.

Pages

Thursday, January 31, 2013

கமலுக்கு ரசிகனின் கடிதம் !

உலக நாயகன் கமல் அவர்களுக்கு உங்கள் தீவிர ரசிகன் [ தீவிரவாதியுள்ள ] எழுதும் மடல்...

தங்களுடைய அனைத்து படங்களையும் பார்த்து ரசித்து ருசித்து இருக்கும் உங்கள் ரசிகன் கான்.

சமீப காலமாக தாங்கள் எடுக்கும் படங்களில் இஸ்லாத்தை சாடுவதாக சில அமைப்புகள் மூலமாக தான் நான் அறிந்தேன் இருந்தும் தங்களின் படத்தை உதாசினப்படுத்தியதில்லை வெற்றியடைய பாடுபட்டு இருக்கிறேன்.

இன்று தாங்கள் எடுத்து இருக்கும் விஸ்வரூபம் [ படம் ] என்னையும் பாதித்திருக்கின்றது ! என்ன காரணங்கள் என்பதை ஒவ்வொன்றாக நான் வரிசைப்படுத்துகிறேன்.

1. இலங்கையில் போராடிய விடுதலைப் புலிகளை தமிழர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?

2. சுபாஷ் சந்திர போஸ் அவர்களையும் பகத்சிங்கையும் இந்தியர்களாகிய நாம் போராளி என்போமா ? தீவிரவாதி என்போமா ?

3. இலண்டன்காரனுக்கு [ வெள்ளையனுக்கு ] சுபாசும், பகத்தும் தீவிரவாதி அமெரிக்கனுக்கு ஆப்கானிஸ்தானும், பலஸ்தீனியனும், சதாம் ஹுசேனும்  தீவிரவாதி. நீங்கள் அமெரிக்கனா வெள்ளைக்காரனா ? நீங்கள் அமெரிக்கா கண்ணோட்டத்தோடு ஆப்கானை ஏன் பார்த்தீர்கள் ?

4. அமெரிக்கனுக்கு வக்காலத்து வாங்குவது போல் அமெரிக்கன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்கள் என்பதாய் வசனம் வைத்தீர்களே ஏன் ?

5. ஈராக்கிலும் , ஆப்கானிலும், பலஸ்தீனிலும் [ இஸ்ரேல் ] குழந்தைகளை கொன்றக் காட்சிகளை செய்திகளில் தாங்கள் பார்க்க வில்லையா ?

தங்களின் இந்த செயல் ஆஸ்கருக்காக ஆசைப்பட்டு அமெரிக்கா கண்ணோடத்தோடு ஆப்கானை பார்த்து [ ஆப்கானியர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே ] படம் எடுத்தது என்பதாய் நான் உனர்கிறேன்.

நிறைய பிரச்சனைகளை இதன் மூலம் சந்தித்துவிட்டீர். இனையதளத்தில் வெளியிட தியேட்டர்காரர்கள் எதிர்த்த பொழுது, இந்த படத்தின் உரிமையாளன் நான். இது எப்படி வெளியிட வேண்டும் என்பதை நான் தான் முடிவெடுப்பேன் என்று வீராப்போடு பேசியதை நானும் ரசித்தேன்.

இஸ்லாமியர்கள் தங்கள் படத்தை எதிர்க்கும் பொழுது ,சிறு கூட்டம் என்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் 300 ஆதாரங்கள் இருக்கின்றது என்று மேலும் எங்கள் மனதை புண்படுத்தினீர்கள் !

இன்றோ இந்த மாநிலத்தை அல்லது இந்த நாட்டை விட்டே வெளியேறப்போகிறேன் என்கிறீர்கள் ! உங்களுடைய கர்வம் என்னானது  ? தாங்கள் பிறந்த மன்னை விட்டு போக நாங்கள் விடமாட்டோம்.

நன்றி..!  உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...

மு.செ.மு.சபீர் அஹமது

மரண அறிவிப்பு [ அதிரை சித்திக் தாயார் ]

தஞ்சை மாவட்டம், அதிரை நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் இப்ராஹீம் அவர்களின் மனைவியும், அப்துல் ஹாதி, சரபுதீன், அதிரை சித்தீக் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிதா அம்மாள் அவர்கள் இன்று [ 31-01-2013 ] காலை 7 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.

[ இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்படும்.

பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கைத் துறை நிபுணருமாகிய அதிரை சித்திக் அவர்களின் தாயார் ஆவார்கள். 

Wednesday, January 30, 2013

தஞ்சை(ப்) பூங்கா !



அதிரை – இது சேது பெருவழிச் சாலையில் அமையப் பெற்றிருக்கும் கடற்கரையோர ஊர். இங்கிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சாவூர், இவை வரலாற்று நகர், சுற்றுலா நகர், தொழில் நகர் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கூடுதலாக பெற்றிருந்தாலும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்நகரின் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளப் பகுதியில்  'சிவகங்கைப் பூங்கா' ஒன்று உள்ளது. இவை தஞ்சை நகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்டவையாகும். கோடை கால விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் வரை இங்கு வந்து செல்வது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


இப்பூங்காவில்....
சிறுவர் சிறுமிகளை மகிழ்விக்க மான், வான்கோழி, பச்சைக்கிளி, வாத்து போன்ற பறவை இனங்களும், நரி, முயல், புறா, சீமை எலி, யானை போன்ற விலங்கு இனங்களும் உள்ளது.
சிறுவர் சிறுமிகளுக்கென்று இருக்கும் சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் விளையாட்டு, குடை ஊஞ்சல் போன்றவற்றில் குழந்தைகள் பலர் விளையாடி மகிழ்கின்றனர்.


கோடை வெயிலின் உஸ்ணத்தைப் போக்குவதற்கென்றே அங்கு காணப்படுகின்ற செயற்கை ஊற்று குளத்தில் பெரும்பாலும் சிறுவர் சிறுமிகள் பலர் குளித்து மகிழ்கின்றனர். 

நீந்துவதற்கென்று கண் கவர் நீச்சல் குளமும் அங்கு இடம் பெற்றுள்ளதோடு மட்டுமல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடிச் செல்லும் 'தொங்கு பாலம்' நம் அனைவரையும் சுண்டி இழுக்கும் !


இப்பூங்காவில் அமைந்துள்ள மிகப்பெரிய குளத்தை சுற்றிப் பார்ப்பதற்கென்றே மிதி படகு சவாரி, துடுப்பு படகு சவாரி போன்றவற்றோடு அனைத்து பகுதிகளையும் ஒரு முறைச் சுற்றிவர ரயில் சவாரியும் உள்ளது. 


முதியோர்கள் இல்லைப்பாறுவதற்கென்று படர்ந்த புல்வெளி, அரச மரம், ஆழ மரம், அசோகா மரம், யானைக்கால் மரம் ( ? ! ) போன்ற வயது முதிர்ந்த பெரிய மரங்களும், அழகிய செடி வகைகளும் பார்ப்பதற்கு அழகுறக் காட்சியளிக்கின்றன.
பூங்காவிற்கு வருகை தரும் பல குடும்பங்கள் தங்களின் வீட்டிலிருந்து கட்டிச்சோறு, புளிச்சோறு, தயிர்ச்சோறு போன்றவற்றை எடுத்துவந்து ஆங்காங்கே இருக்கின்ற நிழற்கூடத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது நம்மை நெகிழ வைக்கும்.



சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள் பதிவு ]

[ 13 ] ஏன் சிரித்தார் கவிஞானி..? சிரிப்பது தொடர்கிறது...

[ முன் எச்சரிக்கை கவி ]
வீட்டிற்குள் விசும்பல் சப்தம்
தேற்றும் தாயின் குரல்
என்றும் இசை சப்தம் ஒலிக்கும்
வீட்டில் விசும்பும் குரல் கேட்டு
உறவே கூடியது
மகன் அருகில் தாய் இருந்தாள்
வீட்டின் சூழல் வசதி வாய்ப்பை
பறை சாட்டியது
வீட்டின் நிலை கண்ட கவிஞானி
ஏளனமாய் சிரித்து விட்டார்
ஏன் சிரித்தீர் என்று பலர் கேட்க
வருமுன் காட்கா விடில்
பெரும் துன்பம் வந்து சேரும்
இந்த வீட்டு பாலகனும்
பள்ளிக் கூடம் சென்று வந்தான்
பள்ளியில் பயின்ற பாடங்களை
வீட்டில் வந்து பயிற்சி செய்ய
சூழலுமே சரியில்லை
தொலைகாட்சி பெட்டியது
தினம் தினம் அழுத வண்ணம்
அனைவரையும் அழைத்திடும்
மடி கணினியோ நொடி பொழுதையும்
வீணடித்து செல்கிறது
ஒரு நாள் பொழுதினை போக்கிட
ஓராயிரம் சாதனங்கள்
இவை அனைத்தும் இவன் படிப்பை
பாழடித்து விட்டதையா
பொது தேர்வு வந்த போதும்
வீட்டு பாடம் படிக்கவில்லை
படிக்காத பாலகனை ஏன் என்று
இவள் கேட்க வில்லை
தேர்ச்சி பெறா மகன் அழுகையை
என் என்று கேட்கின்றாள்
பொது தேர்வு வரும் முன்னே
மகனை படிப்பினில் தயார் செய்து
தேர்வெழுத அனுப்பி வைத்தால்
இக்குடும்பம் இன்பமாக சிரித்திருக்கும்
நேரங்களை வீணடித்து அழுதிருக்க
தேவையில்லை என சிரித்தார்
நம் கவிஞானி
[ சிரிப்பது தொடரும் ]

Monday, January 28, 2013

டாக்டரும்... சினிமா டிக்கட் கிழிப்பவரும்...

தலைப்பை பார்த்ததும் காமெடி கதையென்று நினைத்து விடாதீர்கள் ! மிகவும் கவனமாக படிக்க வேண்டிய செய்தி

சரி விசயத்திற்கு வருகிறேன்...

தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் தஞ்சாவூரில்
தங்களின் மருத்துவமனையை நிறுவி மருத்துவம் பார்த்து வருகின்றனர்

குழந்தைகள் மருத்துவத்திற்கும் சில புகழ் பெற்ற மருத்துவர்கள் உண்டுஅதில் முதியவர் சீதையின் மறு பெயரை முதலாவதாகக் கொண்டவர். இவர் மருத்துவம் கைராசிக்காரர் என்று பெண்கள் மத்தியில் நல்லகருத்து உண்டு !? எனவே குழந்தைகளுக்கு சிறு நோய் என்றாலும்உடனே அவரிடம் குழந்தைகளை அழைத்து செல்வதை வழக்கமாககொண்டுள்ளனர். இதனால் சினிமா தியேட்டரை போல் என்றும் ஒரே கூட்டம் ! டாக்டரும் அவசர கதியாய் ஒரு குழந்தைக்கு ஐந்து நிமிடம் வீதம் மருந்து, ஸ்கேன் என்று எழுதி காசு பார்த்து விடுகிறார் எப்படி சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவரின் அவசர கதிபோல்செயல்படுகிறார் !

சென்ற வாரம் எனது பேத்திக்கு விட்டு விட்டு ஜுரம் வர உள்ளூர்
டாக்டரிடம் கூட்டி செல்ல மருத்துவம் வேலை செய்ய வில்லை
குழந்தை துவண்டு போய் விட்டாள் ஒரு வயது குழந்தை வலியை
சொல்ல தெரியாமல் முனக்கம்... முதியவரிடம் [ டாக்டரிடம் ] தஞ்சைக்குஅழைத்து செல்ல...

சினிமா டிக்கட் கொடுப்பதை போல் ஸ்கேன் எடுக்கசொல்லி ஒரு டிக்கெட் மருந்துக்கு ஒரு டிக்கெட் ..அதனை பெற்று கொண்டுஊர் வந்து சேர்ந்தார்கள். மருந்து வேலை செய்ய வில்லை. பிள்ளை நிலை கவலை கிடமாக போகவே உள்ளூர் டாக்டரிடம் அழைத்துசெல்ல... இத்தனை நாள் ஜுரம் விட்டு விட்டு வருகிறது என்றால் ரத்தபரிசோதனை செய்து அதனை பார்த்து விட்டு தான் என்னால் எதுவும் சொல்ல இயலும் என்று அறிவு பூர்வமாக கூறினார் ரத்தம் பரிசோதனை செய்யப்பட பிள்ளைக்கு டெங்கு அறிகுறி தெரிகிறது உடனே தஞ்சைக்கு செல்ல உத்தரவிட்டார் இறைவனின் பேருதவியால் பிள்ளை குணமாகி கண் விளித்து பார்க்கிறாள். ஸ்கேனில் கிடைக்கும் கமிசன் கூடுதல் என்பதால் அந்த கிழம் ஸ்கேன் டிக்கெட் கிழித்து கொடுத்து விட்டது. இரத்த பரிசோதனை செய்ய அவருக்கு மனமில்லை !

எனது அருமை சகோதரர்களே !
விட்டு விட்டு ஜுரம் வந்தால் ரத்த பரிசோதனை செய்ய தவறாதீர்கள்..! கூட்டம் அதிகம் உள்ள டாக்டர் சினிமா டிக்கட் கிழிப்பவர் போல் செயல்படாமல் இருந்தால் மட்டுமே நோயாளி நிலை அறிய முடியும் அனைவரிடமும் இந்த செய்தியை எடுத்துச்சொல்லுங்கள்.

அதிரை சித்திக்

Sunday, January 27, 2013

சினிமா ஒரு கலாச்சார சீர்கேடா !?

சினிமா ஒரு கலாச்சார சீர்கேடு, பொய்யின் பெட்டகம், கால விரயம்.உண்மை கவிஞனும், பாடகனும், தாளம் போடுபவனும் திரைக்கு பின்னாள் தள்ளப்பட்டு பொய் பிம்பம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓர் சாதனம் தான் சினிமா திறை[துறை]
  
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு எத்தனையோ இளம் பொண்கள் வீட்டை விட்டு ஓடிப்போயும், வாழ்க்கையை சீரளித்தும்  வாடியவர்கள் பல பேர்களுண்டு 10 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து ஒரே பொய்யை தம் படத்தில் காட்டும் பொழுது பொய்கள் உண்மையாக்கப்படுகின்றது. 

பழையகால சினிமாவில் சாம்பிரானி புகை போடுபவரும் நம்மல்கி நிம்மல்கி என்று தமிழை கொலை செய்பவரை தான் முஸ்லீம் என்று காட்டினார்கள்.

இன்றோ நாட்டை காட்டிக்கொடுப்பவனும் குண்டு போட்டு சாமானியனை கொல்பவனும் மனித வெடிகுண்டாய் செயல்படுபவனும் தான் சினிமாக் காரர்களுக்கு இஸ்லாமியர்கள் ! தங்கள் பணப்பெட்டியை நிறப்ப ஏன் மற்ற சமுதாயத்தை கொச்சை படுத்துகின்றீர் ?

பொய்யர்களே 5 அடி உயரத்தில் குதிப்பதற்க்கு டூப் [ மாற்று நபர் ] வைத்துக்கொள்ளும் பயந்தான் கொள்ளிகளே ஏன் இந்த வீண் பதட்டம்? ஏற்படுத்துகின்றீர்கள் ?

அனைத்து சமய, சமுதாய மக்களே அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் எந்த சினிமா பெண்களை போகப்பொருளாக காட்டுகிறதோ, காமக்களியாட்டம் போடுகிறதோ, வாழ்க்கைக்கு ஒத்துவராத கட்டுக் கதைகளும் காட்டப்படுகிறதோ அவைகளை எதிர்த்து விஸ்பரூபம் எடுப்போம் நாமும்.

பொய் பிம்பங்களுக்கு சாட்டை அடி கொடுப்போம் !

மு.செ.மு.சபீர் அஹமது


Friday, January 25, 2013

[ 1 ] இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை [ ஒலிப்பேழை ] !



இலண்டன் தமிழ் வானொலியில் ‘கவியன்பன்’ அபுல் கலாமின் கவிதை :
மழையில் பள்ளிக்குச் செல்லும் மாணவி

நடுத்தெருவின்
நடுத்தெருவில்
நற்றளிர் நடை
நடுங்கும் கையில் குடை

பிஞ்சுக் கையில்
மஞ்சள் பையில்
புத்தகம் யாவும்
மொத்தமாய் நனைய
குடையின் பிடிதளர
நடை வேகமாய்
உடை நனைந்த
மழைக்காலம்
மனத்தினில்
கனாக்காலம்

விடாமுயற்சியின் விடியல்
விடாமழையிலும் குடையில் !
தடையிலாப் பயணம்
நடையிலே கவனம் !

படிப்பில் தீவிரம்
துடிப்பில் தெரியும் !

பாடம் படிக்கும்
இச்சிறுமி
பாடம் கற்பிக்கும்
ஆசிரியையாய்

“மழையென்று சொல்லி
மடிதல்;
பிழையென்று சொல்லிப்
படிப்பிக்கும்”

வாழ்த்துகிறேன் உன்னையும்
வளர்த்தெடுத்த பெற்றோரையும்
கற்பித்த ஆசிரியையும்

சோம்பல் என்னும்
சாம்பல் போக்கித்
திறமைத் தீயைத்
திறம்படத் தூண்டும்
வேகம் உன்றன் நடையில் !

இப்படித்தான்

இடியாய்ச் சத்தமும் வாழ்விலே
...இன்னலாய் வந்திடும் போதில்
துடியாய்த் தோல்வியில் துவண்டிடத்
....தோன்றிடும் வேளையில் நீயும்
பிடியாய்க் கொள்வது துணிவுடன்
....பிடித்தவுன் குடையுடன் கூடி
மடியா நோக்கிலே படிப்பினை
...மட்டுமே நினைத்தலைப் போலே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

Wednesday, January 23, 2013

[ 12 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

விரக்தியால் சிரித்தான் வாலிபன்
அவன் சிரிப்பை மிகை படுத்தி
சிரித்தார் கவிஞானி
ஏன் சிரித்தீர் ? என பலர் கேட்க
பதில் பகிர்ந்தார் கவிஞானி
வகை வகையாய்
உணவு உண்டு வளர்ந்தவன்
சொல் கேளாமல்
மனம் போன போக்கில்
நடந்த மகன் கல்லூரி
காலங்களை கன பொழுதில்
களித்திட்டான் 
கல்வியோடு காதலையும்
கற்று தேர்ந்தான்...
இதையறியா பெற்றோர்கள்
மணமுடிக்க முடிவெடுத்து
குணமுள்ள மங்கை தனை
வளமுள்ள இடத்தில்
ஊரறிந்து உறவறிந்து
குடும்ப பலமறிந்து
பெண் பார்த்து பேசி வைக்க
இவனோ
அழகு பதுமை ஒருத்தியிடம்
மனதை பறிகொடுத்து
மாலை மாற்றி பெற்றோர் முன்
வந்து நின்றான் !

காதலியின் ஆணைக்கேற்ப
பட்டணம் வந்து சேர்ந்தான்
அழகு குலையா தோற்றம் வேண்டி
அனுதினமும் அழகு கலை பயின்றதனால்
அடுக்களைக்கு செல்ல வில்லை
இவன் பசிக்கு சிற்றுண்டி சாலையே
கதியாயிற்று இப்பவே
இப்படியென்றால் மக்கா
பிள்ளை பெற்றால் எப்படியோ
என்றெண்ணியே சிரித்தேன் ஐயா
என பகிர்ந்தார் கவிஞானி..!
[ சிரிப்பது தொடரும் ]

Tuesday, January 22, 2013

நான் பெத்த மொவனே !

நமது வாழ்வில் முக்கிய அங்கம் தாய். தாயின் சிறப்பு விலைமதிப்பற்றது தாய் அன்பிற்கு ஏதும் ஈடாகாது.

மாதா :                                         
தாய் தங்கத் தாம்புலத்தில் அமர வைத்து தலை மேல்வைத்து கொண்டாடப்பட வேண்டியவள் தன் காலுக்கு கீழே சுவர்க்கத்தை வைத்திருப்பவள்; தாயவள் தூயவள் தாயைச் சிறந்த கோவிலும் இல்லை என்பர் வணக்கஸ்தளத்தை அலங்கரிக்கு முன் தாயை பராமரிப்பதே மேல் பணிக்குக்குச் செல்லும் முன் தாய்க்கு பணிவிடை செய்துவிட்டுச் செல்வது சிறப்பு.

தாய் தாரமாகிறாள் தமக்கையாகிறாள் பாட்டியாகிறாள் உறவுகளாள் பலமுகம் பெருகிறாள் அவள் எப்படிப்பட்டவளானாலும் தாய் உள்ளத்தோடு இருத்தலே பெண்னின் சிறப்பு.

கோபம்கொண்ட மனைவி சமைக்காமல் படுத்துவிடுகிறாள்

கோபம்கொண்ட தாய் சமைத்துவிட்டு பசியோடு படுத்துவிடுகிறாள்

ஒரு பெண் தாயாகவும் தாரமாகவும் இருக்கையில் மேற்ச்சொன்ன விஷயம் உருத்தலாம் கோபம் கொண்ட மனைவி தன் பிள்ளைக்கு மட்டும் உணவு ஊட்டிவிட்டு தானும் தன் கோபத்திற்க்கு காரணமான  கனவரையும் பசியோடு படுத்து விட மேல குறிப்பிட்ட விஷயம் சரியாகி விட்டதல்லவா!

தாயை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பு பெண் பிள்ளைகளை விட ஆண் மகனுக்கே பொறுப்பு உண்டு பெண் பிள்ளைகள் தன்னுடைய கணவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவள் ஆணுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை நாம் எத்தனையோ சம்பவங்களை கேட்டிருக்கிறோம் மகனுக்குத்தான் பொறுப்பு அதிகம் ஆகையால் நாம் நம் வயது முதிர்ந்த தாயை நம் பிள்ளைகளை பராமரிப்பதுபோல் கடைவீதிக்கு செல்லும் பொழுதெல்லாம் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து வாங்கும் தீன் பண்டங்களை தம் முதிய தாய்க்கும் வாங்கி கொடுத்து அருகில் அமர்ந்து சாப்பிடக்கொடுத்து பின் சாப்பிட்ட உணவு உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா என்பதையும் நாமே கவனிக்க வேண்டும்.

தாயை வெறுக்கின்ற சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் அது அவர்களின் துரதிஸ்டம் பிள்ளைகளின் செயல்பாடுகளில் குறை கண்ட தாய் பிள்ளைகளில் வேறுபாடான பரிவை காட்டும் தாயும் இருக்கத்தான் செய்கிறார்கள் இது காலத்தின் கோலம் கட்டளையிட்டவனின் கட்டுப்பாட்டை மீருதல் எது எப்படியோ தாயிடம் நாம் காட்டும் பரிவு, பற்று, பாசம் எந்தவகையிலும் குறைவு இருக்கக்கூடாது.

பிதா :
ஆதி மனிதர் ஆதம் [ நபி ] மின் விளா எலும்பில் இருந்துதான் ஹவா [ அலை ] படைக்கப்பட்டார் [  ஏவாள் ] இது இஸ்லாத்தின் கோட்பாடு பரலோகத்தில் [ அல்லாஹ் ]இருக்கும் பிதாவே என்கிறது கிரிஸ்துவம் சிவனில் பாதி பார்வதி என்கிறது இந்து மதம் இப்படி அனைத்து மதக்கோட்பாடுகளும் ஆணிற்க்கு அந்தஸ்தை கொடுத்திருக்கிறது.

தாய் இடுப்பில் சுமக்கும் பிள்ளையை தந்தை தோளில் சுமக்குறான் தான் காணாததையும் பிள்ளைக்கு காணச்செய்கிறான் உரிமையை விட்டுக்கொடுக்கிறான் எனக்கே எனக்கா என்று ஆசையாய் காதலித்த மனைவியின் அன்பை பிள்ளைக்கு விட்டுக்கொடுத்து பகிர்ந்து கொள்கிறான்.

சொத்தின் உரிமையை தம் பிள்ளைகளுக்காக தாரை வார்க்கிறான் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் செல்வ செழிப்புள்ள தந்தைக்கும் இந்த பழமொழி பொருந்தும் தாய் சோரூட்டினால் தந்தை அறிவூட்டுகிறான்.

தாயை மதிப்போம் அரவணைத்து வாழ்வோம் !

மு.செ.மு.சபீர் அஹமது

அதிரைப் பதிவர்களின் தேநீர் சந்திப்பு !


விடுமுறையில் தாயகம் திரும்பியுள்ள 'மனித உரிமைக்காவலர்' K.M.A. ஜமால் முஹம்மது அவர்கள் நேற்று இரவு என்னைத் தொடர்பு கொண்டு, அதிரை மெய்சா அவர்கள் தனது விடுமுறையைக் கழித்து விட்டு இன்று துபாய் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் இன்றே உங்கள் இருவரோடு அவசர விடுமுறையில் ஊர் வந்துள்ள 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களையும் காண ஆவலாக இருக்கிறேன். அதற்காக எனது வீட்டில் ஒரு தேநீர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முடியுமா ? என்றார். இரவு நேரமாக இருந்தாலும் அவரின் ஆர்வத்தை பாராட்டிவிட்டு முயற்சிக்கிறேன் என்றேன்.

K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று மற்ற இருவரையும் உடன் தொடர்பு கொள்வதில் மும்முரம் ஆனேன். பயண ஏற்பாட்டில் பிஸியாக இருக்கும் புதுமைக்கவிதைகளையும், விழிப்புணர்வு ஆக்கங்களை பதியும் அதிரை மெய்சா அவர்களும், தனது கவியால் உலகளவில் எண்ணற்ற வாசகர்களைப் பெற்றுள்ள யாப்பில் மூத்த கவி 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களை சந்திக்க தனது ஆவலை ஏற்கனவே என்னிடம்  தெரிவித்து விட்டதால் இவர்களை உடனடியாக ஒருங்கினைப்பதில் எனக்கு சிரமம் இல்லாமல் போய்விட்டது.

அடுத்து சில நிமிடங்களில் பெரிய ஜும்ஆ பள்ளியில் ஒன்று கூடுகின்றோம். உடனே அவர்கள் இருவரையும் என்னோடு அழைத்துக்கொண்டு K.M.A. ஜமால் முஹம்மது அவர்களின் இல்லத்திற்கு செல்கிறேன்.

K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுடனான எனது சந்திப்பு முதல் தடவை என்றாலும், K.M.A. ஜமால் முஹம்மது அவர்களும் அவரது மகன் தம்பி முஹம்மது நிஜாமுதீனும் அன்புடன் எங்களை வரவேற்று அழைத்து சென்றது எங்கள் அனைவரையும் நெகிழ வைத்தது.
பரஸ்பரம் நலம் விசாரிப்புகளோடு எங்களின் பேச்சுகள் சமூக நலன், தமிழ் மொழியின் சிறப்பு, உச்சரிப்பு, குடும்ப உறவுகள், விபத்துகள் ஏற்படக் காரணம், மனித உரிமைகள் போன்றவற்றை சார்ந்து இருந்தது.

எனது ‘விழிப்புணர்வு பக்கங்கள்’ மற்றும் ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய ‘மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ?‘ ஆகிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இச்சந்திப்பில் கலந்து கொண்டோருக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எங்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு மட்டுமல்லாமல் பயனுள்ளவையாகவும் அமைந்தது. இறுதியில் எங்களின் சார்பாக K.M.A. ஜமால் முஹம்மது அவர்களுக்கு நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம்.

சேக்கனா M. நிஜாம்

Sunday, January 20, 2013

அரசியல்வாதிக்கு ஒரு தொண்டனின் கடிதம் !

கட்சித் தொண்டனாய் இருந்து
கட்சித் தலைவனாய்
பதவி உயர்வு பெற்றவனே...

உன் கட்சியில்
உனக்கெவ்வளவு
அதிகாரம் இருந்ததோ
அதைவிட அதிகமாகத்தான்
நானுனை வியாபிதிருந்தேன்

எங்கள் தொகுதி
இடைத்தேர்தலுக்கு முன்பாய்
கைக்கூப்பிக் கொண்டு
ஊர்வலமாய் வந்தபோதுதான்
உன்னை முதன் முதலாய்ப் பார்த்தேன்.

அன்றோ
நம் காதலுக்குமாய் சேர்த்து
வேட்பு மனு தாக்கல்
செய்துவிட்டுப் போனாய்

அதையும் நான்
அப்போதே பரிசீலனைக்கு
ஏற்றுக் கொண்டேன்

தேர்தல் சின்னமாய்
உனக்கு
'மோதிரம்' கிடைத்தது
எவ்வளவு இலாவகமாய் போயிற்று

ஒரு நாள்
பிராச்சார சாக்கில்
என் வீட்டிற்கு வந்து
பெற்றோர் முன்னிலையில்
'எனக்கு மோதிரத்தில் போடுங்கள்' என்று
சிலேடையில் சொல்லி
என்னைக் கடைக்கண்ணால் பார்த்தாய்.

பட்ஜெட்டுக்கு முதல் நாள்
விலைவாசி உயர்வை
ஆவலோடு எதிர்பார்க்கும்
பதுக்கல் பேர்வழிகள் மாதிரி
தேர்தல் நாளுக்காய்
நான் ஆவலோடு காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது,
புத்தாடை உடுத்தி
முதல் ஆளாய்
வாக்குச் சாவடிக்குச் சென்று
நம் காதலுக்கான
முதல்வாக்கை பதிவு செய்தேன்.

தேர்தல் முடிவில்தான்
உனக்கு 'டெபாசிட்'
போய்விட்டதாய் சொன்னார்கள்
கடற்கரையில்
மாநாடு கூட்டி
சாதிக் கட்சிகள்
பலம் காட்டுவது மாதிரி
என்னையும் பலமுறை
அங்கு கூடிச்சென்றுதான்
உன் பலத்தை
நிருபித்திருக்கிறாய்.

பிறகுதான்
தேர்தலில் தோற்றுப்போனஆளுங்கட்சியிலிருந்து
வெளியேறிப்போகும்
கூட்டணிக் கட்சிகள் மாதிரி
மெல்ல மெல்ல...
என்னிடமிருந்து 
விலகத் துவங்கினாய்

அப்போதும் கூட
கள்ள ஓட்டு
கணக்கை நம்பி
வெற்றிக்காய் காத்திருக்கும்
வேட்பாளனைப் போல்
நானும் உன் வரவுக்காய் காத்திருந்தேன்.

மறுநாள் தான்
நீ கட்சி மாறிவிட்டதாய்
செய்தித்தாள் சொன்னது
கொண்ட கொள்கையை மட்டுமல்ல
கூடவே காதலையும்
புதுப்பித்துக் கொண்டாயோ ?

உன் யோக்கியதை
முழுவதுமாய்
புரிந்து போயிற்று !

தலைவர்
தடுக்கி விழுந்ததற்கும்
பேருந்தை எரிக்கும்
அப்பாவி [ ? ]
தொண்டர்கள் மாதிரி...
நானும்
உணர்ச்சி வேகத்தில்
தடுக்கி விழுந்துவிட்டேன்.

உன்
ஆசை வார்த்தைக்குள்
மோசம் போனேன்

சரி சரி
நானாவது இத்தோடு பிழைத்தேன்
மக்கள்...?

அண்ணா சிங்காரவேலு

[ 11 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

சிற்றூண்டி சாலை 
அதிகாலை முதல்
மாலை வரை 
அவசர பந்தி 
முட்டி மோதி
சிற்றுண்டிகளை கட்டி செல்லும்
தொழிலாளர் வர்க்கம்
ஈக்கள் மொய்க்கும்
பண்டல்கள் என்று பாராது
வாங்கி செல்லும் ஏழைகள்
நாகரிக உடை தரித்த
வாலிபன் ஒருவன்
வாங்கி சென்றான்
சிற்றுண்டிகளை 
தினம் வரும் வாடிக்கையாளர்களில்
இவனும் ஒருவன்
நல்ல உத்தியோகம்
கை நிறைய காசு இருந்தும்
வதைக்கும் வெயிலானாலும்
நடுங்கும் குளிரானாலும்
இவன் வருகை தினம் தினம்
வாடிக்கையாளர்களில் ஒருவர்
வேடிக்கையாய் இவனிடம் வினவினார்
மணமுடித்து வாழ்ந்தால்
மங்களமாக இருக்குமே
இல்லாளில் கை பக்குவத்தில்
தினம் தினம் உண்டிடலாமே
என்றார் அவர்
வாலிபனின் முகத்தில்
விரக்தியான சிரிப்பே பதில்
அவன் சிரிப்பை கண்ட நம்
கவிஞானி மிகைப்படுத்தி சிரித்தார்
ஏன் சிரித்தார் கவிஞானி...?
[ கவிஞானியின் பதில் அடுத்த இடுகையில் தொடரும் ]

Saturday, January 19, 2013

மின்சாரப் பெண்ணே உனக்காக ஓர் சஃப்ட்வேர் !

தமிழகத்தின் முதன் முறையாக பெண்களின் பாதுகப்புக்கு திருப்பூர் காவல் துறை புதிய சாஃப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சென்னையை சேர்ந்த தனியார் அமைப்புடன் இணைந்து பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு [ செஃப்டி ராக் ] என்ற சமூக முயற்சி அமைப்பை தொடங்கி உள்ளது இதன் மூலம் புதிதாக ஒரு சாஃப்ட்வேரை அறிமுகம் படுதுகிறது.

இந்த அமைப்பின் சஃப்ட்வேரை பொதுமக்கள் தங்களது செல்போனில் பதிவிறக்கம் [ download ] செய்து கொள்ளலாம். அது முதல் பயணாளியின் பயண விவரம், இணைய தலம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதனால் பயணாளி பயணிக்கும் சரியன இடத்தை உரிய நேரத்தில் துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். ஏதாவது ஒரு அவசர நேரத்தில் தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையயோ அல்லது அச்சுருத்ததலையோ ! பயணாளர் உணரும்போது செல்போனில்  பதிவிறக்கம் செய்யப்படுள்ள செஃப்டிராக் சஃப்ட்வேர் முலம் அவசர பொத்தானை கிளிக் செய்தால் போதும். உடனே SMS மற்றும் E-mail மூலமாக அவர்கள் ஏற்கனவே பதிவு செய்த உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ தன்னுடைய ஆபத்தான நிலமையை தெரியபடுத்த முடியும்.

பயனாளரின் செல் பொனில் GPS வசதி இருந்தால் அவர் அப்போது இருக்கும் இடத்தின் விவரமும் SMS மூலமாக தெரிந்து கொள்ள முடியும். இதனால் அவர்களுக்கு நம் உடனடியக உதவி செய்ய முடியும். சேப்டிராக் சஃப்ட்வேர் GPS மற்றும் இணைய தளம் வசதி இல்லாத போதும் java சஃப்ட்வேர் போருத்திய செல் போனில் பயன்படுத்தலாம்.

சேப்டிராக் சாஃப்ட்வேரை  பதிவிற்க்கம் செய்வது மிகவும் எளிதானது இந்த சஃப்ட்வேரை தொடர்பு கொள்ளவும் நிறுவவும் www.safetrac.in என்ற இணைய தளத்தில் தங்களது தகவல்களை தெரிவித்து பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு சரியக பதிவு செய்யப்பட்ட பயனாளருக்கு ஈ மெயில் மூலமாக சேப்டிராக் சாஃப்ட்வேரை எப்படி தன்னுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவல்கள் பயனாளருக்கு அனுப்பி வைக்கப்படும்

சேப்டிராக் சமூக முயற்சி அமைப்பு என்பதால் soft wareஐ  இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் android soft ware உள்ள செல்போனில் சேப்டிராக் soft ware மூலமாக google இணையதள உதவியுடன் https://play.goole.com/store/apps/details? Id=com.src.saftrac என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்

பயணாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் பயணாளர் தான் விரும் பொழுது தனது safetrac அப்ளிகேசனை click செய்யும் பொழுது தான் கண்காணிக்கப்படுவார்கள் click செய்யாத பொழுது அவர் இருக்குமிடம் மற்றும் விபரங்கள் கண்காணிக்கப்பட மாட்டாது பயணாளரின் பயன்பாடு பற்றிய விபரங்கள் முற்றிலும் பாதுகாப்பாக வைக்கப்படும்.

கடந்த வருடம் கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் 'காம் ஸ்மார்ட்'  என்ற சாஃப்ட்வேர் மூலம் எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவழி தகவல் பரிமாற்ற சேவை மூலம் கமிஷனர் தனது லேப்-டாப் மூலம் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த சேவை மூலம் ஆணையர் தனக்கு கீழ் உள்ள  இன்ஸ்பெக்டர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்ற தகவலை, கம்ப்யூட்டர் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும்.  இந்த எஸ்.எம்.எஸ். சேவையில் மிகுந்த ரகசியம் காக்கப்படும்' என்பதும் குறித்த அறிவிப்பும் இவற்றை உருவாகிய சாஃப்ட்வேர் நிறுவனத்தார் சார்பில் அன்றைய நாளில் தெரிவிக்கப்பட்டது.

அன்பர்களே ! தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்த விபரங்களை தெரிவியுங்கள் மற்றும் இந்தியா முழுவதும் இந்த சஃப்ட்வேர் தொழில் நுட்பம் வரவேண்டும். பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

மு.செ.மு.சபீர் அஹமது

Thursday, January 17, 2013

கேட்காதே...! கேட்காதே...!! பிச்சைக்காசு கேட்காதே !!!

வாலைக்குமர்களை சந்தை பொருளாக்கி
வரதட்சனை விலை பேசும் [ வலிமைமிகு] வாலிபர்களே !
வாழ்க்கைப் பாதையில் திசைமாறிய பறவைகளாய்
வழுக்கி விழுந்த ஓசைக்குயில்கள் எத்தனை எத்தனை ?
ஒழுக்கம் பேணும முதிர்க்கண்ணிகளாய் காசினியில்
ஓசையில்லாமல் ஓலைக்குடிசைகளில் முடங்கி,
ஏக்கப் பெருமூச்சுவிடும் ஈந்திலைகள் எத்தனையோ ?
பூப்படைந்த பருவச்சிட்டுகள் மூப்பெய்தி,
பருவம் தொலைத்து, கருகிய மொட்டுகளாய் 
உதிர்வதும் ஒப்பாமோ ?

உப்பரிகை வாழ்க்கை வாழ, மாடமாளிகை கூட கோபுரம்
உயர்ரக வாகனம், பங்களா இத்யாதி கேட்பதும் சரிதானே ?

ஏழைக்குமர்கள் வடிக்கும் சென்னீர் விடும்
ஏக்கப்பெருமூச்சு, ஏகமாய் வீட்டையும் நாட்டையும்,
இடிக்கும் கோடைகால இடிமின்னல் !
இலங்கும் கொதிகலனாய் கொதித்தெழ,
கூறுகெட்ட மோளைகளாய் கோழைகள் போல்,
குவலயத்தில் கைக்கூலி பெற்று 
வாழ நினைப்பதுவும் முறைதானா ?

வரதட்சனை சாவுகளின் விழுக்காடுகள் முப்பத்திஒன்பதாம்
வரதட்சணை வான்கொடுமை இருநூற்றி இருபத்தி ஐந்து
விழுக்காடுகளாம் ! வாழா வெட்டிகளாய் வறுமையில்
வாழ்விழந்த வனிதையர்கள் இந்த நாட்டில்...!
வெட்கமன்றோ !!

கஞ்சி குடிப்பதற்கிலார் கண்ணீர்க் கலசங்கள்
காற்றிலாட, சேற்றில் முளைத்த
செந்தாமரைக் கண்ணிகள் [ சோறின்றி ] செத்துமடியாமல்
செகத்தினில் காளையரே ! கைக்கொடுப்பீர்
வரதட்சனை தரித்திர பணம் வேண்டாம்
வாஞ்சையுடன் வனிதையர் வாழ்வில் சரித்திரம் படைப்பீர்
வாழ்வில் வளம் சேர்ப்பீர் ! 

வாங்கமாட்டோம், வரதட்சனை ! 
வாலிபர்களே சபதம் செய்வீர் !

கொடுக்க மாட்டோம் வரதட்சனை !
கோதையர்களே ! கொள்கைவழி சூளுரைப்பீர்

வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துவோம்
வாழ்வில் நலம் பெறுவீர் !!! வாழ்த்துகள்.

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

Wednesday, January 16, 2013

எம்.ஜி.ஆரின் ‘தாலுகா கனவு’ அதிரையில் நனவாகுமா !?


தாலுகா அலுவலகம் அமைய தகுதியுள்ள ஊரா அதிரை !?
ஏன் இல்லை ? வரலாற்றுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிரை பண்டைய கால வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கின. பெரும்பாலான வணிகர்கள் தேங்காய், மீன், நண்டு, கருவாடு, இறால் போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் அதிரையும் ஒன்று என்பது தனிச்சிறப்பு.

இவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ் பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கி, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்த பகுதியாக இருக்கின்றது.

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருக்கின்றன. அதிரையில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ, இரண்டு பஸ்கள் மாறி சுமார் 20 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரையின் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் !?

ஜாதி [ !? ], வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் நீண்ட தூரத்தில் இருக்கின்ற தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியதோடு மட்டுமல்லாமல் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது.

தாலுகா அலுவலக வாசலில் டோக்கன் பெறுவதற்காக காத்திருந்து வரிசையில் நிற்க வேண்டும். அந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாட்களுக்கு பின்பு தான் நாம் அங்கே செல்ல வேண்டும். அன்றைய தினமும் நாள் முழுக்க காத்திருந்த பின்பே சான்று பெற முடியும்.

நீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் உண்டு.

இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை மாநகருக்கு வருகை புரிந்தார். அப்போது எம்ஜிஆர் அவர்கள் தனது சொற்பொழிவின் இடையே, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மாபெரும் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருக்கின்றதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.

அறிவிப்பு செய்து 32 ஆண்டுகள் கடந்துவிட்டன, எண்ணற்ற அரசியல் மாற்றங்கள், புதிய கட்சிகள், புதிய இயக்கங்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என வந்துவிட்டாலும் அதிரை அதிரையாகவே இருக்கின்றன அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே [ மெய்யாலுமே பஸ்டாண்டு இல்லிங்க :) ] காணப்படுகின்றன.

எம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா !?

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் தொடரும்...

Monday, January 14, 2013

[ 10 ] ஏன் சிரித்தார் கவிஞானி...? சிரிப்பது தொடர்கிறது...

வயோதிக தோற்றம்
தளர்ந்த நடை 
தூக்கி நடக்க இயலா சுமை
அத்தனையும் சுமந்த வண்ணம்
மருந்தகம் ஏறி மருந்து வாங்கியவர்
ஆயாச மிகுதியால் தரையில்
அமர்ந்தார் அம்மனிதர்
பார்போர் மனமிரங்கி பரிதவிக்க
அங்கிருந்த கவிஞானியோ
எகத்தாளமிட்டு சிரித்தார்
பார்ப்போர் ஏன் என்க
பதில் பகிர்ந்தார் கவிஞானி

நோய் நாடி நோய் முதல் நாடி
என்றார் வள்ளுவர்
இம்மனிதனோ  நோய் தொடுக்கும்
தின் பண்டம் தினம் திண்று
நோய் அதனை ஏற்று கொண்டான்
சர்க்கரை நோய்க்கு மருந்தகம்
வந்த இவன் மடி நிறைய்ய
தின் பண்டம் ஜிலேபி ஒரு பையில்
தினவெடுக்கும் கொழுப்பு பண்டம்
மறு பையில் சாலையோரம்
விற்கும் அங்காடி பொருள்
அனைத்தும் இவன் பையில்
பார்க்கத்தான் வயோதிகம்
வயதில் இவன் இளைஞன் ஐயா
புகை பிடிக்கும் பழக்கம் அது
பல நோயை கொண்டு வரும்
தெரிந்தும் இவன்
மனம் போன போக்கில் வாழ்க்கையில் 
வாழ்ந்து இவன் வயோதிக
தோற்றம் அடைந்து விட்டான்
நோய் தொடுக்கும் பொருள்
பழக்க வழக்க மதை
விட்டு விட்டால் நோய் தவிர்த்து
வாழ்ந்திடலாம் 
சுத்தமான உணவும்
நல்ல பழக்கமும்  நல்ஒழுக்கம் 
நெடு நாட்கள் வாழ்ந்திடலாம்
என்றாரே கவிஞானி...!
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Sunday, January 13, 2013

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி ?

புதிய குடும்ப அட்டை பெற தகுதியுடையோர் யார் ?
தனிக் குடும்பமாக உள்ள இந்திய குடிமக்கள்கள் அனைவர்களும் தகுதியுடையோர் ஆவார்கள்.

குடும்ப அட்டை பெற விண்ணப்பம் படிவம் எங்கு கிடைக்கும் ?
தமிழக அரசு விண்ணப்ப படிவங்களை ஆங்கிலம் மற்றும் தமிழில் நிர்னையித்துள்ளது. இவை அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் கிடைக்கும்.

மேலும் http://www.tn.gov.in/tamiltngov/appforms/ration_t.pdf என்ற அரசு தளத்திலும் தரை இறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவத்தினை யாருக்கு அனுப்ப வேண்டும் ?
அந்தந்த தாலுக்கா அலுவலங்களில் உள்ள வட்ட உணவுப் பொருள் வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களிடம் தாக்கல் செய்யவேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் எவை ?
விண்ணப்ப படிவத்தில் அதில் கோரப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்திசெய்து கையொப்பம் இட வேண்டும். முழுமையற்ற படிவம் நிராகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

தேவையான ஆவணங்கள் :
1. இருப்பிட சான்று

2. தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை

3. வீட்டு வரி / மின்சார கட்டணம் செலுத்திய / தொலைப்பேசி கட்டண போன்றவைகளின் ஏதாவது ஒரு ரசீதுகள் / வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல் / பாஸ்போர்ட் நகல் [ இதில் ஏதாவது ஓன்று மட்டும் போதுமானவை ]

4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கு அதிகாரியிடம் [ TSO ] பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

5. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான ‘குடும்ப அட்டை இல்லா’ சான்று.

6. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர்.

7. விண்ணப்பதாரரின் தனது விண்ணப்பம் குறித்த தகவல்கள் பெற இலகுவாக தங்களின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யவும். அல்லது சுய முகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

மனுதாரர் தனது விண்ணப்பத்தின் முடிவினை அறிந்து கொள்ள முடியுமா ?
1. தமிழக அரசு புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தின் பேரில் 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்க அல்லது மனுவின் முடிவை தெரிவிக்க கால நிர்ணயம் செய்துள்ளது.

2. வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் மனுதாரரின் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள மனுதாரரின் வீட்டிற்க்கே வந்து ஆய்வு செய்வார்கள்.

3. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகை சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதிய குடும்ப அட்டை பெற கட்டணம் உள்ளதா ?
ரூ 5 /- கட்டணம் நிர்ணயித்து. இந்த தொகையை உணவு வட்ட வழங்கல் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட உணவு வழங்கல் அதிகாரி [ DSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள வட்ட உணவு வழங்கல் அதிகாரி [ TSO ] அவர்களை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு : 
புதிய குடும்ப அட்டை பெற வேண்டி இடைத்தரகர்களிடம் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கையூட்டு கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு ] 
இறைவன் நாடினால் ! தொடரும்...

Saturday, January 12, 2013

அம்மம்மா...! நினைக்கவே நெஞ்சம் பதறுகிறதே !!

காட்டில் திரிந்த சில 
காண்டா மிருகங்கள்
இரண்டு கால் மனித
மிருகமாய் உருவெடுத்த
கதை இது ! 

இதில் 17வது குட்டி [ மிருகமும் ] 
பங்கு கொண்டது கொடுமையிலும்
கொடுமை, அருவருப்பான
ஒழுக்கக்கேட்டின் விழுமிய
வெளிப்பாடு.

இந்திய திருநாட்டின்
தலைநகர் டில்லி மாநகரில்
மருத்துவ [ முடக்கியல் ] மாணவி
யரின் பரிதாப நிலை
இந்த வெட்கக்கேடான
சம்பவம் இந்திய 
திருநாட்டிற்கு இல்லையா ?

இறைநெறியும், ஒழுக்க நெறியும்
ஒன்றிப்பிணைந்து ஆலமர 
விருட்சமாய் செழித்தது
மக்கள் உள்ளங்களில் அப்போதே
ஆனந்தம் அமைதியாய் குடி
கொண்டது. ஆனாலும் என்ன !?
தொடர் ஒழுக்க நெறி
தொய்வால் எற்பட்ட ஆளுமை
கலாசார சீரழிவிற்கு
அப்போதே கால்கோலும்
ஊன்றப்பட்டது.

மனித புனிதனாக மாற்றங்கள்
ஏற்றங்கள் பெற வேண்டிய
மானுடனை பொதுவில் 
மிருகமாக மாற்றங்கள் 
செய்யப்பட்டுவிட்டது. 

சாத்தானிய்யத்தின்
புறப்பாடு ! இது !!
மார்க்கத்தையும், மதத்தையும்
அதன் சரியான பாதையில்
பின்பற்றபடாமல், மனோ
இச்சையை பின்பற்றியதின்
நிலைப்பாடு !!!

கண்ணின் மணியாய்
உயரின் ஒளியாய்
ஓசையாய் ஒளிர வேண்டிய
தீபஒளியாம் கற்பை
அனைத்து மிருக இச்சையால்
வேட்டையாடிய போது...!
அம்மம்மா...! நினைக்கவே
நெஞ்சம் பதறுகிறதே !!

ஏ ! மனிதா , மானுடனே !!
நீ உயர்ந்த படைப்பாய்
உயர்த்தப்பட்டிருக்கிறாய்
வரம்பு மீறாதே !!

வரம்பு நீ மீறும் போது
எல்லாவற்றிற்கும்
மொத்தமாக ஒரு முடிவு
உண்டு. அது நிச்சயம்
இறை நாட்டத்தால்
வந்தே தீரும் நெடுங்
கயிற்றை இழுத்துக்
கொண்டு வரம்பு மீறாதே
அதன்படி இறைவனிடம்
இருக்கிறது என்பதை
மறவாதே ! கரை சேர
வழியைக் கண்டிடு !!

இறுதியாக ஒன்று
சொல்வோம் மருத்துவ
மாணவியின் மகத்தான
இழப்புக்கு காந்திஜி
சொன்ன சுதந்திரச்
செய்தியினை நினைவு
கூறுகிறோம் ஆட்சி
யாளர்கள் இனியாவது
சிந்திக்கட்டும் சீர்
பெறட்டும்.

"ஒரு பெண் நடுநிசியில் தனியாக வெளியில் சென்றுவிட்டு எப்போது பாதுகாப்பாக வீடு திரும்புவாளோ அப்போதுதான் முழுச்சுதந்திரம் நாம் பெற்றதாக அடையாளப்படுத்தப்படும்"

"புதுமைக்கவி" 
அதிரை அப்துல் ரஜாக்

Friday, January 11, 2013

[ 9 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

குற்றுயிரும்...
குலை உயிருமாய்...
தீயில் வெந்த நிலையில் 
துடி துடித்த நிலையில் 
கரை வேட்டி 
கட்டிய சிலர் 
வெறித்த கண்களோடு 
கூக்குரல் இட்டபடி
மருத்துவமனை வந்தடைதனர் 
பார்போர்கள் பதை பதைத்தனர் 
அச்சமேதும் மில்லாமல் ..
ஓங்கிய ஒலி கொண்டு 
சிரித்தார் கவிஞானி 

ஏன் சிரித்தாய் 
என்று சிலர் அதட்ட 
பதில் பகர்ந்தார் கவிஞானி 
பாவி மக்கா...
இந்த கொடுமை எங்கும் வேண்டாம் 
பெற்றடுத்தது இதற்கா 
கொலை குற்றம்
செய்த கட்சி தலைவன் 
கைதாகி சில நிமிடத்தில் 
செய்தி தீயாய் பரவ 
இப் பாதகன்
தீ'க்கு பலியானான் 
கைதாகி சில நொடியில் 
கட்சி தலைவன் 
விடுதலை யானான் 
பெற்றடுத்த தாயோ 
தவித்து நிற்கும் நிலை
பத்து மாதம் சுமந்த தாய் 
அல்லும் பகலும் 
அயராது உழைத்து 
வளர்த்த பிள்ளை 
முதுமையில் உதவும் 
என்று எண்ணிய தாய்க்கு 
பாவி மகன் கட்சி 
வெறியால் தீக்கு 
பலியானான் என 
கண் கலங்கினார் கவிஞானி...!
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்

Thursday, January 10, 2013

மின்சாரப் பெண்னே !?

தில்லியில் 6 ஆண்களால் கற்பழிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி, தமிழகத்தில் ஒரு ஆணால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி, பாண்டிச்சேரியில் ஆசிட் வீசி முகம் மற்றும் உடல் அங்கங்கள் கருகிய வினிதா என்ற பெண் இவர்கள் அனைவரும் ஆண்களால் சூறையாடப்பட்டவர்கள்.

தில்லிப் பெண்னோ தானாக வலையில் சிக்கியது போல் [ லிஃப்ட் கேட்டு பஸ் ஏறியவள் ] மாட்டிக்கொண்ட சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவள், தமிழகப் பெண்னோ காமக்கொடுரனால் பாழடிக்கப்பட்டவள், பாண்டிச்சேரி வினோதினி தனக்கு தெரிந்த ஒரு ஆணால் காதலை மறுத்ததின் விளைவால் ஆசிட் வீசி துன்புறுத்தப்பட்டவள் இவைகளுக்கான காரணங்கள் எதுவானாலும் பாதிக்கப்பட்டது பெண்னே ! பாதிப்பை ஏற்படுத்தியது ஆண் ?

மின்சாரமென்பது அபாயகரமானது அபாயகரத்தை அனைவரும் ஆதரிக்கின்றோம் ஆனால் தக்க பாதுகாப்போடு ஒரு பெண் வெளியில் செல்லும் பொழுது இன்சுலேட் செய்யப்பட்ட மின்சாரக்கம்பி எவ்வாறோ அவ்வாறே தன்னுடைய ஆடை அலங்காரத்தில் அக்கறை காட்டாது பெண்னின் அங்கம் மின்சாரத்திற்குச் சமம்.

இன்சுலேட் என்பது மின்சாரத்திற்கு மட்டுமல்ல பெண்ணிற்கும் அவசியம் வெளியில் செல்லும் பொழுது  உடலை கவர் செய்வதில் பெண் அக்கறைக் காட்டுதல் வேண்டும். அடுத்தது வேளைக்கு போகும் பெண்கள் தம் சக தொழிலாளி அல்லது ஆண் நண்பர்கள் இவர்களிடம் பழகும் பொழுது [ தம்முடைய குணாதிஸயங்கள் எப்படியிருந்தாலும் ] சிடு மூஞ்சித்தனமாக இருப்பதே பெண்னிற்கு பாதுகாப்பு.

அடுத்தது வேளைக்கு சென்ற பெண்கள் இரவு 7 மணிக்குள் வீடு திரும்புவது அவசியம் அப்படிப்பட்ட வேளையை தேர்ந்தெடுத்துக் கொள்வது மிக அவசியம் 

ஆண்களுக்கு பெண் சளைத்தவள் அல்ல என்பதும் சம உரிமை இருக்கின்றன என்றாலும் இயற்கையாக பெண் சில விஷயங்களில் ஆணைச் சார்ந்து இருக்கிறாள் என்பதை மறுக்க இயலாது. 

பெண் என்பவள் தாய் ! தாய் என்பவள் ஆணைப் பெற்றவள் !!

தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்கிறது அல் குரான்.

தாயினும் சிறந்த கோவிலும் இல்லை என்கிறது இந்து மதம் !

அராஜகம் செய்யும் ஆண்களே தான் சார்ந்திருக்கின்ற ஆண் சரியில்லாததின் காரணம் கொண்டு எத்தனையோ பெண்கள் வேளைக்கு செல்கின்றனர் தம்முடைய வர்க்கம்[ ஆண் ] சரியில்லாததுதானே பெண்கள் வேளைக்கு போகின்றார்கள் ஆகையால் இனி அப்பெண்ணுக்கு நாம்தான் பாதுகாப்பளிக்க வேண்டும்.

மு.செ.மு.சபீர் அஹமது

Wednesday, January 9, 2013

திருச்சி விமான நிலையம் : வழியனுப்பிய உறவினர்களின் நெகிழ்ச்சி !

திருச்சி விமான நிலையம் - இந்தியாவில் உள்ள பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்கள் தங்களின் விமான சேவையை இயக்கி வருகின்றன. அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் திருச்சி விமான நிலையத்திற்கு, சர்வதேச அந்தஸ்து அளிக்க வேண்டும் என்பது பயணிகள்-பொதுமக்களின் நீண்ட கால விருப்பமாகும். குறைந்தபட்சம் 9,000 அடி நீளத்துக்கு ஓடுதளத்தை உயர்த்தினால் மட்டுமே சர்வதேச விமான நிலைய அந்தஸ்து கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி விசயத்துக்கு வருவோம்...

திருச்சி விமான நிலையத்திற்கு நண்பர் மற்றும் எனது உறவினர் ஆகியோரை வளைகுடா நாட்டின் ஒன்றிற்கு வழியனுப்பி வைப்பதற்காகச் சென்றேன். அங்கே கண்ட காட்சிகள் அனைத்தும் என் மனதை வருடின. குறிப்பாக வழியனுப்ப வந்துள்ள தங்களின் உறவினர்களிடம் பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் விடைபெற்றுக்கொண்டது மனதை வருடிய காட்சிகளாக இருந்தன.

குறிப்பாக...
1. குழந்தைகளோ தங்களின் அப்பாவை [ Father ] “டாட்டா” க் [ Bye Bye ] காண்பித்து வழியனுப்பியது... கண்ணீரை அடக்கிக்கொண்டு விரைவில் வந்துவிடுவேன்டா ‘செல்லம்’, ‘தங்கம்’ என கன்னத்தில் தட்டி குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியது...

2. அன்பான மனைவியோ தங்களின் கணவன் இரண்டு மூன்று !?ஆண்டுகளில் திரும்ப வந்துவிடுவார் என்ற நினைவில் மூழ்கியவாறு கண்களில் கண்ணீருடன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் வழியனுப்பியது...

3. பெற்றோர்களோ நினைவில் மூல்கியவாறு  'நாம் கஷ்டப்பட்டு படிக்க வைத்து உருவாக்கிய நமது மகன் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நிச்சயமாக போக்குவான்' என்ற நம்பிக்கையில் கையசைத்து வழியனுப்பியது...

4. அன்பான மனைவியின் பிரிவு, குழந்தைகளின் படிப்புச் செலவுகள், சகோதரிகளின் திருமணச் செலவுகள், பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள் வாங்குதல் போன்ற எண்ணற்றக் கடமைகளை ( ? ) மனதில் சுமந்துவாறு 'கையசைத்து' விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்து சென்ற பயனாளிகளின் முகத்தை பார்த்தது...

இவைகள் எல்லாம் என் மனதை வருடியது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை :
1. விமான நிலையங்களில் அறிமுகமில்லாத நபர்களிடம் பார்சல்களை வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் அவர்கள் பெண்களாக இருந்தாலும் சரி...

2. பதற்றத்துடன் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

3. பயணம் மேற்கொள்ளும் முன் தங்களின் உடமைகளை சரிபார்த்துக்கொள்ளவும் குறிப்பாக தங்களின் பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவைகளை.

4. கூடுதல் எடைகளுடன் கூடிய பொருட்களை தவிர்க்கவும். விமான நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்டவை மாத்திரம் கொண்டுசெல்லவும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு  ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

Tuesday, January 8, 2013

ப்ளீஸ்... உணவை வீணாக்காதீர்கள் !!!

உலகளவில், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவில், மூன்றில் ஒரு பங்கு வீணாக்கப்படுகிறது என்றும், இவ்வாறு வீணாக்கப்படும் அனைத்துவகை உணவைக் கொண்டும் பசியில் வாடிக் கொண்டிருக்கும் ஐம்பது கோடி பேருக்கு உணவு அளிக்கலாம் என்ற கருத்தை ஐ.நா வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு [  F.A.O ] தெரிவித்துள்ளது.

திருமணம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவுகள் அதிகளவில் வீணாக்கபடுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது நமக்கு மிகவும் வேதனை தருவதாக இருக்கின்றது.

வசதிபடைத்தோர் தங்களை சமூகத்தில் ‘நாங்கதானுங்க உசத்தி’ என்று காட்டிக்கொள்வதற்காக திருமண நிகழ்ச்சிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்காக அவர்கள் விநியோகம் செய்யும் அழைப்பிதழ் முதல் பரிமாறும் தட்டுவரை எடுத்துக்கொள்ளும் ஆடம்பர பகட்டுகள் இருக்கிறதே ! சற்றுத் தூக்கலாகவே இருக்கும். வசதி படைத்தோரை மட்டும்தான் அழைப்பார்கள், ஏழை எளியோரை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்து மீதியுள்ளவற்றை வேஸ்ட்டாக தூக்கி வீசப்படுவது நம்மிடம் ஏழை எளியோர் உள்ளனரே ! என்பதை மறந்து விடுவதுதான்.

ஒருவர் தேவையான அளவு உணவை எடுத்துக்கொள்வது தவறில்லை என்றாலும் உணவை உட்கொள்ளும் போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் சற்று அதிகமாகவே காணப்படும் காரணம் ‘நப்ஸ்’ எனும் மன நிலையை அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பக்குவம் அவர்களிடம் இல்லாததே !

பல கோடி ஏழை எளியோர்கள் உணவு தட்டுப்பாடால் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் சமூக நிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் உணவில் ஐந்தில் ஒரு சதவீதம் வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் வைபவங்கள் நடக்கும் வீட்டில் நடைபெறும் விருந்து உபசரிப்புகளில் வீணாக உணவு விரையமாக்கப்படுவது மிகவும் சிந்திக்க + வேதனைப்படக் கூடிய ஒன்றாகும்.

உணவுப் பற்றாக்குறையுடன் ஏழைகள் பலர் நம்மிடையே வாழ்கிற இந்நாட்டில் உணவு வீண்விரையம் செய்வது மிகப்பெரிய சமூகக்குற்றமாகும். உணவை வீணாக்ககூடாது என்ற உணர்வை நம் பிள்ளைகளின் மனதில் போட்டு விதைப்போம். நாளை அது செழித்து வளர்ந்து சமூக அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும். ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் உண்பதுதான் சிறந்தது என்பதை அனைவரும் உணருவோம். மேலும் உணவின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வூட்டுவது நமது கடமைகளில் ஒன்றாகும்.

சேக்கனா M. நிஜாம்
[ இது ஒரு மீள்பதிவு ]
இறைவன் நாடினால் ! தொடரும்...

Sunday, January 6, 2013

சந்திப்பு : ‘தலைமை ஆசிரியர்’ ஹாஜி. மஹபூப் அலி அவர்கள் [ காணொளி ]

சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையல்ல. மாணவர்களுடைய அறிவுத்திறன் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதோடு அவர்களின் எதிர்காலத்தையும் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஆசிரியப் பெருமக்களே !

1. மாணவர்களின் இன்றைய நிலை
2. மேற்கல்வி பயில்வது தொடர்பாக வழிகாட்டல்
3. மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய
ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரிடமிருந்து எதிர்பார்க்கும் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள்

ஆகிய கேள்விகளை முன்வைத்து சந்திப்பு தொடருக்காக அதிரை கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

தலைமை ஆசிரியர் ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil., அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதின் கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று தான் படித்த பள்ளியிலேயே வேதியியல் துறை முதுகலை ஆசிரியராக பணியை ஆரம்பித்து இன்று தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கைநிறைய சம்பளத்துடன் வேறு சில பணிகள் கிடைத்தும் அவற்றை உதறித்தள்ளி விட்டு ஆசிரியப்பணியின் மீதுள்ள அக்கறையால் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றார்.

பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அறிவியல் பாட திட்டத்தில் மாணாக்கர்களின் தேர்ச்சி விகிதத்தை பலமுறை 100 சதவீத சாதனையாகப் பெற்றுத்தந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பாகும். மேலும் அதிரையில் இயங்கி வருகின்ற நிதி உதவி அமைப்பான கர்ழன் ஹஸனா அழகிய கடன் அறக்கட்டளையின் பொருளாளராகவும் இருக்கிறார்.

பள்ளியின் வளர்ச்சி, மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்த தயாராக இருப்பதும் இதற்காக பெற்றோர்கள் – பாதுகாவலர்கள் – ஆசிரிய ஆசிரியைகள் - முன்னாள் மாணவர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் மற்றும் ஒத்துழைப்புகள் போன்றவற்றை எதிர்பார்ப்பதாக கூறுவது கல்வியின் மீது அவர் வைத்துள்ள பற்றுதலையே பறைசாற்றுகின்றன.


தொடர்புக்கு :
ஹாஜி. மஹபூப் அலி M.Sc., M.Ed., M.phil.
[ தலைமை ஆசிரியர் – காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ]
மின்னஞ்சல் முகவரி : mahaboobali1505@gmail.com

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! சந்திப்புகள் தொடரும்...

Saturday, January 5, 2013

[ 8 ] ஏன் சிரித்தார் கவிஞானி…? சிரிப்பது தொடர்கிறது...

சிறை சாலை
குற்றவாளிகளின் சரணாலயம்
சூழ்நிலை கைதிகள் பலர்
மனம் வருந்தி 
வெளி வர நினைப்பவர்
சிலர் 
வெறித்த பார்வை 
பேச மனமில்லா நிலை
உணவருந்த அழைத்தும்
வெறுமையான பார்வை
பசித்தும் புசிக்க முடியா
நிலையில் ஒரு கைதி 
கைதிகளில் பலர்
பாவம் என்றனர் 
குற்றமில்லா நிலையில்
கைதாகி
சிறையில் கவிஞானி
அந்த கைதி நிலை கண்டு
சிரித்தார் 
ஏன் சிரித்தீர் என்று பலர் கேட்க
பதில் சொன்னார் கவிஞானி
வாழ்கையில் நல்ல நிலையில்
இருந்த இவன்
முன் கோபம் என்ற
துற்குணத்தால்
இந்நிலைக்கு ஆளானான
சிறு தவறு செய்த இல்லாளை
இவன் கோபத்தால் பலியானாள்
மனைவியை இழந்த இவன்
வாழ்வையும் இழந்து தவிக்கிறான்
உணவருந்த உள்ளம் மறுக்கிறது
இல்லத்தில் இருந்த இன்பம்
சினத்தால் துன்பமானது
சினம் என்ற துர்குணம்
சிறைக்கு அழைத்து வந்ததையா
என சிரித்தார் கவிஞானி...
'சிரிப்பது' தொடரும்...
அதிரை சித்திக்
Pro Blogger Tricks

Followers