வளைகுடா நாடுகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் நமக்கு பல படிப்பினையை தரும் விதமாக அமைந்துள்ளது. படித்த பட்டதாரிகள் வளைகுடா நாடுகள் சென்று மேலும் சிறப்புற்று தனது நிலையை மேம்படுத்தி கொண்டதும் உண்டு. படிக்காத நபர் பணிவாய் அரபிகளிடம் வேலை செய்து தனது நிலையை மேம்படுத்தி கொண்டதும் உண்டு.
அலுவலக உதவியாளராய் தனது வாழ்வை துவங்கி அரபியின் நன்மதிப்பை பெற்று மேலாளர் பதவி அளவிற்கு உயந்தவர்களும் உண்டு. அது போன்ற சிபாரிசு பெற்றவர்களின் செயல் பாடுகளால் பல பிரச்சனைகள் சந்தித்த
நிகழ்வுகளை என்னிடம் பலர் கூறி உள்ளனர். படித்த பட்டதாரி படிக்காத அந்த நபரிடம் வேலை செய்யும்போது நிகழும் அவலங்களும் அதிகம்.
வளைகுடா பயணம் ஒரு வகையான பாடம்...
படிக்காத பல இளைஞர்கள் வளைகுடா அனுபவங்களால் இன்று தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் சூழல் அவர்களை பண்புள்ளவர்களாக மாற்றி அமைத்துள்ளது என்றால் மிகையாகாது. ஆனால் குறுகிய கொள்கை உடையவர்கள் உழைக்க மனமில்லாதவர்கள் சிறு கஷ்டம்
கூட பொறுக்காமல் வீடு திரும்பியவர்கள் காலம் காலமாய் கஷ்டபடும்
நிலையையே காண முடிகிறது. நாற்பத்து வருட காலமாக நல்ல பல
வாய்ப்புகளை அள்ளி தந்த வளைகுடா நாடுகளில் இன்று மண்ணின் மைந்தர்கள் வேலை தேட ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை பல நிறுவனங்கள நிர்பந்தங்களுக்குள்ளாகி வருகிறது. அரசு உத்தியோகம் மண்ணின் மைந்தர்களுக்கே என்றாகி விட்டது. எனவே இளைஞர்களே ! இருக்கும் வேலையை தொலைத்து விடாதீர்கள்...
மற்றொரு முக்கியமான விஷயம்...
பங்களதேசிகளிடம் உள்ள குண நலங்களை அறிந்து கொள்ளுங்கள்
அவர்கள் முன்கோபிகள் தனது நலனுக்காக என்ன வேண்டுமானாலும்
செய்வார்கள். அது போன்று, வளைகுடாவில் வசிக்கும் சிலர் நேசமாக பழகுவார்கள். ஆனால் தான் மட்டுமே புத்திசாலிகள் என நினைப்பார்கள் குறிப்பாக அவர்களை ஒத்த நம்மை அவர்கள் அண்ணாச்சி அண்ணாச்சி என்று கேலியாக அழைப்பார்கள். சமயம் பார்த்து காலை வாரி விடுவதில் முதன்மையானவர்கள்.
ஒரு நெருடலான விஷயம்...
வளைகுடாவில் வசிக்கும் சிலர் தொழில் செய்ய முனைவதில் முதன்மையானவர்கள் கொடுக்கல் வாங்களில் மிகவும் பலவீனமானவர்கள் துரோகம் செய்வதில் முதன்மையானவர்கள் எனவே அவர்களிடம் தொழிலில் பங்கு கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.
அது போன்று மிசிறிகள் அவர்கள் தன்னை வளைகுடா அரபிகளாகவே எண்ணி
கொள்கின்றனர். எனவே அவர்கள் நம்மிடம் காழ்ப்புணர்வு கொள்வர். அவர்களிடம் சற்று நாம் பணிந்து போனால் சாதிக்கலாம்.
ஆங்கிலேயர்களிடம் வேலை செய்ய நேர்ந்தால், நமக்கு நல்ல வழியை
காண்பிப்பார்கள் வாழ்வில் முன்னேற்றம் நன்றாக தெரியும். பாகிஸ்தானிகள் இந்தியர் என்றால் மிக அன்பாகவே இருப்பதை காண முடிகிறது. பாய்... பாய்... என்று பல உதவிகள் செய்வதை காண முடிகிறது.
இன்னும் பல விஷயம் பகிர்ந்து கொள்ள ஆசைதான் பல அலுவல்கள்
இருப்பதால் அடுத்த வருடம் இன்னும் ஒரு தலைப்போடு சந்திக்கிறேன்.
படிக்காவிட்டால் பரவாயில்லை ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொண்டு
வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
நன்றியுரை :
சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தை வழி நடத்தி வரும் தம்பி சேக்கனா நிஜாமிற்கும் மற்றும் பங்களிப்பாளர்களுக்கும், வாசக பெருமக்களுக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

[ வளைகுடாப்பயணம் முற்றும் ]
'பத்திரிக்கைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
நிறைவுற்றது வளைகுடா வாழ்க்கை என்றாலும் மனதிற்கு ஏதோ நெருடலாய் முடிகிறதே என்று இருக்கிறது கட்டுரையில் கடைசி பாகம் பல நாட்டவரின் மன நிலைகளை கூரிய விதம் அருமை
ReplyDeleteஇந்த கட்டுரை வாழ்க்கை பாடம் படித்து முடித்த இளைஞர்கள் படிக்க வேண்டிய நல்லுபதேசம் வாழ்த்துக்கள்
அடுத்த வருடத்திற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன
நன்றி ..நண்பா ..
Deleteமீண்டும் ..சந்திப்போம்
வளைகுடா அனுபவங்கள் தொகுத்து வழங்க விசயங்கள் நிறைய இருந்தாலும் தொடருக்கும் முடிவுரை இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இத்துடன் முடித்திருப்பது பாராட்டுக்குரியது - இந்த நெடுந்தொடரில் முக்கியமான விடுபட்ட தகவல்களை புத்தகமாக வெளியிடும் போது சேர்த்துக்கொள்வோம். இதுவரையில் வாசகர்கள் வழங்கிய பின்னூட்டங்களையும் சேர்த்துக்கொள்வோம்.
ReplyDeleteபிசியான பணிகளுக்கிடையும் எங்களுக்காக உங்களின் சிறந்த அனுவங்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி !
இன்னும் ஏதாவது சிறந்த அனுவங்களை தொகுத்து மற்றுமொரு தொடராக வெளியிடுங்கள் என்ற வேண்டுகோளுடன் சிறந்த படைப்பை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் அன்புடன் தெரிவித்துகொள்கிறேன்.
மிக சரியாக சொன்னீர்கள ..
Deleteபுத்தகமாக வெளியிடும் போது இன்னும் பல தகவல்களோடு வெளியிடுவோம்
'வளைகுடா வாழ்க்கை' தொடர் மிக அருமையாக உள்ளது, தொடர் நிறைவுற்றது மனதிற்கு கவலையளிக்கிறது. நான் இன்னும் படித்து கொண்டிருக்கிறேன், படித்து முடித்ததும் வளைகுடா செல்லும் வாய்ப்பு வந்தால் நிச்சயம் இந்த தொடரை வழிகாட்டியாக கொள்வேன். சகோ அடுத்த தொடரும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோ ..
Deleteதங்களின் கருத்து ..இவ்வாக்கத்தின் வெற்றியாக
கருதுகிறேன் ..ன்றாக படியுங்கள் ..ஒரு கல்வியாலனாய் ...வளைகுடாவில் வம் வாருங்கள்
தங்கள் வாழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்
அருமை சகோ. சித்திக் அவர்களின் அருமையான விழிப்புணர்வு கட்டுரை முடிவுற்றாலும் பல தகவல்களை வெளிச்சம்போட்டுவிட்டு முடிந்துள்ளது. அதே நேரம் இது முடிவல்ல..
ReplyDeleteவளைகுடா வாழ்க்கை ஒரு கடல் அதில் முடிவு என்பதே இல்லை..இனியும் தொடரும் யாராவது அவர்களின் அனுபவங்களோடு தொடர்வார்கள்..
சரியாக் சொன்னீர்கள் ...
Deleteவளைகுடா வாழ்க்கை பாகம் 2
நல்ல பல தகவல்களோடு வெளி வரும் ...
முதலில் இவ்வாக்கத்தை புத்தகமாக தொகுப்போம்
தங்களின் மேலான ஆதரவும் தேவை
”முற்றும்” என்பது கட்டுரைக்குத் தானே அன்றி, அயல்நாட்டு மோகத்திற்கு அல்ல! என்று தணியும் இந்த அந்நிய நாட்டு மோகம் என்று கேட்டுக் கொண்டே புற்ப்பட்டு வானூர்தியில் பயணித்த வண்ணமே இருக்கின்றோம்!(நான் உடபட) பிற்ந்த ஆண் பிள்ளைக்கு கடவுச்சீட்டு எடுத்து ஆயத்தமாக்கி வைத்துக் கொள்கின்றோம். காரணம் என்ன? அரசியலார்களின் ஊழல், மக்கட்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்காமைப் போன்ற காரணீயங்களால் விலைவாசி ஏற்றம் நம்மை (சுதந்திர நாட்டின் அடிமைகளான எம்மை) விமான ஏற வைத்துக் கொண்டே இருக்கும். எனவே, முடிவல்ல, “வளைகுடா வாழ்க்கை”!
ReplyDeleteஆயினும், ஆழமான ஆய்வைத் தொய்வின்றித் தந்த அதிரைத் தமிழூற்றை மீண்டுமொரு ஆக்கத்துடன் சந்திப்போம் என்ற பேராவலுடன், நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி கவியன்பரே ...
Deleteஇவ்வாக்கத்தை புத்தகமாக வெளியிட எண்ணியுள்ளோம் ...தங்களின் மதிப்புரையுடன்
அது வெளியாகும் ..அதரவு தர வேண்டுகிறேன்
தமியேனை மதித்து நீங்கள் மதிப்புரை கேட்டும் யான் மறுப்பேனா? ஆயத்தமாய் திற்ந்தே இருக்கும் என் பேனா.
Deleteவளைகுடா வாழ்க்கை ஒவ்வொரு வாரமும் பற்ப்பல விதமான படிப்பினையூட்டும் நிகழ்வுகளைச் சொல்லி நல்லதொரு சிறந்த பயனுள்ள தொடராய் நகர்த்திவந்து இறுதியில் நல்ல அறிவுரையுடன் கட்டுரையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளீர்கள். அருமை வாழ்த்துக்கள்.
ReplyDeleteயாதுமே ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருக்கும். அந்தவகையில் வளைகுடா வாழ்க்கையெனும் உங்களது இந்தக்கட்டுரை முடிவு பெற்றாலும் இதன் தாக்கம் முடிவு பெறாமல் இருக்கும்.
அடுத்த நல்லதொரு சிறப்பான விழிப்புணர்வுக் கட்டுரையை எதிர்பார்க்கும் உங்கள் வாசகனில் ஒருவனாய் வாழ்த்தி வரவேற்கும் அதிரை.மெய்சா
This comment has been removed by the author.
ReplyDeleteஇதுவரை ..வெளிவந்த ஆக்கத்திற்கு பல்வேறு வகையில் தங்களின் ஆதரவு என்னை ஊக்கபடுத்தியது உற்சாக படுத்தியது நன்றி ...
Deleteபுத்தகமாக வெளிவரவும் ஆதரவு தாருங்கள் ..
தங்களின் மதிப்புரையும் புத்தகத்தில் வெளி வர வேண்டும்
நிச்சயமாக எனது ஆதரவு என்றும் இருக்கும். விரைவில் இப்பதிவை புத்தகமாக பார்க்கவே ஆவலாக உள்ளேன்.
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteசகோ சித்தீக் அவர்களின் ஆக்கங்களில் ஒன்றான இத்தொடர் ஆக்கம் நிச்சயமாக எல்லோருக்கும் தெரியாததை தெரிய வைத்தது.
இத்தொடர் முடிவுற்றாலும், எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்குது என்று என்னை பார்த்து எச்சரிக்கின்றது.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
பலரின் அனுபவங்கள் அதனை எழுதும் போது படிப்பவருக்கு இனிக்கின்றது.
ReplyDeleteகற்பனைகள் படிக்கும் போது ஒரு தாக்கத்தை தந்து மறைந்துவிடும்.
உண்மைகள் உள்ளத்தை ஆட்கொள்ளும்.
அதனால் வளைகுடா வாழ்க்கை முடிவுறுவது இழப்பு உணர்வாக மனதிற்கு தோன்றலாம்.