.

Pages

Monday, December 30, 2013

தானமா ? நிதானமா ?

தானம், நிதானம் இவ்விரண்டும் உச்சரிப்பு ஒலியில் ஒருமித்து இருந்தாலும், அர்த்தத்தில் வெவ்வேறானவை.

தானம் என்றால்...
கண் தானம், இரத்த தானம், அன்ன தானம், உயிரணு தானம், எழும்பு மஜ்ஜை தானம், உடைகள் தானம், நேரங்களை பாராமல் ஆக்கங்களை எழுது ஒரு வகையில் தானம், அதை பதிவில் ஏற்றி தளத்தில் தவழவிடுவது அதுவும் ஒரு வகையில் தானம் இன்னும் எத்தனையோ தானங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

நிதானம் என்றால்...
அமைதியாக, பொறுமையாக, சாதுவாக, இழகுவாக, சாந்தமாக, மெதுவாக இன்னும் எத்தைனையோ இப்படி சொல்லலாம்.

தானத்தை தர்மமாக எடுத்துக்கொண்டால், நிதானத்தை பொறுமை என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். தர்மம் செய்வதாக இருந்தாலும் அதை பொறுமையாக செய்ய வேண்டும்.

மனித வாழ்க்கை, கண்களுக்குப் புலப்படாத ஒரு விதிமுறையின் அடிப்படையில் தொடர்ச்சியாக நிகழ்கிறது என்ற உண்மையை நம் புரிந்து கொள்ளவேண்டும்.

மனிதன் நிதானம் என்ற ஆயுதத்தை பயன்படுத்த தெரியாமல் திக்குமுக்காடி திணறுகின்றான், ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் மனிதன்கூட எதோ ஒரு சில காரணங்களுக்காக நிதானத்தை இழந்து விட்டு தடுமாறுகின்றான்.

நன்றாக படித்து வருகின்ற பல மாணவர்கள் மாணவிகளை கண்டதும் காதல் என்ற மாயையில் சிக்கி நிதானத்தை இழந்து படிப்பை கோட்டை விட்டு ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகின்றனர்.
வியாபாரிகளில் பலர் சில பெண் வாடிக்கையாளர்களின் அழகில் மயங்கி நிதானத்தை இழந்து தொழிலில் நஷ்டம் அடைந்து வீதிக்கு வந்தவர்கள் எத்தனைபேர்?

பெண்களை வேலைக்கு அமர்த்துவது எதற்காக, அவர்கள் நிதானமாக, பொறுமையாக, சரியாக, தெளிவாக வேலையை செய்து முடிப்பார்கள் என்றுதான் நம் தேசத்திலும், அயல் தேசத்திலும் வேலைக்கு அமர்த்துகின்றனர். ஆனால் பல ஆண் வர்கத்தினர்களாகிய முதாலாளிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், இன்னும் பலர் தங்கள் நிதானத்தை இழந்து வேலைக்கு வந்த பெண்களிடம் தகாத முறையில் நடந்து மானங்கெட்டு போனதும் உண்டு.

நாம் ஒரு அடி எடுத்து நடந்தால்கூட நிதானத்தோடு நடக்க வேண்டும். நிதானம் இல்லாமல் பேசி வசமாக மாட்டிக்கொள்கின்றனர், நிதானம் இல்லாமல் வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கி விடுகின்றனர், நிதானம் இல்லாமல் எத்தனையோ பெண்கள் தங்கள் சுய மரியாதையை இழந்து அவதிபடுகின்றனர்.

கவிதையை எழுத படிக்க, ஆக்கத்தை எழுத படிக்க, நிதானம் தேவை.
நண்பர்களை தேர்ந்தெடுக்க நிதானம் தேவை. பொது சேவை செய்ய நிதானம் தேவை.

நிலத்தில் ஓடுகின்ற தண்ணீர் கூட நிதானமாக ஓடினால்தான் நிலத்தடி நீர்கூட உயர்ந்து நிற்கும்.

எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் சரி, நிதானத்தோடு செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

நாம் கீழ்க்கண்டவைகளை விடாமல் கைப்பற்றி இருந்தால் நம்முடைய மரியாதையே வேறுங்க.

அன்பு, அடக்கம், மனவுறுதி, நிதானம், தானம், சமயோசித புத்தி, பொறுமை, விவேகம், நீதி, நியாயம், நாணயம், நேரம் தவறாமை, பண்பு, கவுரவம், பிறரை மதித்தல் இன்னும் நிறைய இருக்குங்க.

நிதானத்தோடு நடந்து இந்த மனித சமுதாயத்தையும், இந்த உலகத்தையும் உயர்த்தி காட்டுவோம் என்று நாம் எல்லோரும் இன்று முதல் ஒரு சபதம் எடுப்போம்.
'மனித உரிமை ஆர்வலர்'
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)

14 comments:

  1. வாழ்வில் இரண்டு தானமும் தேவை !

    நிதானமிழந்து காணப்பட்டால் அழிவுப்பாதைக்கு நம்மை அழைத்து சென்றுவிடும்.

    சிறந்த கருத்துகளை தாங்கி வந்துள்ளது படைப்பு

    ReplyDelete
  2. இரண்டுமே முக்கியம் தான்... இன்றைய நாட்டு / வீட்டு நடப்புக்கு சமாதானமே தேவை என்று தோன்றுகிறது... !

    ReplyDelete
  3. தானம் தலைகாக்கும்
    தவறினால் கஞ்சனாக்கும்.
    நிதானம் வாழ்வுகாக்கும்
    நீக்கினால் நஷ்டமாக்கும்.
    சமாதானம் நிம்மதிதரும்
    சரிக்கினால் அழிவுதரும்.
    உன்மானம் காத்திடவே
    உரிமைகளின் காவலர்
    உனக்காக தந்திட்டார்
    உவந்தேநீ ஏற்றிடுவாய். (தானம்...)

    ReplyDelete
  4. நீ தானம் செய்
    நிதானமாய் எதையும் செய்
    நல்ல ஆக்கம்
    இன்றைய சூழலுக்கேற்ற ஆக்கம்

    ReplyDelete
  5. மச்சான் நிதானமாகவே எழுதியிருக்கின்றீர்!

    ReplyDelete
  6. சில நேரங்களில் நிதானம் கூட காலை வாரி விட்டுவிடுகிறது..

    எனவே நாம் செய்யும் செயலால் ஏற்படும் பின் விளைவுகள் நன்மையோ தீமையோ. மனது சமாதானம் ஆனால் போதும் எல்லாமே வெற்றிதான்.

    ReplyDelete
  7. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவை இத்தளத்திற்கு தானம் செய்து நிதானத்துடன் கட்டுரையை எழுதியுள்ள விதம் அருமை வாழ்த்துக்கள்.

    காக்காவின் ஆக்கங்கள் யாவும் வித்தியாசமான விழிப்புணர்வுப் பதிவாக இருக்கும். அதில் இதுவுமொன்று.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers