பாடல் எழுதியவர் : கவியன்பன் அபுல் கலாம்
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்
பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!
சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!
குறைகூறும் மக்களையும்
.......குணத்தாலே மாற்றிடுவாய்
மறைகூறும் பாதையினை
......மகிழ்வாக ஏற்றிடுவாய்!
பணியாவும் திட்டமுடன்
..........பகிர்ந்தேநீ செய்திடுவாய்
துணிவானத் தோற்றமதைத்
........துணையாகக் கொய்திடுவாய்!
கனிவான வார்த்தைகளைக்
........கவனித்தே பேசிடுவாய்
இனியாவும் வெற்றியாக
......இதமாக வாதிடுவாய்!
அறங்கூறும் பாதையிலே
,,,,,.,அசையாமல் நின்றிடுவாய்
புறங்கூறும் வாக்குகளைப்
.......புறந்தள்ளிச் சென்றிடுவாய்!
தெளிதூய்மை ஆடையிலே
.......தெரிவாக்கிப் பூணிடுவாய்
ஒளிவீசும் வாய்மையினை
......ஒழுக்கத்தைப் பேணிடுவாய்!
பலம்கொண்ட கல்வியாலே
......பயன்கொள்ளச் சேர்த்திடுவாய்
நலம்காட்டும் ஆற்றலினால்
......நயமூட்டப் பார்த்திடுவாய்!
பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்
பொருளீட்டும் போதினிலே
......பொறுமையைநீ போற்றிடுவாய்
இருள்நீங்க வாழ்வினிலே
.......இடுக்கணையும் மாற்றிடுவாய்!
சதிகாரக் கும்பலையும்
.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!
குறைகூறும் மக்களையும்
.......குணத்தாலே மாற்றிடுவாய்
மறைகூறும் பாதையினை
......மகிழ்வாக ஏற்றிடுவாய்!
பணியாவும் திட்டமுடன்
..........பகிர்ந்தேநீ செய்திடுவாய்
துணிவானத் தோற்றமதைத்
........துணையாகக் கொய்திடுவாய்!
கனிவான வார்த்தைகளைக்
........கவனித்தே பேசிடுவாய்
இனியாவும் வெற்றியாக
......இதமாக வாதிடுவாய்!
அறங்கூறும் பாதையிலே
,,,,,.,அசையாமல் நின்றிடுவாய்
புறங்கூறும் வாக்குகளைப்
.......புறந்தள்ளிச் சென்றிடுவாய்!
தெளிதூய்மை ஆடையிலே
.......தெரிவாக்கிப் பூணிடுவாய்
ஒளிவீசும் வாய்மையினை
......ஒழுக்கத்தைப் பேணிடுவாய்!
பலம்கொண்ட கல்வியாலே
......பயன்கொள்ளச் சேர்த்திடுவாய்
நலம்காட்டும் ஆற்றலினால்
......நயமூட்டப் பார்த்திடுவாய்!
"கவியன்பன்"
அபுல் கலாம்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
குறிப்பு :
இந்தக் கவிதை கடந்த [ 26-12-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
இனிமையான குரலில் அழகிய பாடல் !
ReplyDeleteகடின உழைப்பு பாடல் பதிவில் தெரிகிறது. உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்...
வெற்றிக்கூட்டணி தொடரட்டும் என்றென்றும்...
தங்களின் கடின உழைப்புக்கு மத்தியிலும் எங்களின் கடின உழைப்புக்கு மதிப்பளித்து - ஆதரவ்ளித்துப் பதிவுக்குள் கொணர்ந்தமைக்கு மிக்க் நன்றி, விழிப்புணர்வு வித்தகரே!
Deleteஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆஃபியா!
கவித்தீபத்தின் ஒவ்வொரு கவிப்பாடலிலும் வித்தியாசமான மெட்டுக்களில் சகோதரர் ஜாஃபரின் இனிய குரல் கேட்க பேரின்பமாய் உள்ளது.
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களது கூட்டணிக்கு.!
எம் பாடகர் அதிரை இளம் முரசு ஜஃபருல்லாஹ் அவர்களின் வாயசைவுக்குள் இலகுவாக உடகாரும் வண்ணம், “வண்ணப்பாடல் வாய்பாடு” அல்லது யாப்பிலககண விருத்தப்பா மரபில் அமைத்துக் கொடுக்கின்றேன்; அவர்க்கு இதனால் என் பாடல் வரிகள் அவரின் இசை வாகனத்தில் ஏறி இகமெங்கும் பரவுவதற்கு இலகுவாக்கிக் கொடுக்கின்றேன்; அவரும் தன் பணி நெருக்கத்தினூடே விரைவாகவும் முழுமையான பதிவாகவும் விழியத்தில் கொணர்ந்து படைக்கின்ற மாபெரும் பொறுப்பை ஏற்றுச் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே, யானும் அவர்க்கு மிகவும் கடப்பாடுடையோனாகி விட்டேன்; உறங்கிக் கொண்டிருந்த என் பாடல்கள் இனி உலகமெலாம் ஒலியாக ஒலிக்கவே, அல்லாஹ்வும் இந்தப் பாடகரை எமக்குத் துணையாக்கினான். அல்ஹம்துலில்லாஹ்.
Deleteமுதலில் தமியேனுக்கு “வண்ணப்பாடல் வாய்பாடு” யான் பயிலும் யாப்பிலக்கண வகுப்பில் ஆசானகள் நடத்திக் கொண்டிருந்த வேளையில் தான், அவர்கள் கொடுத்த அந்த வண்ணப்பாடல் மெட்டு என்னும் வாய்பாட்டிற்கு என் வீட்டுப்பாடமாக “அருளைச் சுமந்த ஹாஜிகளே” என்னும் முதல் வண்ணப்பாடலை வனைந்தனன்; அதனை அதிரை வலைத்தளத்தில் பதிந்து விட்டு, இப்பாடலை எவரும் இலகுவாக வாய்விட்டுப் பாடி விடும் அளவுக்கு இதனுள் ஒர் இனிய வாய்பாடு அமைத்துள்ளேன்; என்று ஒரு பின்னூட்டமிட்டேன்; அதனைப் பார்த்த பின்புதான், அன்புத்தம்பி அதிரை இளம் முரசு ஜஃபருல்லாஹ் அவர்கள் முன்வந்து என் விருப்பதை ஒரு விளையாட்டாகவே செய்து பார்த்து விட்டு எனக்கு மின்மடலிலும் அந்த ஒலிப்பேழையை அனுப்பினார்கள். அப்பொழுது எனக்கிருந்த அலுவல் நெருக்கம், மற்றும் கணினி பழுது காரணீயங்களால் அவரின் அந்த மின்மடல் மற்றும் ஒலிப்பேழையைக் காணவில்லை; தொடர்ந்து ஆர்வத்துடன் அவரும் என்னிடம் வினவிய பின்னர் தான் யானும் என் பணிகள் இல்லா ஓர் ஓய்வு நாளில் கேட்டேன்; வியந்தேன்;மகிழ்ந்தேன்; ஆஹா, இப்படிப்பட்டத் தேன்குரலை நாம் இதுவரை காணவில்லையே, என்று விய்ந்து இனிமேல் அவர்க்காகவே- அவரின் குரலில் உட்காரும் வண்ணமாகவே “மெட்டு” அமைப்பதும் என் வேலை; அதற்காகவே “வண்ணப்பாடல் வாய்பாட்டில்” மட்டும் இவரின் குரலுக்காகவே பாடல்கள் சமைப்பேன் என்றும் அவைகளைத் தொடர்ந்து பாடியும் (யான் அமைத்துக் கொடுக்கும் அதே மெட்டின் வாய்பாட்டில்) பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப வேலைகளில் அவர் மிகச் சிறப்பானவர் என்பதால் அந்தப் பணிகளையும் அவரே ஏற்றுக் கொண்டு, உண்மையில் இரவு பகல் பாராமல் செவ்வனே செய்து அவரே ஒலிபரப்பின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு விட்டார்; இதுவே எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அடிப்படையாகும்,. அவரின் குரல் அகிலமெலாம் (அதிரையும் தாண்டி அதிரவேண்டும்) ஒலிக்க வேண்டும் என்றே அடியேனின் முயற்சியால், அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் அய்மான் சங்கம் , இலண்டன் வானொலி ஆகிய என் தொடர்புகள், முகநூல் நட்புகள் யாவர்க்கும் இவரின் பதிவுகளை அனுப்பி வைத்ததில் அனைவரிடமும் ஏகோபித்த அங்கீகாரமும், ஆச்சரியப்பட்ட கருத்துரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், இன்ஷா அல்லாஹ் இந்தப் பாடகரை ஓர் உயரிய இடத்தில் உட்கார்ந்து புகழின் உச்சியை எட்டிட் வைக்க என்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கி விட்டேன். மாஷா அல்லாஹ்; அல்ஹம்துலில்லாஹ்.
என்னை நம்பி வந்தவர்களை யான் கைவிடவே மாட்டேன் எனப்தை இவரின் மற்றும் நபிதாஸின் மனசாட்சிகள் தான் மகத்தான சாட்சிகளாகும்.
தங்களின் தரமான வாழ்த்துரைக்கு எங்கள் கூட்டணியின் ஏகோபித்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
எங்களின் இந்தக் கூட்டணியை உருவாக்கியவரும், முதன் முதலாக இணையப் பதிவில் அந்த “ஹாஜிகளே “ பாடலை முன்வந்து அவராகவே எங்களை மதிக்கும் ஏற்பாட்டில் எங்களைக் கேட்கமாலே பதிவு செய்த ஒருவர் இருக்கின்றார், அவரை நாங்கள் மறந்தால் “நன்றி கொன்றவர்களாகி விடுவோம்” அவர் யார்?
Deleteஅவர்தான்,
”அதிரைக்காரன்” என்னும் அன்புத்தம்பி ஜமாலுதீன் ஆவார்கள்!
ஆக எங்களின் கூட்டணி என்னும் மாளிகைக்கு அடிக்கல் நாட்டியவர் அவரே என்பதை இம்மாமன்றத்தில் மகிழ்வுடன் பதிவு செய்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ், எங்களைப் “பின் தொடர்ந்து” யார் வந்தாலும் “இணைத்துக் கொள்வோம்” “அணைத்துக் கொள்வோம்”
அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்-
எல்லாரிடமும் இணங்கி வாழ்வோம்!
இண
அறிவான போதனையை
ReplyDelete..........அழகாகத் தந்திட்டாய்
அறியாமை நீக்கிடவே
...........அனுதினமும் பாடுகின்றாய்
தரமான தேன்குரலை
...........தனதாக்கிக் கொண்டுள்ளாய்
உரமான பண்புகளை
..........உலகோரும் கேட்கின்றார்
;
ReplyDeleteஅபிமானப் பாவலரின் ****
...அழகான பாடலையும்
நபிதாஸின் பாடலையும்
....நலமாகப் பாடுபவர்!
**** இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் ஓர் அற்புதமான- அழுகையை வரவழைக்கும் பாடலை இப்பாடகர் பாடி வெளியிடுவார், அப்பாடலாசிரியர் மாபெரும் பாவலராவார்; இணைய உலகில் எனக்கு அப்பாவலர் முன்னோடி; அப்பாவல்ரையும் என்னையும் மக்காவில் (உம்ராவில்) ஒன்றாகக் காண ஏற்பாடு செய்தவரும் இப்பாடகரே தான்!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமச்சானின் கவிதைக்கு இவ்வளவு கலக்கல் என்றால் அதை படிப்போருக்கு எப்படி கலக்கும்?
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
இன்ஷா அல்லாஹ் இன்னும் கலக் கலாம்!
Deleteஉங்களின் அன்பும் ஆதரவும் என்றும் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எங்கள் இப்பயணம் தொடரும்,,,,,,,,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
சதிகாரக் கும்பலையும்
ReplyDelete.......சரியாகக் கண்டிடுவாய்
அதிகாரத் தோரணையை
........அழகாக வென்றிடுவாய்!////////////
அறிய வரிகள்! வரிகளை சுவைக்க சுவைக்க தந்திடும் இணிய குரல்
இக்கவிதையின் முத்தாய்ப்பானக் கருவை, இக்கவிக்கோலத்தின் தொடக்கப் புள்ளியை
Deleteபக்குவமாய்க் கண்டெடுத்தப் பக்குவத்தைப் பாராட்டுகின்றேன்!
ஆம். எனக்கு அண்மையில் அலுவலகத்தில் ஏற்பட்டச் சூழ்ச்சி வலைகளை எண்ணி எண்ணி வருந்திய வேளையில் உருவானத் தலைப்பும் வரிகளும் தான் இக்கவிதையின் வடிவமாகும்.
உங்களின் ஆழமான ஆய்வுக்கும் வாழ்த்தினுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி/ ஜஸாக்கல்லாஹ் கைரன்
ReplyDelete