.

Pages

Sunday, September 14, 2014

பாவம் தந்தை !

கடை வீதி சென்று
கனி பல வாங்கிவந்து
இல்லம் வந்தடைந்து
இல்லத்தாளிடம் கொடுத்திடுவார்

குழந்தைக்கு தாயவளும்
கனிவாக புகட்டிடுவாள்
தூரத்தே அமர்ந்திருக்கும்
அப்பாவை பார்த்து அதும்

உன்னோடு 'கா' என கூறும்
பாவம் அப்பா பரிதவிப்பார்
பள்ளி பருவம்
வந்த பின்னர்
பக்குவமாய் பாடம் சொல்லி
தந்திடவே முனையும்போது

பிள்ளையின் பார்வையது
வேறுபக்கம் திரும்பிடவே
அப்பாவும் அதட்டிடுவார்
பட்டென ஓடிவந்து
தாயவளும் பிள்ளையை
அணைத்தவாறு படித்தது போதும்
நாளை படிதிடுவான் என்பாள்

பருவங்கள் தப்பிடாமல்
படிப்பிக்க எண்ணும் தந்தை
பிள்ளையின் பார்வை தன்னில்
தந்தையவன் எதிரியாக
தெரியும் போது
பாவமடா தந்தையுமே

காலங்கள் கடந்த பின்னர்
தந்தை தாத்தாவாய் போகும் போது
தன் பிள்ளை செய்யும் தொல்லை கண்டு
இப்படித்தான் என்னையுமே அப்பாவும்
வளர்த்தாரோ
தூரத்தே நின்றிருந்த அப்பா மேல்
முதன் முதலாய் பரிவு வந்து
பாவம் தந்தை என
என் மனமும் சொல்லியது
ஆம், உண்மையிலே
பாவமடா தந்தையுமே

இது பெண் ஆதிக்க காலம்
பாசத்தால் பின்னிய வலையில்
சிக்கியது என்னவோ ஆண் ஆன்மாவே
( இன்னும் சொல்வேன்...)
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்

10 comments:

  1. நெகிழ்ச்சியான கவிதை ! அருமை 

    ReplyDelete
    Replies
    1. இந்தியர்களின் வாழ்வியலில் ...
      தந்தையின் பங்கு இன்றியமையாதது .
      ஆனால் அவன் வாழ்வு ...பாவம் தான்

      Delete
  2. விவாதக்கலை வலைப்பூவில் தினம் ஒரு விவாதம் - வாதமாக எடுத்துக்கொள்ளப்படும். நண்பர்கள் & அன்பர்கள் தங்களின் வாதத்தை முன்வைக்கலாம்..
    http://vivadhakalai.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி அன்பரே ...!

      Delete
  3. பிள்ளையின் மனம் கோணாமல் என்றும் எதிலும் நடக்க வேண்டுமென்று நினைப்பாள் அன்னை.
    இதனால் அன்னை இனிக்கும்.

    பிள்ளையின் வாழ்வு என்றும் எப்பொழுதும் கோணாமல் நடக்கவேண்டும் என்று கண்டிப்புகளை காட்டுபவர் தந்தை.
    இதனால் தந்தை கசக்கும்.

    எனவே பாவம் தந்தையே.

    ReplyDelete
    Replies
    1. கருவை ...சரியாய் சொன்னீர்கள் ..
      நபி தாஸ் அவர்களே

      Delete
  4. அப்பாவின் அறிவுரையுடன் கூடிய பாசம் பிற்காலத்தில் அறியும் என்பதை அழகாக கவி வரியில் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதிரை மெய் சா ..அவர்களின் கூற்று ..மெய் ..

      Delete
  5. தந்தை பற்றிய தரமான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தந்தை ...சொல் ..நல மந்திரம்
      இதில் தந்திரம் இல்லை ..
      எனவேதான் ..வாழ்வில் ஏற்படுகிறது மந்தாரம்

      Delete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers