பழகிக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்; அல்லது தங்களைப் போன்றோரின் இப்படிப்பட்டப் புதுக்கவிதைகளைப் படித்தும் அப்படிப்பட்ட “உணர்ச்சியலைகள்” எழும்பலாம்; அதனால் இப்படியும் எழுதலாம் என்றும் நினைக்கின்றேன்.
//
Deleteபெண்மையின்
மென்மையைக்
கருக்கிச் சுட்டு
உருக்கிக் காட்டும்
மயான பூமியிது!
//
ஆம் !
பெற்றவரை உற்றவரை
மதியாதோர் மதி நிறைந்த
மன்னர்கள் வாழும் பூமி.
அவ்வாறிருக்க எவ்வாறு ?
மென்மை பெண்மை.....?
உண்மை என்னவென்றால்
விளக்கில் விழும்
விட்டில் பூச்சிகள்
நிறைந்த உலகம்.
கடிவாளமிட்ட பாதை
உற்சாகமூட்டும் பாதை
உணர்வுகள் தீட்ட
உந்துணர்வு திறக்க
ஒரே சந்தோசம்
இதுதான் இன்றைய
இருப்போர் உலகம்.
//
கண்ணுக்குத் தெரியாதென்பதால்
காற்றில்லை என்பதா?
//
கண்ணுக்கு தெரிந்தாலும்
அகக்கண் குருடான உலகம்
அதனால் அனைத்தும்
அதற்கு.....
சுரத்தால் கசப்பை
தேனில் ருசிக்கும்
மாய உலகம்.
அதனால்
காற்றில்லை என்றுதான் கூறும்.
கொண்ட சுரத்தை
காண கண்ணில்லை
வைத்தியனை வசைபாடும்
பைத்தியனை புகழ்பாடும்.
புத்திகள் தர்கமிட
சக்திகள் பாய்த்திடும்
எனவே மயான பூமிதான் !
மரபு வழியினர் புதுக்கோலம் கொண்டதே புத்துக்கவிதை.
Deleteவரம்பு வரம்பு என எத்தனை நாள் வரப்பையே பார்ப்பது ?
உணர்வுகளை உள்ளபடி வெளிகாட்டும் அறிவின் புதுமைப் பாதை புதுக்கவிதை.
ஆனாலும் மரபு வழியினர் எழுதும் புதுக்கவிதைதான் என்றும் இனிக்கும்.
உங்கள் புதுமை
அது
நாங்கள் பெரும் அருமை..
இந்த பூமி
ReplyDeleteதுக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்//
மிக சரியான ..கருத்து
கவர்ச்சி !
Deleteஎங்கும் கவர்ச்சி
எதிலும் கவர்ச்சி
மரத்தின் உச்சியில் நின்று
கீழ்பகுதியை வெட்டும்
கவர்ச்சி !
அதை இரசிக்கும்
ஆன்மாக்கள் வாழும்
கவர்ச்சி !
நிம்மதி வாழ்வை
அறிவென்ற ஆயுதத்தால்
உணர்வுக் கொலை;
மரியாதைக் கொலை
செய்யும் கவர்ச்சி !
அன்பு ஒற்றுமை
அதைக் கொல்லும்
அசிங்கம் எல்லாம் அறிவு,
அதில் இன்பம்;
அதே இன்பம் என்று
வழிகாட்டப்பட்டு வாழும்
மலவண்டு வாழ்வெல்லாம்
மணக்கும் வாழ்வாக்கும்
புதுமைக் கவர்ச்சி !
சுய இன்பம்
அதனைப் பெற
கொடூர வாழ்வுவெல்லம்
கவர்ச்சி !
உலகம் இவ்வாறு
வழிகாட்டலை விரும்பும்
இரசனைக் காட்சி
இருக்கம்வரை
வாழும் பூமி
மயானக் காட்சியே !
அதனால்
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்.
என்பதை வழியுறுத்தும் உங்கள் ஒப்புதலுக்கு நன்றி .
மயான பூமி மனிதநேயம் வளரும் பூமியாக மாறட்டும்
ReplyDeleteஅந்த ஆதங்கத்தில் எழுந்த உணர்வுகள்தான் இந்த மயான பூமி.
Deleteவிரைவில் இப்பூமி மனிதநேயம் வளரும் பூமியாக மாறட்டும் என்ற உங்கள் விருப்பமே என் விருப்பம்.
மயான பூமி
ReplyDeleteமயான அமைதி
நீண்ட தொரு பயணம்
நினைவில் கொள்ளதொரு தருணம்
ஆண்டியாய் ஆனாலும்
அரசனாய் வாழ்ந்தாலும்
மாண்டபின் நாம் போகும்
மறுமையின் முதல் வாசல்
இயன்ற வரை நல்லமல்கள்
ஏற்றிச்செல்லு உன் கல்பில்
கடந்து செல்லும் பாதைகள்
கடின மென நினையாமல்
தொடர்ந்து செல்லு நல்வழியில்
தூய இறை வகுத்த வழியில்
நபிதாஸ் அவர்களே,
Delete//பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!//
இறை நம்பிக்கை பகுத்தறிவல்ல என்கிற அர்த்தம் வருகின்றதே?! இருக்கும் இறையை இல்லை என்பது பகுத்தறிவில் குறைபாடு என்றே நான் கருதுகிறேன். இறைநம்பிக்கைதான் பகுத்தறிவின் உச்சகட்ட பரிமாணம்.
எம்முறையில் எழுதி யாத்தாலும் பொருள் மயக்கம் தவிர்த்தல் நலமன்றோ.
//நல்ல
உள்ளமதின்
மெல்லிய
உணர்வுகளைக்
கள்ளமாய்ப்
பயன்படுத்திக்
கொல்லும்
நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
இந்த பூமி
துக்கம் மட்டுமே
நிறைந்த
மயான பூமிதான்.//
//நச்சுக் கிருமிகள்
சுபிட்சமாய் வாழும்வரை...
மொத்த பூமியும் மயான பூமிதான் என்பது ஒட்டுமொத்த மனிதர்களையும் பிணங்களாக்கிவிட்டது.
நச்சுக்கிருமிகளைக் கொல்லிகள் கொண்டு அழிக்கச் சொல்வதே படைப்பாளிகளின் பொருப்பு அல்லவா? அதை விடுத்து நல்லோர் நடப்பதும் மயான பூமிதான் என்பது எதிர்மறை சிந்தனை என்பது அடியேன் கருத்து.
இயன்ற வரை நல் அமல்கள்
Deleteகடினமென நினையாமல்
வாழும் நல் வழி
அது இறைவன் வகுத்த தூயவழி.
அவ்வழி எவ்வாழி என்பதில்
பலவழி.
அவர்களும் நாமும்
நிம்மதி இழக்காமல்
வாழும் வழி.
.
அதைக் கண்ணாடியாகக் கொண்டு
அவன் வழி கண்டால்
தூய இறை வகுத்த
நல்வழி
இவனுக்குத் தெரியுமே.
அவ்வழி வாழ
அனைவரும் விரும்பும்
உங்கள் வழி.
அதுவே
எங்கள் வழி.
நன்றி அதிரை.மெய்சா அவர்களே.
//இறை நம்பிக்கை பகுத்தறிவல்ல//
Deleteஅன்பரே, நம்பிக்கை என்று வந்தபின் அங்கு அறிவுக்கு வேலை இல்லை. அதனால் தான் முதலில் இறைவன் ஒருவன். அவன் இன்றி எதுவும் இல்லை. அவன் உருவமற்றவன். தனித்தவன். அவனுக்கு நிகர் அவனே, என்று சொல்வதெல்லாம். அவைகள் நம்பிக்கைதான் அன்பரே. அதை மையமாக வைத்து சிந்தித்தால்தான் உண்மை விளங்கும். அதை விடுத்து பகுத்து அறிந்து எங்கே இறைவன் உண்டு என்று சொன்னார்கள் ? பகுத்தறிவாளர்கள் எல்லாம் இறைவன் இல்லை என்றுதான் கூறுகிறார்கள்.
ஒன்றைப் பகுத்துக் கொண்டே சென்றால் கடைசியில் ஒன்றும் இல்லை என்றுதான் வரும். அதைதான்
பகுத்த அறிவு
பகுத்து பார்த்து
இருக்கும் இறை
இல்லை என்றது!
பூமி தட்டை
பகுத்து கண்டது
பின்பு கோலம்
என்று சொன்னது.
இப்படித்தான் பகுத்தறிவு செல்லும்.
எதையும் பூரணமாகப் பார்க்கும் விசால அறிவு வேண்டும். அதற்கு முதலில் நம்பிக்கை என்பதை மனதார ஏற்று அதில் சிந்தனை செய்தால் உண்மை விளங்கும்.
அதனால் தான் நபிக்கையை முதலில் சொல்லச்சொன்னார்கள்.
இன்னும் விளக்கம் வேண்டும் என்றால் கேட்கவும். அதைத்தான் நான் விரும்புகிறேன்.
//நச்சுக்கிருமிகளைக் கொல்லிகள் கொண்டு அழிக்கச் சொல்வதே படைப்பாளிகளின் பொருப்பு அல்லவா?//
Deleteஅதுதான் எழுதும் விளக்கம்.
அந்த தாக்கம் இருந்ததால்தான் "மயான பூமி." இங்கு எழுதப்பட்டுள்ளது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபடு சூப்பருங்க.
பாராட்டுக்கள்,
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
தங்கள் போன்றோர்கள் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டிய படு சூப்பரே !
ReplyDeleteநன்றி.