ஜாடை என்றால் என்ன ?
கண் ஜாடை, வாய் ஜாடை, நடை ஜாடை, முகபாவனை ஜாடை, உடை ஜாடை, செயல் ஜாடை, சைகை ஜாடை இப்படி பல வார்த்தைகளைக் கொண்டு ஜாடைகளை விவரிக்கலாம்..
அறியாதவன் என்றால் என்ன ?
தெரிந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ளத் தகுதி இல்லாதவன், விளங்கிக் கொள்ள முயர்ச்சிக்காதவன் இப்படி பல வார்த்தைகளைக் கொண்டு விவரிக்கலாம்.
சர்வ என்றால் என்ன ?
எல்லாவற்றிற்கும் மேலாக, அதுக்கு மேல் ஒன்றும் இல்லையென்று சொல்லலாம்.
முட்டாள் என்றால் என்ன ?
மூடன், மடையன், இன்னும் பல வார்த்தைகளைக் கொண்டு விவரிக்கலாம்.
ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்றால் என்ன ?
இடம், பொருள், ஏவல் அறிந்து பேசத் தெரியாதவன், செயல் படத் தெரியாதவன், நடந்து கொள்ளத் தெரியாதவன், புரிந்து கொள்ள தெரியாதவன்.
ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள். இதை அன்றே சொல்லிவைத்தார்கள் நம் முன்னோர்கள். அன்றைய மக்கள் இதை சரிவர அறிந்து கொண்டு ஒருத்தரை ஒருத்தர் முழுமையாக புரிந்து கொண்டு நடந்து கொண்டதால், அவர்களால் சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிந்தது, மேலும் பல குடும்பங்கள் கூட்டு குடும்பலாக ஒரே கூரையின் கீழ் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்துள்ளதாகவும், இதுக்கு மேலே அரசர்களும் அரசபை தலைவர்களும் தேசத்தின் மக்களும் ஒருத்தருக் கொருத்தர் புரிதலில் மேலோங்கி இருந்து சீரும் சிறப்போடும் வாழ்ந்துள்ளதாக சரித்திரம் நம்மைப் பார்த்து பறைசாற்றுகிறது.
பள்ளிப் பருவ வாழ்க்கையிலும் சரி, குடும்ப வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி, தொழில் வாழ்க்கையிலும் சரி, மற்ற பழக்க வழக்கங்களிலும் சரி ஜாடை அறியாமல் செயல் பட்டால் அதை விட ஒரு முட்டாள்தனம் வேறு ஒன்றும் இல்லை.
பல மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய பட்டப்படிப்பு படித்து இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். கம்பெனிகளில் பல நூறு வேலை ஆட்களுக்கு மேனேஜராக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். பெரிய செல்வந்தனாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். வெள்ளையும் சள்ளையுமாக இருப்பான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். தன்னைச் சுற்றி இவ்வளவு கூட்டங்களா என்று பிரமிப்பு அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். இணைய தளங்களிலும்-தொலைக்காட்ச்சிகளிலும்-வானொலிகளிலும்-காகிதவடிவில் வருகின்ற பத்திரிகைகளிலும் தன்னுடைய போட்டோவும் பெயரும் வருவதைக் கண்டு ஆனந்தம் அடைவான் ஆனால் ஜாடை அறியாத சர்வ முட்டாளாக இருப்பான். இதுக்கு மேலே எத்தனையோ ஜாடை அறியாத சர்வ முட்டாள்களை நாம் பார்கின்றோமா இல்லையா?
நாம் தினம் தினம் சாலையில் நடந்து போகும் போதும், பிரயாணத்தில் இருக்கும் போதும் எத்தனையோ பேர்களை சந்திக்கின்றோம் உரையாடுகின்றோம் அத்துனைபேரும் நமக்கு நன்பர்காளா? அவர்கள் வந்து போகின்றவர்கள். அதாவது ஓடுகின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
நாம் தினம் தினம் வசிக்கின்ற இடத்திலேயே எத்துணையோ பேர்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், உரையாடிக் கொண்டிருக்கின்றோம், அவர்கள் அத்துனைபேரும் தெரிந்தவர்களாக, நண்பர்களாக இருகின்றார்கள், அவர்கள் அதே இடத்தில் நிலையானவர்கள், அதாவது தேங்கி கிடக்கின்ற தண்ணீரைப் போன்றவர்கள்.
ஓடுகின்ற தண்ணீர் ஒருபோதும் அழுக்காகுவது கிடையாது, அது சுத்தமாக இருக்கும். ஆனால் தேங்கி கிடக்கின்ற தண்ணீரோ அழுக்காகி விடும், கெட்டுவிடும், அதன் தன்மை அறிந்து சுத்தப்படுத்திக் கொண்டே இருக்கணும். அந்த தண்ணீர் நமக்கு கட்டுப்படவில்லையா? அந்த தண்ணீரை விட்டு விலகி இருக்கணும், தள்ளி இருக்கணும்.
அதுபோலவேதான் இந்த ஜனங்களும். நம் மத்தியில் வந்து போகின்றவர்களுக்கும், நம் மத்தியில் நிலையாக இருக்கின்றவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றது. இந்த வித்தியாசத்தை ஜாடையில் அறிந்து நடந்து கொள்ளாதவன் சர்வ முட்டாள்.
நம்வீட்டுக்கு அருகில் வேறு ஒரு குடும்பம் வீடு கட்டிக்கொண்டு குடி வருகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம், அவர்களின் நடத்தைகளை ஜாடையில் அறிந்து பழக வேண்டும், அதுபோல் அவர்களும் நம்மிடம் பழகவேண்டும். ஜாடை அறிந்து பழகாவிட்டால் இருவீட்டாருக்கும் தினம் தினம் போர்தான் நடக்கும். (இன்று பல இடங்களில் நடக்குதா இல்லையா?)
நமக்கு அவசரமாக ஒரு உதவி தேவைப்படுகிறது தற்போது நம்மால் அதை செய்ய முடியாது. அடுத்தவரை நாடியே ஆகணும் என்ற நிலைக்கு வந்தாச்சு, எவரிடம் போய் கேட்பது, யாரிடம் போய் கேட்டால் தட்டாமல் கிடைக்கும் என்று சிந்தித்து நம்மைநாமே சரிசெய்து கொண்டு கேட்க முயற்சிக்க வேண்டும். நாம் கேட்க போகும்போது அவர்கள் மனநிலையை அறிந்து, நேரத்தை அறிந்து, பிசியா இருக்கின்றாரா, யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கின்றாரா, வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கின்றாரா, போன்ற பாவனைகளை ஜாடையில் அறிந்து கேட்க முயற்சிக்கவோ அல்லது இப்ப வேண்டாம் நிலைமை சரியில்லை பிறகு கேட்கலாம் என்று இருந்துவிடவோ வேண்டும் இதுதான் புத்திசாலித்தனம். இப்படி இந்த முறையில் நடந்து கொண்டு பின்பு கேட்க்கும் பட்ச்சத்தில் நிச்சயம் அந்த உதவி கிடைக்கும், மாறாக இவையெல்லாம் பார்க்காமல் நேராக சென்று நம் இஷ்டப்படி கேட்டால் நண்பன் என்ன, கூடப் பிறந்த சகோதிரன் கூட இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்பி கதவை பூட்டிவிடுவான்.
எங்கு பார்த்தாலும் குழப்பங்கள், அடிதடி, வெட்டு குத்து, இன்று நண்பன்-நாளை பகைவன், இன்று கணவன் மனைவி-நாளை நீ யாரோ நான் யாரோ, இன்று தலைவன்-நாளை டேய் போடா உன்னைப்பற்றித் தெரியாதா, இன்னும் எவ்வளவோ சங்கதிகள் நாம் காதுகளில் விழுந்து கொண்டும் கண்களில் பட்டுக்கொண்டும் இருக்கின்றதே, இதுக்கெல்லாம் என்ன காரணம், ஜாடை அறிந்து செயல் படவில்லை, ஜாடை அறிந்து கூட்டு சேரவில்லை, ஜாடை அறிந்து சம்பந்தம் கலக்க வில்லை, ஆக, ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள்.
இந்த அவசர காலத்தில் ஜாடை அறிந்து நடந்து கொள்ள நாம் அனைவரும் முயற்ச்சிப்போம்.

'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
ஆஹா !
ReplyDeleteசாடையை பற்றி சாடிய விதம் அருமை...
பிரிச்சி மேய்ஞ்சிடிங்க :)
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteபொதுமக்களின் ஜாடை அறிந்து ஓட்டு கேட்டால் மேற்கொண்டு பணம் பொருள் ஏதும் கொடுக்காமல் வெற்றிபெறலாம்.
ஜாடை இத்தனை வகைகள் அத்தனையும் உண்மைவகைகள். அருமை.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteகணவனின் ஜாடை அறிந்து மனைவியும், மனைவியின் ஜாடை அறிந்து கணவனும் தங்களுடைய தேவைகளை சரிசெய்து கொள்ளவேண்டும்.
வணக்கம்
ReplyDeleteஅருமையான பதிவு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநீங்கள் ஜாடை அறிந்து நச்சின்னு முடித்துக் கொண்டீர்கள்.
அசத்தல் கேள்வி பதில்... உண்மைகள் பல...
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஉண்மையான ஜாடை உங்களிடம் தெரிகின்றது.
இக்கட்டுரை ஆசிரியர் சர்வமும் அறிந்த ஜாடைக்காரராய் தெரிகிறதே
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநான் ஒன்றும் அப்படி இல்லை, சில நேரங்களில் ஜாடை அறியாமல் மாட்டிக்கிட்டதும் உண்டு.
சில நேரங்களில் ஜாடை அறியாதவன் சர்வ முட்டாள் போல் இருந்தும் காரியம் ஜைப்பவர்களும் உண்டு !
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஅப்படி சாதித்து வசமா அகப்பட்டதும் உண்டு.
நோக்கத்தைப் பொறுத்துத் தானே....
Deleteஆமாம்.
Deleteமருமகள் பாத்திரங்களை தேய்த்து கழுவும்போது ..
ReplyDeleteசத்தம் கூடுதலாக வந்தால் மாமியார் மனம் திக் என இருக்குமாம் ..அதனை ஒரு பல மொழியாக கூறுவர் ..
"சட்டி சடக்குணா...சாடை நமக்கு .."
சாடை அறியாதவன் சர்வ முட்டாள் என்பது மிக சரி ..
சில சமயங்களில் சாடை அறிந்தும் காரியத்தை சாதிக்கும்
நபர்களும் உண்டு ..அவர்கள் முட்டாள் அல்ல ...
கல்லுளி மங்கன் .என்பார்கள்
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteநீங்கள் சொல்வதுபோல் இதுவும் உண்மைதான்.
ஜாடையை ஜமால் காக்கா நன்றாக ஜடை போட்டு விபரமாக சொன்ன விதம் அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇடம் பொருள் பார்த்து சிலருக்க நடந்து கொள்ளத் தெரியாது. சிலருக்கு ஜாடை காண்பித்தாலும் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது. சூல்ழ்நிலையை சரியாக தெரிந்து கொண்டு ஜாடையை ஒரு ஜாடையாக சொல்லியிருக்கிறீர்கள். காக்கா எதுக்கும் உங்களிடம் இனிமேல் ஒரு ஜாடையாகத்தான் நடந்து கொள்ளவேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஅதுதான், ஜாடை அறிந்து பின்னூட்டம் இட்டு இருக்கிறீர்களோ.
”சாடை அறியாதவன் சர்வ முட்டாள்”
ReplyDelete“வசங்கொண்டு எழுதாததவன் கசங்கொண்டு சாவான்”
இவ்விரு சொலவடைகளும் எனக்கு அடிக்கடி நினைவில் வந்து நிற்கும் வண்ணம் என்னிடம் (ஈ.டி.ஏ யில் கணக்கராகப் பணிபுரிந்த காலத்தில்) மேலாளர் ஜனாப் நெய்னா காக்கா (கீழக்கரை) அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இன்றும் நான் அலுவலகப் பணிகளில் எம்மைச் சுற்றி இருப்பவர்களின் சாடை அறிந்து கொண்டே நளினமாகக் காலங் கடத்துவதும்; ஒவ்வொரு கணக்குப்பதிவிலும் (accounts) வசங்கண்டு (narration) எழுதி வருவதும் அவர்களின் பாடமே!
இப்பொழுது எனக்கு மச்சான் மூலம் மீள்பதிவாகி விட்டது என் மனத்திரையில்; மகிழ்ச்சி மச்சான் அவர்களே
உங்கள் கருத்துக்கு நன்றி மச்சான்.
Deleteஇன்றைய நாட்களில் உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு ஜாடை என்றால் என்ன என்றே தெரியவில்ல மச்சான், அதுதான் நான் இப்படி ஜாடையாக எழுதினேன்.