பெற்றவளும் மகிழ்ந்திடுவாள்
பிறந்த நாள் செய்தி
தாய் சொல்லாத செய்தி
செய்தித்தாள் சொன்னது
ஆம்...
வறுமையில் வாழ்ந்த அவன்
பிறந்தது ஏன் என்பது போல வறட்சி
மிரட்சியாய் தெரிந்த உலகம்
ஏக்கம் இல்லா வாழ்க்கை
ஆசையற்ற மனசு
தன்நிலை உணர்ந்ததினால்
கடலாமை மணல் மீது முட்டையிட்டு
மணல் சூட்டின் இதமதிலே
ஆமை குஞ்சு மணல் மீது
சிறுநடை போட்டு கடலுக்கு செல்லுமது
கடல் தன்னை அடையுமுன்னே
சிறு நரியும் கவ்வி செல்லும்
ஆகாய வட்டமிடும் கழுகுஅதும்
கொத்தி செல்லும் இவை யாவும்
நிகழ்ந்த பின்னே மிஞ்சியது சிறு குழு
ஆமையதை அலையதுவும்
அன்போடு அழைத்து செல்லும்
ஆமைக்கு உணவாக கடல் பாசியும்
காத்திருக்கும்
அமையாது வாழ்க்கை என்று
ஆமை குஞ்சு மணல் இடையே
அமர்ந்து விட்டால் ஆழ்கடல் வாழ்வு கிடைத்திடுமா
வறுமையிலே பிறந்த அவன் வாய் மூடி
இருந்திருந்தால் அவன் வாழ்வும் முடிந்திருக்கும் .
சிறு நரி கூட்டமதும் வட்டமிடும் கழுகுகளும்
ஆமைக்கு காத்திக்கும் அதும் இயற்கை யாமே
ஆமைக்கு இறகு ஆழ்கடலில் மட்டுமப்பா
ஆள் கடல் வாழ்வு வேண்டுமென்றால்
சூல்சியதை தட்டி விட்டு
உழைப்பை வாழ்க்கையாக உறுதியாக பற்றி விடு
நீ பிறந்த செய்தியதை
செய்தி தாள் மூலம் வாழ்த்தாக பெற்றிடுவாய்
ஈன்ற மகன் பிறந்த செய்தி கேட்டு
பெற்றவளும் மகிழ்ந்திடுவாள்
'பத்திரிகைத்துறை நிபுணர்'
பிறந்த நாள் செய்தி
தாய் சொல்லாத செய்தி
செய்தித்தாள் சொன்னது
ஆம்...
வறுமையில் வாழ்ந்த அவன்
பிறந்தது ஏன் என்பது போல வறட்சி
மிரட்சியாய் தெரிந்த உலகம்
ஏக்கம் இல்லா வாழ்க்கை
ஆசையற்ற மனசு
தன்நிலை உணர்ந்ததினால்
கடலாமை மணல் மீது முட்டையிட்டு
மணல் சூட்டின் இதமதிலே
ஆமை குஞ்சு மணல் மீது
சிறுநடை போட்டு கடலுக்கு செல்லுமது
கடல் தன்னை அடையுமுன்னே
சிறு நரியும் கவ்வி செல்லும்
ஆகாய வட்டமிடும் கழுகுஅதும்
கொத்தி செல்லும் இவை யாவும்
நிகழ்ந்த பின்னே மிஞ்சியது சிறு குழு
ஆமையதை அலையதுவும்
அன்போடு அழைத்து செல்லும்
ஆமைக்கு உணவாக கடல் பாசியும்
காத்திருக்கும்
அமையாது வாழ்க்கை என்று
ஆமை குஞ்சு மணல் இடையே
அமர்ந்து விட்டால் ஆழ்கடல் வாழ்வு கிடைத்திடுமா
வறுமையிலே பிறந்த அவன் வாய் மூடி
இருந்திருந்தால் அவன் வாழ்வும் முடிந்திருக்கும் .
சிறு நரி கூட்டமதும் வட்டமிடும் கழுகுகளும்
ஆமைக்கு காத்திக்கும் அதும் இயற்கை யாமே
ஆமைக்கு இறகு ஆழ்கடலில் மட்டுமப்பா
ஆள் கடல் வாழ்வு வேண்டுமென்றால்
சூல்சியதை தட்டி விட்டு
உழைப்பை வாழ்க்கையாக உறுதியாக பற்றி விடு
நீ பிறந்த செய்தியதை
செய்தி தாள் மூலம் வாழ்த்தாக பெற்றிடுவாய்
ஈன்ற மகன் பிறந்த செய்தி கேட்டு
பெற்றவளும் மகிழ்ந்திடுவாள்
'பத்திரிகைத்துறை நிபுணர்'
அதிரை சித்திக்
பிறந்தவர் புனிதரெனில்
ReplyDeleteபிறப்புகள் கொண்டாடப்படும்
அறமது யாதெனில்
அன்னவரறிவு அறிந்திடவே
கொண்டாட்டம் என்றதில்
குதூகலம் அறிவினிற்கே
திண்பதற்கும் தந்திடுதல்
திரேகமும் இனித்திடவே
இறைமையின் ஆட்டத்தில்
இதுவெல்லாம் நாட்டங்களே
மறைத்திடும் மதியில்
மாண்புகள் வீம்புகளே !
கருத்துடன் கவிதையை செய்தியாக சொன்ன விதம் அருமை !
ReplyDeleteஏழை பிறந்த செய்தி
ReplyDeleteஏற்றமிகு கவி வரி
மாலை சூடி வந்து
மணக்கச் செய்த பூ வாசம்