.

Pages

Tuesday, December 17, 2013

I'm from English மீடியம் :)

நம் தாயின்
மொழி தமிழ்
ஆதலால்
நம் தாய்
மொழி தமிழ்

ஆனால்
நம் பள்ளியில்
நமது இரண்டாம்
மொழி தமிழ்!

தப்புத்தப்பாய்
தமிழ் எழுதுவோர்
I am from English medium
என்று சிலாகிப்பார்

அக்கம் பக்கம்
சென்றாலும்
இரண்டு
அல்லது நான்கு
சக்கர வாகனமே
கதி என்றாலும்
நடை கூடவா
மறந்து போகும்

நடை தளர்ந்தோருக்கு
மூன்று சக்கர
வாகனம்போல்
தமிழை மறந்து
அயல் மொழி
பேசுபவர்
ஊனமாய் கருதப்படுவர்

தாய் காட்டிய
பாசமும்
அவள் ஊட்டிய
தமிழும்
மறக்கலாகுமோ
மு.செ.மு.சபீர் அஹமது

17 comments:

  1. தமிழ் மொழியின் நேசம் உங்களின் பதிவில் தெரிகிறது !

    டிஸ்கி :
    தமிழ் அரசியல்வாதிகளின் வீட்டுப்பேராண்டிகள் கான்வென்ட் பள்ளிகளில் படிப்பதை மறப்பதில்லை :)

    ReplyDelete
    Replies
    1. அரசியல் வாதிகளின் குளறுபடிகள் சொல்லிக்கொண்டே போகலாம்

      Delete
  2. "தமிழே தகராறு இங்கிலீஷ் பேச வந்துட்டாரு" பலபேறு இந்த வார்த்தையை இங்கிலீஷ்ல ரெண்டு வார்த்தை பேசிட்டா நக்கலா சொல்லுவாங்க...

    என் தனிப்பட்ட கருத்து: ஆங்கிலம் சரியாக கற்காமல், இந்தியும் கற்காமல் வெளிநாடுகளில் நம் சகோதரர்கள் கொஞ்சம் அவதியுறுகின்றனர்.

    தமிழை மறக்காது அதே நேரம் தொழில் சார்ந்த முன்னேற்றத்திற்காக பிற மொழிகளை தாய்மொழியின் கண்ணியம் காக்கப்படும் வகையில் கறபதில் தவறில்லை.

    நண்பர் சேக்கனா நிஜாம் கூறியுள்ளதுபோல.. அரசியல்வாதிகளுக்கு தமிழ் பற்றை காண்பிக்க தொண்டர்கள்தான் கிடைத்தார்கள் ..அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு தமிழ் தெரியுமா? என்பது நமக்குத் தெரியாது.


    ReplyDelete
    Replies
    1. மெல்லிசை இளவலே பிற மொழிக்கு நாம் எதிரியல்ல தமிழ் எழுத்துப்பிழை செய்வோர் மீது நாம் குற்றம் சொன்னால் அவர்கள் டேக் இட் ஈசி என்று பதில் உரைக்கிறார்கள் ஆங்கிலப்பிழை செய்வதை சுட்டிக்காட்டினால் தலை குனிகிறார்கள் அவர்களுக்காகத்தான் இந்த என் கிறுக்கல்கள்

      Delete
  3. உங்கள் தாய் மொழிப்பற்று உங்கள் மீது மிகுந்த மரியாதை கொள்ள வைக்கிறது.

    யாரோ என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும். நம் தமிழை என்றும் மறவாமலிருப்போம். தேவைப்படின் பிற மொழிகளையும் கற்போம்.

    ReplyDelete
    Replies
    1. நல் வரவு நண்பரே[காமக் கிழத்தன்]உயிர் வாழ காற்று,உணவு அவசியம்
      காற்று=தமிழ்[அல்லது தாய்மொழி]
      உணவு=பிறமொழி

      Delete
  4. நச்சென்று நாலு வரியில் தாய் மொழி தமிழைப் பற்றி நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    சகோதரர் ஜாஃபர் சொல்வது போல நமக்கு பிற மொழிகளும் உலகத்தொடர்புகளுக்கு அவசியமாகிறது. அதே சமயம் நம் தாய் மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலை நாடுகளில் வசிக்கும் சில தமிழர்கள் தமக்குள் பேசிக்கு கொள்ளும் போது கூட பிற மொழிகளில் பேசிக் கொள்வது தான் வேதனையான விஷயமாக இருக்கிறது.

    ReplyDelete

  5. உடல் ஊனம்
    இது
    யாவரும் அறிந்தது.

    மொழி ஊனம்
    இன்று அறிகிறோம்.

    இருக்கின்ற
    அல்லது
    அவசியப்படுகின்ற
    ஒன்று குறைந்தால்
    அது ஊனம்.

    அவ்வாறு சொல்வதில்
    ஞாயம்
    இல்லாமல் இல்லை.

    அவ்வாறானால்
    விழிப்புணர்வு வித்தகர்
    மு.செ.மு.சபீர் அஹமது அவர்கள்
    சொல்வது
    உண்மைதான்.

    இன்று
    தெரிந்தும்
    இத்தகைய ஊனங்கள்
    பெற்றோர்களே
    தங்கள் பிள்ளைக்கு
    பரிசாகத் தரும்
    அவலம்.

    ஆம் !
    ஊனம்
    விரும்பி உண்டாக்கிவிடும்
    அவலம்.

    தமிழ் மொழி
    தாய் மொழியாக
    பேசப்படும்
    தமிழனிடம் தான்
    இது போன்ற அவலம்
    அதிகம் ஏற்பட்டுள்ளது !

    விழிப்புணர்வு வித்தகரின்
    இக்கட்டுரை
    படிப்பவர்களின் மனதில்
    ஒரு தாக்கத்தை
    நன்கு
    விதைக்காமல்
    போய்விடுமா....
    என்ன ?!

    ReplyDelete
  6. வாழ்க பல்லாண்டு ....
    தமிழ் பற்று மிக்க ..
    உம்மை போன்றோர் இருக்கும் வரை
    தமிழ் தலைக்கும்

    ReplyDelete
  7. காக்கா, தாய்த்தமிழ் காக்க தரமான வரிகள்
    வாழ்க தமிழ், வளர்க அதன் இனிய குரல்!

    ReplyDelete
  8. அதிரை.மெய்ச,நபிதாஸ்,அதிரை சித்தீக்,அவர்களுக்கும் தம்பி ஜஹபர் சாதிக் அனைவரும் தமிழுக்கு ஆதரவு தந்தமைக்கு சந்தோஷம் கொள்கிறேன்

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி.

    அருமையான கவிதை.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  10. வாழ்க தமிழ்; வளர்க உங்களின் பணி

    ReplyDelete
  11. தமிழுக்கு பரிந்து பேசும் ஆக்கத்தில்
    ஆங்கிலத்தில் ஆங்கிலத்தில் கருத்து பரிமாற்றமா...?

    ReplyDelete
  12. தமிழ் ஆர்வலர்களாகிய நாம்[நாங்கள்] மற்ற மொழிகளின் எதிர்ப்பாளர் அல்ல என்பதையும் இங்கே பதிய விரும்பினோம் நானும் சகோ.தனபாலன் அவர்களும்

    ReplyDelete
  13. கிண்டல் அடிப்பவர்கள் அடிக்கட்டும். அதில் உண்மை இல்லை என்று
    சொல்லவில்லை, ஆனால் ஏன் இப்படித் தாழ்த்திக்கொள்வதில், நம்மையே
    சாய்த்துக்கொள்வதில் இத்தனை வன்மமகிழ்ச்சி என்றுதான் புரியவில்லை!
    மிகவும் கெட்டிக்காரத்தன்மையாகச் சொல்லி தன் குடும்பத்தையே
    அழிப்பார்களா? தன் பிள்ளைகள் சாக விடுவார்களா? தங்கள்
    சொத்துகளைச் சாகக்டையில் தள்ளுவார்களா? நல்வீணையைத்
    தெருவில் எறிவார்களா?
    எங்கிருந்து வந்தது இந்த இழிபோக்கு?
    ஆனால் இதனையெல்லாம் கடந்து
    நம் முன்னே நிற்பது பள்ளிக் கல்வியில் தமிழ் மறைவதுதான்.
    இன்னும் 20 ஆண்டுகளில் தமிழ் இருக்குமா என்பது மிக நேர்மையான கேள்வி.
    இந்தக் கிண்டலைக் கூடத் தமிழில் படிக்கும் மக்கள் இருப்பார்களா?
    எழுத்தை ஒலியாக மாற்றினால், பேச்சுப் புரிந்து இளிப்பவர்கள்-சிரிப்பவர்கள்
    இருக்கலாம். நம் மொழியும் பண்பாடும் அறவே அழிவதில்தான் எவ்வளவு
    வன்மத்திளைப்பு சிலருக்கு!!. பார்ப்போம் என்னதான் ஆகின்றது என்று!!

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers