.

Pages

Saturday, December 31, 2011

வாகனங்கள் ! பள்ளிக் குழந்தைகளின் எமனா ?


அதிரை : 04/12/2011,

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் அதிகம் நிறைந்த ஊர்களில் அதிரம்பட்டினமும் ஒன்று நமது சமுதாயத்தை சார்ந்த காலம்சென்ற கொடை வள்ளல்கள் கல்வி நிறுவனங்களை நிறுவி ஊருக்கே பெருமை சேர்த்து தந்தவர்கள். இக்கல்வி நிறுவனனங்களில்
 பயின்ற மாணவ, மாணவிகள் இன்றும் பல்வேறுத்துறைகளில் உள்நாடுகளிலும் மற்றும் மேலை நாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர். இவ்வளவு சிறப்புமிக்க ஊரில் சில தனியார் ஆங்கில கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளும் தங்களுடைய சேவையை மேலும் மெருகேற்றி ஊருக்கே பெருமை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
சரி விசயத்துக்கு வருவோம், இப்படங்களை பாருங்கள் ஆட்டோக்களில், ஆம்னி வேன்களில் நமது குழந்தைகள் நின்று கொண்டும், டிரைவர் சீட்களில் இருபுறமும் மற்றும் பேக் சீட் பின்புறம் உட்கார்ந்து பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய தயாராவதை. இதில் அவரவர் ஸ்கூல் பேக்குகளையும் அதில் வைத்துக்கொள்ளவேண்டும். பெரும்பாலும் எரிவாயு ( GAS ) நிரப்பட்ட வாகனங்களாவே உள்ளது.
இவர்கள் ஒரு ட்ரிப்களில் சுமார் பதினைந்து முதல் இருபது குழந்தைகளை ஏற்றிச்சென்று ( ஒரு ஆட்டோவில் அரசு விதிப்படி நான்கு பேரும், ஆம்னி வேன்களில் எட்டு பேரும் அமர்ந்து பயணம் செய்யலாம் டிரைவர் உட்பட ) ஒருநாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு , மூன்று ட்ரிப்கள் அசுர வேகத்தில் பள்ளிகளை நோக்கி பயணிக்கிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மேலும் இதற்கு முன்உதாரனமாக கடந்த கால தின பேப்பரில் கொடூர விபத்துகளைப் பற்றி வந்த செய்திகளைப் படித்து அறிந்திருப்போம். இதனால் ஏற்படும் இழப்பீடுகள் குழந்தைகளையும், அவர்களது பெற்றோர்களையும் மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் சார்ந்துவிடும் சூழல் உருவாகிவிட வாய்ப்புகள் அதிகம்.

தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு ஓர் வேண்டுகோள் !
உயர் கல்வியை பயிற்றுவித்து மாணவ, மாணவிகளை உயர்ந்த நிலைக்கு கொண்டுச்செல்லும் தங்கள் பள்ளிகளின் சேவைகள் மேன்மையானது. அதை யாராலும் மறுக்க இயலாது. அதேசமயத்தில் பள்ளிகளில் கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நேரம் முடிந்தவுடன் அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேரவும் அந்த அந்த பள்ளிகளே பொறுப்பாகும். ஆகையினால் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் கூடுதலான குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் ஏற்றி வருவதை தடைசெய்து அவர்கள் பாதுகாப்பாக அவரவர் வீடு போய்ச்சேர தங்கள் பள்ளிகளின் மீதுள்ள கடமையாகும். ஆகையால் தங்கள் பள்ளிகளுக்கு கூடுதலாக வாகனங்களை அனுபவமிக்க டிரைவர்களைக் கொண்டு இயக்குவதன் மூலம் இழப்பீடுகளை தவிர்க்கலாம் மற்றும் பெற்றோர்களின் பயம் உணர்வு நீங்கி அவர்களிடம் நற்பெயரை அடைந்து பள்ளியின் தரத்தை மேன்மேலும் உயர வைக்க ஒரு நல்ல வாய்ப்பாகும்.
விபத்துக்களைத் தடுப்போம் ! குழந்தைகளின் எதிர்காலத்தை வளர்ப்போம் !!

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers