.

Pages

Friday, December 20, 2013

லோக்'பல்' !?

நீண்ட காலமாக எதிர் பார்த்த லோக் பல் எனும் ஊழலுக்கு எதிரான சட்டம் ராஜ்ய சபாவில் ஒருமனதாய் [ ஒரு வகையா !? ] நேற்று நிறைவேறியது லோக்பால் என்பது லோக் = மக்கள், பால் = காவலன், மக்கள் காவலன் என்பதுதான் லோக்பால் வார்த்தையின் பொருள்
   
சென்ற 2011 ல் அண்ணா ஹாஜாரே மற்றும் இன்று டில்லியில் இரண்டு பெரிய கட்சிகளையும் திணற வைத்த ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் சேர்ந்து உண்ணா விரதம் மேற்கொண்டு லோக்பால் திட்டம் நிறைவேற்ற உண்ணா விரதம் இருந்தனர் இதில் அண்ணா ஹசாரே இந்திய மக்களின் மனதில் இடம் பிடித்தார். நம்மில் சிலர் இந்தத்திட்டம் கொண்டு வந்ததே அண்ணா ஹசாரே என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் இது 1963ல் சட்ட வல்லுநர் M.M சிங்வி அவர்களால் உருவாக்கப்பட்டது.
 
இந்த சட்டத்தால் என்னன்ன பயன்கள் என்று பார்ப்போம்...
1. ஊழலுக்கு எதிரான நேர்மையான அமைப்பு இது. இந்த அமைப்பை ஏற்படுத்த பிரதமர்,லோக்சபா சபாநாயகர்,லோ.எதிர் கட்சி தலைவர்,உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர்களைக்கொண்டே உருவாக்கப்படுகிறது

2. இதில் தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள்  அதில் சட்டத்துறை வல்லுனர்கள்  50% பேர்களும் மீதமுள்ள இடத்தை  SC, ST, OBC சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இந்த அவையை பூர்த்தி செய்வார்கள்.

3. மத்தியில் லோக்பால் எனவும் மாநிலங்களில் லோக் ஆயுக்த்தா என்னவும் செயல்படும்  [ லோக் ஆயுக்த்தா எனும் அமைப்பு இப்பொழுதும் சில மாநிலங்களில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது ]

4. ஊழல் வழக்கில் பிரதமரும் குற்றம் சாட்டப்பட்டால் அவரையும்
விசாரிக்கும் அதிகாரம்  இந்த அமைப்பிற்கு உண்டு

5. அனைத்து அரசு மற்றும் பொது ஊழியர்களும் இந்த சட்ட வரம்பில் வருவர்

6. வெளிநாடுளில் இருந்து 10 லட்சத்திற்கு மேல் நன்கொடை பெரும் நிறுவனம்,அமைப்பு ஆகியவையும் லோக்பாலுக்கு கட்டுப்பட்டவர்களே

7. CBI யால் நடத்தும் விசாரணைகளுக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரமும் மேற்பார்வை இடவும் இதற்கு அதிகாரம் உண்டு

8. லஞ்சம், ஊழல் போன்றவைகளால் சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் இதற்கு உண்டு

9. லோக் ஆயுக்த் எனும் அமைப்பு எந்த மாநிலங்களில் இன்னும் அமல் படுத்தாமல் இருக்கின்றதோ அங்கே ஒரு வருடத்திற்குள் அமல்படுத்த வேண்டும்

இந்த திட்டம் நிறை வேற இது சட்டமாக்கப்படவேண்டும் கூடிய விரைவில் அதுவும் நிறைவேறிவிடும், இனி இந்த அமைப்பு மக்கள் நினைப்பதுபோல் சரியாக செயல்பட வேண்டும் காரணம் மனிதன் தவறு செய்யக்கூடியவன் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடியதுபோல் இல்லாமல் சவூதி அரசால் இஸ்லாமிய சட்டம் நிறைவேற்றப்படுவதால் அங்கே குற்றங்கள் குறைவு என்று பல நாட்டவர்களால் சொல்லப்படுவதுண்டு அதுபோல் இந்த லோக்பால் இருக்கும் என்று நம்புவோம்.
மு.செ.மு.சபீர் அஹமது

18 comments:

  1. எங்கே இவற்றை முழுமையா செயல்படுத்த உடுவாய்ங்களா !?

    ReplyDelete
    Replies
    1. சகோ.நிஜம் அவர்களே பகவான்ஜி சொல்வதுபோல்[இது நம் புது வரவு பகவாஜி]நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பினோர் கைவிடப்படார் என்று பெருசுகள் உறுதி அளிக்கவேண்டும்

      Delete
  2. சரியான நேரத்தில் நல்லத் தெளிவாக நாட்டு நடப்பை எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் மிகுந்தப் பாராட்டுக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆதரவு என்றும் வேண்டும் நபிதாஸ் அவர்களே

      Delete
  3. நம்பிக்கைத் தானே வாழ்க்கை !

    ReplyDelete
    Replies
    1. உங்களை நம் வலைத்தளம் சார்பாய் வரவேற்கிறேன் நம்பிக்கையை ஒரு போதும் கைவிட்டு விடாதீர்

      Delete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
    Replies
    1. KMAJ அவர்களின் கருத்து என்ன சொல்கிறது என்றால் காக்கா புது கட்சி ஆரம்பிக்கப்போகிறார்கள் என்று இதன் மூலம் தெருவித்துக்கொள்கிறோம் டும் டும் டும்

      Delete
    2. புதுக்கட்சி ஒன்றும் இல்லே, நம் நாட்டில் எத்தனையோ நல்ல நல்ல சட்டங்கள் இயற்றி அவைகள் யாவும் செத்துப் போய்விட்டன. அவ்வளவுதான்.

      Delete
    3. உங்களுடைய இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுனுக்கு அர்த்தம் புரியாமலா கமண்டு எண்ணிக்கையை எப்படி கூட்டுறது அதான் இப்படி ஒரு தமாசு [புதுசா பச்சி வேணும்னா சாப்பிடலாம்]

      Delete
  5. நல்லதொரு பகிர்வு.

    லோக்பால் நல்லதொரு சட்டம். இது செயலளவிலும் முழுமையடைந்தால் ஊழல் செய்பவர்கள் குற்றச்செயல் செய்து விட்டு சட்டத்திலிருந்து தப்புபவர்கள் அனைவருக்கும் அடிவயிற்றைக் கலக்கிவிடும்.

    ReplyDelete
  6. அரசியல் கட்டுரையில் நீங்கள் ஒரு “சின்னக் குத்தூசி”

    ReplyDelete
  7. கவிஞர்கள் இருவரின் வாழ்த்துக்கு என் அகம் மகிழ்வு கொள்கிறது

    ReplyDelete
  8. வணக்கம்
    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. நல்ல பதிவு ...
    நாட்டிற்கு நல்லது நடந்தால் சரிதான்

    ReplyDelete
  10. நல்லது நடக்க விடுவான்கலா இந்த ஜனநாயக மக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers