.

Pages

Saturday, December 21, 2013

[ 25 ] 'வளைகுடா வாழ்க்கை' [ இடைத்தரகர்களின் மனசாட்சியற்ற போக்கு ! ]

இடைத்தரகர்களின் மனசாட்சியற்ற போக்கு
பாரசீக வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்பது மாயத்தோற்றம் காரணம் எல்லா துறையிலும் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. வேலையாட்கள் மித மிஞ்சி காணப்படுகிறார்கள். ஆனாலும் நம்மவர்கள்
படிக்காத பிள்ளைகளை அரபு நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது. முன்பு போல ஏஜென்சி அணுகுவதில்லை வெளி நாட்டில் வேலை பார்க்கும் உறவினர்களிடம்  "எப்படியாவது தனது பிள்ளைக்கு விசா எடுத்து தாருங்கள்" என நச்சரிப்பார் அதன் விளைவு எதாவது ஒரு ஒரு வாய்ப்பு கிடைத்தால் உடன் ஏற்பாடு செய்ய உறவினர்
தயாராக இருப்பார்.

அரபு நாடுகளுக்கு சென்றவர்களில் சிலர் வேலை செய்யாமல் இலகுவாக பணம் பார்க்க விசா எடுத்து தரும் தரகர் வேலை செய்வார்கள். கிராமங்களில் வாழும் அரபிகளிடம் ஆசை வார்த்தை காட்டி அவர்களின் விசா பர்மிட்  மூலம் விசா எடுப்பார்கள். கிராம வாசி விவசாயியாக இருப்பார். அவருக்கு கிடைக்கும் விசா பர்மிட் தோட்ட வேலையாக இருக்கும் அல்லது ஒட்டகம் மேய்க்கும் வேலையாக இருக்கும். ஆனால் விசா பர்மிட் விற்கும் இடை தரகர் என்ன வேலை என்பதை மறைத்து உதவியாளர் வேலை என்பார். படிக்காத பிள்ளைக்கு உதிவியாளர் வேலை என்பது நியாயமான வேலைதானே என்று சம்மதித்து விசாவை வாங்கி உறவினர் பிள்ளைக்கு அனுப்பி வைப்பார்.

வளைகுடா வரும் இளைஞன்  விமான நிலையத்தின் அழகை  வியந்து போவான். நாட்டிற்குள் நுழைந்து வானுயர உள்ள கட்டிடங்களை பார்த்து ஆச்சர்யப்படுவான், கடை வீதிகளில் விற்கும் பொருட்களை பார்த்து
தாமும் வாங்க ஆசைப்படுவான். இவைகள் யாவும் மனதில் மின்னல் வேகத்தில் ஓடி மறையும். உறவினர் வீட்டில் ஒரு வாரம் தங்கி வித விதமான உணவுகள் உண்டு மகிழ்வான்.

விசா இடை தரகர் வருவார் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்து செல்வார். அந்த இளைஞனின் கனவு கோட்டைகள் தகர்ந்து போகும் காரணம் தங்கும் இடம் மிக பழமையான களிமண் வீடாக இருக்கும் உணவு காய்ந்த  ரொட்டி துண்டுகளும் பழக்கத்திற்கு ஒவ்வாத உணவாக இருக்கும். நாட்டிற்குள் நுழைந்த கனவு உலகம் எங்கே ? என்று கண்கள் தேடும் இதில் அகப்பட்ட இளைஞர்கள் உடனே ஊர் திரும்பியவர்கள் ஏராளம் ! சிலர் சாதுர்யமாக கொஞ்ச காலம் வேலை செய்து அரபியின் நன்மதிப்பை பெற்று ஓரிரு வருடங்களில் நல்ல வேலைக்கு திரும்பியவர்களும் உண்டு.

இதனை ஏன் பதிகிறேன் என்றால், சென்ற வாரம் இருபது இளைஞர்கள் இலகுரக வேலை என்று அழைத்து வரப்பட்டு தோட்ட வேலைக்கு அனுப்ப பட்டனர். இதனை நம் வாசகர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

விசா எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.
[ வளைகுடாப்பயணம் தொடரும்... ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

19 comments:

  1. தொடர் அருமையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..!சகோ ..
      இத்தொடரை புத்தகமாக வெளியிட உள்ளோம் ஆதரவு தாருங்கள் ...இன்னும் பல தகவல்களுடன்
      புத்தக வெளியாகும்

      Delete
  2. // விசா எடுப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன். //

    அருமையாக முடித்துள்ளீர்கள் !

    உதவி செய்யப்போய் உபத்திரத்தில் மாட்டிக்கொண்டோரும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர்கள் ...
      இன்னும் பல நிகழ்வுகள் உண்டு ..
      வளைகுடா வாழ்க்கை ...பாகம் 2 ..அடுத்த வருடம்
      ஆராய்ந்து எழுதுவோம் ..

      Delete
  3. தருணத்திற்கு ஏற்ற கட்டுரை. சுடச் சுட விழிப்புணர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..அறிஞர் நபி தாஸ் அவர்களே

      Delete
  4. 'விசா'ரிக்காமல் 'விசா' எடுத்தாலோ அல்லது குறிப்பிட்ட விசாவில் சென்றாலோ இதுபோன்ற கடினங்களை பலர் அனுபவித்துள்ளனர்.

    நல்ல விழிப்புணர்வு

    ReplyDelete
    Replies
    1. விசா எடுப்பவர்களுக்கு ..
      விசா கிடைக்கிறதே என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும் ..நல்லதா ..கெட்டதா பார்ப்பதில்லை ..
      விசாரிக்காத விசாவே புழக்கத்தில் உள்ளது
      நல்ல தகவல்கள் தந்தீர்கள் சகோ ..
      புத்தகத்தில் உங்கள் கருத்து பதிய ப்படும்

      Delete
  5. வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய நல்லதொரு விழிப் புணர் தரும் பதிவு, அருமை. சிறப்புடன் செல்கிறது தாங்களின் வளைகுடா வாழ்க்கை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..சகோ அதிரை மெய்சா
      ஆர்வமூட்டி ...உற்சாக மூட்டி ஆக்கத்திற்கு வலு சேர்க்கும் உங்களுக்கு நன்றி

      Delete
  6. \\"எப்படியாவது தனது பிள்ளைக்கு விசா எடுத்து தாருங்கள்" என நச்சரிப்பார் \

    ஆம். உண்மையிலும் உண்மை!

    விசாரிப்புகள் வர வேண்டிய மடலில், அலைபேசி உரையாடலில், “விசா அரிப்பு” தான் மிகுதமாக உள்ளன.

    பம்பாயில் 1980-81ல் முகவரிடம் ஏமாந்தவர்களில் யானும், கனடாக் கவிஞரும் அடங்குவோம். அப்பொழுதெல்லாம் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணும் அறியாமைக் காலம். இப்பொழுது விசாவைப் பற்றி விசாரணை செய்து கொள்ள இணையத் தொடர்புகள் பல உள.

    காலமறிந்து எழுதும் உங்களின் தனித்திறமைக்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல தகவல் தந்தீர்கள் ...கவியன்பரே ..!
      புத்தகமாக வெளிவர உள்ள இவ்வாக்கத்திற்கு தங்களின் ஆதரவு தேவை

      Delete
    2. உறுதியாக, இன்ஷா அல்லாஹ்

      Delete
  7. பதிவுக்கு நன்றி.

    நல்ல தரமான ஆக்கம்.

    இன்னமும் இதுபோன்ற போலிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  8. நன்றி ..!சகோ ..
    இத்தொடரை புத்தகமாக வெளியிட உள்ளோம் ஆதரவு தாருங்கள் ...இன்னும் பல தகவல்களுடன்
    புத்தக வெளியாகும்

    ReplyDelete
  9. கட்டிரையாலரின் தகவல் அதிக்கப்படியான நபர்கள் அனுபவித்த கொடுமைகள் இன்றைய காலத்தில் வயல் வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லை இன்று அரபு நாட்டில் சம்பாதிக்கும் தொகை நல்ல வேலைக்காரருக்கு இங்கே கிடைக்கிறது

    ReplyDelete
  10. சரியாக கூறினீர் நண்பரே
    கொத்தனாருக்கு ஒருநாள் சம்பளம் ஐநூறு ரூபாய்

    ReplyDelete
  11. புதுசா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை மற்றும் கவனம் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. நன்றி சகோ ஹபீப் ...
    வெகு விரைவில் ...
    சமூக விழிப்புணர்வு பக்கங்கள் ...பதிப்பகமாக வளர்ந்து
    அதில் இப்பதிவு புத்தகமாக வெளிவர உள்ளது .தங்களின்
    ஆதரவு தேவை ..

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers