.

Pages

Thursday, December 26, 2013

[ 15 ] அறிவுத்தேன் [ அரூப வணக்கம் ]

அரூப வணக்கம் (-அதில்)
இரண்டு இல்லை !
ஒன்றில் உண்டு
ஒன்றாய் உண்டு !

ஒருவன் மோட்டார் பைக் ஓட்டிச் செல்வது வழக்கத்தில் இருக்குமானால், இவன் கை, கால்கள் தானாகவே சாலை மேடு பள்ளங்கள் வளைவுகள் போன்றப் பயணச் சூழ் நிலைகளுக்குத் தகுந்தார்ப் போலவும், மோட்டார் வாகனம் தன் உருப்புபோலவும் வாகனத்தை இயக்கிக் கொண்டு செல்லுவான். வாகனமும் இவனின் விருப்பபடியே செல்லும்.

குதிரையில் ஒரு மனிதன் பயணம் செல்வது வழக்கமானால், குதிரையின் கண்கள் பதைத் தெரியும்படி கடிவாலம்மிட்டு சவாறிச்  செல்வான். இல்லையேல் குதிரை இவன் விருப்படிச் செல்லாமல் அதன் கண்களுக்குத் தெரியும் பக்கம் சிலசமயம் தடுமாறிச் செல்ல முற்படலாம்.

முன்பெல்லாம் எல்லா ஊர்களிலும் குதிரை வண்டிச் சவாரிகள்தான் உண்டு. ஆட்டோக்கள் இல்லாதக் காலம். பெரும்பாலும் குதிரை அதிரையில் காலையில் புகைவண்டி நிலையம் செல்வது வழக்கம். தாயகம் வருவபவர்களை அந்த வாடகை குதிரை வண்டி மூலம் அவர்கள் இல்லம் அழைத்து வருவது வழக்கம்.

புகை வண்டி நிலையம் தவிர வேறு இடங்களுக்கு செல்ல காலையில் குதிரை வண்டிக்காரர் குதிரையை வண்டியில் பூட்டிச் சென்றால் வண்டிக்காரன் கவனம் கொஞ்சம் குறைந்தால் குதிரை தானாகவே புகை வண்டி நிலையம் தான் செல்லும். அதுபோல் நடு இரவில் மாட்டு வண்டிக்கரான் அரைகுறை உறக்கம் உறங்கிக் கொண்டும், மாடுகள் சரியாக வழக்கமாகச் செல்லும் வழியிலேயே சென்று அவன் வீட்டைத்தான் அடையும்.

குதிரை, மாடுகள் சில சமயம் ஓட்டிகளின் விருப்பத்திற்கு மாற்றமாக நடப்பதும் உண்டு. அச்சமயம் ஓட்டியினால் பலத்த அடி வாங்கியபின் அவைகள் படிந்து செல்லும். இவைகளெல்லாம் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பார்த்தவைகள்.

மோட்டார் வாகனம் அதற்கு மனம் இல்லை. அதனால் ஓட்டியின் விருப்பபடியே செலுத்தப்படும், செல்லும். ஆனால் குதிரை, மாடுகள் அவ்வாறு அல்ல. அவைகளுக்கு (உள்ளமை) மனம் இருப்பதால் சில சமயம் ஓட்டியின் விருப்பத்திற்கு ஏற்ப இணங்குவதும் இல்லை.

சிலசமயம் நம் வாழ்வில் நாம் வேறு கவனத்தில் முழுவதும் மூழ்கி எதயையும்(உணவைச்) உண்டால், சாப்பிட்ட நினைவே இருக்காது. மீண்டும் சாப்பிடத் தூண்டும். என் கல்லூரி வாழ்வில் ஒருசமயம் மாணவர்கள் வேலை நிறுத்தம் (ஸ்ட்ரைக்) செய்தார்கள். அதனில் முழுமையாக ஈடுபட்ட சக மாணவன் ஒருவன் போராட்டம் முடிந்தவுடன் வழக்கமாக சாப்பிடும் உணவு விடுதியில் போராட்டம் சம்பந்தமாகவே உச்சக்கட்ட காரசாரமாக பேசிக்கொண்டு இருக்கும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் கேட்டான். விடுதியாளர் தண்ணீர் தந்து குடித்த பின் மீண்டும் விறுவிறுப்பாகப் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது "நான் தண்ணீர் கேட்டேன் நீங்கள் தண்ணீர் தரவில்லை", என்று கூறி மீண்டும் அதே அளவு தண்ணீர் வங்கிக் குடிதான்.

தண்ணீர் குடிக்கும்போது தண்ணீர் குடிக்கிறோம் என்ற கவனம் இல்லாததால் தாகம் அடங்கவில்லை. (இங்கு அவன் முன்பு குடித்த தண்ணீர் என்ன வாச்சு என்ற கேள்வி எழலாம். உச்சகட்ட உணர்வில் குடித்தத் தண்ணீர் எல்லாம் இவன் உணர்வாகவும், வேர்வையாகவும் வெளியாகிவிட்டது.) அதனால் இவன் தண்ணீர் குடிக்கவில்லை என்றே மீண்டும் தண்ணீர் கேட்கிறான். அவன் மனமும் செயலும் ஒன்றாக இல்லாததினால் அங்கு முன்பு குடித்த தண்ணீர் அவனுக்கு ஞாபகம் இல்லை.

நோக்கத்திற்கேற்பவும், கவனத்தோடும் செயல்கள் இருக்குமானால் அச்செயலைச் செய்கிற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படும். அல்லது தொடர்புடைய அனைத்தும் இணக்கமான முறையில் செயல் படுகிறது. அல்லது அனைத்தும் இணங்கி, வணங்கி செயல்படுகிறது என்பதாகும்.

ஒன்று என்ற ஒன்றித்த நிலையில் செயல்கள் நடைப்பெற்றால் அச்செயல்கள் செய்யும் அனைத்தும் இணக்கமான வணக்கத்தில் இருக்கிறது என்பதாகும். ஒவ்வொன்றும் இணங்கி வணகி நடக்கவில்லை என்றால் விருப்பிய செயல் இருக்காது.

மனிதன் இறை வணக்கத்தில் இறைவனை வணங்குகிறோம் என்ற எண்ணம் முதலில் கொண்டு பின் வணங்கும் எண்ணம், செயல்கள் இருக்கவேண்டும். அவ்வாறு நிகழ்த்தும்போது வணக்கம் சம்பந்தப்பட்ட எண்ணங்கள்; செயல்கள், அதனைத்தவிர சம்பந்தமில்லாத வேறு எண்ணம், செயல் மிக மிகச்சொற்பம்கூட அவ்வணக்கத்தில் இருக்கக்கூட்டது. இருந்தால் அது முழுமையான வணக்கம் அல்ல, அல்லது வணக்கமே அல்ல. வணக்கத்தில் வணங்குகிறோம் என்ற எண்ணமே இல்லாது வணக்கம் சார்ந்த எண்ணம், செயல் நிகழும்போது அதுவே தெளிவான வணக்கம் ஆகும். அதுதான் வணக்கம்.

வணக்கத்தில் வணங்குபவன் வணக்கப்படுவதில் ஒன்றாய் கரைந்து இரண்டு என்ற உணர்வே இல்லாது வணக்குவதுதான் வணக்கம். அதைத்தான் இறை விரும்பும்.

வணக்கத்தில் "தான்" "நான்" என்ற அகந்தைகள் அழிய வேண்டும். அதன் கருத்தாவது தான் என்ற தன் நிலையையும், இறைவன் என்ற இறை நிலையையுமான அவ்விரு நிலை எண்ணங்கள் ஒரே நிலையில் இல்லாது வணக்கம் என்ற ஒரே எண்ணத்தின் உணர்வின் செயல் நிகழ வேண்டும். மாறாக அவ்வாறு இல்லாது வணங்கும் எண்ணத்தில் வேறு வணக்கம் சம்பந்தமில்லாததான எண்ணம், செயல் கலந்து வணக்கம் நிகழ்ந்தால் அது அடிபணிதல் என்ற வழிபாடு அல்லது துதிபாடுதான் ஆகும். அது வணக்கம் ஆகாது; அல்ல. வணக்கம் என்றாலே அங்கு ஒன்றாகும் இறைச் சந்திப்பு நிலை ஏற்பட வேண்டும். அதுதான் பூரண அரூப வணக்கம் ஆகும். அதுவே வணக்கம்.

அரூப வணக்கத்திற்கு இரண்டிருப்பு என்ற இருவுள்ளமை இல்லை. வணங்குபவனும் வணங்கப்படுவதும் ஒரே உள்ளமையின் இரு நிலைகள். வணக்கத்தில் வணங்குபவன், வணங்கப்படுவது ஓர்மையில் பிசகின்றி இரண்டற்று; ஒருமையில் ஒன்றாய் உணர்ந்து; ஒன்றில் ஒன்றாய் ஐக்கியமாகி; இருமையிழந்து இருப்பது அரூப வணக்கம்.
(தொடரும்)
நபிதாஸ்

18 comments:

  1. சார்பு உணர்வு மனம் (sub conscious mind) என்று இருப்பதாற்றான், இப்படி “அனிச்சை” செயல்கள் நடக்கின்றன; கனவுகளும் இப்படித்தான் உண்டாகின்றன என்ற உளவியலார்களின் கூற்றை உண்மைப்படுத்தி விட்டீர்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணாடியில் அவரவர் தன் முகத்தை மட்டும் தான் காண்கிறோம். அது நமது சுபாவம்.

      வெளி, உள், ஆழ் என்று மனிதனே மனத்தைப் பிரிக்கின்றான். மனதின் ஆற்றல் முடிவுறகூறவே முடியாது.

      வெளி மனதின் பார்வை நினைப்பு, நினைவு, விழிப்புணர்வுகள். உள் மனதின் பார்வை கனவு, கற்பனை, சிந்தனை. ஆழ் மனதின் பார்வை அதுவே அறிந்தது.

      எது எப்படியோ... கண்ணாடியில் அவரவர் தன் முகத்தை மட்டும் தான் காண்கிறோம். அது நமது சுபாவம்.

      வெள்ளை உள்ளம் அதாவது தூய மனம் அதில் அனைத்தும் தெரிய வரும்.

      Delete
    2. ஆம். கண்ணாடியில் மாசிருந்தால் முகமும் மாசுபட்டது போலவே காண்பிக்கும். மாசிலா மனத்தினில் ஒளிவீசும்; அஃதே அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர்!

      Delete
    3. கண்ணாடியின் சுபாவம் உள்ளது உள்ளபடி காட்டுதல்.

      உள்ளதுதான் வெளிப்படும் என்பதும் உண்மையே. ஆனாலும் காண்பவனைப் பொறுத்து தெரிவதும், கண்டதும் உண்மையே. அவரவர் விசாலத்திற்கு ஏற்ப பெறுவதும் மாறுபடும்.

      Delete
    4. கண்ணாடியில் அழுக்கிருந்தால் காண்பவர் எவ்வளவு தூயவராய் இருந்தாலும் அவரை அவலமாய்க் காட்டுமன்றோ, அக்கண்ணாடி?

      Delete
    5. அழுக்கானக் கண்ணாடி அரைகுறையாக் காட்டும். ஆனாலும் கண்ணாடி என்பதில் அழுக்குக் கண்ணாடி காண வேண்டாமே. கண்ணாடி என்றால் தெளிவானது மட்டுமே.

      Delete
  2. Replies
    1. Your mind starts seeking something. So it is being interested to you.

      Delete
  3. எதுவும் மனது சார்ந்தது என்பதை தெளிவாக விளக்கும் தொடர்..psychiatric பிரச்சனையை அலசும் சிறந்த தொடர்..

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. தேன் குரலுக்கு சொந்தக்காரரே தங்கள் வருகைக்கு நன்றி. தங்கள் வாழ்த்துக்கும் நன்றி ! //எதுவும் மனது சார்ந்தது// என்று எழுதியமைக்கும் நன்றி !

      Delete
  4. வணக்கம் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமாக இருக்க வேண்டும். மற்றவைகள் வணக்கத்திற்கு உரியவை அல்ல. அதே சமயம் பிறருக்கு மரியாதை கொடுத்தல் சிறந்ததாகும்

    ReplyDelete
    Replies
    1. "வணக்கம்" என்ற புதுக் கவிதை எழுதி இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதனை விளக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை அன்பர் சேக்கனா M. நிஜாம் அதில் பின்னூட்ட கருத்தாக எழுதியிருந்தார். அக்கவிதையை விளக்க ஆரம்பித்தே இது தொடராகச் செல்கிறது.

      தாங்கள் //வணக்கம் என்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டுமாக இருக்க வேண்டும்// என்று எழுதியிருக்கிறீர்கள். வணக்கம் என்பதே இறைவன் ஒருவனுக்கு மட்டும் தான் என்பதை வழியுறுத்தி இக்கட்டுரை செல்கிறது. அவ்வாறிருக்க தாங்கள் கருத்திட்டமையின் விளக்கம் புரியவில்லை ?!

      தெளிவாக எழுதினால் விளங்கிக்கொள்ளலாம்.

      Delete
  5. படைப்பின் ஆரம்பத்தில் கடவுள் வெற்றிபெற்றதும் இப்லீஸ் தோற்றதும் நீங்கள் அறிந்ததே. எனவே கடவுளை ஏற்ற கூட்டம் பகிரங்கமாக இருந்தது. அவர்களின் அனைத்து செயல்பாடுகளும் வணக்கங்களும் பகிரங்கமாக இருந்தன.
    தோற்றுப்போன இப்லீஸ் ஒளிந்துவிட்டான். தனது அத்தனை செயல்பாடுகளையும் மறைத்துவிட்டான். இது இப்படியே நீடிக்காது. மறைவாக இருந்து மீண்டும் வெற்றிபெற தனது ஆயுதமான பொய், புரட்டு, மறைவு, ஒளிவு, ஏமாற்று, களவு, போன்றவற்றை கையில் எடுத்து வேலைகள் செய்கிறான். இவன் கடைசியாக வெற்றிபெற இருப்பது தஜ்ஜால் ரூபத்தில் ஆகும். அவன் தஜ்ஜாலாக வருவான்.

    தஜ்ஜாலின் வருகைக்கு முன்னர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே இவர்களின் முக்கிய செயல்பாடாக இருக்கும். தஜ்ஜால் வரும் நேரம் அவனுக்கு ஏற்ற மாதிரி உலகம் ஒரு புதிய ஒழுங்கில் அமைந்து இருக்கும். இந்த வேலைத் திட்டத்துக்கு புதிய உலக ஒழுங்கு என்று சொல்லப்படும்.

    இவ்வுலகத்தில் உள்ள அத்தனை துறைகளுக்குமான வழிகாட்டுதல் இறைவனால் வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழிகாட்டலுக்கு முற்றிலும் நேர் எதிரான முறையைத் தோற்றுவிப்பதே இவர்களின் நோக்கம். இதில் ஏராளமான விடயங்களை மாற்றியமைத்து அதில் வெற்றியும் கண்டு விட்டனர்.

    உலகத்தில் உள்ள நன்மை எல்லாம் தீமையாக மாற்றப்பட வேண்டும். உண்மை எல்லாம் பொய்யாக மாற்றப்பட வேண்டும். சரி எல்லாம் பிழையாக மாற்றப்பட வேண்டும். அல்லாஹ்வின் setup இற்கு முற்றிலும் மாற்றமான setup ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இப்படி உலகில் உள்ள மொத்தத் துறையும் தலைகீழாக மாற்றப்பட்டு அதுவே சரியான முறை என்று தஜ்ஜால் வரும்போது நம்பவைக்கப்பட வேண்டும்.
    இந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஷைத்தானியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து செயல்படுகின்றனர்.


    1. அல்லாஹ்வின் முதல் வேதங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

    2. உண்மைகளைப் பொய்யாக்க வரலாறுகளை மாற்றுதல்.
    3. வாழ்க்கையின் மொத்தக் கோட்பாட்டையும் மாற்றுதல்.
    4. அறிவின் இடத்தில் அறிவீனம் நிறுத்தப்பட்டு அதுவே சரியான அறிவு என்று அறிவை மாற்றுதல்.
    5. ஆரோக்கியம் என்ற பெயரில் உண்மையான ஆரோக்கியம் நோய்களாக மாற்றப்படும்.
    6. பொருளாதாரத்தைப் பொருத்தவரை இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்தல் என்பதே வேதங்கள் சொல்லும் நிலை. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டு இருப்பவன் இன்னும் அதிகமாகவும், இல்லாதவன் ஒழிந்து போகும் விதமாகவும் பொருளாதாரக் கொள்கை மாற்றி அமைக்கப்படும்.
    7. அரசியலைப் பொருத்தவரை சக்தி உள்ளவனுக்கு சலுகை வழங்கப்பட்டு இயலாதவனை நசுக்கும் சட்டத்தை உருவாக்குதல்.
    8. விஞ்ஞானம் என்ற போர்வையில் அஞ்ஞானம் புகுத்தப்படும்.
    9. இறைவனின் படைப்பின் தாத்பரியத்தை மறுக்க கற்பனை அறிவியல் என்று நம்பவைக்கப்படும்.
    10. ஆக்கத்துக்குத் தேவையான தொழில்நுட்பம் அழிக்கப பயன்படுத்தப்படும்(haarp)
    11. குடும்பக்கட்டமைப்பு சீர்குலைக்கப்படும்(தற்பால் உடலுறவு)
    12. கலாச்சாரம் தலைகீழாக மாறும்( ஆடை அணியும் சரியான கலாச்சாரம் கேலியாக மாறி கேலிசெய்யப்படவேண்டிய நிர்வாணம் ஒழுக்கமாக மாறும்)

    இப்படி சகல துறைகளும் தலைகீழாக மாறி அவை அனைவர் மனதிலும் சரி என்று நினைக்கும் அளவு மூளைச் சலவை செய்யப்படும். மேலே உள்ளவையோடு இன்னும் பல விடயங்கள் .............................................................!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் எதோ ஒரு விளக்கத்தைக் கொண்டுவருகிறீர்கள். அதனை இன்னும் தெளிவாகத் தந்தால் நலம்.

      Delete
    2. இறையாட்சி, இறைவனை வழிபடுதல் என்னும் கொள்கைக்கு மாற்றமான ஷைத்தானின் ஆட்சி (தஜ்ஜாலின் வருகைக்கான ஓர் ஒத்திகை) இன்று பாரெங்கும் பரவிக் கிடப்பதை வெளிப்படுத்தினேன்; அவ்வளவுதான்.

      Delete
    3. சரித்திரத்தில் அவ்வாறு மாற்றங்கள் வந்துதானே போயுள்ளது. இதுவும் மாறும். உண்மை என்றுமே நிற்கும். மாயை அழிந்து போவது. அதை மாற்றமுடியாது. இதுபோல் எத்தனையோ மாயைகள். மறையவனே நன்கறிவான்.

      Delete
  6. பதிவுக்கு நன்றி.

    அறிவுத்தேன் இவ்வளவு சுறுசுறுப்பாக கலக்கிக் கொண்டிருக்கு.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. தங்களது எண்ணங்களுக்கு நன்றி.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers