இப்போது சிட்டுக் குருவிகளைக் காண்பது என்பது மிகவும் அபூர்வம்.. சிட்டுக்குருவி இனத்தைக் காத்து முன் போல மீண்டும் வானில் வட்டமிட வைக்க விட பல முயற்சிகள் நடந்து வருகிறது.
ஆண்டுதோறும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டு குருவிகள் தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது. அழிந்து வரும் சிட்டு குருவி இனத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குருவிகளில் சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, கருங்குருவி, படை குருவி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. குருவிகளின் அழிவிற்கு தானிய உணவு பற்றாக்குறை மற்றும் பயிர்களை காப்பாற்ற பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் காரணமாகும்.இன்று வீடு கட்டுவதற்காக வயல் வெளிகள், வனங்களை அழித்து விட்டோம். இதனால் குருவிகள் கூடு கட்ட இடமின்றி போய் விட்டது. உலகம் முழுவதும் வெப்ப மண்டலமாக மாறியதாலும், செல்போன் டவர்களில் எழும் கதிர்வீச்சாலும் குருவிகளுடன் சேர்த்து, 226 பறவையினங்களும் அழிந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்தார். மேலும் அதனை காப்பாற்றும் விதமாக பள்ளிகளில் வைக்க ப்ரத்யேகமாக வடிவமைக்கப் பட்டக் கூடுகளை (கம்பங்களில் மேல் வைக்கப்படும் வகையில்) அமைத்தார். தவிர, அங்கு 170 குருவிக் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன (இந்தியாவிலேயே டெல்லி நகரில் தான் இதன் எண்ணிக்கை அதிகம்).
மேலும் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி சந்தையடியூரைச் சேர்ந்தவர் கோவில்பிச்சை. இவரது மகன் ஜேசுராஜ்(வயது 21). இவரது தங்கை தனீஷ்(வயது 18). கல்லூரியில் பயிலும் இருவருக்கும் உயிரினங்கள், பறவைகள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்கள்.
தற்சமயம் அழிந்து கொண்டிருக்கும் உயிரினமான சிட்டுக்குருவிகளை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க இருவரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதற்காகவே அண்ணன்–தங்கை இருவரும் கல்லூரியில் விலங்கியல் பாட பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வருகின்றனர்.
மேலும் மார்ச் 20–ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி இவர்கள் இருவரும் சிட்டுக்குருவிக்கென கூடுகள் தயாரித்து இலவசமாக வீடுகள், கடைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.
இது பற்றி ஜேசுராஜ், தனீஷ் இருவரும் கூறும் போது, 15 வருடங்களுக்கு முன்பு வீடுகள் பெரும்பாலும் ஓடுகள் வைத்து கட்டப்பட்டிருக்கும். மேலும் அதிக அளவில் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தியதால் கிணறுகள் அதிகமாக இருக்கும். தற்காலத்தில் வீடுகள் அனைத்தும் கான்கிரீட் வீடுகளாகவும், கிணறு என்பது இல்லாமலும் போய் விட்டது. இதனால் சிட்டுக்குருவிகள் வாழ்விடம் இழந்து தவிப்பதை நாங்கள் இருவரும் உணர்ந்தோம்.
சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை மீட்டுக் கொடுக்க செயல்படுவது என சபதம் செய்தோம். அதன்படி 100க்கும் மேற்பட்ட செயற்கையான கூடுகளை நாங்கள் உருவாக்கினோம். இவற்றை அக்கம் பக்கம் வீடுகள், கடைகளுக்கு கொடுத்து சிட்டுக்குருவி பற்றிய விழிப்புணர்வும், அவற்றைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கி வருகிறோம். உயிரினங்களின் வாழ்விடத்தை மீட்டுக்கொடுப்பதில் உயிர் உள்ள வரை போராடுவோம் என்றனர்.
இப்படிச் சிட்டுக்குருவி வாழ்வதற்கு ஏதுவாக இருந்த நடைமுறைகள் அனைத்தும் தழைகீழாக மாறியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நகர பகுதிகளில் குறைந்து விட்டது. ஆனால், அந்த இனமே அழிவுக்கு சென்றுவிட்டதாக கூறும் எந்த ஆதாரமும் இல்லை.
ஆகவே நமதூரிலும், நமதூரைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு பள்ளி/கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து சிட்டுக்குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ஜேசுராஜ், தனிஷ் போன்று, நம் பகுதிகளிலும் சிட்டுக்குருவி கூடுகள் அமைத்து சிட்டுக்குருவியை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கலாம்.
உங்கள் சகோதரன்

ஜாஃபர்